body and beauty tips engkal.com

உடலை அழகுபடுத்த உபயோகப்படுத்தும் இயற்கை பொருட்கள் !!!

பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள். தலை முதல் கால் வரை அழகாக்கும் இயற்கை மூலிகைகளை பற்றி பார்க்கலாம்.
  • நெல்லிக்காய் எண்ணெய் : நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும். இந்த வகை எண்ணெயை வாங்கி பயன்படுத்தும்போது தலைமுடிகளில் சிறந்த மாற்றங்களை காணமுடியும்.
  • கடலை மாவு : முகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் பயன்படுத்தும் மிகப் பிரபலமான பொருளாகும். இது ஸ்கிரப் முடியில் உள்ள எண்ணெயை எடுக்கவும் உபயோகப்படுகின்றது. இதை பால் அல்லது கிரீம் ஆகியவற்றில் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். இந்த பால் மற்றும் கிரீம் சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
  • மஞ்சள் : இந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.
  • குங்குமப்பூ : இந்திய மசாலா வகைகளில் குங்குமப்பூவும் ஒன்றாகும். இது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. இதை வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு தோலை கொண்டு வரவும் உதவுகின்றது.
  • ரோஸ் வாட்டர் : புதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும், அமைதிப்படுத்தவும் மற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள்.
  • சந்தனம் : சந்தனம் அழகுக்கு மட்டுமல்லாமல், மருத்துவ மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளன. சந்தன பசை மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவை இந்திய பெண்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. அது சருமப் பராமரிப்பு, எரிச்சல், படை மற்றும் பிளாக்ஹெட்ஸ்களையும் நீக்க உதவுகின்றது.
  • சீகைக்காய் : இதை முடியின் பழம் என்றும் ஆயர்வேதத்தில் கூறுவார்கள். இவை தலையில் உள்ள பொடுகை நீக்குவதிலும் தளர்ந்த வேர்களை வலுவூட்டவும் இது வல்லமை பெற்றது.
  • தயிர் : இது உண்ணும் பொருள் மட்டுமில்லாமல் இதில் உள்ள அழகு ரகசியங்கள் ஏராளம். இதை பல ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதில் பயன்படுத்தினால் முகம் பொலிவுறும்.

வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும் இயற்கை வழிகள்

beauty tips engkal.com

வெயில் காலத்தில் உங்கள் சருமத்தை இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை கொண்டு பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்

இரவில் சிறிதளவு வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் பாலக்கீரையை அரைத்து, அதனுடன் ஊறவைத்த வெந்தயத்தைச் சேர்த்து, தலை முழுவதும் அப்ளை செய்துவிட்டு குளிக்கவும். இதன்மூலம் தலை குளிர்ச்சியாக இருக்கும். 

இயற்கையாகக் கிடைக்கும் கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்களை எடுத்துக்கொள்ளவும். அதில், தக்காளி சாற்றையும் சிறிதளவு தயிரையும் சேர்த்து கலவையாக்கவும். பின்னர், அதை முகத்தில் பேக் போன்று அப்ளை செய்துவந்தால், முகப்பொலிவு ஏற்படும்.

தக்காளியை அரைத்து அதை ஐஸ்கியூப்பில் ஊற்றி, பிரிட்ஜில் வைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து, அந்தக் கட்டியை எடுத்து, முகத்தில் மசாஜ் செய்யவும். முகத்தில் உள்ள டேன் மறையும். தக்காளி சாறு இயற்கையாகவே டேன்களை நீக்கும் குணம் கொண்டது. எனவே, அதனை நார்மலாகத் தோளிலும் அப்ளை செய்யலாம். இது பயன்படுத்திய சில நாள்களிலேயே நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

beauty tips engkal.com

பயித்தம்பருப்பைச் சிறிதளவு ஊறவைக்கவும். பின்னர், அதனுடன் வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், ரோஸ் வாட்டர், சிறிதளவு காய்ச்சாத பால் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளவும். இந்தக் கலவையைச் சோப்பாகப் பயன்படுத்தலாம். தொடர்ந்து இதைப் பயன்படுத்த சரும நோய்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

வெயிலில் போகும்போது ஐஷேடோ போடுவதைக் குறைத்துக்கொள்ளவும். வியர்வையோடு சேரும்போது, அதன் ஈரப்பதம் கண்களைச் சுற்றிலும் பரவி, அழகைக் கெடுக்கும்; சருமத்தையும் பாதிக்கும். ஐ கர்லெர் மூலம் கண் இமைகளைத் திருத்தி, கண்களை அழகாகக் காட்டலாம். வாட்டர்ஃப்ரூப்பும் பயன்படுத்தலாம்.

வெயில் காலத்தில் லிப் கிளாஸ் போடக் கூடாது. ஏனெனில், இது உதடுகளை வறண்டுபோகச் செய்து, கருமை நிறத்துக்கு மாற்றிவிடும். தரமான அதிக எஸ்.பி.எஃப் ( SPF) லிப் பாம் பயன்படுத்தலாம்.

 

உங்கள் கண்கள் அழகாக தெரிய இதை செய்யுங்க

ஒருவர் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள அதிகம் கஷ்டப்படாமல் கண்களுக்கு மை தீட்டி மஸ்காரா தடவினால் போதும். அகன்று விரிந்த அந்தக் கண்கள் ஆளையே மாற்றும்.

beauty tips engkal.com

ஒருவர் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள அதிகம் கஷ்டப்படாமல் கண்களுக்கு மை தீட்டி மஸ்காரா தடவினால் போதும். அகன்று விரிந்த அந்தக் கண்கள் ஆளையே மாற்றும். தவறான ஐ மேக்கப், இருக்கும் அழகையும் கெடுத்துவிடக்கூடியது.

கண்களுக்கடியில் கருவளையங்கள் என்பவை இன்று அனேகமாக எல்லோரும் சந்திக்கிற பிரச்சனையாக இருக்கிறது. வாழ்க்கை முறை, தூக்கமின்மை, கம்ப்யூட்டர் மற்றும் டி.வியின் முன் நீண்ட நேரம் இருப்பது, சத்துக் குறைபாடு என பல காரணங்களால் இப்படிக் கருவளையங்கள் ஏற்படுகிற போது, அந்தப் பகுதி மட்டும் முகத்தின் சருமத்தோடு ஒட்டாமல் தனித்துதெரியும். 

கண்களுக்கடியில் உள்ள கருமையைப் போக்க கன்சீலர் உபயோகிக்கும் போது, ஒட்டுமொத்த சரும நிறமும் ஒரே மாதிரி மாறும். கன்சீலர் உபயோகித்த பிறகு கண்களுக்கான மேக்கப்பை ஆரம்பித்தால், கண்கள் இன்னும் அழகாகத் தெரியும். கன்சீலர் உபயோகிக்கும் போது கண்களின் ஓரங்களில் தடவ வசதியாக கார்னர் ஸ்பான்ஜ் என்பதை உபயோகித்தால்தான் கன்சீலர் சீராகப்பரவும். கன்சீலர் தடவிய பிறகு டிரான்ஸ்லூசன்ட் பவுடர் உபயோகிக்க வேண்டும்.

கண்களின் அழகை எடுத்துக் காட்டுவதில் புருவங்களுக்கு முக்கிய பங்குண்டு. புருவங்கள் சரியான ஷேப்பில் திருத்தப்பட்ட பிறகே கண்களுக்கான மேக்கப்பை தொடங்க வேண்டும். கண்கள் மற்றும் புருவங்களுக்கு சரியான வடிவத்தைக் கொடுக்கக் கூடியது இந்த பென்சில்.

ஐபென்சிலில் டார்க் பிரவுன் மற்றும் கருப்பு என 2 ஷேடுகள் முக்கியமானவை. இது பவுடர் மற்றும் கிரீம் வடிவில் கிடைக்கிறது. வேலைக்குச் செல்பவர்கள் ஹேண்ட் பேக்கில் வைத்து உபயோகிக்க எளிதான பென்சில்களாக கிடைக்கின்றன. டார்க் பிரவுன் ஷேடு உபயோகித்தால் மிக இயல்பான தோற்றம் கிடைக்கும். 

சருமத்தை பாதுகாக்கும் இயற்கை முறை பேஷியல்

 முகத்திற்கு தொடர்ந்து பழங்களைக் கொண்டு ஃபேஷியல் செய்து, திடீரென நிறுத்திவிட்டாலும் சருமத்திற்கு எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.

beauty tips engkal.com

பொதுவாகவே பழங்களில் ஆன்டி ஆக்ஸைட், நார்ச்சத்து, நீர்ச்சத்து, மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முகத்துக்குச் சிறந்த பலனையும், பாதுகாப்பையும் தரும். தொடர்ந்து பழங்களைக் கொண்டு ஃபேஷியல் செய்து, திடீரென நிறுத்திவிட்டாலும் எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. இன்று என்னென்ன பழங்களைக்கொண்டு ஃபேஷியல் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஆப்பிள் பாதி, சிறிது அவகோடோ பழம் இவற்றை நன்றாக மசித்து மூன்று டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அரை மணி நேரம் வைத்திருந்து, அதன் பிறகு கழுவ வேண்டும். இது முகத்தில் எண்ணெய் வடிவதைக் கட்டுபடுத்தும். ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதால், முகம் எப்போதும் பிரகாசமாக மின்னும்.

வாழைப்பழத்துடன், 2 டீஸ்பூன் தேன், கெட்டியான தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். முகத்தில் தடவி 20 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸைடு முகத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கும்.

beauty tips engkal.com

திருமணம் மற்றும் விசேஷங்களுக்குச் செல்லும்போது, பப்பாளி ஃபேஷியல் செய்துகொள்வது பெஸ்ட். பப்பாளிப்பழக் கூழ், வாழைப்பழக் கூழ், ஒரு கேரட், மூன்று ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்து பிறகு அலசலாம். காலை முதல் மாலை வரை பளிச்சென முகம் பிரகாசமாக இருக்கும்.

ஆரஞ்சு பழத்தில் உள்ள சிட்ரிக் ஆசிட் முகத்துக்குப் பளபளப்பை உண்டாக்கும். வெறும் ஆரஞ்சு சாற்றை மட்டும் ஒரு பஞ்சினால் தொட்டு முகத்தில் தடவினால் போதும். முகத்தில் உள்ள கருமை மறைந்து, ஒரே மாதிரியான சீரான நிறத்தைத் தரும். மூக்கின் மேல் வரும் வெள்ளை, கருப்பு புள்ளிகளைச் சரிப்படுத்தும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றைச் சேர்த்து முகம் முழுவதும் தடவி, 10 நிமிடம் வைத்திருந்து கழுவவும். நன்கு காய்வதற்கு முன்பு எடுத்துவிடவேண்டும். ப்ளீச் செய்தது போல் முகம் பளிச்செனக் கோதுமை நிறமாக மாறும்.

 

உங்களின் உதட்டினை சுற்றியுள்ள கருமையைப் போக்க சில வழிகள்

beauty tips engkal.com

முதலில் எலுமிச்சை சாறு  எடுத்து கொள்ள வேண்டும் அது சருமத்தை ப்ளீச் செய்வதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வு,  ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும் வேண்டும்.

ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து உங்கள் உதடுகளைச் சுற்றி தடவி வரவும் உதட்டை சுற்றியுள்ள கருமையைப் போக்க மற்றொரு சிறந்த முறையாகும்.

ஒரு சிறு கிண்ணத்தில் சிறிதளவு சந்தனத்தூள் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, இவை இரண்டையும் சிறிதளவு பன்னீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்டை உதடுகளை சுற்றி தடவவும். அரை மணி நேரம் கழித்து அல்லது காய்ந்தவுடன் தண்ணீரால்  கழுவவும்.

ஓட்ஸ், தக்காளி சாறு, மற்றும் ஆலிவ் எண்ணெய். நன்றாகக் கலந்து, முகத்தில் ஒரு மாஸ்க் போல் தடவவும். சில நிமிடங்கள் கழித்து முகத்தில் நீர் தெளித்து ஸ்க்ரப் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.

இந்த முறைகளை பின்பற்றினால்  உங்கள் உதட்டின் கருமை  சுலபமாக நீங்கிவிடும்.

குளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு முறை

beauty tips engkal.com

குளிர்காலத்தில் முடி வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழைச் சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும்.

மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம். இதனால்,  முடியின் ஈரத்தன்மை வலுவடையும்.எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து வெயில் காலத்தில் ஊறவிடுவதை விட குறைந்த நேரம் மட்டுமே ஊறவிட வேண்டும்.தலையில், அதிக நேரம், எண்ணெயை ஊறவிட்டால், அதனால், உடல் நலன் பாதிக்கப்படலாம்.

அதே போல், மூலிகை சாறுகள் ஏதாவது தலையில் தேய்ப்பதாக இருந்தாலும், அவற்றையும் அதிக நேரம் ஊற விடக் கூடாது. மூலிகை சாறுகள் பெரும்பாலும் குளிர்ச்சி தருபவை, அவை வெயில் காலத்திற்கே உகந்தது.

குளிர்காலத்தில், கூந்தலை ப்ரீ ஹேர் விடுவதை தவிர்த்து, பின்னுவது அல்லது கொண்டை போடுவது ஆகியவற்றை செய்யலாம். இதனால், குளிர்ந்த காற்றால் கூந்தல் வறண்டு போவது தடுக்கப்படும்.

தினமும், உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையும், நம் முடி பராமரிப்பிற்கு மிகவும் உதவும்.

கண்களில் கருவளையம் வரமால் இருக்க

beauty tips engkal.com

வீட்டிலே சரி செய்யும் முறை

நாம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் கலப்படமின்றி தரமானதாக இருக்க வேண்டும்.   அப்போதுதான் அதன் முழுப் பயன்பாடும் நமக்கு பலன் தரும். நாம் உணவில் பயன்படுத்தும் வெந்தயத்தில் ஒருவிதமான ரசாயனத் தன்மை உள்ளது.

எனவே வெந்தயத்தை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துநன்றாக அரைத்துக்கொண்டு, நமது கண்களை நன்றாக கழுவி சுத்தம்  செய்துவிட்டு, கண்களை மூடிய பிறகு கண்களின்  மேல் பேக் மாதிரி போட வேண்டும். 20 நிமிடம் கழித்து கழுவி  சுத்தம் செய்துவிடலாம். இந்த முறையை இரண்டு  நாளைக்கு ஒருமுறை செய்தால் கண்ணிலிருக்கும் கருவளையம்  மறையத் துவங்கும்.

அரைத்த வெந்தயத்தோடு கஸ்தூரி மஞ்சள், காய்ச்சாத பால் இவற்றையும் சேர்த்து கண்ணில் பேக் போடலாம்.   அப்போது நம் கண்களில் இருக்கும் சோர்வும் சேர்ந்தே குறைந்து கண்களில் புத்துணர்ச்சி கூடும்.

கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு சின்னச் சின்ன சிலைஸ்களாக எடுத்துக் கொண்டு அத்தோடு மிக்ஸியில்   பொடியாக்கப்பட்ட சர்க்கரை மற்றும் தேன் இவற்றை இணைத்து கண்களைச் சுற்றி தடவ வேண்டும். இதில் தூள்   செய்யப்பட்ட சர்க்கரை நல்ல ஸ்க்ரப்பராக செயல்பட்டு முகத்தில் இருக்கும் டெட் செல்களை நீக்கும்.

தேன் கண்களுக்கு   கீழே இருக்கும் முகச் சுருக்கத்தை குறைக்கும். முகத்தை கழுவிய பிறகு நம் முகத்தில் உள்ள தோல் மென்மைத்   தன்மை அடைவதுடன் முகம் மிகவும் பொலிவடைந்து பளபளப்பாக இருக்கும்.

ஃப்ரெஸ்ஸான உருளைக் கிழங்கு, வெள்ளரி இவற்றை சிலைஸ்களாக எடுத்து கண்களைச் சுற்றி தடவ வேண்டும்.  

இதில் உருளைக் கிழங்கிற்கு கண் மற்றும் கழுத்தில் இருக்கும் கருவளையத்தை போக்கும் சக்தி நிறைந்து இருக்கிறது.   அதேபோல் தக்காளியினை மசித்து எடுத்து அதையும் கண்களைச் சுற்றியும் முகத்திலும் பேக் போட்டுக் கொள்ளலாம்.

முகத்தை ஸ்டீம் செய்து கொள்ள வேண்டும். அப்போது முகத்தின் தோலில் உள்ள கண்ணிற்குத் தெரியாத துளைகள்   திறந்து கொள்ளும். முகத்தில் ரோஸ் வாட்டரை அப்ளை பண்ண வேண்டும்.

அதன் பிறகு ஜாதிக்காயினை பொடியாக்கி,   மிகவும் மெதுவாக, சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் முறையில் இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்தி கண்களைச்   சுற்றி ஸ்க்ரப் பண்ண வேண்டும். அப்போது கண்களின் கீழுள்ள கருவளையத்தில் உள்ள டெட் செல்கள் வெளியேறும்.   பிறகு வெள்ளரியினை நன்றாக அரைத்து அதை தடவி கண்ணைச் சுற்றி மசாஜ் கொடுக்க வேண்டும்.

ஊற வைத்த மூன்று பாதாமை அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து கண்களை டிஷ்யூ பேப்பர் கொண்டு   மூடிவிட்டு கண்ணைச் சுற்றி பேக் போட வேண்டும். 20 நிமிடம் கழித்து எடுத்துவிட்டால் கண்ணில் உள்ள கருவளையம்   கட்டாயமாக நீங்கிவிடும்.

தாமரை மலரின் இதழ் மற்றும் ஆலுவேரா ஜெல் இரண்டையும் எடுத்து நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து அந்தக்   கலவையினை ஃப்ரீசர் பாக்ஸில் உள்ள ஐஸ் ட்ரேயில் உறைய வைக்க வேண்டும். உறைந்த பிறகு அதை எடுத்து ஒரு   டவலில் வைத்து கட்டி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்ணைச் சுற்றி வைத்து ஒத்தடம் கொடுத்தால் கருவளையம்   மறைவதுடன், தாமரை மலர் பார்வையின் திறனை அதிகரிக்கச் செய்யும்.

குறைந்தது 10 டம்ளர் தண்ணீரையாவது தினமும் அருந்த வேண்டும். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தண்ணீரை   குடித்தல் கூடாது. நமக்கு தாகம் எடுக்கும் உணர்வு தோன்றும்போது மட்டும் தண்ணீரை தவறாமல் பருக வேண்டும்.தோலுக்கு தேவையான விட்டமின் கே, சி, இ அதிகம் நிறைந்த பழம், காய்கறிகளை அதிகம் உணவில்  எடுத்துக்கொள்ள வேண்டும்.

சூரிய ஒளி காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் நம் தோல்களில் படச் செய்தல்  வேண்டும்.பைட்டோதெரபி(phytotheraphy) முறையில் அழகு நிலையங்களிலும் கருவளையத்தை நீக்க  வழிமுறைகள்  உள்ளது. இதில் அரோமா ஆயில் பயன்படுத்தப்படுகிறது.

அரோமா ஆயில் என்பது மரிக்கொழுந்து,  செம்பருத்தி பூ,  வெந்தயம் இவற்றில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இவற்றை இணைத்து கண்ணைச் சுற்றி  தடவி மசாஜ்  தருவார்கள். இதன் மூலமாகவும் 70 சதவிகிதம்வரை கருவளையத்தை நீக்கிவிட முடியும். இதை  இரண்டு முறை  தொடர்ந்து இடைவெளி விட்டு எடுத்துக் கொண்டால் கருவளையத்திற்கு குட் பை சொல்லலாம்.

நாம் முகத்தில் உள்ள சுருக்கத்தை போக்க சில வழிகள்

beauty tips engkal.com

உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது நெற்றியில் உள்ள சுருக்கத்தை, கண்களை சுற்றி தோன்றும் கோடுகளை, கன்னம் தொய்வடைந்து இருப்பதை, கழுத்தில் உள்ள சுருக்கங்களை எல்லாம் கண்டு ஒரு நிமிடமாவது மனம் கலங்கி இருப்பீர்கள்.

இதெல்லாம் வயதாவதால் வருகிறது… நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று வருத்தத்துடனும் கடந்திருப்பீர்கள். இனி அதுபோல் நீங்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை.

ஒருவரின் முகத்தில் மிகவும் முக்கியமானது கண்கள். எத்தனைதான் ஒருவர் அழகாக இருந்தாலும் அவருடைய கண்கள் பொலிவாக இல்லையென்றால், முகம் களையிழந்துதான் காணப்படும்.இதுபோல் ஒருவர் முதுமையடைவதை முதலில் எடுத்துச் சொல்வது கண்களைச் சுற்றியுள்ள தோல் மற்றும் நெற்றியின் தோல் பகுதிகள்தான்.

இவ்விரண்டு பகுதியின் தோல் பராமரிப்பு ஒருவரின் முக அழகுக்கு மிகவும் அவசியம். இப்பகுதியில் இருக்கும் தோல் சுருங்குவதற்கு நம்முடைய மரபணுக்களே முக்கிய காரணம்.

இதுதவிர அடிக்கடி மாறும் முக பாவனைகள், கண்களுக்கு அடியில் உள்ள எலும்பின் தேய்மானம், தோலின் அடியில் உள்ள இணைப்பு திசுக்கள் சுருங்கி போவது, புவியீர்ப்பு விசை, உணவுப் பழக்க வழக்கங்கள், வெயிலினால் ஏற்படும் தோல் சேதம் மற்றும் புகைப்பழக்கமும் காரணங்களாகின்றன.

பொதுவாக நெற்றி மற்றும் கண்களைச் சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் தோலானது, முகத்தின் மற்ற பகுதிகளை விட மெலிதாக இருக்கும். வயதாகும்போது நெற்றியிலும், கன்னங்களிலும் தடிமனாக மாறும். ஆனால், கண்களைச் சுற்றியுள்ள இடங்களில் மிகவும் மெலிந்துவிடும்.

அது மட்டுமில்லாமல் தோலின் அடியில் உள்ள திசுக்கள் சுருங்கி விடுவதால் அடியில் உள்ள எலும்பும், தசையும் நன்றாக தெரிய ஆரம்பிக்கும். கண்களைச் சுற்றி பல முக்கிய தசைகள் உள்ளன. அதில் Orbicularis Oculi என்று அழைக்கப்படும் தசையானது கண்களை திறந்து மூட மிகவும் அவசியம்.

ஒரு தசை வேலை செய்ய நரம்புகளில் Acetylcholine என்ற பொருள் வேண்டும். இந்த Acetylcholine நரம்புகளிலிருந்து வெளியேறி நரம்பும் தசையும் சேருமிடத்தில் சேர்ந்தால்தான் தசை வேலை செய்ய முடியும். இந்த Botulinum toxin-ஐ ஊசியின் மூலம் கொஞ்சம், கொஞ்சமாக அதிகப்படியாக வேலை செய்யும் தசைகளில் செலுத்தும்போது, அந்த தசையின் வேலை சில மாதங்களுக்கு (4-6 மாதங்கள்) நிறுத்தப்படும்.

எனவே, இதை பயன்படுத்தி கண்களின் பக்கவாட்டில் உருவாகும் Crow’s feet, நெற்றியில் தோன்றும் Frontal lines அல்லது புருவங்களுக்கு நடுவில் தோன்றும் Glabellar frown lines ஆகியவைகளை சில மாதங்களிலேயே தேவையான அளவு குறைத்துவிடலாம்.

அந்தக் கோடுகளை முற்றிலுமாக நீக்கிவிட்டால் முகம் இயற்கையாக உள்ளதுபோல் இல்லாமல், இஸ்திரி பெட்டியால் தேய்த்த முகம் போல் Frozen Look-ல் இருக்கும். அதை யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால்தான் குறைத்து விடலாம் என்கிறேன்.

‘ஒரு முறை மட்டும் போட்டுக் கொண்டேன். பின்பு என்னால் அந்த இன்ஜெக்‌ஷனை போட்டு கொள்ள முடியவில்லை. அதனால் ஏதேனும் தொந்தரவு ஏற்படுமா, கோடுகள் அதிகம் உருவாகுமா’ என்று கேள்வி கேட்டால், ‘அப்படி இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு எப்போதும் என்ன ஏற்படுமோ, அந்த சுருக்கங்கள்தான் ஏற்படுமே தவிர இந்த இன்ஜெக்‌ஷனை போட்டு நிறுத்தியதால் கூடுதலாக சுருக்கங்கள் ஏற்பட்டு விடாது.

ஒழுங்கான தூக்கம், சரியான உணவு பழக்கம் மிக முக்கியம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அலர்ஜியால் தும்மல் அடிக்கடி ஏற்படும் தன்மை உடையவர்கள், அரிப்பு ஏற்பட்டு கண்களை அடிக்கடி தேய்த்தால் கூட கண்ணைச் சுற்றி கருவளையம் ஏற்படும்.

ஒரு சிலருக்கு முக அமைப்பில் கண்கள் உள்ளடங்கி காணப்பட்டால் புருவத்தில் உள்ள எலும்பின் நிழல் கண் இமை மீது பட்டு கருப்பாக தெரியும்.

அவர்களை நன்றாக கவனித்துப் பார்த்து முகத்தை கொஞ்சம் தூக்கி காண்பிக்கச் சொன்னால் அந்த கருப்பு மறைந்துவிடும். அந்த நிழலால் உண்டாகும் கருப்புக்கு எந்த வைத்தியமும் உதவாது.

ஒவ்வொரு இரவும் தூங்க செல்லும் முன் மேக்கப்பை நன்றாக கழுவி விட வேண்டும். மாய்சரைசர்களை கண் இமை மேல் உபயோகிக்க வேண்டும்.

செல்போன்களை அதிக நேரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றை கடைபிடிப்பதால் கண்களைச் சுற்றியுள்ள தோலை பேணிக் காக்கலாம். கண்களைச்சுற்றி மற்றும் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்து விரைவில் வயதான தோற்றம் உருவாவதிலிருந்து தப்பிக்கலாம்.

உங்கள் பற்கள் மஞ்சளாக உள்ளதா அப்போ இதை ட்ரை பண்ணுங்க

beauty tips engkal.com

உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்க உங்கள் பற்கள் மஞ்சளாக இருக்கா என பல்வேறு விளம்பரங்களை பார்த்திருப்போம். விளம்பரங்களை நம்பி நம் பற்க்களை பாதுகாக்க பல்வேறு முயற்சி செய்து, போதும்டா சாமின்னு வெறுத்துக் கூட போயிருப்போம்.

இதற்காக நீங்கள் அதிக காசு செலவு செய்து உங்கள் பற்களை பாதுகாக்க வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களே போது உங்கள பற்களை பளிச்சிட வைக்க.

நம் தாத்தா பாட்டிகள் சாம்பல் கரி கொண்டு பற்களை துலக்கி வந்தார்கள், அதை பார்த்தால் ச்சீ என்று சொல்வீர்கள் ஆனால் அவர்கள் பற்கள் சுத்தமாக, வெள்ளையாக வலுவாகா இருக்கும். இந்த சாம்பல் கரியை அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்ட்டுடன் சேர்த்து துலக்கினால் உங்கள் பற்களும் வெள்ளையாக, வலுவாக மாறும்.

பேஸ்ட்டில் சிறிது உப்பு சேர்த்து தினமும் 2 முறை பல் துலக்கினால் பற்களில் உள்ள கறை நீங்கும், இந்த் உப்புக்களை அதிகமாக பயன்படுத்தினால் உங்கள் பற்களின் எனார்மல் பாதிக்கப்படும் எனவே உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும்.

பற்களில் உள்ள மஞ்சள் நிற கறையை நீக்க இரவு தூங்க போகும் முன்பு ஆரஞ்சு பழத்தின் தோலை பற்களில் நன்றாக தேய்த்து, அடுத்த நாள் காலையில் பற்களை கழுவ வேண்டும்.

ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள வைட்டமின் சி மற்றும் கால்சியம் உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கி, பற்களின் வலிமையை அதிகரிக்கும்.

எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து பற்களை தேய்த்து 2 நிமிடம் ஊற வைத்து, பின்பு பற்களை நன்கு கழுவ வேண்டும்.

இதனை தொடர்ந்து 2 வாரங்களுக்கு 2 முறை செய்து வந்தால் பற்கள் வெண்மையாகும். இதற்க்கு காரணம் எலுமிச்சையில் இயற்கையாகவே உள்ள ப்ளீச்சிங் தன்மையாகும்.

ஆப்பிள், கேரட், வெள்ளரிக்காய் ஆகியவையும் பற்களை வெண்மையாக வைத்திருக்க உதவும், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல பற்களும் பளிச்சிடும்.

வியர்வையில் இருந்து விடுபட மூலிகை குளியல்

beauty tips engkal.com

சமகால மக்களுக்கு ஆயுர்வேத குளியல் முறை சற்று வித்தியாசமாக இருக்கக்கூடும்.ஆனால் இயற்கை குளியலை மிக எளிமையாக நாம்  தயார்படுத்தி பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.

உடல் செயல் இயக்கத்தால்  ஏற்படும் வெப்பத்தை தணிக்க தினமும் அதிகாலையில் குளிப்பது நல்லது.

நாம் அன்றாட குளியலை உடலில் உள்ள மாசுக்களை நீக்குவதற்கு மட்டும்  இல்லாமல், வெயில் காலங்களில் ஏற்படும், வியர்வை மற்றும் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்திலிருந்தும் விடுபடும் வகையில் மூலிகை குளியல்  செய்வது நல்ல பலன் தரும்.

ஆயுர்வேத முறையில் கொடுக்கப்பட்டுள்ள சில எளிய மூலிகை குளியல் பற்றி பார்ப்போம்.

மண் குளியல், சூரிய குளியல், மழைநீர் குளியல், சாம்பல் குளியல் போன்றவை மூலிகை குளியலாக கடைபிடிக்கப்படுகிறது.

பொதுவாக இந்த  குளியல் நோயுற்றவர்களுக்கு சிகிச்சையாக இருக்கிறது. வெயில் காலங்களில் உடலில் வியர்வை காரணமாக ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து  பாதுகாத்துக்கொள்ள மூலிகை குளியலை நாம் கடைபிடிக்கலாம். வியர்வையைப் போக்கும் மூலிகைக் குளியல்.

வாகைப்பூ அல்லது அதனுடைய  இலை, திருநாகப்பூ, பாச்சோத்திப் பட்டை, மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு நன்றாக இடித்து நன்றாக கொதிக்க வைத்து அந்த நீர் ஆறியபிறகு  குளிக்கலாம். இந்த குளியல் உடலில் ஏற்படும் அதிக வியர்வையை போக்கும்.

லவங்கப் பட்டை, பாச்சோத்தி, கடுக்காய், சந்தன மேல் பட்டை ஆகிய நான்கையும் ஒன்றாக இடித்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஆறிய  பிறகு குளிக்கலாம்.

இது வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். பன்னீர் ரோஜா இதழ்களை பூக்கள் மூழ்கும் வரை தேங்காய் எண்ணெய்  கலந்து சூரிய ஒளியில் சில நாட்கள் வைக்க வேண்டும்.

ரோஜாப் பூ இதழ்கள் ச‌ருகு போல் ஆனவுடன் எண்ணெயை வடிகட்டி தேய்த்து குளித்து வர  அதிக வியர்வை, வேர்க்குரு போன்ற பிரச்சனைகள் தீரும். கற்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், பன்னீர் ரோஜா கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி  குளித்தால் உடலில் உள்ள மாசுக்கள் நீங்கி உடல் சுறுசுறுப்பு அடையும். வேப்பிலை, வேப்பம் பட்டை போன்றவையும் குளியலுக்கு  பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாசிப்பயறு, ரோஜா, ஆவாராம் பூ, வெட்டி வேர் போன்றவற்றை நன்றாக அரைத்து தேய்த்து குளிக்கலாம். சளித் தொல்லை, சைனஸ் உள்ளவர்கள்  மேற்கண்ட மூலிகைக் குளியலை இப்படி செய்ய வேண்டும்-இளஞ்சூடாக மூலிகை நீரை எடுத்து துணியால் தொட்டு உடலை துடைத்துக்கொள்ளலாம்,  இதன் மூலம் வியர்வையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

காய்ச்சல், வயிற்று போக்கு உள்ளவர்கள் மேற்கண்ட  குளியலை மேற்கொள்ள கூடாது. இயற்கை குளியல் மேற்கொள்கிறவர்கள் சில உணவு முறைகளை தவிர்ப்பது நல்லது.

மாமிச உணவு, அதிக காரம்,  அதிக உப்பு, நார்ச்சத்து இல்லாத மலச் சிக்கலை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கவேண்டும்” என்கிறார் ஆயுர்வேத மருத்துவர்