சைவ உணவுகள்

சைவ வகைகளின் ஒரு எண்ணற்ற தொகுப்பு.. அவற்றில் சில சமையல் குறிப்புகள் உங்களுக்காக

parambariya unavugal engkal.com
veg recipe engkal.com

தேவையான பொருள்கள்.

வாழைக்காய் – 1, மஞ்சள் தூள் -கால் ஸ்பூன், மிளகாய் தூள் -அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், கடுகு – 1  ஸ்பூன்

அரைப்பதற்கு தேவையானவை

தேங்காய் – 2  ஸ்பூன், இஞ்சி – சிறிதளவு, பூண்டு –  4 பல், மிளகு – 3 ஸ்பூன்

செய்முறை :

வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சதுர வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

வெட்டிய வாழைக்காயை பாதியளவு வேகவைத்து  தண்ணீரை வடித்து  கொள்ளவும்.

வேக வைத்த வாழைக்காயை ஒரு  பாத்திரத்தில்  போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி  அரை  நிமிடம் ஊற  வைக்க வேண்டும்.

பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்  கடாயை  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

அடுப்பை  சிம்மில்  வைத்து விட்டு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின்பு  அதில் லேசாக தண்ணீர் தெளித்து, 3  நிமிடம்  மூடி வைத்து வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி.

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்: 

வெண்டைக்காய் – அரை கிலோ
மிளகாய் தூள் – 1  ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
கார்ன் ப்ளார் மாவு – 2  ஸ்பூன்
மல்லித் தூள் –  கால் ஸ்பூன்
அரிசி மாவு –  கால் ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை: 
வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக நறுக்கி நடுவில் கீறி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலந்த மசாலாவை வெண்டைக்காயின் நடுவில் வைத்து அரை மனி நேரம் ஊற வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து எடுக்கவும்ஃ

சுவையான வெண்டைக்காய் ஸ்டஃப்டு வறுவல் தயார்.

veg recipe engkal.com

தேவையான பொருள்கள் கத்தரிக்காய் – 10, மிளகாய் தூள் – 2 ஸ்பூன், கடலை மாவு – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் –  கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு

வறுத்து பொடி செய்ய

தனியா – 2 ஸ்பூன், கடலை பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைத்து சற்று கொரகொப்பாக பொடித்து கொள்ளவும்.

கத்தரிக்காயை  வட்டமாக   நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

 தண்ணீரை வடித்து விட்டு அதன் மேல் மிளகாய் தூள், கடலைமாவு, மஞ்சள் தூள், உப்பு  சேர்த்து கத்தரிக்காயின் மேல் நன்கு தடவி  அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெயை ஊற்றவும். தோசை கல் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கத்தரிக்காய் துண்டுகளை பொடித்து வைத்த மசாலாவில் பிரட்டி தோசை கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு  2 பக்கமும் திருப்பி  போட்டு வேக வைக்கவும்.

இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து  சூடாக பரிமாறவும்.

இது சாம்பார்  ரசத்திற்கு  ஏற்ற சைடிஷ்.

veg recipe engkal.com

தேவையானவை

பச்சரிசி – ஒரு கப், கத்தரிக்காய்  4, மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், நெய்  – 2 ஸ்பூன், உப்பு -தேவையான அளவு.

அரைக்க:

தேங்காய் துருவல் –  1   ஸ்பூன், சின்ன வெங்காயம் – 6, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 4, தனியா  –  1  ஸ்பூன், புதினா, மல்லி – தலா சிறிதளவு, கடுகு  –  1  ஸ்பூன்

செய்முறை:

அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்து வைக்கவும்.

கத்தரிக்காய்களை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள்.

நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து, மஞ்சள்தூளையும் கத்தரிக்காயையும் சேருங்கள்.

5 நிமிடம் வதக்கிய பிறகு, அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சாதத்தை சேர்த்து கிளறுங்கள்.

சுவைாயன கத்தரிக்காய் சாதம் ரெடி.

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்

வெங்காயம் -1, பட்டை -2, கிராம்பு -2, ஏலக்காய் -1, பிரியாணி இலை -2, எண்ணெய் -தேவையான அளவு, கொத்தமல்லி தூள் -3 டேபிள் ஸ்பூன், உப்பு -தேவையான அளவு, பிரியாணி அரிசி -1 கப், பச்சை மிளகாய் -2, கொத்தமல்லி தழை -1 கட்டு (சின்ன கட்டு ), தக்காளி -2, இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

அரைக்க வேண்டிய பொருட்கள்: பச்சை மிளகாய் -2 கொத்தமல்லி தலை-1 கட்டு (சின்ன கட்டு ) தக்காளி -2 இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டேபிள் ஸ்பூன் மேலே அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி தண்ணீரை வடித்து விட்டு அதில் அரைத்து வைத்த மசாலாவை அரிசியோடு பிசைந்து அரை நேரம் ஊற விடவும். வெங்காயத்தை பொடியை நறுக்கிக் கொள்ளவும்.

பின்பு குக்கரில் எண்ணெய்யை ஊற்றி அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கிய பின்பு அதில் ஊற வைத்த அரிசியை போட்டு கிளறி விடவும்.கிளறிய பின்பு அதில் உப்பு மற்றும் கொத்தமல்லி தூளை போட்டு சிறிது நேரம் கிளறி விடவும்.

கிளறிய பின்பு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை முடி இரண்டு விசில் விட்டு பத்து நிமிடம் அடுப்பை மிதமான வைத்து இறக்கவும்.(குறிப்பு :அரிசி மசாலாவோட கலந்து இருப்பதால் தண்ணீர் இருக்கும் அதனால் அரை கப் தண்ணீர் போதும்.)இதோகொத்தமல்லி தலை புலாவ் ரெடி.

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 2 கப். கொத்தமல்லி கட்டு – 1 கட்டு. இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன். பச்சை மிளகாய் – 2. வெங்காயம் – 1. பட்டை, லவங்கம் – 1. ஏலக்காய் – 1. முந்திரி, உப்பு, நெய் – தேவைக்கு.

செய்முறை:

பச்சை கொத்தமல்லியை மண் போக அலசி பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ப்ரஷர் பேனில் நெய்விட்டு காய்ந்ததும் பட்டை லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 4 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடவும்.

தண்ணீர் கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு கிளறி ‘ ஸ்டீம்’ வந்ததும் ‘வெய்ட்’ போடவும் அடுப்பை ‘சிம்மில்’ 10 நிமிடம் வைத்து எடுக்கவும். 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும்.

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – இரண்டு, பச்சை மிளகாய் – இரண்டு, சின்ன வெங்காயம் – கால் கப், வெங்காய தாள் – அரை கப், தேங்காய் திருவல் – கால் கப், கறிவேப்பலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவைகேற்ப

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், வெங்காய தாள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் ஐந்து நிமிடகளுக்கு, பிறகு தேங்காய் திருவல், கறிவேப்பலை, கொத்தமல்லி சேர்த்து கிளறி இரண்டு நிமிடகள் கழித்து இறக்கவும் .

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

வடித்த  சாதம் – 2 கப், கேரட் – 1, பீன்ஸ் – 50 கிராம், குட மிளகாய் – 1, முட்டைக்கோஸ் – 100 கிராம், பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காய் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1, பட்டை – 2, கிராம்பு – 3, பிரியாணி இலை – 1, ஏலக்காய் – 1, தக்காளி சாஸ் – 2 ஸ்பூன், நெய் – 2 ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன், மிளகு – கால் ஸ்பூன், சர்க்கரை – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு

செய்முறை

சாதத்தை கொஞ்சம்  உதிரி  உதிரியாக   வடித்து ஆற வைக்கவும்.

கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குட மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில்  வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

 பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்.

பிறகு நறுக்கிய காய்கறிகளைப் போட்டு அடுப்பை  சிம்மில்  வைத்து  வதக்கவும்.

அதனுடன் சிறிது சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.

அடிக்கடி கிளறி விடவும்.  பிறகு தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.

அடுத்து ஆறிய சாதத்தைப் போட்டு குழையாமல் கிளற வேண்டும்.

இதனுடன் மிளகு தூளைச் சேர்த்து  5 நிமிடம்   கிளறி இறக்கவும்.

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

பாசுமதி சாதம் – 1 கப்.

இஞ்சி – கால் கப்.

வெங்காயம் – 1.

பச்சை மிளகாய் – 2.

தக்காளி சாஸ் – 1 ஸ்பூன்.

கொத்தமல்லி – 2 ஸ்பூன்.

எண்ணெய், உப்பு – தேவைக்கு.

குடைமிளகாய் – கால் கப்.

கடுகு, உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்.

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பின்பு உ. பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு, தக்காளி சாஸ், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். வடித்த பாசுமதி சாதத்துடன் மேற்கூறிய கலவையைப் போட்டு நன்கு கிளறி, கொத்தமல்லி தூவி, சூடாக பரிமாறவும்.

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

அரிசி – 1 கப், பாசிப்பருப்பு – அரை கப், வெள்ளரிக்காய் – 1 கப், முந்திரிப்பருப்பு – கால் கப், பச்சைப்பட்டாணி – அரை கப், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், சீரகத்தூள் – 2 ஸ்பூன், கரம்மசாலா – அரை ஸ்பூன், லவங்கம், பட்டை, பிரியாணி இலை – 2, இஞ்சி – பூண்டு விழுது – 1 ஸ்பூன், பச்சைமிளகாய் – 4, நெய் – 1 ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்தெடுக்கவும்.

பின் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெள்ளரிக்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு தனியே எடுத்து வைக்கவும்.

அரிசி, பருப்பை களைந்து அத்துடன் மஞ்சள்தூள், உப்பு, சீரகத்தூள், கரம்மசாலா சேர்த்து கலந்து வைக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, லவங்கம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதில் அரிசி கலவையைக் கொட்டி, நன்றாகக் கிளறி விட்டு தண்ணீரை ஊற்றவும்.

கீறிய பச்சை மிளகாய், பச்சைப்பட்டாணி சேர்த்து மூடி வேகவைக்கவும். நீர் பாதியாக வற்றியதும் வெள்ளரிக்காய், முந்திரிப்பருப்பை கலந்து வேகவிடவும். கிச்சடி வெந்ததும் மல்லித்தழை, தேங்காய்த்துருவல் தூவி பரிமாறவும்.

veg recipe engkal.com

தேவையானவை

பாசுமதி அரிசி – 2 கப், தேங்காய்ப் பால் – 3 கப், பச்சை மிளகாய் – 4, வெங்காயம் – 1, பட்டை,லவங்கம், ஏலக்காய் – 1 ஸ்பூன், பூண்டு – 8 பல், உப்பு, நெய் – தேவைக்கு, புதினா – 7

செய்முறை:

ப்ரஷர் பேனில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளிக்கவும்.

பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.

இத்துடன் தேங்காய்ப் பால், 1 கப் தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் உப்பு சேர்த்து கழுவிய பாசுமதி அரிசியைச் சேர்த்து நன்கு கிளறி மூடவும்.

நன்கு ஆவி வந்ததும் ‘வெய்ட்’ போட்டு அடுப்பை ‘சிம்மில்’ 10 நிமிடம் வைத்து இறக்கவும்.

veg recipe engkal.com

தேவையான பொருள்கள்:

பச்சை அரிசி – 2 கப், கடுகு, உளுந்து – தலா அரை ஸ்பூன், கடலைப் பருப்பு – 2 ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன், நெய் – 2 ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

பொடிக்க:

மிளகு, கசகசா தலா – 1 ஸ்பூன், சீரகம் -2 ஸ்பூன், முந்திரி – 4, கறிவேப்பிலை – 1 கப், தேங்காய்த் துருவல் -2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6

செய்முறை:

கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள். பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.

எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில், பொடித்த பொடி, உப்பு, தாளிதக் கலவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலக்குங்கள்.

veg recipe engkal.com

தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு – 1 கப்

தனியாத்தூள் – 2 ஸ்பூன்

மிளகுத்தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

எண்ணை – 1 ஸ்பூன்

கடுகு         – 1 ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சைப்பயறை   அரை மணி  நேரம்  ஊற விடவும். ஊறிய பின், நன்றாகக் கழுவி நீரை வடித்து விட்டு,    பயறுடன் அரை கப்  தண்ணீர்   சிறிது உப்பு சேர்த்து  குக்கரில் போட்டு  1 விசில் வந்ததும்  இறக்கவும்..

கடாயில் எண்ணை விட்டு,  கடுகு போட்டு தாளித்து  அதில் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும்.

பின்னர் அதில் வேக வைத்த பயறை, வெந்த நீருடன் அப்படியே ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகுத்தூள்,  தேவயான  உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.

மூடி போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். இது மிகவும் சத்தான ரெசிபி .சமைத்து சாப்பிட்டு பாருங்கள்.

veg recipe engkal.com

தேவையானவை:

நறுக்கிய வெங்காயம் – 3

 நறுக்கிய தக்காளி –  8

 மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

 எண்ணெய் – 4 ஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 1 கப்

கசகசா – 1  ஸ்பூன்

 பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்

உப்பு – தேவைான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

அரைக்க:

இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 6, பட்டை, லவங்கம் – தலா 1, சோம்பு – கால் டீஸ்பூன்

செய்முறை

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்து கொள்ளவும்.

பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத்  மூன்றையம் சேர்த்து  நைசாக அரைத்து கொள்ளவும்.

கடாயில்  எண்ணெய் சூடானதும் தக்காளி  வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம்  தக்காளி  வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.

 பின்னர் அதனுடன்  அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை  5 நிமிடம் கொதிக்கவிட்டு மல்லிதழை  தூவி  இறக்கவும். சுவையான  தக்காளி குருமா  ரெடி.

veg recipe engkal.com

தேவையானவை:

பச்சை  சுண்டைக்காய் – 1 கப்,

புளி – எலுமிச்சைப்பழ அளவு,

மல்லித்தூள்  – 2 ஸ்பூன்

மிளகாய் தூள்  –  1 ஸ்பூன்

மஞ்சள்தூள் –  கால் ஸ்பூன்

தேங்காய்  – அரை மூடி

உப்பு    –  தேவையான அளவு

நல்லெண்ணெய் –  6 ஸ்பூன்

தாளிப்பதற்கு…

கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை – தேவைக்கு.

செய்முறை

தேங்காயை  நைசாக அரைத்து கொள்ளவும். புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை லேசாக நசுக்கிப் போட்டு நன்கு வதக்கவும்.

வதங்கியதும் எடுத்து தனியே வைக்கவும்.

அதே எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும். 

அதனுடன்    மிளகாய் தூள்,   தனியா தூள், புளிதண்ணீர் , மஞ்சள் தூள்  சிறிது, உப்பு,   அரைத்த தேங்காய் சேர்த்துச்    வதக்கிய  சுண்டக்காயும்   சேர்த்து  நன்கு   கொதிக்க வைக்க வேண்டும்.

எண்ணெய் நன்றாகப் பிரிந்து  வரும்போது  இறக்கவும்.   இதற்கு சிறிது எண்ணெய் அதிகம் தேவை. இந்தக் குழம்பு 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

veg recipe engkal.com

தேவையான பொருள்கள்:

வாழைப்பூ – 1, அரிசி மாவு – 1 ஸ்பூன், கடலை மாவு – அரை கப், சமையல் சோடா – 1 சிட்டிகை, மிளகாய் தூள் – அரை ஸ்பூன். உப்பு, எண்ணெய் தேவைக்கு, வெங்காயம் – 2, தக்காளி – 4, புளி – சிறிதளவு, மிளகாய்தூள் -3 ஸ்பூன், மல்லிதூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பூண்டு – 2. கடுகு ,வெந்தயம், சீரகம் தாளிக்க

செய்முறை:

வாழைப்பூவை ஆவியில் வேகவைக்கவும். அரிசி மாவு, கடலை மாவு, சமையல் சோடா, மிளகாய் தூள் உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வாழைப்பூவை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வெங்காயம், பூண்டு, தக்காளியை கட்பண்ணவும்.

எண்ணையை காய வைத்து கடுகு, வெந்தயம், சீரகம் தாளித்து வெங்காயம், பூண்டு, தக்காளியை நன்கு வதக்கி மிளகாய்தூள், மல்லிதூள், மஞ்சள் தூள் பச்சை வாசனை போக வதக்கவும். கடைசியில் புளியை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கும் முன்பு பஜ்ஜிகளை அதில் சேர்க்கவும்

veg recipe engkal.com

தேவையானவை:

அரிசி – 2 கப், துவரம் பருப்பு – அரை கப், வெங்காயம் – 1, தக்காளி – 1, தேங்காய் துறுவல் – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பூண்டு – 4 பல், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், கடுகு ,எண்ணெய்,உப்பு – தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் தாளித்து, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.அதில் மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய் சேர்த்து வதக்கவும்.

அதில் கழுவிய அரிசி, பருப்பு சேர்த்து 5 கப் தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரின் மூடியை போட்டு 1 விசில் வந்ததும், மிகச்சிறுதீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

கடைசியாக மல்லி இலை தூவி கலக்கவும்..

veg recipe engkal.com

தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்,

ஆரஞ்சு பழம் – 4,

சர்க்கரை – 4 டீஸ்பூன்,

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோல் – ஒரு டீஸ்பூன்,

கிராம்பு – 3 (நசுக்கவும்),

ஏலக்காய்த்தூள்-அரை டீஸ்பூன்,

பட்டைத்தூள் – அரை டீஸ்பூன்,

நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

ஆரஞ்சு பழத்தை சாறு எடுத்து, அதை அரிசியுடன் கலந்து சாதமாக செய்யவும். பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் ஆரஞ்சு தோலை போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும் மற்ற பொடிகளை சேர்த்து ஒருமுறை கிளறவும். இதில் ஆரஞ்சு சாதத்தை போட்டு உப்பு, சர்க்கரை சேர்த்துக் கிளறி சூடாக பரிமாறவும்.

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – 1 (பெரியது மற்றும் நறுக்கியது), பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது, துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன், சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டீஸ்பூன்,கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன், வரமிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிது, பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பீட்ரூட்டை சுத்தமாக நீரில் கழுவி, தோலை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு குக்கரில் போட்டு, பீட்ரூட் மூழ்கும் வரை நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் வேக வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து தண்ணீர் முற்றிலும் வற்றியதும், அதில் சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, பின் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி.

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு – 1 கப், வெங்காயம் – 1 (நறுக்கியது), தக்காளி – 2 (நறுக்கியது), மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன்   , நெய் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிது

 செய்முறை:

முதலில் பச்சை பயறை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின்பு அதில் சீரகத்தைப் போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால் பச்சை பயறு குழம்பு ரெடி.

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

 பன்னீர் – 3/4 கப், வெங்காயம் – 1 (நறுக்கியது),  தக்காளி – 1 (நறுக்கியது),  மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1/2 டீஸ்பூன், பிரஷ் க்ரீம் – 1 1/2 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லிதூள்  – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு. எண்ணெய் – 3 டீஸ்பூன்,  பட்டை – 1/4 இன்ச், கிராம்பு – 2, பிரியாணி இலை – 1

அரைப்பதற்கு. துருவிய தேங்காய் – 1/2 கப், முந்திரி – 8, கசகசா – 1/2 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – 1/2 

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீரை சேர்த்து பொன்னிமாக வதக்கிக் கொள்ளவும்.

பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து 5-10 நிமிடம், எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின்பு க்ரீம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி 1 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், பன்னீர் குருமா ரெடி

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

 சப்பாத்தி – 2, கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன், வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது),  பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது), சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிது, எண்ணெய் – தேவையான அளவு, தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் சப்பாத்தி மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

கல் சூடானதும், ஒரு சப்பத்தியை எடுத்து கல்லில் போட்டு, கலந்து வைத்துள்ள பேஸ்ட்டைத் தடவி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இதுப்போன்று அனைத்து சப்பாத்தியையும் செய்ய வேண்டும்.

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை/அரைக்கீரை – 3, கப் தக்காளி – 2, பச்சை மிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு, வறுப்பதற்குஎண்ணெய் – 1 டீஸ்பூன், வரமிளகாய் – 2, சீரகம் – 1 டீஸ்பூன், பூண்டு – 6 பற்கள்

தாளிப்பதற்கு எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கீரை, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி, மூடி வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கீரையில் சேர்த்து, சிறிது உப்பையும் சேர்க்க வேண்டும்.

பின்பு கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு மத்து கொண்டு மசிக்கலாம் அல்லது மிக்ஸியில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ளலாம்.

பிறகு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கீரையுடன் சேர்த்தால், ஆந்திரா ஸ்டைல் கீரை மசியல் ரெடி.

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

வெங்காயம்-5, தக்காளி-3, சாம்பார் மிளகாய்த்தூள்-தேவையான அளவு, கறிவேப்பிலை-தேவையான அளவு, உப்பு-தேவையான அளவு, கொத்தமல்லி இலை-தேவையான அளவு, பெருஞ்சீரகம்-1 ஸ்பூன், பட்டை-தேவையான அளவு, லவங்கம்-தேவையான அளவு, இலை-தேவையான அளவு

செய்முறை :

முதலில் எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம், இலை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி போட்டு எண்ணையிலேயே நன்றாக வதக்க வேண்டும்.

அதன்பிறகு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளற வேண்டும். பின்பு எண்ணெய் மிதந்து வந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு இறக்கிணல் வெங்காயம் தக்காளி மசாலா ரெடி .

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

½ cup ஊறவைத்த பிளவுற்றா கடலை பருப்பு

½ cup ஊறவைத்த தோலற்ற   பச்சைப்பயிறு அல்லது பாசிப் பருப்பு,

4 நடுத்தர பீர்க்காய்கள்

4 மேசைக்கரண்டி, புதிய தேங்காய் துருவல்

1 அகலம் இஞ்சி, சுமாராக நறுக்கப்பட்டது

2 வெட்டப்பட்ட பச்சை மிளகாய்கள்

2 நடுத்தர வெட்டப்பட்ட வெங்காயம்

1 மேசைக்கரண்டி எண்ணை

1  டீஸ்பூன் சீரகம்

1  டீஸ்பூன்கடுகு

7-8 கறிவேப்பிலை

½ டீஸ்பூன் மஞ்சள் தூள்சுவைக்கு உப்பு

செய்முறை:

முதலில் ஒரு ஆழமான ஓட்டாத கடாயில், கழுவிய மற்றும் ஊறவைத்த கடலை பருப்பு மற்றும் பாசிபருப்பை போட்டு ஒரு கப் நீரை ஊற்றி மஞ்சள் மற்றும் உப்பை சேருங்கள். கிளறி விட்டு மூடுங்கள்.பருப்புகள் நன்றாக வேகும் வரை 15-20 நிமிடங்களுக்கு சமைய விடுங்கள்.பீர்க்கங்காயை கழுவி தோலை உரித்து பின்பு அதை பெரிய துண்டுகளாக வெட்டுங்கள்.அதை வெந்த பருப்புகளுடன் சேர்த்து கிளறவும். அதை மூடி 15-20 நிமிடங்கள் சமைய விடுங்கள்தேங்காய், பச்சை மிளகாய்கள் மற்றும் இஞ்சியை ஒரு கரகரப்பான பேஸ்டாக அரைக்கவும். இதை பீர்க்கங்காய் மற்றும் பருப்புகளுடன் கடாயில் சேர்த்து நன்றாக கலக்கவும்.இன்னொரு ஓட்டாத கடாயை தாளிப்பதற்கு தயார் செய்யுங்கள். அதில் எண்ணையை சேர்த்து சில சீரக மற்றும் கடுகு விதைகளை வெடிக்க விடவும்,வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைகளை சேர்த்து நன்றாக பொறிக்கவும். இப்போது இந்த தாளிப்பை காய்கறி மற்றும் பருப்புடன் கலக்கவும். மூடி வைத்து 1-2 நிமிடங்கள் சமைக்கவும்.கேஸ் நிறுத்தி விட்டு அதை சாப்பிட அளிப்பதற்கு முன் கடாயிலேயே 5-7 நிமிடங்கள் இருக்க விடவுமவேண்டும்  .

தேவையான பொருட்கள்

இடியாப்பம் 12

உருளைக் கிழங்கு – 1

கரட் -1

லீக்ஸ் – 1

கோவா (ஊயடியபந)– ¼ துண்டு

வெங்காயம் – 1

கஜீ -10

பிளம்ஸ் சிறிதளவு

நெய் அல்லது பட்டர்- 4 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள், ஏலக்காய் தூள்- சிறிதளவு

உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை:

முதலில் கரட்டை துருவி வைத்துக் கொள்ளுங்கள். கிழங்கு, லீக்ஸ், கோவா, வெங்காயம் ஆகியவற்றை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.இடியாப்பத்தை உதிர்த்து வையுங்கள்.பாத்திரத்தில் நெய் விட்டு கிழங்கு வதங்கிய பின், வெங்காயம் போட்டு அவிந்த நிறம் வரும் வரை வதக்குங்கள். கஜீ, பிளம்ஸ் போட்டு வறுத்து, கரட், லீக்ஸ், கோவா சேர்த்து 2 நிமிடங்கள் பிரட்டிக் கொள்ளுங்கள்.மிளகு தூள் ஏலத்தூள் உப்புப் போட்டு உதிர்த்த இடியப்பம் போட்டுக் கிளறி எடுத்து சேவிங் பிளேட்டில் போட்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.(இத்துடன் பட்டாணிக்கறி, சோயாக்கறி, கத்தரிக்காய்ப் பிரட்டல், கிழங்கு மசாலா, அச்சாறு, சலட், கட்லற் அல்லது வடை வைத்துப் பரிமாறிக் கொள்ள வேண்டும் .

தேவையானப்பொருட்கள்:

புளி – சிறு எலுமிச்சம் பழ அளவு

தயிர் – 1 கப்

சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வெண்டைக்காய் – 4 அல்லது 5

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் – 5 முதல் 6 வரை

உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் – 1/2 அல்லது 3/4 கப்

தாளிக்க:

எண்ணை – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் புளியை ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து சற்று வதக்கி, ஆற விட்டு, பின்னர் சிறிது நீரைச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.வெண்டைக்காயை இரண்டு அங்குல நீளத்திற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு, அதில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் வதக்கிய வெண்டைக்காய், உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை, ஒன்று அல்லது ஒன்றரைக் கப் நீரில் கரைத்து குழம்பில் ஊற்றிக் கிளறி விடவும். குழம்பு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரைக் கட்டியில்லாமல் நன்றாகக் கடைந்து ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பு மீண்டும் ஒரு முறை கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வைத்து, தாளித்துக் கொட்டவும்.

கவனிக்க: இந்தக் குழம்பிற்கு எந்த எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் தேங்காய் எண்ணையை உபயோகப்படுத்தினால், சுவை வித்தியாசமாக இருக்கும் குறிப்பு: இந்தக் குழம்பில் விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம். ஆனால், கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளைப்பூசணிக்காய், சௌசௌ, வாழைத்தண்டு ஆகியவை பொருத்தமாயிருக்கும். வெண்டைக்காயை சேர்ப்பதானால், மேற்கூறியபடி, ஒரு டீஸ்பூன் எண்ணையில் வதக்கி சேர்க்கவும். கத்திரிக்காயென்றால், துண்டுகளாக்கி அப்படியே புளித்தண்ணீரில் சேர்க்கலாம். மற்ற காய்கள் என்றால், ஆவியில் வேக விட்டு பின்னர் சேர்தா உடன் அப்பள குழம்பு ரெடி .

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்:

காளான் – 200 கிராம்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

சோம்பு – 1/2 தேக்கரண்டி

கசகசா – 1/4 தேக்கரண்டி

தேங்காய் – 1/4 மூடி

மல்லித்தூள் – 1 மேஜைக்கரண்டி

மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி

தக்காளி – 2

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

பட்டை – 3

கிராம்பு – 3

மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை – 1 கொத்து

செய்முறை:

காளானை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டுக் கழுவி, பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றை தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் வெட்டிய காளானைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விட வேண்டும். கடைசியாக சிறிது நேரம் அடுப்பை மெல்லிய தீயில் எரியவிட்டு, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்துமல்லி தழை சேர்க்க வேண்டும்.

veg recipe engkal.com

தேவையான பொருட்கள்

பிலாக்காய் சிறியது – 1

உருளைகிழங்கு – 2

சின்ன வெங்காயம் – 15

தக்காளி – 1

முழு பூண்டு – 1

அரைப்பதற்கு

தேங்காய் – 1 மூடி

பச்சை மிளகாய் – 15

சோம்பு – 1 டீஸ்பூன்

கசகச- 1சிட்டிகை

பூண்டு- 5பல்

உப்பு -தேவையான அளவு

தாளிப்பதற்கு

எண்ணைய்- 2 டீஸ்பூன்

கடுகு- 1 டீஸ்பூன்

சோம்பு- 1 டீஸ்பூன்

பட்டை – 1

கருவேப்பிள்ளை- சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

செய்யும் முறை:

பிலாக்காயை கையில் எண்ணைய் தடவி கொண்டு இரண்டாக நறுக்கி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போடவும். உருளை கிழங்கையும் அந்த அளவில் நறுக்கி கொள்ளவும். உப்பு போட்டு இரண்டையும் தனியாக ஒரு பாத்திரத்தில் வேக வைக்கவும்.. வெங்காயம் தக்காளி .கசகச, சோம்பு .பூண்டு பல், பச்சை மிளகாய்,உப்பு.ஆகியவற்றை நைசாக அரைக்கவும் அடுப்பில் வாணலை வைத்து 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம் .. தக்காளி … பூண்டு போட்டு .1 சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு வதக்கவும் நன்கு வதங்கிய பின்பு வேகவைத்துள்ள பிலக்காயையும் உருளைகிழங்கையும் போட்டு.. அரைத்த விழுதையும் கூட சேர்த்து கொத்திக்கவிடவும் குருமா மாதிரி வந்த உடன் இறக்கவும் பின்பு சமையல் ரெடி .

veg recipe engkal.com

தேவையான பொருள் :

மணத்தக்காளி வற்றல் – 4 டீஸ்பூன், புளி – எலுமிச்சைப் பழ அளவு, வெந்தயம், கடலைப்பருப்பு, கடுகு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 50 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில்  புளியை 200 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வெந்தயம் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். பிறகு, மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு… கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

veg recipe engkal.com

தேவையான பொருள் :

புளி – எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், அப்பளம் – 2, கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, அப்பளத்தை ஒன்று இரண்டாக உடைத்துப்போட்டு, சாம்பார் பொடியை சேர்த்து வறுக்கவும். பிறகு, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

தேவையானபொருள் :

கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு, மிளகு – 10, காய்ந்த மிளகாய்  – 2, உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், புளி – சிறிய எலுமிச்சைப் பழ அளவு, எண்ணெய் – 50 மில்லி, உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை வதக்கிக்கொள்ளவும். அதே வாணலியில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன் புளியை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து தேவையான உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.