இதன் மருத்துவ குணம் தெரிந்தால் உங்களலால் இதை வாங்கி சாப்பிடாமல் இருக்கவே முடியாது !!

இயற்கயின் பயன்களை பார்ப்போம்...

aloevera engkal.com
கற்றாழை

 

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது  இச்சாறு.

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும்.  எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. இந்த எண்ணெய் பெண்களின் . கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.

 மூட்டு வலி, கழுத்து வலியின்போது, வலி ஏற்பட்ட இடத்தில் கற்றாழையை நீளவாக்கில் வெட்டி, சூடு செய்து, பற்றுப் போடுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

ஜெல் சருமத்தின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது. சருமத்தின் ஈரப்பசையைப் பாதுகாக்கிறது. மருத்துவ உலகின் முடி சூடா ராணியாக கற்றாழை வலம் வருகிறது. கற்றாழையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டோமானால் வாழ்நாளில் பெருமளவு நோய்கள் நம்மை அண்டாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

முகப்பருவை குறைக்க கற்றாழையை தினமும் தடவி வந்தால், பருக்களை குறைக்க முடியும். இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா அழிவதோடு, பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

thulsi engkal.com
துளசி

துளசி செடியில் உள்ள அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்து உள்ளது. துளசி இலையை தினமும் சாப்பிட்டு வருவதால் குடல், வயிறு ,வாய் தொடர்புடைய நோய்கள் அவர்களுடய வாழ்நாளில் எப்போதும் வராது. துளசி வாய் துறுநாற்றத்தையும் போக்கும்.

துளசி இலையை நீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை குடித்து வந்தால் சர்க்கரை நோய் அவர்களை தீண்டாது.

சிறுநீர் கோளாறு உள்ளவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணிர்பருகி வந்தால் இந்த பிரச்சனை சரி ஆகும்.

துளசியிடம் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வீரியம் உள்ளது.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். 

sidha maruthuvam engkal.com
வேப்பிலை

வேப்ப மரத்தின் அடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும்,  ஒருவிதமான மன அமைதி கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு பெருக்கக் கூடியது. வயிற்று பிரச்சனைகளை தீர்க்கக்கூடியது.

மேலும்,புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தியும் வேப்ப மரத்திற்கு உண்டு.

தினமும் காலை நேரத்தில் 10 வேப்பங்கொழுந்து எடுத்து அதனுடன் 5 மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமடையும்.

 வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தால் பித்தவெடிப்பு மற்றும் கால் பாதம் எரிச்சல் போன்றவை குணமடையும்.

சிலருக்கு உடலில் பலவிதமான  அலர்ஜிகள் இருக்கும்.

அவை தோல் வியாதி,  இதற்க்கு எளிய நிவாரணம், வேப்ப இலையை நன்கு அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் ஊறி குளிக்க வேண்டும்.அதோடு காலையில் வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து விழுங்க வேண்டும்.

Close Menu