தென்னிந்தியா உணவுகள்

சுவையான தென்னிந்தியா உணவுகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இங்கே.

south indian recipe engkal.com
southindia recipe engkal.com

தேவையானவை:

கேழ்வரகு மாவு – ஒரு கப், பச்சரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் – அரை கப், வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

 கேழ்வரகு மாவை லேசாக வறுத்து… பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். அதில் தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். மாவை தோசைக்கல்லில் கனமான அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சின்னச் சின்ன துண்டுகளாக செய்து கொள்ளவும்.

வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, தேன் பதம் வந்ததும் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதில் கேழ்வரகு ரொட்டித் துண்டுகளை சேர்த்துப் பரிமாறவும்.

இரும்புச்சத்து கொண்ட இந்த ரொட்டி, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

southindia recipe engkal.com

தேவையானவை:

 கம்பு, கொள்ளு, பச்சைப் பயறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள் – தலா கால் கப், சர்க்கரை – இரண்டரை கப் (பொடித் துக் கொள்ளவும்), தேங்காய் துருவல் – அரை கப், நெய் – அரை கப்.

செய்முறை:

தானிய வகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து, சற்று ஆறியதும் ஒன்றுசேர்த்து, மெஷினில் கொடுத்து நைஸான மாவாக அரைத்துக் கொள்ளவும்.

தானிய மாவுடன் பொட்டுக்கடலை, பொடித்த சர்க்கரை, தேங்காய் துரு வல் சேர்த்து நன்கு கலந்து, உருக்கிய நெய் ஊற்றி பிசிறி, உருண்டை பிடிக்கவும் (சரியாக பிடிக்க வரவில்லை என்றால், சிறிது பால் தெளித்து உருண்டை பிடிக்கலாம்).

புரோட்டீன் சத்து நிறைந்த பலகாரம் இது.

southindia recipe engkal.com

தேவையான பொருட்கள்:

முட்டை – 2-3 வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1/2 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது) பீன்ஸ் – 1 (நறுக்கியது) மிளகு தூள் – 1 சிட்டிகை மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் பால் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பால், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். கல்லானது சூடானதும், அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட் போல் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, முன்னும், பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான வெஜிடேபிள் ஆம்லெட் ரெடி!!!

southindia recipe engkal.com

தேவையான பொருட்கள் :

வல்லாரை – 1 பிடி, கரட் – 3, சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 3, தயிர் – 1 மேசைக் கரண்டி, உப்பு – தேவையான அளவு, மிளகு தூள் – தேவையான அளவு, கருவேப்பிலை – 10, தேசிக்காய்ப் புளி – தேவையான அளவு

செய்முறை:

வல்லாரைக்கீரையை சுத்தம் செய்து மிக மெல்லிதாக வெட்டவும்.

கரட்டை துருவி எடுக்கவும்.

சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை, கருவேப்பிலையை மிக்கச் சிறிதாக வெட்டவும்.

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து 1மேசைக் கரண்டி தயிரையும், தேவைக்கு ஏற்ப உப்பு, தேசிக்காய்ப் புளி, மிளகு தூள் கலந்தது பரிமாறலாம்.

southindia recipe engkal.com

தேவையான பொருள்கள் :

நறுக்கிய தக்காளி – 3, நறுக்கிய பெரிய வெங்காயம்  – 1, காய்ந்த மிளகாய் – 4, உறித்த பூண்டு – 2 பகுதிகள், புளி -நெல்லிக்காய் அளவு உருண்டை, எண்ணெய் – 2 தேக்கரண்டி, கடுகு – கால் தேக்கரண்டி, உளுந்து – கால் தேக்கரண்டி, பெருங்காயம் – 1 சிட்டிகை, மஞ்சள் பொடி – 1 சிட்டிகை (இது சட்னிக்கு நல்ல நிறம் கொடுக்கும்), உப்பு -சுவைகேற்ப்ப, கறிவேப்பிலை – 1 காம்பு, கொத்தமல்லி – கைப்பிடி அளவு

செய்முறை :

சட்னி செய்வதற்கு :

வாணலியில் எண்ணெயை சுட வைத்து, அதில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.

கடுகு வெடித்தவுடன் பூண்டும் வெங்காயமும் சேர்க்கவும்.

வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வறுத்து விட்டு,அதனுடன் தக்காளியை சேர்க்கவும்.

நன்கு வறுத்த பின் காய்ந்த மிளகாய்,மஞ்சள் பொடி,பெருங்காயம் மற்றும் உப்பை சேர்க்கவும்.

சிறிது நேரத்திற்கு பிறகு, தக்காளி நன்றாக வெந்து, அதன் பச்சை வாசனை நீங்கி இருக்கும்.

அடுப்பை அணைக்க இது தக்க தருணம். இப்போது அதில் புளியையும், கொத்தமல்லியையும் சேர்க்கலாம்.

10 நிமிடங்கள் ஆற வையுங்கள்.

southindia recipe engkal.com

தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் – 6, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:

பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்.

southindia recipe engkal.com

வையான பொருட்கள்:

பாம்பே ரவை – 1 கப் (வறுத்தது), பெரிய வெங்காயம் – 1,காரட் – அரை கப், பீன்ஸ் – அரை கப், உதிர்த்த பட்டாணி – 1 கப், காலிப்ளவர் – அரை கப், பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு – கால் ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:

காரட், பீன்ஸ் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கவும்.

நறுக்கிய காய், பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கும் சாமான்களைப் போட்டு கலந்து மைக்ரோ – ஹையில் 3 நிமிடம் மூடி வைக்கவும்.

அதில் வெங்காயம், பச்சை மிளகாய், போட்டுக் கிளறி மைக்ரோ – ஹையில் 3 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

அதில் வேகவைத்த காய்கறி, வறுத்த ரவையைப் போட்டுக் கிளறி, 3 கப் வெந்நீர் சேர்த்து, உப்பு போட்டு மூடாமல் மைக்ரோ வேவில் 4 நிமிடங்கள் வைக்கவும்.

இடையில் கலந்து விடவும். மீண்டும் 4 நிமிடங்கள் வைக்கவும்.

southindia recipe engkal.com

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 3/4 கப் (தோலுரித்தது) காலிஃப்ளவர் – 1 கப் பாசுமதி அரிசி – 3 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் பட்டை – 1 கிராம்பு – 5 பிரியாணி இலை – 2 மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து, தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு, 1-2 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து, அதில் காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு 3 1/2 கப் தண்ணீரை விட்டு, நன்கு கலந்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான ஆலு கோபி புலாவ் ரெடி!!! இதனை ஏதேனும் விருப்பமான கிரேவியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்

southindia recipe engkal.com

தேவையான பொருட்கள்.

உருளைக்கிழங்கு – 4 – 5 பெரிய கிழங்குகள், வெங்காயம் – 2 – 3 மீடியம் சைஸ், பச்சை மிளகாய் – 3 – 4, இஞ்சி – ஒரு இன்ச் சைசுக்கு ஒரு துண்டு, கொத்து மஞ்சள் – ஒரு விரற்கிடை

தாளிக்கத் தேவையான பொருட்கள்

(கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு), தணியாப் பொடி (மல்லிப் பொடி) – சிறிதளவு, கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி சற்று சிறிய அளவில் நசுக்கியோ, நறுக்கியோ வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயத்தை நீள வாக்கில் சின்னதாக அரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

பச்சை மிளகாயை நீளவாக்கில் ‘ஸ்லிட்’ செய்து வைத்துக் கொள்ளுங்கள்

இஞ்சியை இரண்டு மூன்றாக அரிந்து, நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

கொத்து மஞ்சள் கிடைத்தால் அதை நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணையைத் தாராளமாக ஊற்ற வேண்டும். எண்ணை காய்ந்த உடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு என்ற வரிசையில் போட்டு கடுகு வெடிக்கும் வரையும், பருப்புகள் சிவக்கும் வரையும் அதை துடுப்பால் தள்ளிக் கொண்டே இருங்கள். பிறகு பச்சை மிளகாயைச் சேருங்கள். அடுத்து இஞ்சியையும், மஞ்சளையும் சேர்க்க வேண்டும்.

இவை வதங்கும் போது வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இப்போது உப்பு சேர்க்கவும். இவை வதங்கும் போது உருளைக் கிழங்கைச் சேர்த்து ஒன்றாகக் கிளரி அதன் மேல் தணியாத் தூளைத் தூவி நன்றாக வதக்க வேண்டும்.

இவையனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். சற்று இளகிய பதம் வரும் போது அதன் மேல் மல்லித் தழையும், கருவேப்பிலையையும் கிள்ளிப்போட்டு இறக்கி விடுங்கள்.

இப்போது சுவையான கிழங்கு தயார்!!!

கொத்து மஞ்சள் கிடைக்க வில்லையென்றால் மஞ்சள் தூளை வெங்காயம் வதங்கும் போது மஞ்சள் தூளைச் சேர்க்கலாம்.

இந்தக் காம்பினேஷனுக்கு இணையான டிஃபன் உலகத்திலேயே இல்லை.

southindia recipe engkal.com

தேவையான பொருட்கள் : 

கத்தரிக்காய் -1/4 கிலோ,சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 2, தேங்காய் – அரை மூடி (சிறியது), பூண்டு – 10 பல், கடுகு – 1/2 தேக்கரண்டி, வெந்தயம் – 1/2 தேக்கரண்டி, புளிக்குழம்பு பொடி – 4 தேக்கரண்டி, புளி தண்ணீர் – 2 கப், நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி, கருவேப்பிலை – 1 ஆர்க்கு, உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

தேவையானப் பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும்.

பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். வெங்காயத்தில் பாதியை மட்டும் இரண்டாக வெட்டி கொள்ளவும்.

கத்தரிக்காய்களை மேலாக ஒரு கீறல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு கீறலாக கீறி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டாத வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி கொள்ளவும். வதக்கியதை ஆறவிட்டு தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

கத்தரிக்காயில் லேசாக எண்ணெய் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 4 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும். (பாத்திரத்தில் கூட வதக்கி கொள்ளவும்).

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும். அடுத்து வெட்டி வைத்த வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். இதனுடன் குழம்பு பொடி சேர்த்து கிளறவும்.

அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும் கத்தரிக்காய்களை சேர்த்து கொதிக்க விடவும்.

எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் இறக்கவும்.சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

southindia recipe engkal.com

தேவையான பொருட்கள் :

உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, பெருங்காயம் – சிறிதளவு, கறிவேப்பிலை, மாங்காய் வற்றல் – 6 (மாங்காயை நறுக்கி, உப்பில் 3 நாட்கள் ஊற வைத்து.வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்கவும்), காய்ந்த மிளகாய் – 2, மிளகு – தலா ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மாங்காய் வற்றலை வெந்நீரில் ஊற வைக்கவும்.

பின் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து, அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, சிறுது எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு தாளித்து, அரைத்த விழுது, ஊற வைத்த மாங்காய் வற்றல், புளிக் கரைசல் விட்டு.மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு பின் இறக்கவும்.

southindia recipe engkal.com

தேவையான பொருட்கள் :
பப்பாளி காய் – அரை கப் (நறுக்கியது)
எண்ணெய் – இரண்டு குழிகரண்டி
பட்டை – ஒன்று
லவங்கம் – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
அன்னாசிப்பூ – ஒன்று
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
தக்காளி – ஒன்று (நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
சோம்பு தூள் – ஒரு டீஸ்பூன்
சீரக தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா தூள்- இரண்டு டீஸ்பூன்
தேங்காய் பால் – ஒரு டம்ளர்

செய்முறை :
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், அண்ணாச்சிபூ, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.

பின், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.பப்பாளி காய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, கறிவேப்பில்லை சேர்த்து கிளறவும்.

பின், மஞ்சள் தூள், சோம்பு தூள், சீரக தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறி தேங்காய் பால் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.

பின், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

southindia recipe engkal.com

தேவையான பொருட்கள்:

 ராகி மாவு – 2-3 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – 1/2 கப்

பாதாம் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

 குளிர்ந்த பால் – 2 கப்

சர்க்கரை – தேவையான அளவு

 செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை போட்டு, தண்ணீர் ஊற்றி கட்டி சேர்தவாறு கலந்து கொள்ள வேண்டும்.

பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து  கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்  , பிறகு  இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு மிக்ஸியில் அதனைப் போட்டு, அத்துடன் சர்க்கரை, பாதாம் பவுடர், பால் சேர்த்து சிறிது நேரம் அரைத்து இறக்கி பரிமாறினால், ராகி பாதாம் மில்க் ஷேக் ரெடி

southindia recipe engkal.com

தேவையான பொருட்கள்:

 கோதுமை மாவு – 1/2

 கப் கடலை மாவு – 1/4 கப்

அரிசி மாவு – 1/4 கப்

 பேக்கிங் சோடா – 1

 சிட்டிகை உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

ஓமம் – 1 டீஸ்பூன்

 சாட் மசாலா – 3/4 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு

பின்பு பிரட் துண்டுகள் – 4-5

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

 முதலில் பிரட்டை சதுர துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். 

பிறகு அதற்குள் ஒரு பாத்திரத்தில் பிரட் மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் போட்டு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் கொள்ள வேண்டும் பின்பு , பிரட் பஜ்ஜி ரெடி

 

southindia recipe engkal.com

தேவையான பொருட்கள்:

அரிசி சாதம் – 1 கப்

 வேக வைத்த உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்து மசித்தது)

 மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) – 1 கப்

 (பொடியாக நறுக்கியது) வெங்காயம் – 1

 (பொடியாக நறுக்கியது) இஞ்சி – 2 டீஸ்பூன்

 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 1

 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி சிறிது

 உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1சிட்டிகை

 சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

 மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்

 கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்

 எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

 செய்முறை:

 முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும் ,  பின்பு கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அரிசி சாத கட்லெட் தயார்.

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – 3 கப் (வேக வைத்தது), உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப, கடலை மாவு – 1/2 கப், அரிசி மாவு – 1/4 கப், சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன், பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவரைத் தவிர, அனைத்து பொருட்களையும் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் காலிஃப்ளவரைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், காலிஃப்ளவர் பக்கோடா ரெடி

southindia recipe engkal.com

தேவையான பொருட்கள்:

மைதா – 1/2 கப்

 கோதுமை மாவு – 1/4 கப்

 ஈஸ்ட் – 1/2 டீஸ்பூன்

வெதுவெதுப்பான நீர் – 1/4 கப்

சர்க்கரை – 1 டீஸ்பூன்

 உப்பு – 1/2 டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்

டாப்பிங்ஸ்பிட்சா சாஸ் – 1/4 கப்

காய்கறிகள் 1/2 கப்

பின்பு (பேபி கார்ன், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் நீளமாக வெட்டியது) சீஸ் – 1/2 கப்

(துருவியது)

சில்லி ப்ளேக்ஸ் – தேவையான அளவு

ஓரிகானோ – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர், எண்ணெய், உப்பு மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மற்றும் கோதுமை மாவை ஒன்றாக கலந்து, எண்ணெயுடன் சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மாவானது சற்று அதிகமாகி இருக்கும்.

பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும், 1/4 இன்ச் கெட்டியான சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு வட்டமான டிபன் பாக்ஸ் கொண்டு துண்டுகளாக்கி கொள்ளவும் , ஆங்காங்கே போர்க் கரண்டி கொண்டு ஓட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

 பின்பு பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் தாளை விரித்து, அதன் மேல் இந்த வட்டத் துண்டுகளை வைத்து, முதலில் அதன் மேல் பிட்சா சாஸ் ஊற்றி, பின் சிறிது சீஸ் பரப்பி, காய்கறிகளை வைத்து, இறுதியில் மீண்டும் சிறிது சீஸைத் தூவி, மைக்ரோ ஓவனில் 180 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான மினி பிட்சா ரெடி இதன் மேல் சிறிது சில்லி ப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோ தூவி பரிமாறுங்கள்.

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு-1 சிறியது

வெங்காயம்-1

மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்

துவரம் பருப்பு (அல்லது) பாசி பருப்பு-100 கிராம்

உப்பு-தேவையான அளவு

தேங்காய் துறுவல் -அரை கப்

மோர் – கொஞ்சம்

தாளிக்க வேண்டிய பொருட்கள்:

எண்ணெய்-தேவையான அளவு கடுகு-1 டேபிள்ஸ்பூன் உளுந்தம்பருப்பு-1 டீஸ்பூன் வரமிளகாய் -3

செய்முறை :

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் மோர் கலந்த தண்ணீரில் வாழைத்தண்டை பொடியாக அறிந்து போட்டு வைக்கவும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் போட்டு தாளித்த பின்பு அதில் பாசிப்பருப்புடன் வாழைத்தண்டு,மஞ்சள் தூள்,தேங்காய்,உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட்டு இறக்கவும்.வாழைத்தண்டு கூட்டு தயார்.

Close Menu