மே மாதபலன்கள்(2019)

மேஷம்/engkal.com

தன்னலமின்றி  பாடுபடும்  குணமுடைய மேஷராசி அன்பர்களே ,நீங்கள் நிறைய இடத்திற்கு பயணம் செல்ல வேண்டிருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசரமுடிவு எடுக்கவேண்டாம் . வீண்வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்று. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். தொழில்வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டிஇருக்கும். புதியவீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வரவேண்டிய பணம் உடனடியாககைக்கு வந்து சேரும். பெண்களால் ஒரு சில நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். தூரத்து உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். பூர்வீகசொத்து விற்கப்பட்டு அதில் உங்கள் பங்கு கிடைக்கும் .ஆடம்பர செலவு காரணமாக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம், கவனமாக இருக்கவும். திருமண முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். முடிக்க முடியாத காரியங்கள் கூட எளிதில் முடிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணம் செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

 

சந்திராஷ்டமம் : 24,25,26,27 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

எந்த எதிர்பாப்பும் இல்லாமல் உதவி செய்யும் ரிஷப ராசி நண்பர்களே. நீங்கள் எதிர்பாத்த பெரிய மாற்றம் வரக்கூடிய மாதம் இது. மனதில் இனம்புரியாத சந்தோஷம் உருவாகும்.  கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய வீடு கட்ட பணம் வங்கி கடன் மூலம் கிடைக்கும். மனைவி வழி உறவினர்களால் நிறைய நன்மையுண்டு. உத்தியோகத்தில் பணிக்கான பாராட்டுகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்த தகுந்த ஆலோசனை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும்.  அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டிகளில் பரிசுகளை அள்ளுவீர்கள். அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி இந்த மாதம் அமையும். திட்டமிட்டபடி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்ச்னைகள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

 

சந்திராஷ்டமம் : 1,2,3 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

எந்த ஒரு பிரச்சனையும் சுலபமாக கையாளும் மிதுன ராசிக்காரர்களே இந்த மாதம் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வீடு மனை வாகனம் ஆகியவற்றில் இருந்து வந்த இழுபறி நீங்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள்.பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். சக மாணவர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி இடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம். பிரிந்து சென்ற நண்பர்கள் தங்களின் அன்பை புரிந்துகொண்டு மீண்டும் வந்து ஒன்று சேர்வார்கள். உத்யோகத்தில் சில நேரங்களில் வீண் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

 

சந்திராஷ்டமம் : 3,4,5 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

யார் மனதையும் புண்படுத்தாத கடக ராசி நேயர்களே. இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும்.  வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும்.  அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவார்கள். கடன் சுமைகள் ஓரளவு குறைய வாய்ப்புண்டு. உடன்பிறப்பு வழியில் மதிப்பும் ஆதரவும் கூடும். பண வரவுகள் முன்பைவிட அதிகமாக இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவார்கள். வரவு செலவுகளை சரியாக கணக்கிட்டு சரியான பாதையில் செல்வீர்கள். கணவன் மனைவி உறவு மற்றவர்கள் பாராட்டும்படி இருக்கும்.  வீட்டு உபயோக பொருட்கள் ஆடைகள் ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும். தொழில், மற்றும் வியாபார தொடர்புகள் அதிகரிக்கும்.

 

சந்திராஷ்டமம் : 5, 6, 7 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

simam rasi/engkal.com

மரியாதைக்குரிய சிம்மராசி தோழர்களே நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும். பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது.கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும். மேல்படிப்புக்கு திட்டமிடுவீர்கள். அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தாயார் பொது ஜன தொடர்புகள் அதிகரிக்கும். பயணங்களின் போதும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சிலருக்கு வீடு மாற்றம் உண்டாகும். கடன் தொல்லை அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் நீங்கும். குடும்பத்தினருடன் வெளியூர் சுற்றுலா சென்று வருவீர்கள்.

 

 

சந்திராஷ்டமம் : 7,8,9 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

நினைத்ததை முடிக்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.அடிக்கடி பயணங்களால் உடல் சோர்வு மற்றும் அசதி ஏற்படும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்பட்டு நீங்கும். பழைய கடன் பிரச்சனைகள் ஓரளவு சீராகும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து சென்றால் மன நிம்மதி பெறலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் செல்வாக்கு நிலை உயரும். நண்பர்களுடன் கவனமாக இருப்பது அவசியம். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும்.பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். தாயார் வழியில் அனுகூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும்.  கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

சந்திராஷ்டமம் : 9,10,11 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

thulam/engkal.com

கை வைத்த காரியம் நிறைவேறக்கூடிய துலாம் ராசி  நேயர்களே, வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு வீடு மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மன பிரச்சனைகள் தீர தினமும் தியானம் செய்யவும். உடல் நலம் சீராகும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். தங்கள் முன்னேற்றத்திற்கு இருந்த தடைகள் விலகும். பெற்றோர்கள் வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்ல அந்யோனியம் ஏற்படும். குடும்ப வரவு செலவு கணக்கை சரிபார்ப்பதின் மூலம் குடும்ப பொருளாதாரம் உயரும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் இருக்கும். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.  உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக முக்கியஸ்தர் ஒருவரது உதவி கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். உங்களது பேச்சிற்கு வீட்டில் மரியாதை கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

 

சந்திராஷ்டமம் : 11,12,13,14 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக , புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

viruchchikam

எந்த ஒரு முடிவையும் சுயமாக எடுக்கும் விருச்சிக ராசிக்காரர்களே இந்த மாதம் வழக்கத்தை விட செலவு கூடும். செலவு செய்யும் முன் தகுந்த ஆலோசனைகள் அவசியமாகிறது. தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும்.  அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். குறிப்பாக வண்டி வாகனங்களில் பண விரயம் ஏற்பட வாய்ப்பு அதிகம். கையில் எடுத்த காரியத்தை திறமையாக முடிக்க பாடுபடுவீர்கள். கணவன் மனைவி உறவுகளில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும். உடன்பிறப்பு வகையில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கோர்ட் வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் சுப விரயங்கள் என்ற பெயரில் வீண் விரயங்கள் அதிகமாகவே இருக்கும். உத்யோகத்தில் விரும்பிய இட மாற்றம் உண்டு. தொழில், வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். . சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

 

சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

thanusu

தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுபட்டு அனைத்து வேலைகளிலும் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்கும் தனுசு ராசியினரே,புதிய முயற்சியில் ஈடுபட்டு பெரியளவில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. நண்பர்கள் தங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள். எதிர்பாராத பொருளாதார சிக்கல்களை சந்திப்பீர்கள். பழைய கடன்கள் அடைப்படும். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கணவன் மனைவி உறவுகளில் மற்றவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். குடும்பத்துடன் விருந்து விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு வெகுவாக உயரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டு பின் சீராகும். திடீர் கோபம் உண்டாகும்.  உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.  விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. அரசியல் துறையினருக்கு நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.

 

சந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

மற்றவர்களை எதிர்பாக்காமலே இருக்கும் மகர ராசிக்காரர்களே, இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம்.உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. நண்பர்களுடன் நிதானமாக பழகுவதும் நன்மை தரும். அரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.  கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான முக்கிய பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். குடும்ப பெருமையை வெளியில் சொல்லி மகிழ்வீர்கள். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. உத்யோகத்தில் அதிக வேலைபளு இருக்கும். தொழில், வியாபாரத்தில் கவனமாக இருந்தால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும்.  குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும்.

 

சந்திராஷ்டமம் : 18,19,20 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

kumpam

மிகவும் எளிமையாக காணப்படும் கும்ப ராசி நேயர்களே,குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனைவி வழி சொந்தங்கள் மூலம் அனுகூலமான பலன்களை கிடைக்க பெறுவீர்கள். நண்பர்களை விட்டு விலகி நிற்பது உத்தமம். பெற்றோர்கள் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். கடன் தொந்தரவு குறைய ஆரம்பிக்கும். பயணங்களால் அலைச்சல்களை தவிர்க்க முடியாது. உறவினர் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.  உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டியும் பொறாமையும் அதிகமாக இருந்தாலும் பாதிப்புகள் இருக்காது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். கலைத்துறையினருக்கு கவனம் தேவை.

 

சந்திராஷ்டமம் : 20, 21, 22 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

menam

தன்னை பற்றி மட்டும் நினைக்காமல் மற்றவர்களை பற்றி நினைக்கும் குணமுடைய மீன ராசி அன்பர்களே,  குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.பண வரவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ப செலவுகளும் வந்துகொண்டே இருக்கும். பொருளாதாரத்தை பொறுத்த வரை சற்று ஏற்ற இறக்கமாகவே உள்ளது. உடன்பிறப்புகளால் பண விரயமும் ஒரு சில சிக்கல்களும் ஏற்படும் வாய்ப்புண்டு. நண்பர்களிடம் சற்று அளவோடு இருப்பது நல்லது. உடல் நலத்தில் அதிகம் அக்கறை தேவை. குடும்பத்தில் செலவுகள் அதிகம் ஆகும். பண சேமிப்புக்கு இடம் இல்லை.பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.தம்மை போலவே மற்றவர்களும் காலத்தை வீணாக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் மீன ராசியினரே இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.   சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். புது நண்பர்களின் தொடர்பு கிடைக்கும். உறவினர்கள் வருகையால் பண விரயம் உண்டு. மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும்.

சந்திராஷ்டமம் : 22,23,24 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.