beauty tips engkal.com

வாயைச் சுற்றி இருக்கும் கருமையைப் நீக்கி சிவப்பாக மாற்ற

இப்படி ஒருவருக்கு வாயைச் சுற்றி கருமையான படலம் ஏற்படுவதற்கு ஹைப்பர்-பிக்மென்டேஷன், ஹார்மோன்கள், வேக்சிங், ஷேவிங் போன்றவை காரணங்களாக இருக்கலாம். வாயைச் சுற்றி கருமையான படலம் இருந்தால், அது சிரிக்கும் போது மோசமான தோற்றத்தைக் கொடுக்கும். அதிலும் டார்க் நிற லிப்ஸ்டிக் போட்டால், அது இன்னும் மோசமாக இருக்கும். சில நேரங்களில் வாயைச் சுற்றி ஏற்படும் வறட்சியும் கருமையான படலத்தை உருவாக்க காரணமாக இருக்கலாம். அதோடு உடல் பருமன், குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் புற்றுநோய் போன்றவையும் வாயைச் சுற்றி கருமையான படலத்தை உண்டாக்கலாம். எனவே ஒருவருக்கு வாயைச் சுற்றி ஏற்படும் கருமையான படலத்திற்கான உண்மையான காரணம் தெரிந்து கொள்ள வேண்டுமானால், மருத்துவரிடம் சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வாயைச் சுற்றி இருக்கும் கருமையை ஒருசில இயற்கை வழிகளின் மூலமும் சரிசெய்யலாம்.
beauty tips engkal.com

எலுமிச்சை மற்றும் தேன்

ஒரு எலுமிபிச்சைப்பழத்தின் சாறு எடுத்து, அத்துடன் அதற்கு சமஅளவில் தேனையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதை  வாயைச் சுற்றி தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் சாதாரண நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், வாயைச் சுற்றி இருக்கும் கருமை மறைந்து. இயற்கை நிறத்தை அடையும்.

ஆரஞ்சு தோல் மற்றும் தயிர்

4 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை வாயைச் சுற்றி தடவி 5-8 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு 5 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் வாயைச் சுற்றியுள்ள கருமை மெதுவாக குறைவதைக் காணலாம்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு

சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, வாயைச் சுற்றி தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். சர்க்கரையில் உள்ள க்ளைகோலிக் அதிலம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, வெள்ளையாக்கும். எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையும் சரும கருமையைப் போக்கும். இந்த இரண்டையும் கொண்டு வாயைச் சுற்றி ஏற்படும் கருமைப் படலத்தைப் போக்க பயன்படுத்தினால், விரைவில் உங்கள் வாயில் உள்ள கருமைநிறத்திற்கு  ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

beauty tips engkal.com

பீட்ரூட் துண்டை உதடு, பீட்ரூட்டின் சாற்றினை உறிஞ்சும் வரைக்கும் ஐந்து நிமிடம் தேய்க்க வேண்டும் அல்லது பீட்ரூட், கேரட், தக்காளி இவற்றின் சாற்றினை கலந்து உதட்டின்மேல் பூச வேண்டும். பத்து முதல் பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இயற்கை எண்ணெய்கள், குறிப்பாக ஆலிவ் ஆயில் உதட்டுக்கு மென்மையை கூட்டி, இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாற்றும். உணவு உண்பதற்கு முன்பு, கலப்படமில்லாத ஆலிவ் ஆயிலை உதட்டில் பூசிக்கொள்ளலாம். ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரை சேர்த்தும் தேய்க்கலாம்.

புதிதாக வெட்டிய வெள்ளரி துண்டினை, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் உதட்டின்மேல் பூசி, வெள்ளரி சாற்றில் உதடு ஊறும்படி விடுங்கள். தேங்காய் தண்ணீர், வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றின் கலவை, இயற்கையாகவே உதட்டுக்கு நல்ல நிறத்தை அளிக்கக்கூடியது.

அரைக்கப்பட்ட ரோஜா இதழ்கள், கிளிசரின் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து தினமும் உதட்டின்மேல் பூசி மசாஜ் செய்யவும். விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்தினாலும், உதட்டின் கறுமையை மாறச் செய்யும்.

உருளைக்கிழங்கு சாறு எடுத்து உதட்டில் தடவி வர, உதட்டின் கறுமை மாறும். மற்றும் சருமத் தோல்களையும் மென்மையாக்கும். உருளைக்கிழங்கைவிட அதன் தோலை அரைத்து தடவ இன்னும் கூடுதல் பலனை உங்களால் பெற முடியும்.

Close Menu