கணினிடெக்னாலஜி

கணினி முந்தைய காலங்களில் சில இடங்களில் மட்டும்  தான் பயன்படுத்தினார்கள், ஆனால் இன்று அது வளர்ந்து கணினி இல்லாமல் உலகம் இயங்காது என்ற நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது மேலும் கணினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காணலாம்.

computer tech engkal.com

கணினிடெக்னாலஜி பற்றிய புது புது தகவல்கள் இங்கு

technology engakl.com

ஆப்பிள்  இந்தியா  நிறுவனம்  மற்றும்  சிட்டி  பேங்க்  உடன்  இணைந்து தனது தயாரிப்புகளான  ஐபாட், ஆப்பிள்  வாட்ச், ஆப்பிள்  பென்சில்  மற்றும் மேக்புக் போன்றவற்றிற்கு  கேஸ் பேக்  ஆப்பர்களை  அள்ளி வழங்கவுள்ளது.

இந்த  ஆப்பிள்  நிறுவனம்  ரூ10,000 வரை  கேஷ்பேக் ஆப்பரை  அறிவித்தது , அதுமட்டும்  இல்லாமல்  இரண்டும்  கூட்டணி  இணைந்து  வரும்   ஜூன் 11 முதல்  ஜூலை 31  வரை  இந்த  ஆப்பரை  வழங்கவுள்ளது.

இந்த ஆப்பர்  சிட்டி கார்பொரேட்  கார்டுகளை  தவிர்த்து  விட்டது , இந்தியாவில் வழங்கிய  அனைத்து  சிட்டி  பேங்க்  கிரிடிட்  கார்டுகளுக்கும்   இது   பொருந்தும் . இது   ஈ.எம்.ஐ / ஈ.எம்.ஐ  இல்லா  பரிமாற்றங்களுக்கு  கிடைக்கும் இந்த  கேஷ்பேக்  ஆப்பர்  ஒரு  கார்டில்  ஒரு  பொருளுக்கு  மட்டுமே  கிடைக்கும் என அறிவித்துள்ளன .

இந்த  கேஷ்பேக்  பணம் ,  பொருளை  வாங்கும்   நாளிலிருந்து  90  நாட்களுக்குள்  உங்கள் கணக்கில்  வரவு  வைக்கப்படும்  என தெரிவிக்கப்படுகின்றன .

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆப்பர் படி, அனைத்து  வகையான மேக்புக்களுக்கும் ரூ10,000-ம்,  ஐபாட்களுக்கும் ரூ5,000-ம், க்யூ பர்டினோ ஜெயிண்டால்  இந்தியாவில்  அதிகாரப்பூர்வமாக  விற்கப்படும்   ஆப்பிள் வாட்ச்களுக்கு ரூ5,000-ம் கேஷ்பேக்  வழங்கப்படவுள்ளது.

சிட்டி  பேங்க  கிரிடிட்  கார்டுகளை  பயன்படுத்தி  வாங்கப்படும்  ஆப்பிள் பென்சிலுக்கு  ரூ1,000 கேஷ்பேக்  ஆப்பர்  கிடைக்கும். சிட்டிபேங்க்  ஆப்பர் வழங்கிய  பின்பு, துவக்க  நிலை  மேக்புக்  ஏர்-ன்  விலை ரூ 67,200ஆக குறைந்துள்ளது. அதே நேரம்  துவக்கநிலை  5ம் தலை முறை  ஐபாட்-ஐ ரூ23,000க்கு வாங்க  முடியும்.

ஆப்பிள்   நிறுவனம்  வாட்சுகளை  பொறுத்தவரை,  சிட்டி  ஆப்பருக்கு  பின்பு விலை ரூ18,950 எனவும்,  ஆப்பிள்  பென்சிலின்  விலை  ரூ6,600 ஆகவும் குறைந்துள்ளது. இந்த  ஆப்பர்  இந்தியாவில்  உள்ள  ஆப்பிள்  சில்லறை விற்பனை  மையங்களில்  மட்டுமே  கிடைக்கும்  என  அறிவித்துள்ளன .

computertech engkal.com

டெல்லி: அதிகப்படியான  ரேம்,  மெமரி  கொண்டு, பிரம்மாண்ட  லேப்டாப்பை லெனோவா  அறிமுகம்  செய்துள்ளது. இதில்  128  ஜிபி  ரேம்  மற்றும்  6 GB மெமரி வழங்கியுள்ளது.லெனோவாவை  சீனா  தயாரிப்பு நி றுவனமான , திங்க்  பேட்(Thinkpad) P52  என்ற  லேப்டாப்பை  NXT BLD  கருத்தரங்கில்  அறிமுகம் செய்துள்ளது.

இதில்  VR   என்ற  அம்சங்களும் , 128 GB ரேம், 6 TB  உள்ளடக்க  சேமிப்பு  உள்ளிட்ட  வசதிகளைக்  கொண்டுள்ளது. மற்றும்  லெனோவா  திங்க்பேட்  15.6 இஞ்ச்  4K  டச்  ஸ்கிரீன்  1920×1080  பிக்சல்  ரிசல்யூசன்  பெற்றுள்ளது.

லெனோவாவில்  8 வது Gen Intel Xeon  ஹெக்சா-கோர்  பிராசசர்  மற்றும்  Nvidia குவாட்ரா  P3200 GPU  உள்ளது. இந்த  லேப்டாப்  கருப்பு வண்ணம் பூசப்பட்டுதாம் , இது 2.5  கிலோ  எடையுடன், 3 USB 3.1 டைப் – ஏ, 2 USB-C/தண்டர்போல்ட், 1 HDMI 2.0, 1 மினி டிஸ்பிளே  போர்ட் 1.4, எஸ்.டி கார்ட்  ரீடர், வைஃபை, ப்ளூடூத், 4G LTE  வசதிகள்  இடம் பெற்றுள்ளன.

லேப்டாப்  உடன்  5  ஓ.எஸ் வசதிகளையும்  அளிக்கிறது. விண்டோஸ்  10 ப்ரோ வொர்க்  ஸ்டேஷன்,  விண்டோஸ்  10 ப்ரோ,  விண்டோஸ் 10  ஹோம், உபுண்டு, லினக்ஸ்  ஆகியவை  ஆகும்.

மேலும்  லெனோவா வாண்டேஜ், மைக்ரோசாப்ட்  ஆபிஸ்  2016  டிரையல் ஆகியவை  இன்ஸ்டால்  செய்து  வழங்குகிறது. இதன்  முகப்பில் இடம்பெறுள்ள  இன்ஃபிரார்டு  கேமரா  வீடியோ  காலிங்  செய்ய  உதவுகிறது.

 சமீபத்தில்  லேனோவா  நிறுவனம், புதிய திங்க் பேட், யோகா  லேப்டாப் வரிசை  ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம்  செய்தது. இதன்  ஆரம்பவிலை  ரூ.54,000 இதனுடன், திங்க் பேட் X1 Carbon, திங்க் பேட் X1 Yoga, திங்க் பேட் X280, திங்க் பேட் X380 Yoga, திங்க் பேட் T480s, திங்க் பேட் T480, திங்க் பேட் T580, திங்க் பேட் L380 Yoga and திங்க் பேட் L380 ஆகியவற்றை  அறிமுகம் செய்துள்ளது.

computertech engkal.com

உலகில்  உள்ள  சூப்பர்  கணினிகளை   விட  அதிக  வேகமாக செயல்படக்கூடிய  புதிய  கணினியை  அமெரிக்க  விஞ்ஞானிகள் உருவாக்கி அறிமுகம்  செய்துள்ளனர்.

இந்த  புதிய  கணினியானது  ஒரு  செக்கனில்  200,000  ட்ரில்லியன் கணிப்புக்களை  செய்யும்  ஆற்றலைக்  கொண்டுள்ளது.

மேலும் 10  பீட்டா  பைட்  சேமிப்புக்களையும்  உள்ளடக்கியுள்ளது  இந்த   சூப்பர்   கம்பியூட்டர்.

இதற்கு  Summit  எனப்  பெயிரிடப்பட்டுள்ளது   இக்  கணினியானது மேம்படுத்தப்பட்ட  செயற்கை  நுண்ணறிவுத்  தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி  உருவாக்கப்பட்டுள்ளது  என  விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளன.

இதை   புதிய  ஆராய்ச்சிகளில்  இக்  கணினியை   ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

computer tech engkal.com

கணினி  வடிவமைப்பிற்கு  அடித்தளமிட்ட  Apple-1 கணினியினை  Foundation for Amateur International Radio Service எனும்  நிறுவனம்  ஏலத்திற்கு  விட்டுள்ளது.

இந்த கணினி  ஆப்பிள் நிறுவனத்தின் Wozniak  மற்றும்  Steve Jobs ஆகியோர்  தொழில்நுட்ப  உலகில்  காலடி  பதித்தபோது  உருவாக்கப்பட்டதாம்.

இந்த  கணினி  1976ம்  ஆண்டு  காலப்  பகுதியில்  உருவாக்கப்பட்டது   இதற்கு  Duston  2 எனப் பெயரிடப்பட்டுள்ளது .

இக்  கணினி  Charitybuzz  எனும்  தளத்தினூடாக ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

இந்த  கணினி  ஆரம்பத்தொகையாக  70,000  டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏலத்தொகையானது  600,000  டொலர்கள்  வரை  அதிகரிக்கும்  என  Charitybuzz நிறுவனம்  எதிர்பார்த்துள்ளது.

computer technology engkal.com

இனி இண்டர்நெட் இல்லாமல் கூட ப்ரவ்சிங் செய்யும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

பொதுவாக மொபைல் டேட்டா ஆன் செய்தால் மட்டுமே  இன்டர்நெட்டில் சர்ச் செய்ய முடியும். அவ்வாறு ப்ரவுசிங் செய்கையில், நமக்கு தேவையான இணைய பக்கங்களை பதிவிறக்கம் செய்து கொண்டு, அதனை இண்டெர்நெட் இல்லாத சமயங்களில் பார்க்க முடியும்.

இந்நிலையில், தற்போது கூகுள் க்ரோம் ப்ரவுசரில் ஆட்டோமெட்டிக்காக நாம் சர்ச் செய்யும் பக்கங்களை பதவிறக்கும் செய்யும் புதிய அப்டேட் வந்துள்ளது. இதன் மூலம் இனி மொபைல் டேட்டா இல்லாவிட்டாலும், நாம் பார்த்த பக்கங்களை மீண்டும் பார்க்க முடியும்.

இந்த புதிய வசதியை நீங்கள் பெறுவதற்கு, உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள கூகுள் க்ரோமை அப்டேட் செய்தாலே போதுமானது. கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று, கூகுள் க்ரோம் என்று டைப் செய்தால், அதில் அப்டேட் என்ற ஒரு ஆப்சன் வரும். அதன் மூலம் நீங்கள் உங்கள் க்ரோம் ப்ரவுசரை அப்டேட் செய்து கொள்ளலாம்.

computer technology engkal.com

இன்றைய சூழலில் புகைப்படங்களை  தங்களுக்கு தேவையான  வகையில் மாற்றம் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால்  பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த மாதிரியான பிரச்சனைகளை  தடுக்க புதிய தொழில்நுட்பத்தை அப்டேட் செய்துள்ளது போட்டோஷாப் நிறுவனம்.

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மூலமாக பல நல்ல விஷயங்கள்செய்தாலும்,  அதே தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு சமூக பிரச்னைகளும் ஏற்பட்டு வருகின்றன.

ஒருவர் தான் எடுத்த உண்மையான போட்டோவை, போட்டோஷாப் மூலம் மாற்றம் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர். அப்படி செய்வது சமூகத்தை சிர்திருத்தும் வகையில் இருந்தால் கூட பரவாயில்லை.  ஆனால் சிலர் சமூகபிரச்னைகளை கொண்டு வர நினைப்பவர்கள், தங்களுக்கு இஷ்டம் போல போட்டோஷாப் மூலம் உண்மையான படத்தை மாற்றி பதிவேற்றும் போது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

பொய்யானா  புகைப்படத்தை கண்டறிவது எப்படி?

இந்நிலையில் போட்டோஷாப் நிறுவனம் கொடுத்துள்ள அப்டேட்டில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக  அறிவித்துள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை எளிதாக கண்டறிய முடியும் என அறிவித்துள்ளது . இதனால் முக்கியமாக சமூக பிரச்னைகளை ஏற்படுத்தும் புகைப்படங்கள் உண்மை தானா என எளிதில் கண்டறியமுடியும். இந்த பொய்யான படங்களை வைத்து உருவாகும் பொய்யான செய்திகளும் தடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

computer technology engkal.com

அமெரிக்க விஞ்ஞானிகள் அரிசியை விட மிக சிறிய அளவிலான கணினியை கண்டுபிடித்து உள்ளனர்

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த  விஞ்ஞானிகள் உலகின் மிகச் சிறிய கணினியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

அந்த கணினிக்கு மிச்சிகன் மைக்ரோ மோட் பெயரிடப்பட்டுள்ளது, மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த  விஞ்ஞானிகள் இந்த கணினியை கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கணினி வெறும் 0.3 மில்லி மீட்டர் மட்டுமே அளவுடையது. கணினிக்குள் LED லைட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த லைட் தகவல் பரிமாறும் போது ஒளிரும். அதற்கு தேவைப்படும் மின்சாரத்தை அது இயங்கும் போதே உற்பத்தி செய்துகொள்ளும் தன்மை உடையது.

இதனுடைய அளவு மிக சிறியதாக உள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், அதில் சேகரிக்கப்பட்ட தகவல் அழிந்து விடும் .

அளவில் சிறியதாக இருந்தாலும், இதன் பயன்களோ அதிகம். இந்த கணினி புற்று நோயை கண்டறிந்து, சிகிச்சை  அளிக்கவும் பயன்படும். கண்ணில் ஏற்படும் க்ளாகோமா நோயின் அழுத்தத்தை அறியவும்.

சிறிய ரக நத்தைகள் ஆராயவும் பயன்படும்.

உயிர் வேதியியல் செயல்முறைகளை கண்காணிக்கவும் பயன்படும் என்று  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Close Menu