அசைவ உணவுகள்

அசைவத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை இங்கே அதை சமைப்பது எப்படி என்று பார்ப்போம்…

nonveg recipe engkal.com

சமைக்க தேவையானவை

சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி, கஸூரி மேத்தி – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு

பிரியாணி செய்ய :

அரிசி – அரை கிலோ சிக்கன் , லெக்பீஸ் – 4, இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி, அன்னாசிப்பூ – தலா2, கறிவேப்பிலை – சிறிது

சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க :

பச்சைமிளகாய் – 2, தயிர் – ஒரு கப், லவங்கம் – 4, பூண்டு – ஒன்று, எலுமிச்சை – பாதி, இஞ்சி – ஒரு துண்டு, கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, வெங்காயம் – 3, மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி, தக்காளி – 3, கரம் மசாலா – அரை தேக்கரண்டி, புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி

தாளிக்க :

பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய்

செய்முறை:

முதலில் சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து சுத்தம் செய்த சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த சிக்கனை சிறிது எண்ணெய் விட்டு முக்கால் பாகம் வேகும் வரை பொரிக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கி பொரித்த சிக்கனை சேர்க்கவும்.

அதனுடன் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தது ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து, எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.

10 முதல் 15 நிமிடம் சிம்மில் போடவும்.

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி – 3 கப், மட்டன் – அரை கிலோ, இஞ்சி – 50 கிராம், பூண்டு – 25 பல், பெரிய வெங்காயம் – 4, சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 4, கிராம்பு – 4, பட்டை – 4 துண்டு, ஜாதிக்காய் – பாதி, ஏலக்காய் – 4, மிளகாய்தூள் – அரை தேக்கரண்டி, கரம் மசாலா – கால் தேக்கரண்டி, தேங்காய் – ஒரு மூடி, முந்திரி – 10, தயிர் – அரை கப், எலுமிச்சம்பழம் – ஒரு மூடி, புதினா – ஒரு கட்டு, மல்லி – ஒரு கட்டு, நெய் – அரை கப், எண்ணெய் – அரை கப்

தாளிக்கத் தேவையானவை:

கிராம்பு – 3, பட்டை – 3 சிறிய துண்டு, ஏலக்காய் – 3, பிரிஞ்சி இலை – ஒன்று, சோம்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

மட்டனில் கால் கப் தயிர், மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி, கரம் மசாலா, உப்பு ஒரு தேக்கரண்டி போட்டு 5 விசில் விட்டு வேக வைக்கவும்.

பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை நெய் விட்டு வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

பெரியவெங்காயம், சின்னவெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை வாயை கீறிக்கொள்ளவும். பூண்டை தனியாக அரைத்துக் கொள்ளவும்.

துருவிய தேங்காய், இஞ்சி, முந்திரி இவை மூன்றையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய விடவும். காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, தாளிக்கவும்.

அதனோடு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.

வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அரைத்த பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கியதும், அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் விழுது, மிளகாய்தூள் போட்டு வதக்கவும்.

5 நிமிடம் போல வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியை போடவும். தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.

இப்போது எடுத்து வைத்திருக்கும் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும். பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சம்பழம் பிழியவும்.

பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்.

சுவையான மட்டன் பிரியாணி தயார்.

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு…

வான்கோழி – 2-4 பெரிய துண்டுகள், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது), நாட்டுத் தக்காளி – 1 (அரைத்தது), புதினா – சிறிது (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது), எலுமிச்சை – 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்), கல் உப்பு – சிறிது, மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன், தயிர் – 1/4 கப்

பிரியாணிக்கு…

பாசுமதி அரிசி – 2 கப், பச்சை மிளகாய் – 6 (நீளமாக கீறியது), வெங்காயம் – 1 (நறுக்கியது), தக்காளி – 2 (நறுக்கியது),உப்பு – தேவையான அளவு, புதினா – 1 கைப்பிடி அளவு, கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு, நெய் – 1 கப்

தாளிப்பதற்கு…

கிராம்பு – 3, பட்டை – 2 துண்டு, ஏலக்காய் – 6, பிரியாணி இலை – 3, அன்னாசிப்பூ – 2, உலர்ந்த ரோஜாப்பூ இதழ் – சிறிது, குங்குமப்பூ – சிறிது.

செய்முறை:

முதலில் வான்கோழியை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ளவும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள வான் கோழியை சேர்த்து கிளறி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரிசியைப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான தீயில் குக்கரை மூடி விசில் போடாமல் 10 நிமிடம் வைத்து இறக்கினால், வான்கோழி பிரியாணி ரெடி!!!

தேவையான பொருட்கள்:

சிக்கன் – அரை கிலோ, மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், தயிர் – 3ஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, முந்திரி – 10 அரைப்பதற்கு

தாளிப்பதற்கு

பட்டை – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, கிராம்பு – 3

அரைப்பதற்கு

பெரிய வெங்காயம் – 2 , தக்காளி – 2 , இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன், மல்லி தூள் – 1 ஸ்பூன், மிளகு தூள் – 1 ஸ்பூன், சீரகப் பொடி – கால் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவி, அதனுடன் முதலில் கொடுத்துள்ள மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் முந்திரியை சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் மாதிரி அரைத்து கொள்ளவும்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 5 நிமிடம் வதக்கி அதனுடன் மல்லித் தூள், சீரகத்தூள், மிளகுத் தூள் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி பின்பு இறக்கி,ஆற வைத்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ஊற வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு, கடாயை மூடி 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

சிக்கன் ஓரளவு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா, முந்திரி பேஸ்ட் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.

சிக்கன் நன்கு வெந்து கிரேவி கெட்டியானவுடன் கொத்தமல்லியை தூவி இறக்கிவிட வேண்டும்.

இப்போது காரசாரமான சிக்கன் கிரேவி ரெடி..

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி – அரை கிலோ, வெங்காயம் – 4, பச்சைமிளகாய் – 4, கொத்தமல்லித் தழை – சிறிது, புதினா இலை – சிறிது, கறிவேப்பிலை – சிறிது, இஞ்சி – ஒரு தேக்கரண்டி, பூண்டு – ஒரு தேக்கரண்டி, தக்காளி – 4, மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி, வத்தல் தூள் – 3 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – சிறிது, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

சுத்தம் செய்த சிக்கனுடன் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர் (தேவையென்றால்) சேர்த்து நன்றாக பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை போட்டு வதக்கவும்.

பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அதன் பிறகு தக்காளி, பச்சைமிளகாய், மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

வதக்கிய மசாலாவுடன் கோழிகறியை சேர்த்து வத்தல் தூள் மற்றும் உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

கறியில் மசாலா கலவை சேர்ந்து தண்ணீர் இல்லாமல் வற்றும் வரை வதக்கி பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுவையான சிக்கன் ரோஸ்ட் ரெடி.

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

சிக்கன் (boneless ) -150 கிராம்,

சின்ன வெங்காயம் -50 கிராம்,

கரம் மசாலா -1 ஸ்பூன்,

இஞ்சி ,பூண்டு விழுது -அரை ஸ்பூன்,

உப்பு -தேவையான அளவு,

பிரட் தூள் -150 கிராம்,

முட்டை -1,

எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்பு சிக்கனை மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.அரைத்து வைத்த பின்பு சிக்கனுடன் ,கரம் மசாலா தூள் ,இஞ்சி ,பூண்டு விழுது,வெங்காயம் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வேளை கருவை மற்றும் ஊற்றி கொள்ளவும் .பின்பு ஒரு பிளேட்டில் பிரட் தூளை வைத்து கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிராட்டிய பின்பு அதை பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.இப்போது சிக்கன் வடை ரெடி .

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள் :
நாட்டுக்கோழி கறி – 500 கிராம், மிளகாய்த் தூள் – 3 தேக்கரண்டி, எண்ணெய் – 100 மில்லி, இஞ்சி சாறு – 100 கிராம், மஞ்சள் தூள் – 3 தேக்கரண்டி, வினிகர் – ஒரு தேக்கரண்டி, உப்பு – சிறிதளவு, கறி மசாலா பொடி – சிறிது, கொத்தமல்லித் தழை – சிறிதளவு

செய்முறை :
கோழி கறியைச் சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்.

இஞ்சியை தோல் சீவி அரைத்து சாறு பிழிந்து எடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, வினிகர், மிளகாய்த் தூள் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

அதனுடன் சுத்தம் செய்த கோழி கறியை போட்டு நன்றாக பிசையவும். பிறகு அதில் கறி மசாலா பொடியையும் சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊற விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசறிய கோழிக் கறியை போட்டு வதக்கவும்

கறி வெந்து பொன்னிறமாக வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

சுவையான நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் தயார்.

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள் :

முட்டை – 4, மிளகு தூள் ,உப்பு – தேவையான அளவு, மைதா – கால் கப், சோள மாவு – கால் கப் + 1 ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கி இஞ்சி – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கி பூண்டு – 1 ஸ்பூன், வெங்காயம் – 1, குடைமிளகாய் – 1, சில்லி சாஸ் – 2 ஸ்பூன், tomato ketchup – 2 ஸ்பூன், சோயா சாஸ் – 1 ஸ்பூன், வெங்காயத்தாள் – சிறிதளவு.

செய்முறை:

குடைமிளகாய், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

1 ஸ்பூன் சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

பின்னர் சிறிது எண்ணெய் தடவிய அகன்ற கிண்ணத்தில் அடித்து வைத்த முட்டையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

வெந்ததும் எடுத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோளமாவு, மிளகாய் தூள், சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து அதில் முட்டை துண்டுகளை போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு வதக்கவும்.

இரண்டும் நன்றாக வதங்கியதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

அடுத்து குடைமிளகாயை போட்டு வதக்கவும்.

அடுத்து சில்லி சாஸ், tomato ketchup, சோயா சாஸ் போட்டு நன்றாக கிளறவும்.

அடுத்து கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி திக்கான பதம் வந்தவுடன் பொரித்து வைத்துள்ள முட்டையை போட்டு உடையாமல் கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

முட்டை மஞ்சூரியன் ரெடி.

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

முட்டை – 6, வெங்காயம் – 2, இஞ்சி, தக்காளி – 2, ப. மிளகாய் – 4, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, மிளகாய் தூள், மல்லி தூள்- தலா 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி, கரம் மசாலா – அரை தேக்கரண்டி, தேங்காய் பால் – 2கப், எண்ணெய் – 2 மேசைக்கரண்டி, கடுகு, சீரகம் – தலா கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முட்டையை வேக வைத்து ஓடெடுத்து பாதியாக நறுக்கி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின்னர் குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.மசாலா நன்கு வதங்கிய பின் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.

கடைசியாக தேங்காய பால் சேர்த்து கொதி வர துவங்கியதும் எடுக்கவும்.சுவையான மலபார் எக் கறி தயார்.

nonveg recipe engkal.com

சமைக்க தேவையானவை!

நண்டு – 5, சின்ன வெங்காயம் – 50 கிராம், சிகப்பு மிளகாய் – 10, தனியா – 2 தேக்கரண்டி, நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் – 2, பூண்டு – 5 பல், இஞ்சி – 1 அங்குலத் துண்டு, தக்காளி – 1, உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் நடுத்தரமான அளவு நண்டுகள் 5 எடுத்து ஓடு நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.

பின் இஞ்சி, பூண்டு, சிகப்பு மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், தனியா ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

இதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், நண்டுகளைப் போடவும்.

பிறகு நண்டுகள் நன்கு வெந்து, வாசனை வந்த பின் இறக்கவும்.

add images engkal.com
nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள் :

கருவாடு – 200 கிராம், கத்தரிக்காய் – 1/4 கிலோ, உருளைக்கிழங்கு – 2, பச்சை மிளகாய் – 2, தக்காளி – 2 (நறுக்கியது), புளி – 1 எலுமிச்சை அளவு, கடுகு – 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

சின்ன வெங்காயம் – 1 கையளவு, மல்லித் தூள் – 50 கிராம், சீரகம் – 1/2 டீஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன், வரமிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிது, பூண்டு – 4 பற்கள், துருவிய தேங்காய் – 1/4 கப்.

செய்முறை:

கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கத்தரிக்காய், உருளைக்கிழங்கு. ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் சேர்த்து வறுத்து, பின் அத்துடன் சின்ன வெங்காயம், மல்லித் தூள், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி இறக்கி ஆற வைத்து மிக்ஸி அல்லது அம்மியில் போட்டு, அத்துடன் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து அதில் கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

காய்கள் நன்கு வெந்ததும், அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, நன்கு கொதிக்க விடவும்.

புளிச்சாறானது நன்கு கொதித்ததும், அதில் கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான கருவாட்டுக் குழம்பு ரெடி!!!

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

நண்டு – 1 கிலோ, தேங்காய் பால் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 4, பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு விழுது – 3 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 ஸ்பூன், மிளகாய் தூள் – 3 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு

வறுத்து பொடிக்க:

சோம்பு – 1 ஸ்பூன், பட்டை – ஒரு துண்டு , கிராம்பு – 4, கறிவேப்பிலை – சிறிதளவு , தேங்காய் துருவல் – அரை கப்

தாளிக்க:

கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – 1 ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

நண்டை சுத்தம் செய்து கழுவி மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

பொடிக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் கறிவேப்பிலை சேர்த்து வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

தேங்காயை சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் நண்டு, தக்காளி, மற்றும் உப்பு சேர்த்து மூடிபோட்டு 15 நிமிடங்கள் வேகவிடவும்.

15 நிமிடங்கள் கழித்து மிளகாய் தூள் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் வேகவிடவும்.

அனைத்தும் சேர்ந்து நன்கு வெந்ததும், பொடித்த பொடி, தேங்காய் விழுது, மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

இறால் – அரை கிலோ, மிளகு – 2 ஸ்பூன், சீரகம் – 2 ஸ்பூன், வெந்தயம் – 1 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கசகசா – 1 ஸ்பூன், வெங்காயம் – 1 , தக்காளி – 1 , பூண்டு – 5 பல், பச்சை மிளகாய் – 5, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், தேங்காய் – அரை மூடி, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

இறாலை , உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து நீரை வடிகட்டி விடவும்.

தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்

கடாயை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து வறுக்கவும்.

ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு அரைக்கவும். பி ன் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 5 நிமிடம் வறுக்கவும்.

வறுத்த பொருட்கள் ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்கவும்.

தக்காளி நன்கு மசிய வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, நன்கு கிளரி பின் அதில் அரைத்த தேங்காய் சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் இறாலைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து நன்கு கொதித்தவுடன் அடுப்பை சிம்மில் வைக்கவும் .

இறால் நன்கு வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்.

சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி.

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

சீலா மீன் அல்லது வாவல் மீன் – 1/2 கிலோ, மிளகாய்தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, இஞ்சி பூண்டு விழுது – 1 மே.கரண்டி

மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் மீனுடன் பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும் வேண்டும் பின்பு .

மசாலா தயாரிப்பு :

எண்ணெய் தேவையானா அளவு

பல்லாரி வெங்காயம் -4 (பொடியாக நறுக்கவும்)

தக்காளி – 3 பொடியாக நறுக்கவும் 

பச்ச மிளகாய் – 4

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மிளகாய்தூள் – கார தேவைக்கு

மல்லி தூள் – ஒரு டீஸ்பூன்

பூண்டு – 6 பல்

இஞ்சி – சின்ன துண்டுவிழுது

உப்பு – தேவையானா அளவு

செய்முறை:

தவாவில் 2 மே.கரண்டி எண்ணெய் விட்டு மீனை லேசாக வறுத்து எடுக்கவும்.பிறகு அதே தவா விழுது வில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு இதனுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பச்ச மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய் தூள் , மல்லி தூள் , உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து திக்கான கிரேவி பதம் வருவது போல் குறைந்த அணலில் வேக வைத்து எடுத்து வைக்கவும்.

வாழை இலையினை சிறுது தீயில் மேலாக காட்டி சிறு துண்டாக நறுக்கி அதில் எண்ணெய் தடவி வைக்கவும். அதன் மேல் வத்கக்கி வைத்த கிரேவி சிறுது வைத்து அதன் மேலே மீன் வைத்து அதன் மேல் சிறுது கிரேவி வைத்து வாழை இலையை மடித்து வைக்கவும்.தவாவில் சிறுது எண்ணெய் விட்டு மடித்த வாழை இலையினை வைத்து மிகவும் குறைந்த அணலில் வேக வைக்கவும். குறைந்த அணலில் வைப்பதால் கிரேவி மீனுடன் மசாலா கலந்து மிகவும் சுவையாக இருக்கும்.வாழை இலை பொன்னிறமாகியதும் மீன் தயாராகி விட்டது. வாழை இலை மணத்துடன் மீன் சாப்பிட சுவையாக  மிகுந்ததாக இருக்கும்.

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

இறால் – 250 கிராம், உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – தேவைக்கு, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன், மிளகு தூள் – 1டீஸ்பூன்

செய்முறை:

இறாலை  முதலில் சுத்தம் செய்து அதில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறுது  கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின் மிளகு தூள், சிறிது மஞ்சள் தூள், இறால் சேர்த்து வேகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள் :

சுறா கண்டம் – 250g       , வெங்காயம்- 150g, பச்சைமிளகாய் – 2 ( நறுக்கியது ), கறிவேப்பிலை – தேவைக்கு, தேங்காய் பூ- 1கப், தே. எண்ணெய் – தேவைக்கு, உப்பு – தேவைக்கு, மஞ்சள்த்தூள் – தேவைக்கு, கீரைப் பொடி – காரத்திற்கு, மஞ்சல்தூள்- 1டீஸ்பூன்

செய்முறை :

முதலில் மீனை கழுவி அதில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் தேங்காய்ப் பூ, உப்பு, மஞ்சள்த்தூள் சேர்த்து வதங்கியதும் உதிர்த்து வைத்த மீனை சேர்த்து நன்கு கிளறவும் வேண்டும் . இறுதியில் மஞ்சல்தூள், கீரைப் பொடி சேர்த்து இறக்கவும். சுவையான சுறா புட்டு வறுவல் மீன் பொரியல் ரெடி. இதை ரைஸ் மற்றும் சப்பாத்தியோடு ஸ் உண்ணலாம்  பரிமாறவும்.

nonveg recipe engkal.com

தேவையான பொருள்கள்:

இறால் – 20, உப்பு – தேவைக்கு, மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், எண்ணெய் – தேவைக்கு

ஊற வைப்பதற்கு..

மிளகாய் தூள் – 2டீஸ்பூன், கரம் மசாலா தூள் – 2டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 2டீஸ்பூன், சோள மாவு – 1/4 கப், கொத்தமல்லி – சிறிது, கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவைக்கு, தண்ணீர் – சிறிது

செய்முறை :

இறாலை நன்கு சுத்தம் செய்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி 10நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு சட்டியில் இறாலை எடுத்து 2, 3 நிமிடங்கள் பச்சை வாசனை போக பாதியாக வேக வைத்துக் கொள்ளவும்.

வேக வைத்த இறாலுடன் ஊற வைக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து 5நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின் சட்டியில் எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக இறாலை பொரித்து எடுத்தால், சுவையான இறால் சில்லி 65 தயார்.

 

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

மிளகாய் தூள் -1 ஸ்பூன்.

மல்லி தூள் -1 ஸ்பூன்.

பட்டை -2.

கிராம்பு -2

எண்ணெய் -தேவையான அளவு

உப்பு -தேவையான அளவு

பெரிய வெங்காயம் -1

தக்காளி -1

குழம்புக்கு அரைக்க வேண்டிய பொருட்கள்:

முதல்லி தேங்காய் துருவல்-3 ஸ்பூன்

 சோம்பு -1 டீஸ்பூன்

 கசகசா -1 டீஸ்பூன்

 பூண்டு -சிறிது அளவு

 இஞ்சி-சிறிது அளவு

உருண்டைக்கு அரைக்க வேண்டிய பொருட்கள்:

சிக்கன்( boneless )-கால் கிலோ வெங்காயம் ( medium )-1., பச்சை மிளகாய் -3, சோம்பு -1 ஸ்பூன், மிளகு -1 ஸ்பூன், பொட்டுக் கடலை -2 ஸ்பூன், தேங்காய் துருவல் -2 ஸ்பூன்,  உப்பு -தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தேங்காய் துருவல்,சோம்பு ,கசகசா,இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து தனியாக வைக்கவும்.பின்பு உருண்டைக்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும் வேண்டும் .பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு போட்டு தாளித்த பின்பு வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள் ,மல்லி தூள் ,மற்றும் குழம்புக்கு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்தா பின்பு அதில் உருண்டைக்கு அரைத்து வைத்ததை சிறு சிறு உருண்டையாக உருட்டி குழம்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.இப்போது சிக்கன் உருண்டை குழம்பு தயார்.

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

சிக்கன்- அரை கிலோ

கருவேப்பிலை -2 கொத்து

வர மிளகாய் – 5.

மிளகு -1 ஸ்பூன்

கடலை பருப்பு -1 ஸ்பூன்

இஞ்சி -சிறிது அளவு.

பூண்டு – சிறிது அளவு.

உப்பு -தேவையான அளவு.

எண்ணெய் -தேவையான அளவு.

கொத்தமல்லி தூள் -1 ஸ்பூன்.

 செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு சொட்டு விட்டு வரமிளகாய்,மிளகு,கடலை பருப்பு,கருவேப்பிலை,இஞ்சி மற்றும் பூண்டு வறுத்துக் கொள்ளவும்.வருத்த பின்பு அதை சிறிது அளவு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்த கலவையில் கொத்தமல்லி தூள்,சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த சிக்கன் மசாலைவை அதில் போட்டு பொரித்து எடுத்தால்

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

பெரிய நண்டு – அரை கிலோ, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், தட்டிய பூண்டு – 1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 1, மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், சோம்பு, சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எலுமிச்சை ஜூஸ் – சிறிது.தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்.

செய்முறை :

நண்டை சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். நன்கு மசாலா வாடை போகுமாறு பிரட்டி விடவும்.

அடுத்து அதில் வேக வைத்து உதிர்த்த நண்டு சதை, தேவைக்கு உப்பு போட்டு நன்றாக பிரட்டி 5 நிமிடம் வேக விடவும். பிரட்டும் போதே உதிர்ந்து விடும்.

கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து சும்மா ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

சூப்பரான நண்டு பொடிமாஸ் தயார்.

nonveg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 4 தேக்கரண்டி, கருவாடு துண்டுகள் – 10, பூண்டு – 6 பல், வெங்காயம் – 1 நறுக்கியது, பச்சை மிளகாய் – 2 , தக்காளி – 1, மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி, உப்பு தேவைப்பட்டால், தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் கருவாட்டை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிரட்ட வேண்டும்.

பிறகு அதில் 1-2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

அசத்தலான கிராமத்து கருவாட்டு தொக்கு ரெடி!!!

Close Menu