ஏப்ரல்மாதபலன்கள்

ஏப்ரல் மாத பலன்கள்(2019)

மேஷம்/engkal.com

மேஷம் ராசி நண்பர்களுக்கு எதையும் திட்டமிட்டு செயல்படுவது எல்லா வகையிலும் சிறப்பு. மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். அடிக்கடி பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிரபலங்களின் அறிமுகவும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோசமான சூழல் நிலவும். கையில் தாராள பணப்புழக்கம் இருந்து வரும். சிலருக்கு புது வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு உண்டாகும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.  வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் பிரச்னை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். 

சந்திராஷ்டமம் : 7,8,9 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

பாசமிகுந்த ரிஷப தோழர்களே, திருமணம் தொடர்பான பேச்சுக்கள் சுமூகமாக நடைபெற்று முடியும். குடும்பத்தில் பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய வாகன வசதி பெற்று மகிழும் வாய்ப்புண்டு. புதிய வீடு பேறு அமையவும் வாய்ப்புண்டு. பூர்வீக சொத்து பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு கிடைத்து அதன் மூலம் பணம் கைக்கு வரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கும் ஏற்படும். குடும்பத்தில் செலவுகளும் ஒரு சில பிரச்சனைகளும் வரக்கூடும். பொருள் வரவு கூடும்.குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே  விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பிள்ளைகளிடம் கவனமாகப் பேசுவது  நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும். அக்கம் பக்கத்தினரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். பெண்களுக்கு எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும்.

சந்திராஷ்டமம் : 9,10,11 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

உதவி செய்யும் மனமுடைய மிதுன ராசி அவர்களுக்கு, குடும்ப பெரியோர்களின் உதவி கிடைக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு புது வீடு கட்டி கிரக பிரவேசம் செய்யும் வாய்ப்புண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வந்தவுடன் பழைய கடன்களை எல்லாம் ஒரேடியாக அடைத்து விட நினைப்பீர்கள். நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஆதாயம் அடையாளம். மனம் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்த சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப வர தாமதமாகும். வெளியில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்படும். உடன்பிறப்பு வகையில் சில அனுகூலமான பலன் உண்டு. நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்கும். பெறுவீர்கள்.எதிலும் பதற்றமடையும் போக்கை கைவிட்டு நிதானமாக நடந்துகொள்ள பழகுவீர்கள்.   கலைத்துறையினருக்கு பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். சனி பகவானின் சஞ்சாரத்தால் வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பு உண்டாகலாம். அரசியல் துறையினருக்கு நிலவி வந்த பிரச்னைகள் மறையும்.

சந்திராஷ்டமம் : 12,13,14 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

கனவை நினைவாகும் கடக ராசி நேயர்களே, உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். புதிய வீடு மனை வாகனம் வாங்குவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். சுக்கிரனின் சஞ்சாரத்தின் மூலம் வீடு வாகனங்களை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் அகலும். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.  தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். அசையும், அசைய சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பணத்தேவைகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நல்லது. குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்ப நபர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். நெருங்கிய உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். குடியிருக்கும் வீட்டை மாற்ற நேரிடும். பழைய கடனை அடைக்க வழி கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

simam rasi/engkal.com

மற்றவர் மனதை புரிந்து நடக்கும் சிம்மம் ராசி தோழர்களே, திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். குடும்ப நபர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர், நண்பர்கள் மூலம் சிக்கலும், பண விரயமும் வர வாய்ப்புண்டு. புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு விலகும். கோர்ட் வழக்கில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் ஒவ்வொன்றாக கிடைக்க துவங்கும். பல வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சிரமம் இன்றி சமாளிக்க முடியும். பணம் வரவு கூடும். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர்  புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். பூர்விக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களை பெற முடியும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.பெண்கள் திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

கன்னி ராசி அன்பர்களே, உங்கள் மனதிற்கு சரி என பட்டதை துணிச்சலாக செய்வீர்கள். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும். புது வீடு கட்டும் பணி தொடரும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வகையில் நன்மை உண்டாகும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் சேமிப்பை உயர்த்தும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளின் மூலம் தன வரவு உண்டாகும். ஆடம்பர வசதிகள், சொந்த வீடு போன்ற பல நன்மைகள் அமையக்கூடும். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். திருமண காரியம் விரைவில் கைகூடும். டுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும், மேலும் உறவினர் நண்பர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். தெய்வ தரிசனகளுக்காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். கணவன் மணவையிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்ப நிர்வாகத்தை சிறப்பாக வழிநடத்த முடியும்.  புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். அரசியல் துறையினர் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் : 19,20,21 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

thulam/engkal.com

எந்த ஒரு பிரச்சனையும் சுலபமாக தீர்வு காணும் துலாம் ராசி தோழர்களே, பணம் கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருக்கும். உங்கள் வங்கி கணக்கில் பணம் உயரும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தடைபட்ட திருமணம் விரைவில் கைகூடி நிறைவேறும். கணவன் மனைவி இடையே இணக்கமான போக்கும. வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். மற்றவர்களுக்காக சில முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும்.நண்பர்கள் உங்களை தேடி வந்து உதவி செய்வர். கணவன் மனைவியிடையே ஈகோ பிரச்சனையை தவிர்க்கவும். உடன்பிறப்புகளிடம் விட்டு கொடுத்து போவது சிறப்பு. குடும்பஸ்தானத்தில் குரு இருக்கிறார். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான  போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின்  எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். உறவினர்களிடம் பண விஷயத்தில் மனஸ்தாபம் வர வாய்ப்புள்ளது, ஆகையால் கவனமாக இருக்கவும். முக்கிய காரியங்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால் தெய்வ வழிபாட்டின் மூலம் அதை சரி செய்து கொள்ளவும்.

சந்திராஷ்டமம் : 21,22,23 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

viruchchikam

எளிமையான தோற்றத்தில் காணப்படும் விருச்சகம் ராசி தோழர்களே, புது வீடு மாற்றம் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வெளியிடங்களில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். தடைப்பட்ட திருமண பணிகள் மீண்டும் தொடரும். பூர்வ புண்ணிய பாக்கியங்கள் கிட்டும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். கோர்ட் வழக்குகளில் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். பயணங்கள் தொடர்பாக அலைச்சல் செலவுகள் ஏற்பட்டாலும் மனத்திருப்தி கொள்ளும் வகையில் நற்பலன் உண்டாகும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. வேண்டியவர்களின் திருமண காரியங்களை தலைமை தாங்கி நடத்தி வைப்பீர்கள். கணவன் மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எதிலும் பதற்றமடையும் போக்கை கைவிட்டு நிதானமாக நடந்துகொள்ள பழகவும். பெற்றோர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவருக்கு உதவி செய்ய போய் பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையினர் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்து வந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். அரசியல் துறையினர் மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சந்திராஷ்டமம் : 23,24,25 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

thanusu

மதிப்பும் மரியாதையும் மிகுந்த தனுசு ராசி நண்பர்களே, உங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலக போகிறது. புதிய பாதையில் பயணிக்க முடியும். மற்றவர்கள் செய்ய தயங்கும் காரியத்தை கூட தெரியமா எடுத்து செய்வீர்கள். மற்றவர்களை கவரும் திறமை உங்களிடம் இருக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவும். ஆன்மீக ஆர்வம் கூடும். கொடுக்கல் வாங்கலில் அவசரம் காட்ட வேண்டாம். விலகியிருந்த உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். மனைவி வழியில் சில ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். உடன்பிறப்புகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து தர முடியும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்பட வாய்ப்புண்டு, கவனம் தேவை. சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும்படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்குழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம்.

சந்திராஷ்டமம் : 26,27,28 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

அனைவரிடமும் அன்பாக பழகும் மகரம் ராசி தோழர்களே, உங்கள் வித்யாசமான அணுகுமுறையாலும் சாதுரியமான பேச்சாலும் எதையும் சாதிக்க முடியும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெருக்கிகொள்வீர்கள். கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அதை அடைக்கவும் வழி கிடைக்கும். மன திருப்தியுடன் செய்யும் காரியும் வெற்றி பெரும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். வாகன யோகம் உண்டு. எப்போதும் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவும். குடும்ப வரவு, செலவுகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். நீங்கள் சற்றும் எதிர்பாராத உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. வேண்டியவர்களின் திருமண காரியங்களை தலைமை தாங்கி நடத்தி வைப்பீர்கள். கணவன் மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எதிலும் பதற்றமடையும் போக்கை கைவிட்டு நிதானமாக நடந்துகொள்ள பழகவும். பெற்றோர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.புதிய வாகன வசதி பெற்று மகிழும் வாய்ப்புண்டு. புதிய வீடு பேறு அமையவும் வாய்ப்புண்டு. பூர்வீக சொத்து பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு வரும்.

சந்திராஷ்டமம் : 28,29,30 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

kumpam

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக பழகவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிடையே இணக்கமான போக்கும் காணப்படும். குடும்பத்தில் குதூகலமும் இருக்கும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலர் பூர்விக இடத்தை விட்டு வெளியூர் சென்று தங்க நேரிடும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மனக்குழப்பம் ஏதும் வராமல் இருக்க தினமும் தியானம் செய்யவும். நண்பர்களிடம் உங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளவும். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடன்பிறப்புகளால் சில தொல்லைகள் உருவாகும். அறிமுகமில்லாத புதிய மனிதர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பழகி வருவது நல்லது. உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். முடிந்தவரை அடிக்கடி பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. திருமணம் தொடர்பான பேச்சு பல தடங்கலுக்கு பின் மீண்டும் துவங்கும். அநாவசியமான செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது நல்லது. நிலுவையில் உள்ள கடன்பிரச்னைகள் குறையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களை உபயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : 1,2,3,4 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

menam

கடவுள் பக்தி மிகுந்த மீனம் ராசி தோழர்களே, எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இருக்காது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. அரசியல் துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். நீங்கள் எதிர்பாராத வகையில் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வாழ்க்கைத்துணை வழியில் நற்செய்தி உண்டு. பணம் கொடுக்கல் வாங்கலில் சிரமங்கள் ஏற்படும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு முற்றிலும் நீங்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். நீண்ட தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. உத்யோகத்தில் பணிகளை விரைவாக செய்து முடிக்கவும். தொழில், வியபாத்தில் போட்டிகள் குறையும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறத் துவங்கும். கடன்சுமை குறையும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக அமையும். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பார்கள். மிகுந்த தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு வருவீர்கள். நிதானமான தன வரவு தொடர்ந்து இருந்து வரும். உத்யோகத்தில் பணிகளை திறம்பட செயல்படக்கூடிய ஆற்றல் இருக்கும்.

சந்திராஷ்டமம் : 5,6,7 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.