உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள

உங்கள் உடலை ஆரோக்கியமாக பாதுகாத்துக்கொள்ள சில டிப்ஸ்!!
siddha maruthuvam engkal.com

நீரழிவு நோய் குணமாக

மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

இரத்த பேதியை குணப்படுத்த

அத்திபட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சமஅளவு பொடி செய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீதபேதி பெரும்பாலும்  குணமாகும்.

மூட்டுவலி குணமாக

அத்திபாலை பற்று போட்டு வர மூட்டுவலி குணமாகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

பற்கள் உறுதியாக இருக்க

மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

சேற்றுபுண் குணமாக

காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.

ஆண்மை குறைவு நீங்க

அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த

வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400, பசுநெய், அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

வயிற்றுவலி குணமாக

குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

siddha maruthuvam engkal.com

உடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள்

  • உடல் வெப்பத்தை குறைக்கும் இயற்கை முறைகள்

உடலின் வெப்பநிலை ஒருவருக்கொருவர் மாறுபடும். உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.உடலின் வெப்பம் அதிகரிப்பதால் தலை முடி முதல் கால் வரை நம்முடைய உடல் பாகங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். உடல் வெப்பத்தை குறைக்கும் இயற்கை வழிமுறைகளை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

  • இயற்கை முறையை பயன்படுத்துவதன் நன்மைகள்:

உடல் வெப்பத்தை குறைக்க பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையை பயன்படுத்துவதால் உடலில் பக்க விளைவுகள் இல்லாமல் பார்த்து கொள்ளலாம்.மேலும் செயற்கை முறையில் ரசாயன பொருட்களை பயன்படுத்துவதால் நம்முடைய உடலில் வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே இயற்கை முறையில் உடல் வெப்பத்தை குறைப்பது நல்லது.

உடலின் வெப்பம் அதிகரிப்பதால் வயிற்று வலி,முகத்தில் பருக்கள், போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.எனவே உடலின் வெப்பத்தை குறைப்பது மிகவும் அவசியமாகும்.

siddha maruthuvam engkal.com

உடல் வெப்பத்தை குறைக்க இயற்கை வழிமுறைகள்

நல்லெண்ணெய்

நல்லெண்ணையை நன்றாக தலையில் தேய்த்து சிறிது நேரம் தலையில் எண்ணெய் ஊற வைத்த பின்னர் வெண்ணீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்வதால் உடலும் வெப்பத்தை குறைக்க முடியும்.

தர்ப்பூசணி

உணவு பொருட்கள் மூலமும் உடலின் வெப்பத்தை குறைக்க முடியும்.தர்ப்பூசணி பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலின் வறட்சி நீங்கும் ஏனெனில் இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.

வெள்ளரிக்காய்

கோடைகாலங்களில் அதிகமாக கிடைக்க கூடிய வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடலின் வெப்பம் குறையும். இதில் அதிகமான நீர் சத்து இருப்பதால் உடல் வெப்பத்தை குறைப்பதோடு வறட்சியையும் குறைகிறது.

 முலாம்பழம் ஜூஸ்:

உடல் வெப்பத்தை குறைக்க மிகவும் புயன்பட கூடிய பழம் தான் முலாம் பழம் . இதில் உள்ள நீர் சத்து உடலில் குளிர்ச்சியை அதிகரிக்க உதவும். தினமும் முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் உடலின் வெப்பத்தை குறைப்பதோடு குளிர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.

வெந்தயம்:

வெந்தயம் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலின் வெப்பம் குறையும். இது மிகவும் பழமையான இயற்கை வைத்தியத்தில் ஒன்றாகும். உடல் வெப்பத்தால் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது வெந்தயம் சாப்பிடுவதால் வயிற்று வலி குறையும் மேலும் உடலின் வெப்பமும் குறையும்.

முள்ளங்கி:

முள்ளங்கியில் அதிக அளவு நீர் சத்து இருப்பதோடு வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது எனவே வாரத்திற்கு ஒரு முறை முள்ளங்கியை உணவில் சேர்த்து கொள்வதால் உடலின் வெப்பம் குறையும்.

சீரகம்:

இரவில் தூங்குவதற்கு முன் சீரகத்தை நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து பின் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடலின் வெப்பம் குறையும்.

எள் :

தினமும் எள் சாப்பிடுவதாலும் உடலின் வெப்பம் கணிசமாக குறைந்து வரும் .மேலும் உடலின் நீர் சத்தும் அதிகரிக்கும்.

கசகசா:

தினமும் கசகசா சாப்பிட்டு தண்ணீர் குடித்து வண்டல் உடலின் வெப்பம் குறையும் மேலும் நன்றாக உறக்கம் வரும்.எனவே தூங்குவதற்கு முன் கசகசா சாப்பிடுவது நல்லது.

மாதுளை பழம் :

மாதுளை பழத்தில் அதிகப்படியான நீர் சத்து உள்ளது எனவே தினமும் மாதுளை பழ ஜூஸ் குடித்து வந்தால் உடலின் வெப்பம் வேகமாக குறையும்).

இளநீர் :

இளநீர் குடிப்பதால் உடலின் வெப்பம் குறையும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தினமும் இளநீர் குடித்து வந்தால் உடலின் வெப்பம் வேகமாக குறையும்.

மோர் :

தயிரை விட உணவில் மோர் சேர்த்து கொள்வது நல்லது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வருவதால் உடலின் வெப்பம் குறையும்.

குளிர்ச்சியான பால்:

குளிர்ச்சியான பாலில் தேனை கலந்து குடித்து வந்தால் உடல் வெப்பம் வேகமாக குறையும்.

புதினா:

இயற்கையான முறையில் உடல் வெப்பத்தை குறைக்க புதினா மிகவும் பயன்படுகிறது. தினமும் புதினா ஜூஸ் குடித்து வருவதால் உடல் வெப்பம் குறையும்.

உடல் எடையை குறைக்க

  • பச்சை பயிறு

பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.

பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரகளையும் சரி செய்கிறது.இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது.

எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள்.

இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.

உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

siddha maruthuvam engkal.com
  • கெட்ட கொழுப்புகளை கரைக்கும் பச்சை ஆப்பிள்

ஆப்பிளிலும், ‘கிரீன்’ ஆப்பிள் எனப்படும் பச்சை நிற ஆப்பிளில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கின்றன. பச்சை ஆப்பிளின் பயன்களை பற்றி அறிந்து கொள்ளலாம். 

‘தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டி இருக்காது’ என்பார்கள். ஆம், அதில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆகியவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியவை. ஆப்பிளிலும், ‘கிரீன்’ ஆப்பிள் எனப்படும் பச்சை நிற ஆப்பிளில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கின்றன.

  • கொழுப்பை குறைக்கும் மல்லி

மல்லியை (தனியா பொடி) பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.

இன்றைய கால சூழலில் சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறது. தனியா(மல்லி(தனியா)) பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்சிகள் கூறுகிறது. மல்லி(தனியா)ப்பொடியில் 8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அதில் அடங்கியுள்ளது.

  • உடலில் கொழுப்பு குறைக்கும் திராட்சை

நமது அன்றாட உணவில் திராட்சை சேர்த்துக் கொண்டால், உடலில் கொழுப்பு குறைவது நிச்சயம். சும்மா சொல்லலைங்க.ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனைப் பற்றி விரிவாக பார்ப்போமா? யு.எஸ்ஸிலுள்ள, நார்த் கரோலினா கிரீன்ஸ்ப்ரோ என்ற பல்கலைக்கழகத்தில் திராட்சைப் பற்றி ஆராய்ச்சியை தொடங்கியிருக்கிறார்கள்.

அது உடலில் வியக்கும் வகையில் கொழுப்பினைக் குறைப்பதாக கூறியுள்ளார்கள். திராட்சையிலுள்ள பாலிஃபீனால் என்ற நுண்ணூட்டமானது , உடலில் படியும் அதிக்கபடியான கொழுப்பினை கரைக்க உதவுகிறது.

  • கொழுப்பை கரைக்கும் தேன்

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும் தன்மை உள்ளது .  இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்

  • உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் எலுமிச்சை

நமது உடல் எடையை குறைக்க எலுமிச்சை டயட் அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும். அதிலும் இந்த புளிப்புச் சுவையுடைய பழம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனு வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே.

மேலும் பெரும்பாலான உடல்நல நிபுணர்களும், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து குடித்தால், உடல் எடை எளிதில் குறையும் என்றும் கூறுகின்றனர்.

  • உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் செம்பருத்தி

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.

வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.

 உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

siddha maruthuvam engkal.com