mugaparu neenga engkal.com

என்ன பண்ணினாலும் கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா?... இதசெய்ங்க போயிடும்...

உங்கள் முகத்தில் கரும்புள்ளி உள்ளதா? கரும்புள்ளியை விரைவில் அகற்ற முயற்சிப்பவர்கள் தவறாமல் இந்த பதிவை படியுங்கள். கரும்புள்ளி வர காரணம் மெலனின் ஆக்ஸிடேஷன்.கரும்புள்ளி பெரும்பாலும் முகத்திலும் கழுத்திலும் காணப்படும். மேலும், முகத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருந்தால் கரும்புள்ளி வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் கரும்புள்ளிகளை விரைவாக அகற்ற சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம்.

ஓட்ஸ்

beuty tips engkal.com

இரண்டு தேக்கரண்டி தக்காளிச்சாறு, ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இரண்டு முதல் நான்கு டீஸ்பூன் உப்பு கொண்டு பேஸ்ட் தயாரித்துக் கொள்ளவும். தயாரித்த பேஸ்ட்டை பத்து நிமிடம் முகத்தில் மெதுவாக தடவி, பின்னர் அதை கழுவவும். மாற்றாக, மூன்று தேக்கரண்டி தயிர், சிறிதளவு பிரெஷ் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய், மற்றும் இரண்டு டீஸ்பூன் ஓட்மீல் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். பிறகு கலந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் போட்டு சுமார் பத்து நிமிடம் கழித்து கழுவவும். மேலும், நீங்கள் ஓட்ஸ் மற்றும் ரோஸ்வாட்டர் கொண்டு பேஸ்ட் தயாரித்து அதையும் பயன்படுத்தலாம்.

 

பாதாம்

beuty tips engkal.com

ஃபேஸ் ஸ்க்ரப் நொறுக்கப்பட்ட பாதாம் மற்றும் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து அதை கொண்டு முகத்தை ஸ்க்ரப் செய்யவும். அதேபோல் கரும்புள்ளிகள், முகப்பரு தழும்புகள் ஆகியவை மிகத் தீவிரமாக இருப்பவர்கள், பாதாமை தண்ணீரில் ஊறவைத்து சிறிது பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர மாசு மருவற்ற சருமத்தைப் பெற முடியும்.

பேக்கிங்

beuty tips engkal.com

 சோடா இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் தயாரித்துக் கொள்ளவும். பிறகு அதை கொண்டு மெதுவாக பாதிக்கப்பட்ட பகுதியை மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் முகத்தை காயவைத்து பின்னர் மிதமான தண்ணீரில் முகத்தை அலம்பவேண்டும். கரும்புள்ளி முற்றிலும் போகும் வரை இதை வாரத்திற்கு 2 தடவை செய்யவேண்டும்.

எப்சம் உப்பு

beuty tips engkal.com

சூடான தண்ணீரில் அயோடின் மற்றும் ஒரு டீஸ்பூன் எப்சாம் உப்பு சேர்க்கவும். தண்ணீர் குளிர்ந்த பின்னர் சிறிதளவு பஞ்சை எடுத்து தண்ணீரில் நனைத்து அதை கரும்புள்ளி இருக்கும் இடத்தில் மெதுவாக அப்ளை பண்ணவும். அது காய்ந்த பிறகு, அதை கவனமாக அகற்றவும்.

முட்டை

beuty tips engkal.com

முட்டையும் ஒரு வித எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியத்தில் ஒன்று. ஒரு ஸ்பூன் ஹனி மற்றும் முட்டை வெள்ளை கரு சேர்த்து நன்கு கலக்கி அந்த கலவையை கரும்புள்ளி உள்ள இடத்தில் போட்டு 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

சர்க்கரை

beauty tips engkal.com

 சர்க்கரை கொண்டும் கரும்புள்ளியை அகற்றலாம் . அதற்கு சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் மட்டும் பூசி வர வேண்டும். அதேபோல் தக்காளியை இரண்டாக வெட்டி, அதில் சர்க்கரையைத் தோய்த்து முகத்தில் நன்கு ஸ்கிரப் போல தேய்த்து பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வர வேண்டும்.

எலுமிச்சை

beauty tips engkal.com

கரும்புள்ளியை நீக்க எலுமிச்சை சாறு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். ஃப்ரெஷ் எலுமிச்சை சாறு, உப்பு, தயிர் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து ஸ்க்ரப் தயாரித்து அதைக்கொண்டு முகத்தை ஸ்க்ரப் செய்யவும். எலுமிச்சையைப் பயன்படுத்தும்போது, சிலருக்கு முகத்தில் உள்ள பருக்களில் சிட்ரிக் அமிலம் எரிச்சரை ஏற்படுத்தும். அப்படி இருப்பவர்கள் இரண்டு துளிகள் நீரை எலுமிச்சை சாறோடு சேர்த்துக் கொண்டால் எரிச்சல் வராது.

Close Menu