2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - 12 ராசிகள்

மேஷம்/engkal.com

இந்த ஆண்டு சொந்த வீடு கனவு சீக்கிரத்தில் நனவாகும்.சுபகாரியங்களுக்கு கடன் வாங்க நேரிடும். சுக்கிரன் தனஸ்தானத்தை பார்ப்பதால் கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். பொன் பொருளை கவனமாக வைத்து கொள்ள வேண்டும். வருடம் பிறக்கும்போது புதன் சாதகமான வீட்டில் இருப்பதால், உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.  வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரும்.

 

குடும்பத்தாரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சின்ன சின்ன குழப்பங்கள் தோன்றி மறையும் அஷ்டமத்து சனி ஒரு வார்த்தை வெல்லும்,ஓரு வார்த்தை கொல்லும் நிலையை உண்டாக்கும் வீண் வாக்குவாதம் உண்டாகும் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும். நிலுவையில் இருந்து வரும் சொத்துப்பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உறவினர்களை கைக்குள் போட்டுக்கொண்டு உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளவும்.

 

 அது எதிர்கால்த்தில் உங்களுக்கு கை கொடுக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வருட ஆரம்பத்தில் பொருளாதார நிலை உறுதியாக இருக்கும் ஆனால் செலவுகளும் ஏறியபடியே இருக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள்.திடீரென்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.புதிய சொத்து வாங்குவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்படக் கூடும்.

 

இக்கட்டான சூழலில் பெண்களால் ஆதாயம் பெற முடியும். உத்யோகத்தில் பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும்.  தொழில், வியபாரத்தில் படிப்படியாக முன்னேற்றம் வரும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீட்டை தவிர்க்கவும்.திருமணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த விசயங்கள் நடக்கும். அஷ்டமத்து சனி நடப்பதால் யாருக்கும் ஜாமின்,கடன் வாங்கி கொடுத்து மாட்டி கொள்ள கூடாது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த முயற்சியும், வேலையும், தொழிலும் இல்லாமல் உடல் நிலையிலும் பிரச்சனையை கொடுத்த விஷயங்கள் மாறி இந்த ஆண்டு சோதனைகளை தாண்டி சாதிக்க வைக்கும் ஆண்டு. உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் ராசியை பார்ப்பது அடிப்படை தேவைகளும்,புகழ் கீர்த்தி அசையா சொத்துகள் வாங்கும் யோகத்தை கொடுக்கும்.மறைமுக எதிப்புகள் போட்டிகள் மறையும்.வர வேண்டிய பாக்கிகள் வந்து சேரும்.  குடும்பத்தில் செலவுகளும் ஒரு சில பிரச்சனைகளும் வரக்கூடும். பொருள் வரவு அதிகமாகும். முன்பு பயணங்களால் ஏற்பட்ட அலைச்சல்கள் இப்போது குறையும்.

 

பொருளாதார நிலை எப்போதையும் விட சிறப்பாகவே இருக்கும். உங்களது பொருளாதார நிலை உயர்ந்தாலும், செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புண்டு. வீண் செலவுகளை குறைக்காவிட்டால் உங்களது தற்போதைய பொருளாதார நிலை பாதிப்படைய கூடும். உங்களது வருமானம் இந்த வருடம் உயர வாய்ப்புள்ளது. எனவே உங்களது பொருளாதார நிலை உறுதியாக இருக்க்கும். இந்த சூழல் வருடம் முழுக்க தொடரும்.

 

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதே நல்லது.கடினமாக உழைத்து உங்களது வேலையில் தனித்துவமான இடத்தை பிடிப்பீர்கள்.  அதிகாரிகள் குறை கூறினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். புதியவர்கள் நண்பர்களாவர். புதிய முயற்சிகளைத் தவிர்த்து ஏற்கெனவே செய்துவரும் பணியில் மட்டும் கூடுதல் கவனத்தைச் செலுத்தவும். அடுத்தவர்களை நம்புவதை விட நீங்களே நேரடியாக செயலில் இறங்குவது நல்லது.பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும் வம்பு வழக்குகள் மறையும்,குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் நடக்கும்.

 

பணம் வரவு சிறப்பாக இருக்கும். அஷ்டம சனி பிடியில் சிக்கி இருந்தாலும் கவலைப்படத்தேவையில்லை. உங்களுக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் உரிய நேரத்தில் கிடைத்து விடும். தன்னம்பிக்கையோடு செய்யும் காரியம் நிச்சயம் வெற்றி பெரும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்வது சிறப்பு. சென்ற ஆண்டு பட்ட கஷ்டத்தை இந்த ஆண்டு சரி படுத்திக்கொள்ள முடியும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்த வழிபாட்டை உரிய நேரத்தில் செய்ய முடியும்.எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் தாமதமாகக் கிடைக்கும். அவதூறு வழக்குகளும் ஏற்படக்கூடும்.மாணவர்களே! பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். விளையாடும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

இந்த ஆண்டு எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படவும். அடுத்தவர்களின் ஆலோசனையை விட, உங்களின் சுயஅறிவே பயன்படுத்துவதால் பல இடங்களில் வெற்றி பெற முடியும். கணவன் – மனைவிக்கிடையே வீண் சந்தேகத்தின் காரணமாக பிரிவு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். பொருள்கள் களவு போக நேரிடும் என்பதால் கவனம் தேவை.

 

பணப் பற்றாக்குறை இருந்தபடி இருக்கும்.ராசிநாதன் புதன் ராசியை பார்ப்பதாலும், குருவும் சூரியனும் பரிவர்த்தனை பெற்றதால் மனைவி வகையில் செல்வாக்கு சொத்து சுக சேர்க்கை,வேலை வாய்ப்பு அமைய வாய்ப்பு உண்டு.திருமணம் சுபகாரியங்கள் ஆண்டின் பிற்பகுதியில் நட க்கும்.எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ முடியும். சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.  நண்பர்கள் மூலம் ஆதாயம் வந்து சேரும்.

 

கடன் பிரச்சனை ஓரளவு தீரும். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். புதிய சிந்தனைகள் பிறக்கும். நீண்டநாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.வேலையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலையில் முன்னேற்றம் பெற, நீங்கள் புதிய யோசனைகளை உருவாக்க வேண்டும்.

 

உங்களது சீனியர் பணியாளரின் ஆலோசனைப்படி நடப்பது சாதமாக அமையும்.தெய்வ வழிபாடு மூலம் நல்வழி கிடைக்கும். உங்கள் தேவைகள் நாளடைவில் பூர்த்தியாகும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாடகை வீட்டில் இருப்பவர்கள் வேறு வீட்டிற்கு மாறி செல்வர். ஆடை, ஆபர்ண பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போகவும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து விவகாரங்களில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்கவும்.நீண்ட நாள் எண்ணம் திட்டம் செயல் வெற்றி பெறும்.கடந்த காலத்தில் உங்களை தவறாகவும்,ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் உங்களை நாடி வரும் ஆண்டாக அமையும்.

 

குடும்பத்தினருடன் சென்று குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். குடும்ப அந்தரங்க விஷயங்களை மூன்றாவது நபர்களிடம் சொல்ல வேண்டாம். பயணத்தின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு.

இந்த ஆண்டு வேலை மற்றும் பொருளாதார ரீதியாக மிக சாதகமாக அமையும், எனினும் வருடம் முழுவதும் உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையை பொருத்த வரையில் பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். பூர்விக சொத்துக்கள் மூலம் பலன் கிடைக்கும். திருமண சம்பந்தமான பேச்சுக்கள் தொடரும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும்.

 

உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களால் நிறைய நன்மைகளை பெற முடியும். உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். எடுத்த காரியம் கை கூடும். தர்மத்தால் அதர்மத்தை அழிப்பிர்கள். வாக்கும் சொல்லும் சரியாக செயல்படும் ஆண்டு.

 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலையில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்படும் இடையூறுகளை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும்.பிப்ரவரி முதல் மார்ச் வரை மற்றும் நவம்பர் முதல் டிசம்பர் வரை, வேலை மற்றும் பிசினஸ் தொடர்பான நற்செய்திகள் கிடைத்த வண்ணம் இருக்கும்.

 

அதே நேரத்தில், நீங்கள் புதிய தொழில் தொடங்கவோ அல்லது தொழிலை விரிவுபடுத்தும் சூழலோ ஏற்படலாம். புதிதாக கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம், இருப்பினும் குரு பார்வை இருப்பதால் கடன் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியும். பண விரயங்கள் கூட சுப விரயங்களாக மட்டும் இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர்கள் மூலம் சிக்கலும், பண விரயமும் வர வாய்ப்புண்டு, ஆகையால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

 

புது வாகனம் வாங்குதல், வாகன மாற்றம் புதியதாக சொத்துகள் வாங்கும் வாய்ப்புகள் பெறக்கூடிய காலம். திட்டமிட்ட வேலைகளில் சில இடையூறுகள் தோன்றினாலும் விரைவில் அவை விலகி பதவி உயர்வு கிடைக்கும். பயணங்களால் பணவரவைக் காண்பீர்கள்.

simam rasi/engkal.com

2019 ஆம் ஆண்டு ஆரம்பத்தில், வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த மனதில் தோன்றும் எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்துவீர்கள். நெருக்கடியான சமயங்களில் மதிநுட்பத்தால் நிலைமைகளைச் சமாளித்து விடுவீர்கள். உறவினர்களிடம் இருந்து விலகி நிற்பது நல்லது. உங்கள் வாழ்க்கை தரம் உயரும். உங்கள் மனதிற்கு சரி என பட்டதை உடனே செய்யவும். குடும்பத் நிர்வாகத்தில் உங்கள் திறமை முழுவதும் இந்த ஆண்டு வெளிப்படும். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும்.

 

பயணங்களால் அலைச்சல் அதிகமானாலும் கூட அவை அதிர்ஷ்டத்தை தருவதாகவே இருக்கும். பொருளாதாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமென்றாலும் அவ்வப்போது சிறுசிறு நஷ்டங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். புதிய ஆபீசில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்க கூடும். பணவரவு நன்றாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத உயர்வுகள் தேடிவரும். சக ஊழியர்கள் உங்கள் வேலையில் பங்கெடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் அனாவசிய விரோதம் எதுவும் வேண்டாம். சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றங்களும் கிடைக்கும். பொறுமையுடனும் கடமை உணர்ச்சியுடனும் பணியாற்றுவீர்கள்.

 

வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களைத் திருப்திகரமாக முடிப்பார்கள்.முக்கிய ரகசியங்களை வெளியில் சொல்லாமல் பார்த்துக்கொள்ளவும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வகையில் நன்மை உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும்.

 

நீங்கள் பொருளாதார ரீதியாக சில சவால்களை சந்திக்க கூடும். ஆனால் அதையும் மீறி நீங்கள் சாதகமான பலனை அடைவீர்கள்.போட்டி, பந்தயம், ஸ்பெகுலேஷன் துறைகளில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அவர்களால் சில முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.

 

உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவியாய் இருப்பார்கள். நட்பு வட்டம் விரிவடையும். வேற்று மதத்தவர் கூட நண்பர்கள் ஆவார்கள். குடியிருக்கும் வீட்டினில் நிறைய மாற்றங்களைச் செய்ய நேரிடும். புது வீடு கட்டும் பணி தொடரும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் எண்ணம் வரும். எதிரிகளின் இன்னல்கள் குறைந்து ஏற்றமான நிலை உண்டாகும்.

இந்த ஆண்டு சாதகமான திருப்பத்தை தரும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக வாய்ப்புகள் வந்தாலும் கடைசி நேரத்தில் கை நழுவி போயிருக்கும். பண சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த ஆதாயத்தினைக் பெற முடியும். சொத்துப் பிரச்னைகள், பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய மனிதர்களை நம்பி பெரிய காரியங்கள் எதிலும் இறங்க வேண்டாம்.

 

பிரயாணத்தின்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். நண்பர்கள் வகையில் பல நன்மைகள் கிடைக்கும். ஜனவரி – மார்ச் மாதங்களில் பல வழிகளிலும் பணவரவுகள் இருக்கும். அதே நேரத்தில் செலவுகளும் அதிகரிக்கும். எனினும் நிலைமை உங்களது கட்டுப்பாட்டுக்குள்ளே தான் இருக்கும்.  நண்பர்கள் உங்களை தேடி வந்து உதவி செய்வர். கணவன் மனைவியிடையே ஈகோ பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.

 

 தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். தந்தை வழியில் இருந்த சொத்து பிரச்சனை தீரும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இனிமேல் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். பணவரவும் சீராகவே இருந்துவரும். உடலாரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன் ஆன்மீகச் சுற்றுலாவுக்கும் சென்று வருவீர்கள். மேலும் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும். மாணவமணிகளின் புத்தி கூர்மையடையும்.

 

நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும். போட்டிகளிலும் பங்கேற்று புகழும் பாராட்டும் பெறுவீர்கள்.காரியசித்தி,புகழ் அந்தஸ்து உயரும்.வருமானம் பெருகும். பிள்ளைகள் முன்னேற்றமும் சுபகாரியம் நடக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முடியவில்லை என்ற நிலைமாறி எல்லா செயலும் திருப்தி தரும்.

thulam/engkal.com

இந்த வருடம் பொருளாதார நிலை சிறப்பாக இருந்து வரும். அதேநேரத்தில் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தினரின் நலனிலும் சிறிது அக்கறை கொள்ள வேண்டும். குடும்பத்தில் நிலவி வரும் சலசலப்பினைப் போக்கி சந்தோஷத்தை வரவழைக்க முடியும். நீண்ட நாள்களாகத் தள்ளி வைத்திருந்த வெளிநாட்டுப் பயணமும் கைகூடும். உங்கள் காரியங்களைத் தன்னம்பிக்கையுடன் செய்வீர்கள். உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தவர்கள் அவைகள் நீங்கப் பெறுவார்கள். உடன்பிறந்தோரின் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

 

புதிதாக வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் உங்கள் தலைமையில் நடக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டிவரும். புது வீடு மாற்றம் ஏற்படும். வெள்ளிப் பொருள்கள் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்படும். அவ்வப்போது உடல்நலன் சிறிதளவு பாதித்து உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு குடி ஏறும் வாய்ப்பு வரும். பெற்றோர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

 

பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பயர் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். யாரிடமும் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். தடைப்பட்ட திருமண பணிகள் மீண்டும் தொடரும். வரவை காட்டிலும் செலவு அதிகமானலும் கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். குழந்தைகளின் உயர் படிப்புக்கு வங்கி உதவி கிடைக்கும். கருத்து வேற்றுமையால் பிரிந்த குடும்பங்கள் தம்பதியினர் ஓன்று சேருவர். திருமணம் ஆகியும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். தொழில் அபிவிருத்தி ஆகும்.

 

சிலர் தொழிலை மாற்றலாம் என்ற சிந்தனை இருக்கும். செய்யும் தொழிலையோ வேலையோ மாற்ற கூடாது. தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். அவரிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல பேச்சில் வசீகரமும் முகத்தில் பொலிவுடனும் காணப்படுவீர்கள். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து வலிய வந்து பேசுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

viruchchikam

2019 இல் உங்களது வேலையில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். தங்கமான வாய்ப்புகள் பல உங்களது வாசல் கதவை தட்டும். நல்ல கம்பெனியில் இருந்து வேலை வாய்ப்பு வரும். பூர்வீக சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்க முயற்சி செய்யவும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்ளுங்கள். அவர்கள் விரும்பும் கல்விப் பிரிவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள். வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

 

சிரமமான சூழ்நிலையிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். வரவை விட செலவுகள் அதிகளவில் இருக்கும். சொத்துப் பிரச்னைகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உறவினர்களின் வழியில் அதிக பொருள் விரையம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் இயக்கும்போது அதிக கவனம் தேவை.

 

கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அடிக்கடி பரிசோதித்துக்கொள்வது நல்லது. சகோதரர்களால் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். மற்றவர்களை விமர்சித்துப் பேசுவதைத் தவிர்க்கவும். எளிதில் கவரும் பேச்சு திறமை உங்களிடம் இருக்கும். தற்சமயம் வாக்குச்சனி நடப்பதால் யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

 

பூர்வீக சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்க முயற்சி செய்யவும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்ளுங்கள். அவர்கள் விரும்பும் கல்விப் பிரிவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள். உங்களது பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பணவரவு மற்றும் செலவுக்கு இடையே மாறுதல்களை காண்பீர்கள்.

 

 உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வதால் நன்மை உண்டாகும். உங்களுடைய சேவை மனப்பான்மையும், தொண்டு உள்ளமும் அதிகமாக வெளிப்பட்டு நற்பெயரை பெற முடியும். அடுத்தவர்கள் நலனுக்காக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். எதையும் எதிர்கொள்ளும் துணிவையும், தைரியத்தையும் பெற முடியும்.

 

சமூகத்தில் நல்ல நிலைக்கு வருவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களும் உங்களது கருத்தறிந்து நடந்து கொள்வார்கள். உடலாரோக்கியம் சிறக்கும். உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள தேவையான உடற்பயிற்சிகளை செய்வீர்கள்.

thanusu

குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். சொத்துக்கள் விஷயத்தில் உடன்பிறந்தோர் உங்களோடு ஒத்துப்போவார்கள்.  கடன் பிரச்சனையை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை மனதில் பிறக்கும். வீடு கட்டும் பணி மீண்டும் தொடரும். கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். வாழ்க்கைத் துணைவரின் ஆலோசனையின்படி நடப்பது நன்மை தரும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 

கணவன் – மனைவிக்கிடையே ஈகோ பிரச்னையால் பிரிவு ஏற்படக்கூடும் என்பதால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.உங்களின் நுண்ணறிவு வெளிப்படும். மேலும் பேச்சுத் திறமைக்கும் மதிப்பு ஏற்படும். புதிய யுக்திகளில் பணம் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை அரவணைத்துச் செல்லவும். வாழ்க்கைத்துணைக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.  யாருக்கும் சாட்சி கையெழுத்து போட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். சொத்து வழக்கில் எதிர்பார்த்த தீர்ப்பு வரும்.

 

வழக்குகளால் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும்.நண்பர்கள் மூலமாக நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொள்ள முடியும். பொருளாதாரம் உயரும். எதிர்பாராத நபர்களிடமிருந்து பெரியளவில் ஆதரவு கிடைக்கும். எல்லா விஷயங்களுக்கும் உடனடி தீர்வை காண முடியும். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள்.

ஏற்றமும் இறக்கமும் நிறைந்த வருடமாக இது இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறுவீர்கள். பொருளாதார நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். பல வழிகளில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களது கைக்கு வந்து சேரும்.

ஆண் வாரிசு இல்லை என்று ஏங்கியவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.  உத்யோகத்தில் பணிச் சுமை கூடும். உத்யோகத்தில் பண பரிமாற்றங்களில் கவனம் தேவை. தொழில், வியபாரத்தில் புதிதாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இது வரை இருந்து வந்த ஏற்ற தாழ்வுகள் நீங்கும்.

 

செயல்களில் பொறுமையுடன் செயலாற்றி வெற்றியுடன் முடிப்பர். ஷேர்மார்க்கெட் போன்ற துறைகளில் பெரிய லாபத்தை இதே காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியாது என்றால் மிகையாகாது.வீடு மனை வாகனம் வாங்க கூடிய யோகமான ஆண்டு நவம திரிகோணத்தில் லக்கினாதிபதி குரு இருப்பதால் தொழில் வெளிநாட்டு பயணம் பொருளாதார வசதிகள் மேம்படும். புதியவர்களின் நட்பை பெற்று பொருளாதார வசதிகளை பெருக்கி கொள்ளலாம்.

இந்த ஆண்டு நீங்கள் எடுத்து வைக்க போகும் ஒவ்வொரு அடியும் உங்கள் எதிர்கால வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருக்கும். மனதினில் தர்ம சிந்தனைகளும், தியாக உணர்வுகளுமே அதிக அளவில் இடம் பிடிக்கும். கணவன் நன்றாக இருந்தால் மனைவி வில்லியாக இருப்பார், மனைவி நல்லவிதமாக இருந்தால் கணவன் வில்லனாக இருப்பார்.

 

அடுத்தவர்களின் நலனுக்காக கடுமையாக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். எடுத்த வேலையை முடிப்பதற்கு நிறைய அலைச்சலை சந்திக்க நேரிடும். குடும்ப விஷயங்களில் உங்களது பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்து வரும். இக்கட்டான நேரத்தில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.  சிலருக்கு குலதெய்வ வழிபாடுகளும் கைகூடும். மேலும் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமிது என்றால் மிகையாகாது. குடும்பத்துடன் சென்று நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்றவும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களை சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும். மாணவமணிகள் முயற்சிக்கேற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவர். நண்பர்களின் ஆதரவும் பெற்றோர்களின் உதவியும் கிடைக்கும்.

 

அரசாங்கத்திலிருந்து நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். வாக்குவாதங்களில் சமர்த்தர் என்று பெயரெடுப்பீர்கள்.  புதிய தொழில் முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள்.

 

ஆன்மிகத்திலும் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள். படிப்பிற்காக போதிய பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.உங்கள் பேச்சில் தத்துவக் கருத்துகள் மிகுந்திருக்கும். மனதிலிருந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் மறைவதுடன் குடும்பத்தில் சந்தோஷமும் நிறையும்.உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பார்கள். உறவினர்களால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு எல்லா வகையிலும் நன்மையை தரும்.

 

 குடும்பத்தில் குழந்தைகளால் பெருமை கிடைக்கும். நல்ல வேலை எதிர்ப்பார்த்த உத்யோகமும் மாற்றமும் வரும். பணம் பல வழிகளில் வந்து சேரும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகமாக ஏற்படும். கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம், அதனால் பல சிக்கல் வரும். வாகன பயணத்தில் கவனமுடன் செயல்படவும்.

kumpam

தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள்.  அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். உடன்பிறந்தவர்களால் செலவுகளை சந்திக்க நேரிடும்.

 

 பணப்புழக்கம் அதிகரிக்கும்.  வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. புது வீடு மனை வாங்கும் திட்டம் கைகூடும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகம் செல்லும் பணியாளர்களுக்கு  அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரித்தாலும் உங்கள் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப்  பெறும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் உங்களக்கு பண வரவு உண்டாகும். அதேநேரம் சக  ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாக தொடங்கும். தெய்வ வழிபாட்டில் நாட்டம் உண்டாகும். அலைச்சல் தரும் வேலைகளைக்  குறைத்துக்கொள்ளவும். அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும்.

 

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குறிப்பாக சுப செலவுகள் அதிகளவில் உண்டு. நிறுத்தி வைத்திருந்த காரியங்களை செய்ய தொடங்கவும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த சந்தோஷம் கிடைக்கும்.

 

கணவருடன் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். எந்த ஒரு செயலையும் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளவும். பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. எனவே ஆடை , அணிகலன்களை வாங்கமுக்கியத்துவம் தருவீர்கள்.

 

மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். சிலர் முதல் தரம் வாங்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள். கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவு நீங்கி சமரசம் ஏற்படும். பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர். காதல் விவகாரங்களில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி திருமணத்தில் முடியும். குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புண்டு.

menam

இந்த ஆண்டு  எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஆர்டர்களில் கையெழுத்திடுவீர்கள்.உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு திடீர்ப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.  பெரிய அளவிலான ஒப்பந்தகளும் கையெழுத்தாகும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பணவரத்து கூடும். உடல் நலம் சீராக இருக்கும்.

 

வேலைசெய்யும் இடத்தில் பணிச்சூழல் நன்றாக இருக்கும்.மாலையில் உறவினர்கள் வருகை சந்தோஷத்துடன் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.  போட்டிகள் மறையும். நட்பு வட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். தொகுதி மக்களைச் சந்திப்பீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு லாபமான காலமாக இருக்கும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களைத் தேடி வரலாம். அரசியல்துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

 

உங்களுக்குப் பாராட்டும் வெகுமதியும் பெறறுத் தரும் பெரிய விஷயத்தில் ஒரு சிறிய பகுதியாக நீங்கள் இருப்பீர்கள்.தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும்.வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். நண்பர்களை நம்பி எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டாம். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும்.

 

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். விட்டுப்போன உறவுகளின் ஆதரவு மீண்டும் வந்து சேரும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை வெகுவாக உயரும். உத்யோகத்தில் நல்ல பல சலுகைகள் கிட்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.