
முகம் எண்ணெய் பசையா இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!!!

குளித்து முடித்து, முகத்திற்கு மேக்-கப் செய்யும் முன், சிறிது எலுமிச்சை சாற்றை முகத்திற்கு தடவி, 10 நிமிடம் கழித்து, மேக் கப் செய்ய வேண்டும்.
முகத்திற்கு எந்த ஒரு பொருளை போடும் போதும், அப்போது மோரை முகத்திற்கு தடவி, 10-15 நிமிடத்திற்குப் பின் எதையும் போட வேண்டும்.
எங்கேனும் பார்ட்டி செல்லும் போது, முகத்திற்கு மே-கப் செய்வதற்கு முன்பு, முகத்தை ஐஸ் கட்டிகளால் சிறிது நேரம் தேய்த்து, பின் காய வைத்து, பிறகு மேக்-கப் போட்டால், சருமம் எண்ணெய் பசையோடு காணப்படுவதை தவிர்க்கலாம்.
ஆப்பிளை மிகவும் மெலிதாக நறுக்கி, அதனை முகத்தின் மேல் வைத்து, 15 நிமிடம் கழித்து, அதனை நீக்கிப் பார்த்தால், சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, முகத்தில் இருக்கும் சருமத்துளைகளையும் மெதுவாக நீங்கச் செய்யலாம்.
ஒரு கப் அரிசி மாவை எடுத்துக் கொண்டு, அதோடு நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து சேர்த்து, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, முகத்தை கழுவி, ஈரத்துடன் இந்த கலவையை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
அரிசியை 1/2 மணிநேரம் ஊற வைத்து, அதனை நன்கு அரைத்து, அதோடு தக்காளி சாற்றை விட்டு, அந்த கலவையை உடல் முழுவதற்கும் தடவி ஊற விட வேண்டும். 15 நிமிடத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் இறந்த செல்கள் நீங்குவதோடு, எண்ணெய் பசையுள்ள சருமத்தில் இருக்கும் பழுப்பு நிற சருமத்தையும் நீக்கிவிடும்.
எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமத்தில் சருமத்துளைகள் அதிகமாக இருந்தால், அதற்கு டோனரை பயன்படுத்த வேண்டும். மேலும் அந்த சருமத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, மென்மையான சருமத்தை பெற, சர்க்கரை கலந்திருக்கும் ஸ்கரப் தான் சிறந்தது. ஆகவே அதற்கு காப்பி பவுடரை, சர்க்கரையுடன் கலந்து, 2 துளிகள் ஆலிவ் ஆயிலை ஊற்றி, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவலாம்.
மிகவும் விரைவாக ஸ்கரப் செய்ய, பால் பவுடருடன் சிறிது சர்க்கரை மற்றும் தண்ணீரை விட்டு கலந்து, அந்த கலவையை முகத்திற்கு தடவி, ஸ்கரப் செய்யலாம்.