beauty tips engkal.com

நரைமுடியே போக்க சில வழிகள்

நமது அழகில் மிகவும் முக்கியமானது எது என்றால் அது கூந்தல் அழகு தான். அதிலும் கருகருவென அலைபாயும் கூந்தல் என்றால் போதும் உங்கள் அழகை பலமடங்கு கூட்டியே காட்டும். அழகை மட்டும் இல்லாமல் உங்கள் இளமையையும் சேர்த்து தான். அப்படிப்பட்ட நிலையில் இளம் வயதிலேயே உங்கள் கூந்தலை நரைக்க விடலாமா? இந்த இளநரையை நீங்கள் எவ்வளவு தான் மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணானது தான் மிச்சமாக இருக்கும். செயற்கை கலரிங் செய்வதன் மூலமாக பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைகள் அப்படி இல்லை நிரந்தர பலனுடன் பக்கவிளைவுகள் இல்லாத பரிசை கொடுக்கும்.
beuty tips engkal.com

ஹேர் டானிக்

கறிவேப்பிலை உங்கள் சமையலை மட்டும் மணமாக்க போவதில்லை. உங்கள் கூந்தலையும் நிறமாக்க போகிறது. உண்மையை சொல்ல போனால் இது இயற்கை கொடுத்த வரம். கறிவேப்பிலை உங்கள் உணவுகளில் தொடர்ச்சியாக சேர்த்து வந்தாலே போதும் உங்கள் கூந்தல் கருகருவென அலைபாயும். அப்படியொரு சிறந்த கூந்தல் டானிக்கையை  தயாரித்து ஸ்டோர் செய்து கூட நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து கொள்ளுங்கள். அதை நன்றாக கொதிக்க விடவும். உங்கள் தேங்காய் எண்ணெய் உறைந்து இருந்தால் முதலில் அதை உருக்கி விட்டு பிறகு கறிவேப்பிலை சேர்த்து சூடுபடுத்தவும்

கறிவேப்பிலை கருப்பு கலரில் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். இந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து கொள்ளவும்.

இந்த ஆயிலை தினமும் தூங்குவதற்கு முன் உங்கள் கூந்தலில் தேய்த்து நன்றாக மயிர்க்கால்களில் படும் படி 15-20 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் கூந்தலை அலசி விடுங்கள். இதை 3 மாதத்திற்கு செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

வெந்தயம்

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி இரவு முழுவதும் ஊற வைத்து , மறுநாள் காலையில்  கூந்தலை அலசி வந்தால், நரை முடி மறையும்.

நெய்

நெய் கூட வெள்ளை முடியை மறைக்க வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படிநன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருந்தாலும்  இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்கமுடியும்.

மிளகு

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும்.இதன் மூலம் கூட  வெள்ளை முடி மறையும்.

ப்ளாக் டீ

1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்துகலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்துவருவதால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.

Close Menu