என் காதலை சொன்ன போது வெட்கத்தில் முகம் மறைத்து
முகம் மறைக்கும் விரல்களின் நடுவே புன்னகைத்த அந்த புன்னகை தான்
இன்று வரை என் கண்கள் சிந்தும் கண்ணீருக்கு காரணமாகின்றது......
சோக காதல் கவிதைகள்
என் காதலை உனக்கு புரியவைக்காமல்
நான் இறக்கவும் கூடாது
என் காதலை நீ புரிந்து கொள்ளும் போது
நான் இருக்கவும் கூடாது...
சோக காதல் கவிதைகள்
இரு விழிகளால் என் மனதை உழுதால்
காதல் முளைத்தது !!!
கண்ணீர் பாய்ச்சி வளர்க்கிறேன்
அறுவடை செய்ய வருவாளா என்று ???
சோக காதல் கவிதைகள்
உன்னை எப்போதும் பார்க்க துடிக்கும் என் கண்களுக்கு
எப்படி சொல்லி புரிய வைப்பேன்...
நீ என் இதயத்தில் தான் இருக்கிறாய் என்று...
சோக காதல் கவிதைகள்
என்ன நடந்தாலும் உன்னிடம் சொல்லியே
பழகி விட்டேன் நீ போனதை யாரிடம் சொல்ல????
சோக காதல் கவிதைகள்
என்றோ யாரோ உன் கையை தொடுவான்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான்
அன்பே அது நானாக கூடாதா!!
சோக காதல் கவிதைகள்
உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால் மறவேனே பெண்ணே
இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை
வாழ்ந்திட வழியில்லையா!!!!!
சோக காதல் கவிதைகள்
குறைவது என் உயிராக இருந்தால் கூட பரவாயில்லை...
உன் அன்பாக இருக்கிறதே....
வலிக்கிறது எனக்கு
சோக காதல் கவிதைகள்
நீ எனக்கு கொடுத்த காயங்களை எண்ணி பார்த்தால்
உன்னை உனக்கே பிடிக்காது ஆனால் நீ என்ன தான்
காயங்கள் கொடுத்தாலும் உன்னை
தவிர வேறு யாரும் எனக்கு பிடிக்காது...
சோக காதல் கவிதைகள்
நீ இல்லை என்றால் யாரோ ஒருத்தி என்கின்றாயே ,
அந்த யாரோ ஒருத்தி இருப்பாளா?
உன் ஒருத்தி போல்??
சோக காதல் கவிதைகள்
உன் நிழலாக நானிருந்தேன் அன்று...
உன் நினைவில் கூட நானில்லை இன்று....
நிஜமின்றி நிழல் மட்டும்
எதற்கடி எனக்கு?
சோக காதல் கவிதைகள்
ஒரு நிமிடம் போதும் அதிகம் நேசிப்பதற்கு
ஒரு நிமிடம் போதும் சண்டை போட்டு பிரிவதற்கு
ஒரு ஜென்மம் போதாது நேசித்த ஒருவரை மறப்பதற்கு.....
சோக காதல் கவிதைகள்
நீ நடந்து வருவது என்னவோ
என் அருகினில் தான் ஆனால் அதற்கு முன்
உன் பாதச்சுவடுகள் பதிந்து கொண்டிருக்கிறது என் இதயத்தில்...
சோக காதல் கவிதைகள்
தீராத தனிமையில் தினந்தோறும் வாழ்கின்றேன்
ஓடாத பொழுதுகளில் உறைந்து போய் சாகின்றேன்
நீ என்னுடன் இல்லாததால் ....
சோக காதல் கவிதைகள்
விட்டு செல்ல எண்ணியதும் இல்லை,
விட்டு கொடுக்க நினைத்ததும் இல்லை,
விதியின் விளையாட்டால் விலகி நிற்கிறேன்
யாரோ ஒருத்தியாய்....
சோக காதல் கவிதைகள்
உதறித்தள்ளினாள் என் அன்பை ஆனாலும்
விடாமல் ஒட்டிகொண்டிருக்கிறது
அவள் நினைவுகள் என் மனதில் !!!
சோக காதல் கவிதைகள்
அன்பே உன் விழிகள் காண ஏங்குகிறேன்...
என் விடியலை உன்னிடம் தேடுகிறேன்
சோக காதல் கவிதைகள்
அன்பு இருந்தும் அதை காட்ட மாறுகிறது ஒரு இதயம்,
கிடைக்காதென்று தெரிந்தும் அதற்காக
ஏங்கி தவிக்கிறது இன்னோரு இதயம்.....
சோக காதல் கவிதைகள்
உலகை நேசிக்காமல் உன்னை மட்டும்
நேசித்தேனடா அன்று....
நீயும் நேசிக்காததால் உலகமே என்னை வெறுப்பது போல்
தோன்றுகிறதடா இன்று.....
சோக காதல் கவிதைகள்
கடல் அலையின் மேலே மிதக்கும் துருப்பு போல
உன் நினைவுகளில் நானும் மிதக்கிறேன்
கரை சேர வழியின்றி தவிக்கிறேன்..
சோக காதல் கவிதைகள்
விடையாக வர வேண்டியவள்
எனக்கு வினாக்குறி
இட்டுவிட்டு போகிறாள்.....
சோக காதல் கவிதைகள்
உயிரை ஓடமாக்கி பயணம் செய்தேன்
உன் நினைவுகளோடு அலையாய் வந்து நீயே
என்னை அழித்துவிட்டாய் ......
சோக காதல் கவிதைகள்
கடும் விஷத்தனை எடுத்து குடித்தாலும் அது
கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்!
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றாலே பெண்ணா சித்தரவதை தானே.....
சோக காதல் கவிதைகள்
உன் கை கோர்த்து நான் சென்றாமிடம்
தன்னந்தனியே எங்கே வந்தாய் என்றே கேக்குதடி.....
உன் தோல் சாய்ந்து அடி நான் நின்ற மரம்
நிழலையெல்லாம் சுருட்டிக்கொண்டு நெருப்பாய் ஏறிக்கிறதே!!
சோக காதல் கவிதைகள்
உயிர் இல்லாத மலரைக்கூட அவள் நேசிக்கின்றாள்
ஆனால் அவளுக்காக உயிர் கொடுக்கும் என்னை
மட்டும் ஏன் நேசிக்க யோசிக்கின்றாள்.....
சோக காதல் கவிதைகள்
நீ இல்லாத என் வானம் விடிந்தும் விடியாமல் போன மாயம் என்ன?
என் காதல் அன்று கவிதை தந்தது..
இன்று கண்ணீர் தருகிறது....
அன்று கவிதையை ரசிக்க நீ இருந்தாய்
ஆனால் கண்ணீர் துடைக்க நீ இல்லை...
இது தான் என் காதலின் நிலையா???
சோக காதல் கவிதைகள்
உன் சந்தோஷத்திற்கு நான் ஒரு போதும் தடையாக இருக்க மாட்டேன்
என்னை விட உன்னை அதிகமாக நேசிக்க
கற்றுக்கொண்டதால் தான் உன்னை விட்டு விலகிறேன்....
சோக காதல் கவிதைகள்
ஆண்களை விட பெண்கள் தான்
காதலை உண்மையாக நேசிக்கிறார்கள் பாவம்
பெண்களுக்கு ஏமாற்ற தெரியாது
ஏமாற மட்டுமே தெரியும்
காதலிலும் சரி, வாழ்க்கையிலும் சரி...
சோக காதல் கவிதைகள்
உலகில் அதிகமாக வீணாக்கப்படுவது
தண்ணிர் மட்டும்மல்ல...
புரிந்து கொல்ல படாத சில அன்பின்
கண்ணீரும் தான்.....
சோக காதல் கவிதைகள்
நினைவோடு தான் பேசமுடியவில்லை,
கனவோடு பேசலாம் என்றால்
உன் நினைவுகள் என்னை தூங்க
விடுவதில்லை....
சோக காதல் கவிதைகள்
நெஞ்சத்தில் பற்றிக்கொண்ட தீ..
கண்ணீரூற்றி அணைக்க முயல்கிறேன்,
கொழுந்துவிட்டெரிகிறது
இக் காதல் தீ...
சோக காதல் கவிதைகள்
நீயும் என்னை காதல் செய்வாய் என்று,
நானும் தினம் தினம் ஒருதலைக்காதல்
கவிதைகளை எழுதி குவிக்கிறேன்
எனது வீட்டு குப்பைத்தொட்டியில்....
எப்போது வருவாய் அதனை எடுத்துப் படிக்க
சோக காதல் கவிதைகள்
தொலை தூரம் போகிறேன் நான்
தொலைந்து போனாலும் உன்னை
மறக்க மாட்டேன் நான் என்
இதயத்தில் சுமந்த உன் பாசம் என்
இதயம் நொருங்கும் வரை உன்னை தேடும்....
சோக காதல் கவிதைகள்
நீ அன்பாக பேசி என்னை வென்றாலும்
பேசாமலே இருந்து நீ என்னை கொன்றாலும்
உன்னை நிழல் போல் துரத்துவேன் என்றென்றும்...