உங்கள் நோய் எளிதில் குணமடைய இதை உபயோகிக்கலாம்

elithil kunamadiya engkal.com

உங்களுடைய நோய் இயற்கையான முறையில் குணமாக இதோ!!!

உங்கள் உடலை இயற்கையாக பாதுகாக்க சித்த மருத்துவம்

elithil kunamadiya engkal.com

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்

இடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு…

கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப்பொருள். கிராமங்களில்  அதிகமாக  இது  கிடைக்கும்.

கொள்ளுரசம் வைத்துகுடிக்க இடுப்பு வலி பறந்துபோகும். 
உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.

அரை தம்ளர் தண்ணீரில் ஒரு கரண்டி அளவு ஓமம் சேர்த்து அதில் 100 மிலி  தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி  கொள்ள வேண்டும்.பிறகு அவற்றுடன் கற்பூரப் பொடியை சேர்த்து இளஞ்சூடாக இருக்கும் போது தேய்க்க வேண்டும்.

முருங்கைப் பட்டை, சுக்கு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து மேலே பூச வலி போகும்.

நல்லெண்ணையில் மருதாணி இலையை போட்டு காய்ச்சி பூசவும்

பூண்டை போட்டு காய்ச்சிய வேப்பெண்ணை தடவவும்.

பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறு கலந்து தடவவும்.

விழுதி இலையை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் நல்லெண்ணையை கலந்து 5 மி.லி வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.

 

elithil kunamadiya engkal.com

கால் வலி அதிகமாக உள்ளதா

இன்றைய காலகட்டத்தில் உடலில் பல வலிகள் வருகின்றன. அதற்கு முக்கிய காரணம், நல்ல ஊட்டச்சத்துக்கள் இருக்கும் உணவுகளை உண்ணாமல் இருப்பதே ஆகும். அவ்வாறு உண்ணாமல் இருப்பதால் உடலைத் தாங்குகின்ற கால்கள் வலுவிழந்து, சோர்வடைந்து வலிகள் ஏற்படுகின்றன. மேலும் பெண்களுக்கே இத்தகைய வலிகள் அதிகம் வருகின்றன.

அதற்கு காரணம், அவர்கள் அணியும் செருப்புகள். ஏனெனில் செருப்புகள் அணியும் போது அதிகமான உயரம் கொண்ட செருப்புகளை அணிவதால் இடுப்பு வலிகளோடு, கால் வலிகளும் வருகின்றன. ஆகவே அத்தகைய கால் வலி மற்றும் கால்களில் அலுப்பு போன்றவற்றை நீக்க ஈஸியான சில வழிகள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

ஒரு வாளியில் வெழவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது உப்பை போட்டு, கால்களை நீரில் மூழ்கி இருக்குமாறு 15-20 நிமிடம் வைக்கவும். இதனால் கால்களானது வலி இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை, ஒரு கப் வெதுவெதுப்பான நீருடன் குடிக்க வேண்டும். அது விரைவில் கால் வலி மற்றும் கால் சோர்வை குணப்படுத்தும்.

உண்ணும் உணவில் அதிகமான அளவு கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ போன்றவற்றை சேர்த்து உண்ண வேண்டும். அதிலும் இதனை சரியான அளவு உண்டு வந்தால், கால் வலி வராமல் இருக்கும்.

elithil kunamadiya engkal.com

உடலினுள் உள்ள உட்காயங்களை சரிசெய்ய

சில சமயங்களில் உட்காயங்கள் சுறுசுறுப்புடன் இல்லாமை அல்லது அளவுக்கு அதிகமான மன அழுத்தத்துடன் இருப்பது போன்றவற்றாலும் ஏற்படும். உணவு அலர்ஜிகூட உட்காயங்களை ஏற்படுத்தும். உடலில் ஏற்படும் உட்காயங்களை மருந்து மாத்திரைகள் மூலம் மட்டுமின்றி, நமது சில இந்திய பாரம்பரிய வைத்தியங்களின் மூலம் வெற்றிகரமாக சரிசெய்ய முடியும். ஒருவேளை ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் மருந்துகள் எடுக்க வேண்டியிருந்தால், தவறாமல் எடுங்கள். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பழங்கால வைத்தியங்களையும்பின்பற்றலாம்.

தூக்கம்

தூக்கத்தின் மூலம் தான் உடல் தன்னைத்தானே சரிசெய்யும். ஒருவர் போதுமான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், உடல் தன்னைத்தானே சரிசெய்யும் நேரம் கிடைக்காமல் போகும். இதன் விளைவாக உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக செயல்பட வேண்டியிருக்கும். இதனால் உடலினுள் காயங்கள் அதிகரிக்கும். எனவே உங்கள் உடலில் உட்காயங்கள் ஏற்படாமல் இருக்கநினைத்தால், தினமும்7-8மணிநேரதூக்கத்தைத் தவறாமல் மேற்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி

 உடற்பயிற்சிகளை ஒருவர் அன்றாடம் செய்துவந்தால், உட்காயங்களைக் குறைக்கலாம். அதற்கு கடுமையான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும் என்பதில்லை. மென்மையான மற்றும் எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே, உட்காயங்களின் அளவைக் குறைக்கமுடியும். ஆகவே நீச்சல், யோகா போன்றவற்றை தினமும் செய்யுங்கள்.

elithil kunamadiya engkal.com

கண் நோய்களில் இருந்து விடுபட

பாகல் இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் 10  மிளகைச் சேர்த்து மைப் போல அரைத்து இரவு உறங்க செல்லும் முன்பாக கண்களை சுற்றிக் கனமாகப் பூசவேண்டும். பின்பு காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு குறையும்.

அறிகுறிகள்:

கண் பார்வை மங்கலாக காணப்படுதல்.

மாலைக் கண் நோய்.

கண் பார்வை தெளிவாக

சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

கோடைகாலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தின் காரணமாக  கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

இதற்கு முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, சீரகப்பொடி, உப்பு – கால் டம்ளர் முள்ளங்கி சாறு, சம அளவு தக்காளி சாறு மற்றும் வெள்ளரி சாறுடன் கால் ஸ்பூன் சீரகப் பொடி, சிறிது சமயல் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வாரம் இருமுறை குடித்து வந்தால் கண் எரிச்சல், கண்ணில் ஏற்படும் சிவப்பு தன்மை, மற்றும் உடல் குளிர்ச்சி அடையும்.

வெந்நீரில் உப்பை போட்டு, அந்த நீரை பஞ்சில் தோய்த்து, கண்களின் மேல் வைத்தால், கிருமிகள் அழிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

சீரக தண்ணீரை கொதிக்க வைத்து தினமும் இருமுறை கழுவ, வலியையும், சிவப்பு தன்மையையும் மற்றும் எரிச்சலையும் நீக்கும்.

Close Menu