பாரம்பரிய உணவுகள்

அன்றைய காலத்தில் உணவு முறைகள் இயற்கையின் வழியில் பின்பற்றப்பட்டது அதன் மருவடிவமே இப்பக்கம் நீங்களும் பாரம்பரிய சமையலை கற்றுக்கொள்ள சில குறிப்புகள்.

parambariya unavugal engkal.com

பலவகையான தானியங்களும் அதன் தனித்துவமான சுவைகளும்!!!

ragi-halwa recipe engkal.com

100 கிராம் கேழ்வரகு மாவை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு ஆறவைத்து, தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலக்கவும். கடாயில் ஒரு கிண்ணம் பாலை ஊற்றி, கொதித்ததும் 100 கிராம் நறுக்கிய பூசணித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இதில், கால் கிலோ வெல்லம் / கருப்பட்டி , கரைத்து வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும். ஒரு தேக்கரண்டி நெய்யில் தோல் நீக்கிய 100 கிராம் வேர்க்கடலை, தேங்காய்த் துண்டுகள், முந்திரித் துண்டுகளை வறுத்து, அல்வாவில் சேர்த்து, கிளறிப் பரிமாறவும்.

parambariya unavugal engkal.com

தேவையானவை:
கேழ்வரகு மாவு – ஒரு கிண்ணம், வெல்லம் – முக்கால் கிண்ணம், தேங்காய் துருவல் – கால் கிண்ணம், ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி, நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 2 மேசைக் கரண்டி, நெய் – தேவையான அளவு.

செய்முறை:
வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். பிறகு கேழ்வரகு மாவு, ஏலக் காய்த்தூள், பொடித்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

parambariya unavugal engkal.com

தேவையானவை:
கேழ்வரகு – 200 கிராம், சிவப்பு அரிசி – 100 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கிண்ணம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள் – சிறிதளவு, வெல்லத்தூள் அல்லது வெல்லம் / கருப்பட்டி – ஒரு கிண்ணம், நெய் – ஒரு தேக்கரண்டி.

செய்முறை:
கேழ்வரகு, சிவப்பு அரிசி இரண்டையும் சேர்த்து ரவை பதத்தில் பொடித்துக் கொள்ளவும். தண்ணீரை இளம்பதமாக சூடாக்கி, மாவில் தெளித்து பிசிறிக் கொண்டு, இட்லித் தட்டின் மேல் ஒரு துணியை நனைத்துப் பிழிந்து போட்டு, மாவை போட்டு மூடி வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். நன்கு வெந்ததும், ஒரு தட்டில் கொட்டி உதிர்த்து நெய், தேங்காய் துருவல், நறுக்கிய பழத் துண்டுகள், வெல்லத்தூள் (அ) வெல்லம் / கருப்பட்டி , ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

parambariya unavugal engkal.com

அரை கிண்ணம், கம்பை நன்றாகச் சுத்தம் செய்து ஊறவைக்கவும். இதனுடன், மூன்று கிண்ணம் (மஞ்சள் முள்ளங்கி(கேரட்), அவரை (பீன்ஸ்), பூக்கோவா (காலிஃபிளவர்), பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து அரைத்த விழுது) அரை தேக்கரண்டி அளவுக்கு சீரகம், மிளகு, 1 பிரியாணி இலை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, இரண்டு கிண்ணம் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். வெந்ததும், பிரியாணி இலையை எடுத்துவிட்டு, கலவையை மின் அம்மியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, அரை தேக்கரண்டி கடுகு மற்றும் மூன்று பல் பூண்டு சேர்த்துத் தாளித்து, அரைத்த சாறு கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இதில், எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பருகலாம்.

parambariya unavugal engkal.com

செய்முறை

தினையோ, சாமையோ எதுவானாலும் மின் அம்மியில் ஒரு முறை சுற்றி, இரண்டாக உடைத்துக்கொள்ளவும். அரை குவளை தானியத்துக்கு மூன்று குவளை தண்ணீர் சேர்த்து, நன்றாக வேகவைத்து, மலர்ந்ததும் இறக்கவும். இனிப்பு வேண்டுமானால், பனை வெல்லத்தைக் காய்ச்சி, வடிகட்டி, அந்தப் பாகைத் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். ஏலக்காய், தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்துப் பரிமாறுங்கள். இல்லையெனில், மோர் சேர்த்து, சின்ன வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்துப் பருகலாம்.

இதற்கு, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கொள்ளு எனச் சுவையான துவையல்களைத் தொட்டுக்கொள்ளலாம். தினம் ஒரு கீரைகூடச் சேர்த்துக்கொள்ளலாம்.

parambariya unavugal engkal.com


தேவையானவை:
கொள்ளு – அரை கிண்ணம், புளி – 50 கிராம், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, மல்லி, மிளகு – தலா ஒரு தேக்கரண்டி, சீரகம் – 2 தேக்கரண்டி, தக்காளி – 2, பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 3 தேக்கரண்டி, கடுகு, சீரகம் – தலா அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 1.

செய்முறை:
கொள்ளை ஊறவைத்து அலசி, தண்ணீர் சேர்த்து வேகவைத்து, மசித்துக் கொள்ளவும். ரசப்பொடிக்கான மிளகு, சீரகம், மல்லியை மின் அம்மி அல்லது அம்மியில் பொடித்துக்கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மசித்த கொள்ளு, தண்ணீர், அரைத்த பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, இளஞ்சூட்டில் வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டுத் தாளித்து, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை, ரசத்தில் கொட்டி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையைச் சேர்க்கவும்.

parambariya unavugal engkal.com

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி – கால் கப், வரகு அரிசி – கால் கப், சாமை அரிசி – கால் கப், தினை அரிசி – கால் கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – சிறிது, நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள் – 13, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை;

வரகு, சாமை, தினை, குதிரைவாலி அரிசிகளை ஒன்றாகவும், வெந்தயம், உளுந்தையும் ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஊறியதும் நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

பிரண்டையின் ஓரங்களில் உள்ள நரம்பை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும்.

நன்றாக ஆறியவுடன் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வரகு அரிசி மாவுடன் கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை தோசையாக ஊற்றி மூடி, இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

குளிர்காலத்திற்கு உகந்த சுவையான சத்தான சத்தான பிரண்டை சிறுதானிய தோசை தயார். காரமான தேங்காய் சட்னியுடன் சூடாக பிரண்டை தோசையை வைத்து ருசி அலாதியாக இருக்கும்.உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

parambariya unavugal engkal.com

தேவையான பொருள்கள்:

வரகு அரிசி – 4 டம்ளர் , பட்டை – 2 , கிராம்பு – 3 , ஏலக்காய் – 2 , நல்ல எண்ணெய் -150 கிராம், மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன், மஞ்சள்தூள் -அரை ஸ்பூன், பச்சைப்பட்டாணி – 100 கிராம், வெங்காயம் – 3 நறுக்கியது, தக்காளி – 3 நறுக்கியது, புதினா – 1 கட்டு, மல்லித்தழை – 1 கட்டு, நெய் – 50 கிராம், கேரட் – 2, பீன்ஸ் – 100 கிராம், உருளைக்கிழங்கு – 2, தயிர் – 100 கிராம், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 8 ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் குக்கரில் வரகு அரிசியை வறுத்து வைக்கவும். காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் எண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, தயிர், புதினா, கொத்தமல்லித் தழை, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் 7 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் வரகு அரிசியை சேர்த்து கிளறி தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி 1 கொதி வந்ததும் குக்கரை மூடி விசில் போட்டு 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். இறக்கி சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்.

தேவையானவை:

உதிராக வடித்த சாதம் – 2 கப், கடுகு 1 ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் 1 ஸ்பூன், உப்பு- தேவையான அளவு

பொடிக்க:

எள் – 4 ஸ்பூன், உளுந்து 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, தேங்காய்த் துருவல் – 2 ஸ்பூன், எண்ணெய் 2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்.

செய்முறை:

எள்ளை வெறும் கடாயில் போட்டு, பொரியும்படி வறுத்து எடுத்து கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும் .

ஆற வைத்து எள் உட்பட வறுத்த அனைத்து பொருள்களையும் சேர்த்து மிக்சியில் நைஸாக பொடித்து கொள்ளவும்.

பின் மற்றாரு கடாயில் நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளித்து சாதத்தில் எள் பொடி, உப்பு ஆகியவற்றைத் தூவி, கடுகு தாளிதத்தை சேர்த்துக் நன்கு கிளரவும்

சுவையான சத்தான எள் சாதம் ரெடி

parambariya unavugal engkal.com

தேவையான பொருள்கள்:

தூதுவளை இலை – 2 கப், நறுக்கிய உருளை கிழங்கு – 1, பூண்டு – 5 பல், நறுக்கிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, தேங்காய்ப்பால் – சிறிதளவு , கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், நல்லெண்ணை – 5 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பான், தனியா தூள் – 2 ஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிதளவு, புளி – சிறிதளவு , உப்பு – தேவையானவை

செய்முறை :

இலையை முள் நீக்கி நன்கு கழுவி கொள்ளவும். புளியைக் கரைத்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணைய் ஊற்றி சுடானதும் தூதுவளை கீரையை வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு அதே எண்ணெயில் கடுகு , வெந்தயம் போட்டு தாளித்து பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ,உருளை கிழங்கு சேரத்து வதக்கி அதனுடன் கரைத்த புளியை ஊற்றி

இத்துடன் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து அதனுடன் வதக்கி வைத்த இலை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும்.சுவையான மணமான தூதுவளை குழம்பு ரெடி.

parambariya unavugal engkal.com

தேவையான பொருட்கள்:

சிவப்பு தண்டுக்கீரை – 1 கட்டு, பாசிப்பருப்பு – கால் கப், நறுக்கிய வெங்காயம் – 1, நறுக்கிய தக்காளி – 1, பூண்டு – 2 பல், நெய் – 2 ஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்க, உப்பு – தேவையான அளவு

அரைக்க

தேங்காய் துருவல் – 2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2 , சீரகம் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – சிறிதளவு , சின்ன வெங்காயம் – 2

செய்முறை:­­

கீரையை நன்கு சுத்தம் பண்ணி பொடியாக நறுக்கி வைக்கவும்.பருப்பை மஞ்சள் தூள் சிறிது சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக வைக்கவும். அரைக்க கொடுத்த வற்றை அரைத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்க்கவும்.வதக்கவும். பின்பு நறுக்கிய கீரை சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும்.

அதனுடன் நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து நன்கு மசியவிட்டு அதனுடன் வேக வைத்த பருப்பு சேர்த்து நன்கு கிளரி அதனுடன் அரைத்த தேங்காய் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி ஒரு கொதி விட்டு இறக்கவும். சுவையான சிவப்பு தண்டுக்கீரை கூட்டு ரெடி.

parambariya unavugal engkal.com

தேவையான பொருள்கள்:

கோதுமை – 1 கப், நாட்டு சர்க்கரை – கால் கப், நெய் – ஸ்பூன், தேங்காய் தருவல் – 3 ஸ்பூன்

செய்முறை:

கோதுமையை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து, பருத்தித் துணியில் பயறைக் கட்டி வைக்க வேண்டும்.

12 மணி நேரத்தில் கோதுமை முளைகட்டிவிடும்.

முளைத்த கோதுமையை வெயிலில் காய வைக்க வேண்டும்.

பின்பு கடாயில் கோதுமையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு படபடவென்று வெடிக்கும் வரை வறுத்தெடுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு புட்டு மாவு பதத்திற்கு அரைத்து சலித்து வைத்து கொள்ளவும்.

அதில் தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி பிசிறி அதனுடன் தேங்காய் சேர்த்து ஆவியில் வேக வைத்து நெய் சர்க்கரை கலந்து சூடாக பரிமாறவும்.

சுவையான முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டுரெடி.

parambariya unavugal engkal.com

தேவையான பொருட்கள்:

அரிசி – 2 கப், கருப்பு உளுத்தம் பருப்பு – அரை கப், பூண்டு – 10 பற்கள், தண்ணீர் – 7 கப், உப்பு – தேவையான அளவு, துருவிய தேங்காய் – 1/2 கப்

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரில் அரிசி, உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அத்துடன் பூண்டு, உப்பு சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு குக்கரை திறந்து, ஆவி அடங்கிய பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

மிகவும் கெட்டியாக இருந்தால் 1 டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து சேர்த்து கொள்ளவும்.

சுவைாயன சத்தான உளுந்தங்கஞ்சி ரெடி

parambariya unavugal engkal.com

தேவையான பொருள்கள்:

பச்சை பயறு – 100 கிராம், கொண்டை கடலை – 100 கிராம், காராமணி – 50 கிராம், கொள்ளு – 50 கிராம், உப்பு – தேவைாயன அளவு, வெங்காயம் நறுக்கியது – 50 கராம், தக்காளி நறுக்கியது – 1, லெம்ன் சாறு – 2 ஸ்பூன், மல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

பயறு வகைகளை நன்கு கழுவி ஒரு வெள்ளை துணியில் கட்டி 12 மணி நேரம் வைக்கவும்.

அவ்வாறு செய்தால் பயறு வகைகளில் முளை வர ஆரம்பித்து விடும்.

பயறு வகைகளை அகலமான பாத்திரத்தில் போட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, லெமன் சாறு, உப்பு , மல்லி இலை அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும். மிகவும் சத்தான ரெசிப்பி..

parambariya unavugal engkal.com

தேவையான பொருட்கள்:

எள்ளு – இரண்டு டீஸ்பூன் (லேசாக வறுத்தது), வறுத்த வேர்க்கடலை – அரை கப், வறுத்த காய்ந்த மிளகாய் – மூன்று, தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன், புளி – ஒரு சிறு துண்டு, உப்பு – தேவைகேற்ப    , எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கரிவேபில்லை – சிறிதளவு

செய்முறை:

முதலில் எள்ளு, வேர்க்கடலை, வறுத்த காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும் வேண்டும் .

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி  வருக்கா வேண்டும் பிறகு பரிமாறவும்

parambariya unavugal engkal.com

தேவையான பொருட்கள்:

கம்பு – ஒரு கப், உப்பு – தேவைகேற்ப, நெய் – ஒரு தேகரண்டி, ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன், சர்க்கரை – தேவைகேற்ப, தேங்காய் துருவல் – கால் கப், முந்திரி – ஒரு டீஸ்பூன், திராட்சை – ஒரு டீஸ்பூன், பிஸ்தா – ஒரு டீஸ்பூன்

செய்முறை:    

 முதலில் கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை, பிஸ்தா இவை எல்லாம்  போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும் வேண்டும் . பிறகு ஒரு கிண்ணத்தில் கம்பு மாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் வேண்டும் .பிறகு, அதில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும்.பிறகு, இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் ஆவி கட்டவும். பின், எடுத்து  ஒரு கிண்ணத்தில் போட்டு உதிர்த்து  கொள்ளவும்.பிறகு, அதில் ஏலக்காய் தூள், நெய் சிறிதளவு, தேங்காய் துருவல், சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும் கொள்ளவும்.

parambariya unavugal engkal.com

தேவையான பொருட்கள்

வல்லாரை கீரை – அரை கட்டு, உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – இரண்டு, மிளகு – கால் டீஸ்பூன், புளி – ஒரு கோலி குண்டு அளவு, வெல்லம் – சிறிதளவு, எண்ணெய் – தேவைகேற்ப, உப்பு – தேவைகேற்ப, கடுகு – சிறிதளவு, கரிவேபில்லை – சிறிதளவு

செய்முறை:

முதலில் கடாயில் சுத்தம் செய்து நறுக்கிய கீரை போட்டு வதக்கி எடுத்து வைத்து கொள்ள வேண்டும் . பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வருத்து கொள்ளவும்.பின்பு ஆறியதும் இரண்டு கலவையும் சேர்த்து உப்பு, புளி சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கரிவேபில்லை போட்டு தாளித்து அதில் சேர்த்து இறக்கவும்.

parambariya unavugal engkal.com

தேவையான பொருட்கள்

தனியா – இரண்டு டீஸ்பூன், நெய் – நான்கு டீஸ்பூன், மிளகு – இருபது, சீரகம் – ஒரு டீஸ்பூன், சுக்கு – சின்ன துண்டு நசுக்கி கொள்ளவும், கரிவேபில்லை – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – தேவைகேற்

செய்முறை:

 மதலில் கடாயை சூடு செய்து கரிவேபில்லை, மிளகு, சீரகம், தனியா, சுக்கு ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும் வேண்டும் .

அந்த கலவை ஆறியதும் மிக்ஸ்யில் போட்டு நைசாக அரைத்து, தேவைகேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

parambariya unavugal engkal.com

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி – ஒரு கப் (வேகவைத்தது), எண்ணெய் – இரண்டு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது), சிகப்பு குடைமிளகாய் – இரண்டு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது), உப்பு – தேவைகேற்ப, கறிவேப்பில்லை – சிறிதளவு

செய்முறை:

ஒரு கப் சாமை அரிசி, மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், சிகப்பு குடைமிளகாய், உப்பு ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கிய பிறகு, வேகவைத்த சாமை அரிசி, கறிவேப்பில்லை சேர்த்து கலந்து பரிமாறவும்.

parambariya unavugal engkal.com

தேவையான பொருட்கள்:

புதினா – 2 கட்டு, பச்சைமிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு, புளி – ஒரு எலுமிச்சை அளவு, காய்ந்த மிளகாய் – 2, கடுகு – ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் புதினா, பச்சைமிளகாய் போட்டு வதக்கி கொள்ளவும். பின்பு காய்ந்த மிளகாய், உப்பு, புளி, சேர்த்து மிக்சியில் அரைக்க வேண்டும். அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, அரைத்து வைத்து இருக்கும் புதினா, விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். கடைசியில் நன்றாக சுருண்டு வந்ததும் இறக்கவும்.  இவை இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும் பிறகு புதினா தொக்கு ரெடி.

Close Menu