பிப்ரவரிமாதபலன்கள்

பிப்ரவரி மாத பலன்கள்(2019)

மேஷம்/engkal.com

மேஷம் ராசி நண்பர்களுக்கு,பண வரவு திருப்திகரமாக இருக்கும். கையில் பணம் புழலுவதால் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் கூட சீக்கிரத்தில் முடியும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு, மற்றும் வாகனம் வாங்கும் யோசனையை சற்று தள்ளி வைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்தல் மிகவும் அவசியம். மனைவியின் ஆலோசனை குடும்ப நலனுக்கு உதவும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் உங்கள் தலைமையில் நடைபெறும். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்திருந்தால் இந்த மாதம் திரும்பக் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை பதவி கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன. சிலருக்கு இடமாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

சந்திராஷ்டமம் : 21,22,23 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

பாசமிகுந்த ரிஷப தோழர்களே, முக்கிய காரியங்களை உடனுக்குடன் செய்து முடிக்க விரும்புவீர்கள். உங்கள் நல்ல எண்ணத்திற்கு ஏற்றபடி எல்லாம் வெகு சிறப்பாக அமையும். இஷ்ட தெய்வ அருளால், மனதில் நினைத்தது நடக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உரிய சிகிச்சையினால் உடனுக்குடன் சரியாகும். ஏற்பட்டு செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. பணவரவு கணிசமாக உயரும், இருப்பினும் செலவுகளை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் வரும். புது வீடு, வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உள்ளது. வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். பெற்றோர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பேசும்போது கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். கடன் பிரச்சனை ஒரு புறம் இருந்தாலும் பெரியளவில் பாதிக்காது. வெளியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க சிறிது தாமதமாகலாம்.

சந்திராஷ்டமம் : 24,25,26 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

உதவி செய்யும் மனமுடைய மிதுன ராசி அவர்களுக்கு, நண்பரின் ஆலோசனை நம்பிக்கைத் தரும். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். எந்த செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களை பாராட்டி பேசுவர். சொந்த வீடு வாங்கும் எண்ணம் மேலோங்கும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். அடிக்கடி பயணங்களும், அலைச்சல்களும் தவிர்க்க முடியாது. குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. கணவன் மனைவி இடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். மனைவி வழி சொந்தங்களில் மூலம் அனுகூலமான பலன்களை கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். மனதில் பழைய நினைவுகள் தொந்தரவு தரும். சொந்த நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். பிள்ளை அல்லது பெண்ணின் திருமண விஷயத்தில் இந்த மாதம் ஈடுபடவேண்டாம். மாதத்தின் பிற்பகுதியில் கணவன் – மனைவி இடையில் சிறிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் சிறிய அனுசரித்து செல்லவும்.

சந்திராஷ்டமம் : 26,27,28 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

கனவை நினைவாகும் கடக ராசி நேயர்களே,சிலர் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவு படுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு விரிவு சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் பொறுமை அவசியம். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்காது. குல தெய்வ வழிபாடு சிறப்பை தரும், மனம் மற்றும் பண கஷ்டத்தை சீக்கிரத்தில் போக்கும். பணம் தொடர்பாக யாருக்கும் வாக்குறுதிகள் கொடுத்து பிரச்சனையில் சிக்கி கொள்ள வேண்டாம். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். வெளி இடங்களில் குடும்ப விவகாரங்கள் பற்றி பேசாமல் இருக்கவும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வெளியூரில் இருந்து வரும் செய்திகள் தங்களுக்கு அனுகூலமாகவே இருக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உடனுக்குடன் சரியாகும். சிலர் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவு படுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு விரிவு சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் பொறுமை அவசியம். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்காது.

சந்திராஷ்டமம் : 1,2,3 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

simam rasi/engkal.com

மற்றவர் மனதை புரிந்து நடக்கும் சிம்மம் ராசி தோழர்களே,குடும்பத்தில் சற்று நிம்மதி இல்லாத நிலை காணப்படும். வழக்குகளைப் பொறுத்தவரை உங்களுக்குச் சாதகமான நிலையே இருக்கும். சகோதரர்கள் வகையில் அனுகூலம் இருக்காது. அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் அனுகூலம் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். னதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக் கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக் கூடும்.ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சக பணியாளர்கள் உங்களிடம் மரியாதையாக நடந்துகொள்வார்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். குடும்ப விவகாரங்களில் கவனத்துடன் இருப்பது ரொம்ப அவசியம். பிரிந்து சென்ற உறவினர்கள் உங்களை நாடி வருவர். நெருக்கமானவர்களின் சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் நலம் சிறப்படையும். உடன்பிறப்புகளிடையே இருந்த சண்டை சச்சரவு நீங்கும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சனைகள் தீரும். புதிய வீடு வாங்க திட்டமிடுவீர்கள். மனைவியின் ஆலோசனைகளும் உதவியும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். குடும்பத்தில் தங்களின் மதிப்பும், மரியாதையும் தானாகவே உயரும்.

சந்திராஷ்டமம் : 4,5,6 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

கன்னி ராசி அன்பர்களே,எந்த ஒரு முக்கிய காரியங்களுக்கும் அவசரம் காட்ட வேண்டாம், பொறுமையாக காத்திருக்கவும். பணம் விஷயத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். கடன்கள் பிரச்சனை தீர புது வழி பிறக்கும். பயணங்களால் மன நிம்மதியும் அதன் மூலம் அனுகூலமான பலன்களும் கிடைக்க பெறுவீர்கள். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் சற்று பொறுமை காக்கவேண்டியது அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். மாணவ, மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் விரைவில் ஏற்படும். அடுத்தவர்கள் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர்களின் உதவி கிடைக்கும். ஒரு சிலர் பழைய வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறப்பு வகையில் பல பணம் விரையம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். சகோதரர்களால் மன வருத்தம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் அவசியம். ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.

சந்திராஷ்டமம் : 6,7,8,9 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

thulam/engkal.com

எந்த ஒரு பிரச்சனையும் சுலபமாக தீர்வு காணும் துலாம் ராசி தோழர்களே,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த மாதம் எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். உடன்பிறந்தோரால் கலகம் உண்டாகும் வாய்ப்பு உண்டு. முடிந்த வரை இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வரவை விட செலவுகள் அதிகம் ஆக வாய்ப்புண்டு. குடியிருக்கும் வீட்டினில் மாற்றங்கள் செய்ய முற்படுவீர்கள். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். உடன்பிறப்புகளின் வழியில் மனக்கசப்பு ஏற்படும். உறவினர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். காதல் கைக்கூடி திருமணத்தில் முடியும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். கலைத் நினைத்தால் வாய்ப்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் விரும்பிய இட மாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும் சேமிப்பும் பெருகும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : 10,11,12 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

viruchchikam

எளிமையான தோற்றத்தில் காணப்படும் விருச்சகம் ராசி தோழர்களே, உறவினர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். பெரியோர்கள் ஆலோசனை கை கொடுக்கும். பொருளாதாரத்தை பொறுத்த வரை சற்று எட்ட இறக்கமாகவே உள்ளது. யாருக்கும் எந்த வாக்குறுதியும் அவசரப்பட்டு கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்களிடம் வரம்பு மீறி செல்ல வேண்டாம். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்பட்டு பின் சீராகும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். அத்தியாவசியத் தேவைகளுக்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும். வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக பிரிந்திருக்க எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பிரச்னைகள் பல வந்தாலும் மனத் துணிவுடன் எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைவாக செய்து முடிக்கவும். தொழிலில் சிறிது மந்த நிலை ஏற்பட்டு பின் சீராகும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். இந்த மாதம் பயணம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

சந்திராஷ்டமம் : 12,13,14 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

thanusu

மதிப்பும் மரியாதையும் மிகுந்த தனுசு ராசி நண்பர்களே, கடையை விரிவு படுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் பொறுமை அவசியம்.பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.எதிர்பாராத செலவுகள் உண்டானாலும் வீட்டினில் புதிய பொருட்கள் சேரும் வாய்ப்பு உண்டு. சுப காரிய செலவுகள் அதிகம் உண்டு. நண்பர்களோடு விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளிநாடு செல்லாதவர்க்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு உபயோக பொருட்கள் ஆடைகள் ஆபரணங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் தானாகவே உயரும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உடனுக்குடன் சரியாகும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற அலுவலகத்தில் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் விரைவில் கைகூடும். கடன் சுமைகள் இப்போது பாதியாக குறையும். நட்பு வட்டம் விரிவடையும். பண வரவுகள் முன்பைவிட சற்று கூடுதலாகவே இருக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவார்கள். கணவன் மனைவி உறவு மற்றவர்கள் பாராட்டும்படி இருக்கும்.பிள்ளைகளால் பெருமை ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும்.


சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

அனைவரிடமும் அன்பாக பழகும் மகரம் ராசி தோழர்களே,உங்களுடைய காரியங்களை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி ஏற்படும். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த ஆதாயத்தினைத் தரும். மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள்பயணங்களின் போதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. கடன் தொல்லை பாதியாக குறையும். பெற்றோர்கள் வழியில் அனுகூலமான பலன்களும் அவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண வரன்கள் கூடிவரும். பொது பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். மனதில் புதிய நம்பிக்கை வளரும். நிதானமாக செயல்பட்டு அதிக நன்மைகளை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். உறவினர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சலுகைகள் எதையும் இந்த மாதம் எதிர்பார்ப்பதற்கு இல்லை. சக ஊழியர்களுடன் மாதம் பழகவும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும், எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும்.


சந்திராஷ்டமம் : 16,17 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

kumpam

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உடல் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பிறர் செய்யத் தயங்கும் செயல்களைக் கூட சவாலாக ஏற்றுக் கொண்டு மிகுந்த தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். விஐபிகளின் அறிமுகமும், அரவர்களால் நன்மையையும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் தற்காலம் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நேரம் சொத்துக்களில் நிலவிய பிரச்சனைகள் இழுபறியில் நீடித்து இருக்கும். பெற்றோர்கள் வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்க வேண்டிவரும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கணிசமாக உயரும். கணவன் மனைவிடையே அடிக்கடி ஈகோ பிரச்சனை வந்து போகும். மனநிம்மதி சற்று குறையக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி இருக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளை இருக்கும். உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

சந்திராஷ்டமம் : 17,18,19 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

menam

கடவுள் பக்தி மிகுந்த மீனம் ராசி தோழர்களே, உடல் நலன் சற்று பாதிக்கப்படும் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த மாதம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். பதவி உயர்வோ சலுகை உயர்வோ இந்த மாதம் எதிர்பார்க்கமுடியாது. புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. வரவுகளை விட செலவுகள் அதிகரித்து காணப்படும். உறவினர்களுடனான சந்திப்பு மனதிற்கு உற்சாகத்தைத் தரும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். பூர்வ சொத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். ஆடம்பர செலவுகள் கூடும். வழக்கு விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். எதிர்பாராத பொருளாதார சிக்கல்களை சந்திப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். கணவன் மனைவி உறவுகளில் மற்றவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

சந்திராஷ்டமம் : 19,20,21 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.