பாஸ்ட் புட் உணவுகள்

பத்தே நிமிடத்தில் சமையல் உங்களுக்காக 

fast food recipe engkal.com
fastfood recipe engkal.com

தேவையானவை:

 தினை மாவு, சாமை அரிசி மாவு (சேர்த்து) – ஒரு கப், கறுப்பு உளுந்து, பச்சைப் பயறு – தலா அரை கப், பச்சைப் பட்டாணி – அரை கப் (விழுதாக அரைக்கவும்), ஸ்லைஸாக சீவிய கேரட், வெங் காயம் – தலா அரை கப், தக்காளி – 2 (ஸ்லைஸாக சீவவும்), ஸ்லைஸாக சீவிய குடமிளகாய் – சிறிதளவு, இஞ்சி – பூண்டு – தக்காளி விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகத்தூள், கரம்மசாலாதூள் – தலா அரை டீஸ்பூன், மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், சீவிய  பனீர் – அரை கப், நறுக்கிய கேரட், வெங்காயம் – சிறிதளவு, வெண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கறுப்பு உளுந்து, பச்சைப் பயறு இரண்டையும் ஊறவிட்டு அரைத்து… தினை மாவு, சாமை அரிசி மாவு சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும்.

இதனுடன் பச்சைப் பட்டாணி விழுது, பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், நறுக்கிய கேரட், வெங்காயம் சேர்க்கவும். பிறகு, இஞ்சி – பூண்டு – தக்காளி விழுது சேர்க்கவும். மேலே மைதா தூவி, கெட்டியாக மாவு செய்து வைக்கவும்.

நான்-ஸ்டிக் பானில் வெண்ணெய் தடவி, செய்து வைத்த கலவையைப் பரப்பவும்.  

மேலே சிறிது எண்ணெய் தடவி, ஸ்லைஸாக சீவிய தக்காளி, வெங்காயம், கேரட், குடமிளகாய் ஆகியவற்றை வைத்து அழுத்தவும். சீவிய பனீரைத் தூவி லேசாக அழுத்தி… ‘பானை’ மூடியால் மூடி ‘சிம்’மில் வைத்து வேகவிடவும். வெந்த பின் தட்டில் கொட்டி ‘கட்’ செய்து பரிமாறலாம். விரும்பினால், சிறிதளவு துருவிய சீஸ் தூவிக்கொள்ளலாம்.

fastfood recipe engkal.com

தேவையானவை

 பிரெட் – 10

 மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

 பெரிய வெங்காயம் – 2

 மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

 பச்சைமிளகாய் – 3

 உப்பு – தேவையான அளவு

 துண்டுகளாக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை – சிறிதளவு

 எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்

 எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

 கடுகு – அரை டீஸ்பூன்

 உளுந்து – அரை டீஸ்பூன்

 கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்

 சீரகம் – கால் டீஸ்பூன்

 கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

முதலில் பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.

இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும்.

இறுதியாக எலுமிச்சைச்சாறு ஊற்றிக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

fastfood recipe engkal.com

தேவையானவை

 ப்ரெட் – 4 ஸ்லைஸ்

 கேரட் – ஒன்று

 பீட்ஸா சாஸ் (அ) டொமேட்டோ கெட்சப் – தேவையான அளவு

 குடைமிளகாய் – ஒன்று

 வெண்ணெய் – தேவையான அளவு

 வெங்காயம் – ஒன்று

 சீஸ் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பேனில் வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் ப்ரெட் ஸ்லைஸை போட்டு பிரட்டி எடுக்கவேண்டும் .பின்பு ப்ரெட் ஸ்லைஸில் சாஸை தடவவும்.

பிறகு துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவேண்டும் . அதன் மேல் சிகப்பு மற்றும் பச்சை குடைமிளகாயை பொடியாக நறுக்கி தூவவேண்டும் .

பின்பு நாண்ஸ்டிக் பேனில் ப்ரெட்டை வைத்து அதன் மேல் சீஸ் தூவவேண்டும் .பிறகு அடுப்பின் தணலை மிதமாக வைத்து மூடி சீஸ் உருகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் – 1 பாக்கெட்

முட்டை – 4

பூண்டு – 2 பெரிய பற்கள்

நட்சத்திர சோம்பு – 1

பச்சை மிளகாய் – 4

மிளகு தூள் – தேவையான அளவு

வினிகர் – 1 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

குடமிளகாய் – 1

வெங்காயம் – 2

கேரட் – 1

சோயா சாஸ் – 1 ஸ்பூன்

செய்முறை:

பச்சை மிளகாய், பூண்டு, குடமிளகாய், கேரட், வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் நீர் விட்டு அதில் நூடுல்ஸைப் போட்டு கொதிக்க வைக்கவும். முக்கால் பாகம் வெந்தவுடன் அதனை வடிகட்டிக் கொள்ளவும். பின்பு அதனுடன் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தனியே வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் தீயை அதிகரித்து விட்டு அதனுடன் பச்சை மிளகாய், பூண்டு நட்சத்திர சோம்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின்பு குடமிளகாய் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்னர் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.

காய்கறிகள் வதங்கியவுடன் காய்கறிகளை கடாயின் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு தீயைக் குறைத்து அதில் முட்டையை அடித்து ஊற்றவும். முட்டையை லேசாக கிளறி விடவும். முட்டை வெந்தவுடன் வினிகர், சோயா சாஸ், மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸ், மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.

பின்பு தீயை அதிகரித்து லேசாக கிளறி 2 நிமிடம் வேக வைக்கவும். சுவையான சைனீஸ் ஸ்டைல் எக் நூடுல்ஸ் தயார்.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:

அரிசி நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (500 கிராம்)

இறால் – கால் கிலோ

வெங்காயம் – ஒன்று

செலரி (நறுக்கியது) – ஒரு கப்

கேரட் – ஒன்று

வெங்காய தாள் – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் – 2 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

அஜினோ மோட்டோ – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்துக்கொள்ளவும், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவிக்கொள்ளவும். செலரி, வெங்காய இலைகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்த பின்பு அதில் நூடுல்ஸை போடவும். 5 நிமிடங்கள் வெந்தபின்பு எடுத்து நீரை வடிகட்டவும். பிறகு அதில் குளிர்ந்த நீரை ஊற்றி நன்கு அலசிவிடவும். நீர் வடிந்தபின்பு, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் அனைத்திலும் படுமாறு தடவி வைக்கவும்.

அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கிய பின்பு இறாலை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். துருவின கேரட், நறுக்கின செலரி ஆகியவற்றைப் போட்டு நன்றாக கிளறவும்.

பின்பு அதில் சோயா சாஸ் விட்டு நன்றாக கிளறவும். லேசான தீயில் அடி பிடிக்காமல் வேகவிடவும். சற்று வெந்ததும் அஜினோ மோட்டோ சேர்க்கவும். காய்கள் போட்டு அனைத்தும் வெந்தபிறகு நூடுல்ஸை உதிர்த்துப் போட்டு நன்றாக கிளறவும்.

கடைசியாக நறுக்கின வெங்காய இலை, தூவி கிளறி இறக்கவும். சுவையான சைனீஸ் இறால் நூடுல்ஸ் தயார். இவற்றை டொமாட்டோ சாஸ் உடன் சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

வெங்காயம் பொடியாக நற்க்கியது – 3 /4 கப்

 எண்ணெய் – 2  1 /2 மேசைக்கரண்டி

 முட்டை – 1  – 2 (முட்டையை லேசாக அடித்துக் கொள்ளவும்)

 சோயா சாஸ் – 1 /4 தேக்கரண்டிக்கும் குறைவாக

  நல்லெண்ணெய் -1 /4 தேக்கரண்டிக்கும் குறைவாக

  சிக்கன் எலும்பில்லாதது வேக வைத்தது  – 1  கப் (விருப்பமெனில்)

  கேரட் – 1 /2 கப்

  பட்டாணி – 1 /2 கப்

  வெங்காயத்தாழ்– 4

  முளை கட்டிய பயறு – 1 கப்

  சோயா சாஸ் – 2  மேசைக்கரண்டி

  சாதம் – 4  கப் (வேக வைத்து ஆற வைத்தது )

செய்முறை:

பாஸ்மதி அரிசியை பயன்படுத்திக் கொள்ளவும். அரிசியைக் கழுவி கடாயில் லேசாக, அரிசியின் ஈரப் பதம் வற்றும் வரை வறுத்துக் கொள்ளவும்.1  கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, ஆற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 4 – 6  மணி நேரம் வரை ஆற வைத்துக் கொள்ளவும். சாதத்தை பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். பழைய சாதம் ப்ரைடு ரைஸ்செய்வதற்கு நன்றாக இருக்கும்.

சாதம் நன்றாக ஆரினால்தான் ப்ரைடு ரைஸ் செய்வதற்கு நன்றாக இருக்கும்.கடாயில் 1  மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய  வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்.அதே கடாயில் 1 /2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடாயைச் சுற்றிலும் எண்ணெய் படருமாறு செய்யவும் , கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி கடாயைச் சுற்றிலும் படருமாறு செய்யவும். முட்டை மேலே எழும்பி வரும்போது அதை திருப்பிப் போட்டு வேக விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இல்லையெனில் கலந்து வைத்துள்ள முட்டையைக் கடாயில் ஊற்றி லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும் .

இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது, முளை கட்டிய பயறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3  நிமிடங்கள் வதக்கவும்.இதனுடன் 2  மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் நற்க்கி வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.

– 10

 மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

 பெரிய வெங்காயம் – 2

 மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

 பச்சைமிளகாய் – 3

 உப்பு – தேவையான அளவு

 துண்டுகளாக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை – சிறிதளவு

 எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்

 எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

 கடுகு – அரை டீஸ்பூன்

 உளுந்து – அரை டீஸ்பூன்

 கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்

 சீரகம் – கால் டீஸ்பூன்

 கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

முதலில் பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.

இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும்.

இறுதியாக எலுமிச்சைச்சாறு ஊற்றிக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:

அரிசி – 300 கிராம்

பூண்டு – 10 பல்

வெங்காயத்தாள் – 2

கேரட் – 2

குடை மிளகாய் – 1

எண்ணெய் – தேவையான அளவு

சோயா சாஸ் – 1 தேக்கரண்டி

வினிகர் – 1 தேக்கரண்டி

மிளகு தூள் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசியை கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அரிசியை முக்கால் பாகம் தண்ணீரில் வேகவிடவும்.

கேரட், குடை மிளகாய், வெங்காய தாள், பூண்டு ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.  

பின்னர் நறுக்கிய வெங்காயம், கேரட் மற்றும் குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

பதி வதங்கியதும் வேகவைத்த அரிசி, வெங்காய தாள், சோயா சாஸ், வினிகர், மிளகு தூள் இவற்றை எல்லாம் சேர்த்து நன்கு கலரவும். இவ்வாறு செய்தால் சுவையான கார்லிக் ப்ரைட் ரைஸ் ரெடி.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:

தோசை மாவு – ஒரு கப்

முட்டை – ஒன்று

பெரிய வெங்காயம் – ஒன்று

தக்காளி – ஒன்று

மிளகு, சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லி தழை – 2 கொத்து

பச்சை மிளகாய் – ஒன்று

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – 2 சிட்டிகை

எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை ஊற்றி சற்று தடிமனாக ஊத்தாப்பம் போல் ஊற்றவும். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி மேலே மிளகு, சீரகத் தூள், உப்பு, தூவவும்.

அதன் மேல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி வேக விடவும்.

மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

சுவையான பிட்ஸா தோசை தயார்.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி : 1 கப்
முட்டை கோஸ் : 1/4 கிலோ (பொடியதாக நீளவாக்கில் நறுக்கவும்)
கேரட் : 1 (பொடியதாக நறுக்கவும்)
வெங்காயத் தாள்: 5 (பொடியதாக நறுக்கவும்)
கொடைமிளகாய் : 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம்: 1 சிறியது ( நீளவாக்கில் நறுக்கியது)
பீன்ஸ் : 10 (பொடியதாக நறுக்கியது)
மிளகு தூள்: சிறிதளவு
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
அஜினமோட்டோ: 1 1/2 தே. கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணை 1/4 கப்
முட்டை : 2

செய்முறை:

பாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு தே. கரண்டி எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.
வெந்த பின் வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற விடவும்.உதிரி உதிரியாக இருக்க வேண்டும். முக்கால் பாகம் வெந்தால் போதும்.(முதல் நாளே செய்து ப்ரிட்ஜிலும் வைத்து விடலாம்)

முட்டையில் 2 தே.கரண்டி எண்ணை, உப்பு, மிளகு தூள் சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்.

கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம்,முட்டைகோஸ், கேரட், வெங்காயத்தாள்,குடைமிளகாய்,பீன்ஸ் ஆகியவற்றை போட்டு வதக்கி மூடி வைக்கவும். (தண்ணீர் விடக்கூடாது).

சிறிது நேரத்திற்கு பின் சோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு இவற்றை சேர்த்து கிளறி உடன் சாதத்தையும் போட்டு கிளற மூடி வைக்கவும்.

சிறிது நேரத்திற்கு பின் பொரித்த முட்டையை போட்டு கிளரி விடவும்.

சுவையான வெஜிடபில்/முட்டை ப்ரைட் ரைஸ் ரெடி.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள் :

 பாசுமதி அரிசி – அரை கிலோ

 முட்டை – ஆறு

வெங்காயம் – இரண்டு

 பச்சைமிளகாய் – நான்கு துருவிய

காரட் – ½ கப்

 குடைமிளகாய் – ½ கப் இஞ்சி,

பூண்டு நசுக்கியது – 2 டீ ஸ்பூன்

மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்

முந்திரிப் பருப்பு – 10

 உப்புத்தூள் – 2 டீ ஸ்பூன்

 கொத்தமல்லி – அரை கட்டு

 எண்ணெய் – நான்கு டேபிள் ஸ்பூன் முட்டை ப்ரைடு ரைஸ்

செய்முறை :

 முதல் பாசுமதி அரிசியை உப்பை சேர்த்து வேகவைத்து உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் அகலாமான வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி நன்கு சூடுப்படுத்தவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பிறகு மிளகாய், இஞ்சி பூண்டு அகியவற்றை போட்டு சிறிது வதக்கவும். அதை தொடர்ந்து குடைமிளகாய் போட்டு சிறிது வதக்கவும். இந்த கலவையுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி சிறு சிறு துண்டுகளாகும் வரை நன்கு கிளறவும்.

இதில் உப்புத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறவும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். அப்போது அடுப்பை வேகமாக எறிய விடவும்.நன்றாக மிக்ஸ் ஆகி வாசனை வந்த உடன் அடுப்பை நிறுத்தி விடலாம்.

இதன்மேல் முந்திரிப்பருப்பு, துருவிய காரட், கொத்தமல்லி தூவி பரிமாறவும். சத்தான சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் தயார். சாதம் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இதுபோல செய்து கொடுத்தால் ஆர்வத்துடன் சாப்பிடுவர்.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ
மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)
சோளமாவு: 1 தே. கரண்டி
முட்டை : 1
பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)
இஞ்சி : ஒரு சிறு துண்டு
டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
சில்லி சாஸ்: 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி
அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி

செய்முறை:
கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி சோயா சாஸ் ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.

ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து கிளறவும்.

 சிறிது நேரம் சென்றபின் ஒரு தே.கரண்டி சோயா சாஸ்,சில்லி சாஸ், 4 தே. கரண்டி டொமாடோ சாஸ் போட்டு கிளறிவிடவும்.

சில்லி சிக்கன் தயார். பரோட்ட, சப்பாத்திக்கு சூப்பரா இருக்குங்க.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை – அரை கப்

பால் – இரண்டு கப்

நெய் – நான்கு தேகரண்டி

முந்திரி – பத்து

சர்க்கரை – 1/3 கப் (அல்லது தேவையான அளவு)

பாதாம் – பத்து

ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை:

முதல்லி குக்கரில் கோதுமை ரவை மற்றும் பால், சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி கொள்ளவும்.பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம் சேர்த்து பொன்னிறமாக வந்தவுடன் கோதுமை ரவை கலவையை போட்டு கிளறவும். சர்க்கரை கலந்து கிளறவும்.பிறகு, நெய் ஊற்றி கிளறவும்.ஒரு தட்டில் நெய் தடவி அதில் அந்த கலவையை ஊற்றி பாதாம் துருவி மேலே துவி பரிமாரினல் கோதுமை ரவை அல்வா ரெடி 

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள் :

மைதா மாவு – ஒரு கப்

சர்க்கரை – ஒரு கப்

முட்டை – 2

காரட் துருவல் – ஒரு கப்

சோடா உப்பு – கால் தேக்கரண்டி

உருக்கிய பட்டர் – ஒரு கப்

முந்திரிப்பருப்பு – 10

ஏலப்பொடி – கால் தேக்கரண்டி

உப்பு – கால் தேக்கரண்டி

செய்முறை :

 முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.முட்டையை உடைத்து ஊற்றி கரண்டியால் அல்லது எக் பீட்டரால் நன்கு அடித்துக் கொள்ளவும்.

அதனுடன் சர்க்கரை, பட்டர் சேர்த்து கலந்துக் கொண்டு அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.மைதா, முட்டை கலவையில் முந்திரி, ஏலப்பொடி, கேரட் துருவல் ஆகியவற்றைப் போட்டு நன்றாக் கிளறி விடவும்.

கண்ணாடி பாத்திரத்தில் பட்டர் தடவி அதில் கலந்து வைத்துள்ள மாவினை ஊற்றி சமமாக பரப்பி விடவும். பிறகு அந்த பாத்திரத்தை அவனில் 350 டிகிரியில் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

பிறகு டூத் பிக்கைக் கொண்டு கேக்கில் இரண்டு மூன்று இடங்களில் குற்றி பார்த்து, ஒட்டாமல் வந்ததும் இறக்கவும்.ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு துண்டுகளாக போட்டு பரிமாறவும்

தேவையான பொருட்கள் :

சைனீஸ் மஸ்ரூம் ( உலர்ந்தது ) – 15 கிராம்

சிக்கன் ஸ்டாக் – 1 கப்

கோழி இறைச்சி – 1/4 கிலோ

நூடில்ஸ் – 100 கிராம்

ஸ்வீட் கார்ன் – 50 கிராம்

செய்முறை:

முதலில் கோழி இறைச்சியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.அகலமான பாத்திரம் ஒன்றில் சைனீஸ் மஸ்ரூம், அதில் 1 கப் சூடான தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும் வேண்டும் .

பிறகு காளான்களை வடித்து, அந்த தண்ணீரை பெரிய சாஸ்பேன் ஒன்றில் ஊற்றவும்.

பின்னர் அதனுடன் கோழி இறைச்சியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.வடித்த காளான்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பேஷனில் நூடில்ஸ், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பிறகு அதனுடன் காளான், சிக்கன் ஸ்டாக், கோழி இறைச்சி, ஸ்வீட் கார்ன் சேர்த்து கொதிக்க விடவும்.நூடில்ஸ் நன்றாக வெந்ததும் இறக்கிநல் சிக்கன் நூடில்ஸ் சூப்  ரெடி.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – அரை ௧ப்

 பச்சை பட்டாணி – 5 மேசைக்கரண்டி

பீன்ஸ் – 5

காரட் – ஒன்று

பச்சை மிளகாய் – 2

சின்ன வெங்காயம் – 5

தக்காளி – ஒன்று

மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – சிறிது

மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி

சீரகத் தூள் – அரை தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி

மல்லித் தழை – 2 மேசைக்கரண்டி

தண்ணீர் – 2 கப்

செய்முறை :

முதலில் காய்கறிகளை மிக சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும் வைக்க வேண்டும் .பிறகு மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

குக்கரில் காய்கறி கலவை, ஓட்ஸ், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சூப்பில் சேர்க்கவும். அதனுடன் மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு, மல்லித் தழை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும் வேண்டும் .

அடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.சுவையான வெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி தயார்.இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள் :

மாக்கரோனி -1 கப்

பால் – 1.5 கப்

துண்டாக்கப்பட்ட சீஸ் – 2cup

கடுகு பொடி -1 / 4 தேக்கரண்டி

மிளகுத்தூள் -1 / 4tsp

கேரட் – 1 (வெட்டப்பட்டது)

கிரீன்பீஸ் -1/4 கப் (வேகவைத்தது)

பீன்ஸ் -6 (வெட்டப்பட்டது)

எண்ணெய் – 1tbsp

உப்பு -தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் வெட்டிய வெங்காயம் ,கடுகு பொடி மற்றும் , உப்பு ஆகியவற்றை எண்ணெயுடன் சேர்த்து  அடுப்பில் வைத்து வதக்கி வையுங்கள்.

ஒரு பாத்திரத்தில்,  ஒரு கப் பால்,  கலந்து கலந்துகொண்டு,  ஏற்கனவே வதக்கப்பட்ட கடாயில் உள்ள வெங்காய வதக்களோடு வெட்டப்பட்ட கிரீன்பீஸ், பீன்ஸ் ,கேரட் மிளகாய்  துண்டுகள், ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக வதக்கி வைக்கவேண்டும்.

பிறகு அடுத்ததாக பால் கொதிக்கும் பொழுது சீஸ் துண்டுகளை போட்டு உருகும் வரை நன்றாக கொதிக்கவிடவேண்டும் , பிறகு வேகவைத்த மேக்கரோனியை போட்டு கிளறிக்கொண்டே அடுப்பை நிறுத்தி விடவேண்டும்.

கடைசியாக தேவையான அளவு மிளகு தூவி அலங்கரிப்பதர்காக மல்லி இலைகளை போட்டு சூடாக ரெடி .

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள் :

பால் – கால் லிட்டர்

சீனி – கால் கப்

ரோஸ் மில்க் எசன்ஸ் – கால் தேக்கரண்டி

ஊற வைத்த பாதாம் பிசின் – 3 மேசைக்கரண்டி

செய்முறை :

 முதலில் பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.பாதாம் பிசினில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.காலையில் எடுத்து மேலே இருக்கும் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

வேண்டும் ஆற வைத்த பாலுடன் சீனி சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

சீனி கரைந்ததும் ரோஸ் மில்க் எசன்ஸுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி கலந்து அதை பாலில் ஊற்றி நன்றாக கலக்கவும்.

பிறகு அதில் ஊற வைத்த பாதாம் பிசினை போட்டு நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து பரிமாறவும்.கோடை வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான பாதாம் பிசின் ரோஸ் மில்க் ரெடி.

passfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:

முதலில்  1 கப் மைதா மாவு, 2 கப் அரிசி மாவு, 1/4 கப் நெய், உப்பு, எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக பிசையுங்கள் (சப்பாத்தி மாவு பதம்). அதை பத்து  நிமிடத்திற்க்கு வைக்கவும். பாகு தயார் செய்ய: சர்க்கரை 1 கப். தேவையான அளவு தண்ணீர்.

 

ஒரு கடாயை எடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும். அதனுடன் 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும். இப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன பந்து மாதிரி உருட்ட வேண்டும்.பிறகு பூரியை முக்கோண வடிவில் தேய்த்து எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி) செய்து கொள்ளவும். இப்பொழுது கடாயில் எண்ணெய்யை சூடேற்றி அதில் ஒவ்வொரு பூரியாக பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். அந்த சுடச்சுட பூரியை சர்க்கரை பாகில்  நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும்.1/2 கப் துருவிய தேங்காயை அதில் மேல் தூவி பரிமாறலாம். சுவையான பாதாம் பூரி தயார்.

passfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – வேக வைத்து தோலுரித்தது

பச்சைப் பட்டாணி – 1 கப்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு

பெருங்காயம் – சிறிதளவு

பச்சை மிளகாய் – 3

இஞ்சி – ஒரு துண்டு

வெங்காயம் – 3

செய்முறை:

உருளைக்கிழங்கு நாலைந்து எடுத்து வேக விடவும். பச்சைப் பட்டாணியும் எடுக்கலாம். காய்ந்த பட்டாணி என்றால் ஊற வைத்து குக்கரில் கிழங்குடனேயே  வைத்துவிடலாம். வெந்த கிழங்கை தோல் நீக்கி மசித்து வைக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு பெருங்காயம் தாளித்து பச்சை  மிளகாய், இஞ்சி துண்டுகளையும் போட்டு வதக்கவும்.

வெங்காயம் விரும்பினால் ஒரு வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். சீக்கிரமே வெந்துவிடும். கொஞ்சம் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்தால் சுவையாக இருக்கும்.கடைசியாக வெந்து மசித்த கிழங்கை சேர்த்து உப்பு போட்டு கெட்டியாக கிளறி இறக்கவும். சிலர் எலுமிச்சம் பழச்சாறு சேர்ப்பார்கள். கலவை நன்றாக ஆற  வேண்டும். இப்போது மேல் மாவு தயார் செய்து கொள்ளலாம்.

passfood recipe engkal.com

தேவையான பொருட்கள் :

முதலில் தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் – 4 கப், லேசாக தோல் சீவி, நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் – 4 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 4 டீஸ்பூன், சர்க்கரை சிரப் – 4 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு, தர்பூசணித் துண்டுகள் (அலங்கரிக்க) – 10.

செய்முறை: தர்பூசணித் துண்டுகள், ஸ்ட்ராபெர்ரித் துண்டுகள், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சிரப் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அடிக்கவும். ஒரு கண்ணடி டம்ளரில் 2, 3 ஐஸ் கட்டிகளைப் போட்டு மேலே மிக்ஸியில் அடித்த ஜூஸை ஊற்றி, இரண்டு தர்பூசணித் துண்டுகள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

தேவையான பொருட்கள் :

மைதா மாவு -2 கப்,

வனஸ்பதி -1 1/2 டீஸ்பூன்,

சர்க்கரை-1 1/2 டீஸ்பூன்,

நறுக்கிய பூண்டு-1/2 கப்,

மிளகாய் தூள் -1 டீஸ்பூன்,

கொத்தமல்லி -2 டேபிள்ஸ்பூன்,

வெண்ணெய் அல்லது நெய் -2 டேபிள்ஸ்பூன்,

உப்பு -தேவைக்கேற்ப,

தண்ணீர் -1 1/2 கப்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், வனஸ்பதி, உப்பு, சர்க்கரை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்பு மாவை உருட்டி, சப்பாத்தி போல் வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். பின் பூண்டு, மிளகாய் தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவி தேய்த்துக் கொள்ளவும். சப்பாத்தி மாவை சேலை மடிப்பது போல் மடித்து சுற்றி, பின்பு அதை தேய்த்துக் கொள்ளவும். தவாவில் நெய் அல்லது வெண்ணெய் தடவி எடுத்தால் ரெடி .

passfood recipe engkal.com

தேவையான பொருட்கள் :

பால் – 1 கப்

முட்டை – 1

தேன் – 2 ஸ்பூன்

ஏலக்காய், பட்டை தூள் – ஒரு சிட்டிகை

மாம்பழம் – 1

வெண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை :

மாம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு கிண்ணத்தில் பால், முட்டை, தேன், ஏலக்காய், பட்டை தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பால் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.முட்டை சேர்க்க விரும்பாதவர்கள், 1 ஸ்பூன் கார்ன்ஃப்லார் (அ) கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யலாம்.தோசை கல்லில் வெண்ணெய் போட்டு ரொட்டி துண்டுகளை முட்டை கலவையில் முக்கி எடுத்து, தோசைக்கல்லில் இரு புறமும் மிதமான சூட்டில் டோஸ்ட் செய்யவும்.டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளில் நடுவில் நறுக்கிய மாம்பழ துண்டுகளை வைத்து பரிமாறவும்.

தேவையான பொருள்கள் :

சப்பாத்தி – 4

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 1

தக்காளி சாஸ் – 2 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

சிவப்பு புட் கலர் – சிறிது

மல்லித்தழை – சிறிது

உப்பு – சிறிது

எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி

செய்முறை :

சப்பாத்தி, தக்காளி, வெங்காயம் மூன்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.புட் கலரை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தக்காளி சாஸ், கரைத்து வைத்துள்ள கலர் தண்ணீர் எல்லாவற்றயும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்

passfood recipe engkal.com

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்

நெய் – 1 டேபிள்ஸ்பூன்

உப்பு – அரை டீஸ்பூன்

நெய் – எண்ணெய் கலவை – தேவையான அளவு

அரைக்க :

புதினா – 1 கைப்பிடி

கொத்தமல்லி – 1 கைப்பிடி

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 2 பல்

பச்சை மிளகாய் – 3

உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.அரைக்க எடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துகொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த விழுது, அதனுடன், நெய், உப்பு தேவையான தண்ணீர் சேர்ந்தது நன்கு மென்மையாகபிசைந்து அரை மணிநேரம் ஊறவிடவும்.பிறகு, இந்த மாவை சிறு உருண்டைகளாக பிரித்து, அதனை சப்பாத்தி கட்டையால் உருட்டி கொள்ளுங்கள்.தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்த சப்பாத்திகளை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.வாய்க்கு ருசியான கிரீன் மசாலா சப்பாத்தி தயார்.

தேவையான பொருட்கள் :

மைதா, கடலைப்பருப்பு, ஈஸ்ட் கலவையை, வறுத்த சீரகம், உப்பு, நெய்

செய்முறை :

சூடான நீரில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும். தண்ணீருடன் 2 கப் தயிர் கலந்து வைக்கவும். மைதா, கடலைப்பருப்பு, ஈஸ்ட் கலவையை, வறுத்த சீரகம், உப்பு, நெய் சேர்த்து, ஒரு ஆழமான பாத்திரத்தில் சேர்த்து தனியாக வைக்கவும். பிசைந்த மாவை 20 நிமிடங்கள் மெல்லிய துணியால் மூடி வைக்கவும். 20 நிமிடங்களுக்கு பிறகு அது நன்கு உப்பி இருக்கும். சிறிய சம பந்துகளாக மாவை பிரித்து அதை சப்பாத்தி போல் தேய்த்து நடுவில் பனீர் கலவை வைத்து மூடி மறுபடியும் சப்பாத்தி போல் தேய்த்து வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கங்களிலும் பொன்னிறமாகும் வரை வைத்துப் பின் பரிமாறவும்.