100 பேர் பலி நைஜீரியாவில் கனமழையால் கடும் வெள்ளம்
நைஜீரிய நாட்டில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு கெப்பி, எடோ, பெனோ, பாயெல்சா, கவ்ரா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுள்ளன. அங்குள்ள கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களை பேரிடர் மாகாணங்களாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு அறிவித்துள்ளது.
நைஜீரியா நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100க்கு மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இயல்பு நிலை மீண்டும் திரும்பும் என்றும் மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாகாணங்களில் நிவாரண மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கிருக்கிறார்கள் .
help writing a narrative essay
liberty mutual home insurance