
ஆண்களுக்கான அழகு குறிப்புக்கள்...
ஆண்களுக்கான அழகு பேஸ் மாஸ்க்

பெண்களை விட ஆண்களுக்குத்தான் வெளியில் அலைச்சல் அதிகம். அதிலும் மார்கெட்டிங் வேலைக்கு செல்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கவேண்டியது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்துவிடும். எனவே முக அழகை புத்துணர்ச்சியோடு பாதுகாக்க வீட்டிலேயே பேஸ் மாஸ்க் போடலாம்.
வெள்ளரிக்காய் மாஸ்க்
வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தில் இருக்கும் இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளிந்த நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்.

தேன், முட்டை:
தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. ஆப்பிள் சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.

தக்காளி பழம்
தக்காளி பழ மாஸ்க் ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது. நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.

வேப்பிலை மாஸ்க்
வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும். ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செலவில்லாத பேஸ் மாஸ்க் இது வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம். வெயில் காலத்திற்கு ஏற்றது.

முன்னந்தலையில் அதிகமாக முடி கொட்டுகிறதா.... அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக!!!!!!

பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த பிரச்சனை இருந்தாலும், ஒரு சில ஆண்களுக்கு முன் பக்கக் தலைமுடி அதிகமாக கொட்டுவதால் வழுக்கை ஏற்படும் வாய்ப்புகள் தோன்றுகிறது. ஆண்களின் பொதுவான வழுக்கை பிரச்சனையுடன் தொடர்புடைய ஒரு வகை முடி இழப்பாகத்தான் முன் பக்க வழுக்கையும் பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த முன் பக்க வழுக்கையை ஃபிரண்டல் ஃபைபரோசிங் அலோப்ஸி (frontal fibrosing alopecia (FFA)) என்றும் கூறுகின்றனர். வழுக்கை தொடர்பான பிரச்சனைகள் ஒருவரின் முக தோற்றத்தை பாதிப்பதால் ஆண்கள் ஒரு வித தர்மசங்கடங்களை அடைகின்றனர்.
இதனால் அவர்களின் தன்னம்பிக்கையும் பாதிக்கப்படுகிறது. தலையின் முன் பக்க வழுக்கை என்பது முடி கொட்டுதலின் முதல் நிலை ஆகும். உங்கள் முடி மெலிதாக மாறுவதற்கான முதல் அறிகுறி என்றும் எடுத்துக் கொள்ளலாம்
பொதுவாக முடி இழப்பிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை, உடலியல் மற்றும் உளவியல் மன அழுத்தம், தவறான முடி பராமரிப்பு , ஹார்மோன் மாற்றம், உச்சந்தலையில் தொற்று, நோய் மற்றும் மருந்துகள் முதலியன முடி இழப்பை ஏற்படுத்தும். இருந்தாலும் உடல் மற்றும் உச்சந்தலையில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மரபணு காரணிகள், ஆண்களின் வழுக்கைக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் சரியான வாழ்க்கை முறையை பராமரிப்பது, ஆரோக்கியமான உணவுகள் மற்றும் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது போன்றவை இயற்கையாகவே முடி இழப்பு பிரச்சனைக்கு உதவும்.
நோயெதிர்ப்பு மண்டலத்தை உயர்த்துவது மற்றும் நோயைக் கட்டுப்படுத்துவது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு துணை புரியும். .சூடான முடி சிகிச்சைகள், ஸ்டைலிங் கருவிகள், இரசாயனங்கள் மற்றும் மன அழுத்தம் மற்றும் இறுக்கமான ஹேர் ஸ்டைலிங் ஆகியவற்றை தவிர்க்கவும். இவை இயற்கையாகவே முன் பக்க தலைமுடியை உதிரச் செய்யும்.
உடலின் ஹார்மோன் அளவு சீராகவும் சம அளவிலும் பராமரிக்கப்பட வேண்டும். மருந்துகள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலமாக முன் பக்க தலை முடி இழப்பை கட்டுப்படுத்தலாம்.
பிநஸ்டேரைட் எனும் மாத்திரை, ஒரு நாளைக்கு ஒன்று எடுத்துக் கொள்வதால் முடி இழப்பு முற்றிலும் தடுக்கப்படுகிறது. , மேலும் புதிய முடி வளர்ச்சியும் அதிகரிக்கிறது. இந்த மாத்திரையை எடுத்துக் கொண்ட நான்கு மாதத்தில் நல்ல விளைவுகள் ஏற்படுகிறது.. மேலும் இரண்டு ஆண்டுகளில் முழு முடி வளர்ச்சி ஏற்படுகிறது.