உங்கள் நோய் எளிதில் குணமடைய இதை உபயோகிக்கலாம்

elithil kunamadiya engkal.com

உங்களுடைய நோய் இயற்கையான முறையில் குணமாக இதோ!!!

உங்கள் உடலை இயற்கையாக பாதுகாக்க சித்த மருத்துவம்

elithil kunamadiya engkal.com

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்

இடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு…

கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப்பொருள். கிராமங்களில்  அதிகமாக  இது  கிடைக்கும்.

கொள்ளுரசம் வைத்துகுடிக்க இடுப்பு வலி பறந்துபோகும். 
உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.

அரை தம்ளர் தண்ணீரில் ஒரு கரண்டி அளவு ஓமம் சேர்த்து அதில் 100 மிலி  தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி  கொள்ள வேண்டும்.பிறகு அவற்றுடன் கற்பூரப் பொடியை சேர்த்து இளஞ்சூடாக இருக்கும் போது தேய்க்க வேண்டும்.

முருங்கைப் பட்டை, சுக்கு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து மேலே பூச வலி போகும்.

நல்லெண்ணையில் மருதாணி இலையை போட்டு காய்ச்சி பூசவும்

பூண்டை போட்டு காய்ச்சிய வேப்பெண்ணை தடவவும்.

பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறு கலந்து தடவவும்.

விழுதி இலையை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் நல்லெண்ணையை கலந்து 5 மி.லி வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.

 

elithil kunamadiya engkal.com

கால் வலி அதிகமாக உள்ளதா

இன்றைய காலகட்டத்தில் உடலில் பல வலிகள் வருகின்றன. அதற்கு முக்கிய காரணம், நல்ல ஊட்டச்சத்துக்கள் இருக்கும் உணவுகளை உண்ணாமல் இருப்பதே ஆகும். அவ்வாறு உண்ணாமல் இருப்பதால் உடலைத் தாங்குகின்ற கால்கள் வலுவிழந்து, சோர்வடைந்து வலிகள் ஏற்படுகின்றன. மேலும் பெண்களுக்கே இத்தகைய வலிகள் அதிகம் வருகின்றன.

அதற்கு காரணம், அவர்கள் அணியும் செருப்புகள். ஏனெனில் செருப்புகள் அணியும் போது அதிகமான உயரம் கொண்ட செருப்புகளை அணிவதால் இடுப்பு வலிகளோடு, கால் வலிகளும் வருகின்றன. ஆகவே அத்தகைய கால் வலி மற்றும் கால்களில் அலுப்பு போன்றவற்றை நீக்க ஈஸியான சில வழிகள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

ஒரு வாளியில் வெழவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது உப்பை போட்டு, கால்களை நீரில் மூழ்கி இருக்குமாறு 15-20 நிமிடம் வைக்கவும். இதனால் கால்களானது வலி இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை, ஒரு கப் வெதுவெதுப்பான நீருடன் குடிக்க வேண்டும். அது விரைவில் கால் வலி மற்றும் கால் சோர்வை குணப்படுத்தும்.

உண்ணும் உணவில் அதிகமான அளவு கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ போன்றவற்றை சேர்த்து உண்ண வேண்டும். அதிலும் இதனை சரியான அளவு உண்டு வந்தால், கால் வலி வராமல் இருக்கும்.

elithil kunamadiya engkal.com

உடலினுள் உள்ள உட்காயங்களை சரிசெய்ய

சில சமயங்களில் உட்காயங்கள் சுறுசுறுப்புடன் இல்லாமை அல்லது அளவுக்கு அதிகமான மன அழுத்தத்துடன் இருப்பது போன்றவற்றாலும் ஏற்படும். உணவு அலர்ஜிகூட உட்காயங்களை ஏற்படுத்தும். உடலில் ஏற்படும் உட்காயங்களை மருந்து மாத்திரைகள் மூலம் மட்டுமின்றி, நமது சில இந்திய பாரம்பரிய வைத்தியங்களின் மூலம் வெற்றிகரமாக சரிசெய்ய முடியும். ஒருவேளை ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் மருந்துகள் எடுக்க வேண்டியிருந்தால், தவறாமல் எடுங்கள். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பழங்கால வைத்தியங்களையும் பின்பற்றலாம்.

தூக்கம்

தூக்கத்தின் மூலம் தான் உடல் தன்னைத்தானே சரிசெய்யும். ஒருவர் போதுமான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், உடல் தன்னைத்தானே சரிசெய்யும் நேரம் கிடைக்காமல் போகும். இதன் விளைவாக உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக செயல்பட வேண்டியிருக்கும். இதனால் உடலினுள் காயங்கள் அதிகரிக்கும். எனவே உங்கள் உடலில் உட்காயங்கள் ஏற்படாமல் இருக்கநினைத்தால், தினமும் 7-8மணிநேரதூக்கத்தைத் தவறாமல் மேற்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி

 உடற்பயிற்சிகளை ஒருவர் அன்றாடம் செய்துவந்தால், உட்காயங்களைக் குறைக்கலாம். அதற்கு கடுமையான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும் என்பதில்லை. மென்மையான மற்றும் எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே, உட்காயங்களின் அளவைக் குறைக்கமுடியும். ஆகவே நீச்சல், யோகா போன்றவற்றை தினமும் செய்யுங்கள்.

elithil kunamadiya engkal.com

கண் நோய்களில் இருந்து விடுபட

பாகல் இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் 10  மிளகைச் சேர்த்து மைப் போல அரைத்து இரவு உறங்க செல்லும் முன்பாக கண்களை சுற்றிக் கனமாகப் பூசவேண்டும். பின்பு காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு குறையும்.

அறிகுறிகள்:

கண் பார்வை மங்கலாக காணப்படுதல்.

மாலைக் கண் நோய்.

கண் பார்வை தெளிவாக

சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

கோடைகாலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தின் காரணமாக  கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

இதற்கு முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, சீரகப்பொடி, உப்பு – கால் டம்ளர் முள்ளங்கி சாறு, சம அளவு தக்காளி சாறு மற்றும் வெள்ளரி சாறுடன் கால் ஸ்பூன் சீரகப் பொடி, சிறிது சமயல் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வாரம் இருமுறை குடித்து வந்தால் கண் எரிச்சல், கண்ணில் ஏற்படும் சிவப்பு தன்மை, மற்றும் உடல் குளிர்ச்சி அடையும்.

வெந்நீரில் உப்பை போட்டு, அந்த நீரை பஞ்சில் தோய்த்து, கண்களின் மேல் வைத்தால், கிருமிகள் அழிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

சீரக தண்ணீரை கொதிக்க வைத்து தினமும் இருமுறை கழுவ, வலியையும், சிவப்பு தன்மையையும் மற்றும் எரிச்சலையும் நீக்கும்.

ielithil kunamadiya engkal.com

வாய்வு பிரச்சனை உள்ளதா

இன்றய காலங்களில் நம் உடலில் முக்கியமாக நமது வயிற்றில் கேஸ் என அழைக்கப்படும் வாய்வு சேர்வதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.உண்ணும் உணவில் உள்ள சில ஜீரணமாகாத வாய்வுதான் பெரும்பாலான ஆண்களுக்கு தொப்பையை உண்டாக்குகிறது.

மேலும், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால், வயிற்றில் வாய்வு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஆனால், நாம் முயன்றால் அதை சுலபமாக போக்க முடியும்.

 பிறகு எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை உண்டு வந்தாலே இந்த வாய்பு பிரச்சனை என்பது அறவே வராது. எனவே, துரித உணவுகள், பரோட்டா உள்ளிட கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதேபோல், சிலர் ஒரு நாளைக்கு அதிகமான பழச்சாறு மற்றும் குளிர்பானங்களை குடிப்பதாலும் உடலில் கேஸ் சேரும். எனவே, அதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல், அவசர அவசரமாக சாப்பிடும் போதும், பேசிக் கொண்டே சாப்பிடும் போதும், காபி,டி உள்ளிட்ட பானங்களை குடிக்கும் போது நம்மை அறியாமலே காற்றை விழுங்கி விடுகிறோம். இப்படியும் நம் உடலுக்குள் வாய்வு செல்கிறது. ஆனால் அந்த வாய்வு ஏப்பம் மூலமாகவுவும், ஆசன வாய்வு மூலமாகவும் வெளியேறும். ஆனால், உடலியேயே தங்கி விட்டால் அது வாயு பிடிப்பாக மாறிவிடும் வேண்டும் .

வாயுவை கட்டுப்படுத்த எண்ணெய் உள்ள உணவு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். ஆவியில் வெந்த உணவுகளை உண்ண வேண்டும். தினமும் நடைபயிற்சி, நாளொக்கொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் மற்றும் வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா, மது, புகைப்பழக்கம் ஆகியவற்றை தவிர்த்தாலே வாயு நம்மை  எந்தவிதமான தொந்தரவு செய்யாது.

ielithil kunamadiya engkal.com

தூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நீங்க

ஆல்கஹாலை எடுத்து கொள்ளும்போது அது இரத்த அழுத்த அளவை தற்காலிகமாக சட்டென்று உயர்த்தும். காபியில் உள்ள காப்ஃபைன், தற்காலிகமாக இரத்த  அழுத்தத்தை அதிகரிக்கும்.

ஏற்கனவே இரத்த அழுத்தம் இருந்தால், குறிப்பிட்ட சில உணவுகளில் இருந்து விலகி இருப்பதே நல்லது.

இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, இதயமானது மிகவும் சிரமப்பட்டு இரத்தத்தை அழுத்தும். இப்படியே நீண்ட நாட்கள் இதயம் கஷ்டப்பட்டு இரத்தத்தை உறுப்புக்களுக்கு அழுத்தத்தினால், இதயம் அதிகமாக வேலை செய்ததால் விரைவில் பாதிக்கப்பட்டு, இதய பிரச்சனைகளை சந்திக்க  வேண்டியிருக்கும்.

அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த குழாய்களில் கொழுப்புக்களைப் படிய வைத்து, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, உடலில் கொழுப்புக்கள் அதிகரித்தால், அது உடல் பருமனை அதிகரிக்கும்

ielithil kunamadiya engkal.com

கருப்பைக் கோளாறுகளை தீர்க்க

கருப்பைக் கோளாறுகளுக்கு புடலங்காய்  சாப்பிடுவதால்  நல்ல தீர்வு கிடைக்கும் அதல் சில வகை    புடலங்காய் உள்ளது . புடலங்காயில் இளத்தல், கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்புடல் என பல வகைகள் உள்ளது. இவற்றில் கொத்துப்புடல் மட்டுமே உணவாகப்  பயன்படுகிறது.

புடலங்காயில் அதிக அளவு நார்சத்தினைக் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் நார்சத்தானது ஊட்டச்சத்துக்களை உட்கிரகிக்க தூண்டுகிறது. மேலும் இக்காய் மலச்சிக்கலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

பின்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் புடலங்காயை கசாயம் வைத்து இரவில் குடிக்க காய்ச்சல் சரியாகும். புடலங்காயானது சுவாச பாதையில் உள்ள சளியினை  நீக்கி சுவாச பாதையை சீரமைக்க உதவுகிறது. மேலும் இக்காய் சளி அழற்சி எதிர்ப்பு பண்பினை கொண்டது. அடர்த்தியான முடியை பெற ஊட்டச்சத்துக்கள்  நிறைந்த புடலங்காய் அதிகம் சாப்பிடலாம்.

ielithil kunamadiya engkal.com

ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க

நாம் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க தினமும்  கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால்  நல்லது  அதில் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது.

இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.

 பின்பு கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்படும் .

அதன் பிறகு நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.

 

ielithil kunamadiya engkal.com

நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்க்கு

நாம் மாதுளம் பூவை  தினமும் பசும்பாலில் வேக வைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

தாது பலம் பெறும்.பின்பு நமது உடலில் இரத்தம் அசுத்தமானால் உடலில் பலவகையான நோய்கள் நீக்கும் .இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை கூட்டி, ஹீமோ குளோபின் அளவை சீர் செய்யவும் மாதுளம் பூ சிறந்த மருந்தக  பயன்படுகிறது .

உடல் நன்கு பலப்பட மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும்.மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடையும் உடலும் புத்துணர்வு பெறும்.

இல்லையென்றால் காலையில் நான்கு மாதுளம் பூவைத் தின்று சிறிது பால் பருகவும் தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டுவர ரத்த சுத்தி கிடைக்கும்.

அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றம் கொள்கிறது. இதனால் வயிற்றுக் கடுப்பு உண்டாகிறது. இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்துவது நல்லது.மாதவிலக்கு நிற்கும் காலமான மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு அதிக மன உளைச்சல் உண்டாகும்.

கை, கால், இடுப்பு மூட்டுக்களில் வலி உண்டாகும். இவர்கள் மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளைஞம் அருந்தி வந்தால் இப்பிரச்சனைகள் நீங்கும். அதுபோல வெள்ளைபடுதல் குணமாகும்.

பெண்களுக்கு கருப்பை நன்கு வருவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும். ஆண்களுக்கு மாதுளை பூவை காயவைத்து பொடி செய்து அதனுடன் அருகம்புல் பொடி கலந்து தேனில் குழைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.

மாதுளம் பூக்களை நைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர்விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துக் கலக்கி வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவும்.

ielithil kunamadiya engkal.com

முகம் வெள்ளையாக இருப்பதற்கு

தினமும் சிவப்பு சந்தனத்தை முகத்திற்கு பயன்படுத்துவதால் கேரள பெண்களின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா அவர்கள் தங்கள் முகத்திற்கு தினமும் சிவப்பு சந்தனத்தைப் பயன்படுத்துவது தான்.

சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. 

எனவே இவற்றைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க சிவப்பு சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டுமென்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான சருமம் உங்கள் சருமம் ஆரோக்கியமான முறையில் காட்சியளிக்க வேண்டுமானால், சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம்.

அச்செயலை சிவப்பு சந்தனம் சிறப்பாக செய்யும். எனவே 1-2 டீஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடியை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தினமும் முகம், கை, கால்களுக்கு தடவி வர, உங்கள் சருமம் நன்கு ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.

அதிகப்படியான எண்ணெய் பசை நீங்க

அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும் சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும்.

அத்தகையவர்கள் அந்த எண்ணெய் பசையை நீக்க, 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடியில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து, எண்ணெய் பசை நீங்கும்.

ielithil kunamadiya engkal.com

எளிதில் மூக்கடைப்பு குணமாக

ஒருவருக்கு சளி ஏற்படும் போது கூடவே மூக்கடைப்பும் தொற்றிக் கொள்கிறது. மூக்கடைப்பு ஏற்படும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அது எரிச்சலை உண்டாகும். சளியிலிருந்து விடுபட்டால் மூக்கடைப்பு தானாக சரியாகிவிடும். மூக்கடைப்பிற்கு வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே நிவாரணம் பெறலாம்.

மூக்கடைப்பு குணமாக வேப்ப இலை, தேன் மருந்து வேப்ப இலையை மையாக அரைத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறு உருண்டை உண்டு வர வேண்டும். இதனை உண்ட பின்பு ஒரு மணி நேரத்திற்கு வேறு எந்த உணவையும் எடுத்துக் கொள்ள கூடாது.

வேப்ப இலை செரிக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இதனை வாழ் நாள் முழுதும் பின்பற்றலாம். இதனால் மூக்கடைபை உண்டாகும் அலர்ஜி மட்டுமல்லாமல் எல்லா விதமான அலர்ஜியும் சரியாகி விடும். வயிற்றில் உள்ள கிருமிகளையும் நீக்கும்.

பின்பு மிளகு, தேன் மருந்து 10 அல்லது 12 மிளகாய் இரவில் இரண்டு ஸ்பூன் தேனில் ஊற வைக்க வேண்டும். காலையில் அதை சாப்பிட வேண்டும். மிளகை நன்கு மென்று சாப்பிடுவது நலம். இதன் மூலம் மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் பெறலாம்.

வினிகர் ஆவி பிடித்தல் மூக்கடைப்பு ஏற்படும் போது உடனடி நிவாரணம் பெற ஆவி பிடிக்க வேண்டும். மூக்கு ஒழுகுதலும் கட்டுப்படும். அரை வாளி நீரில் 2 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து ஆவி பிடித்தால் நல்ல பலனைப் பெறலாம்.

இஞ்சி டீ மருந்து

இஞ்சு சாறு கலந்த டீ குடிப்பதன் மூலம் மூக்கடைபில் இருந்து விடுபடலாம்.சுடு நீர் குளியல் மூலம் மூக்கடைபை நீக்குதல்.மூக்கடைப்பு ஏற்படும் போது சுடு நீரில் ஒரு குளியல் போட்டால் மூக்கடைப்பு தானாக சரியாகி விடும்.

தண்ணீர் மற்றும் உப்பு வைத்தே நிவாரணம் இரண்டு கப் வெது வெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து அதில் ஒரு துளியை மூக்கில் விட்டால் மூக்கடைப்பு குணமாகும்.

மூக்கடைப்பு நீங்க வெங்காயம் மருந்து

ஒருவருக்கு சளி ஏற்படும் போது கூடவே மூக்கடைப்பும் தொற்றிக் கொள்கிறது. மூக்கடைப்பு ஏற்படும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அது எரிச்சலை உண்டாகும்.

சளியிலிருந்து விடுபட்டால் மூக்கடைப்பு தானாக சரியாகிவிடும். மூக்கடைப்பிற்கு வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே நிவாரணம் பெறலாம்.

மூக்கடைப்பு குணமாக வேப்ப இலை, தேன் மருந்து வேப்ப இலையை மையாக அரைத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறு உருண்டை உண்டு வர வேண்டும். இதனை உண்ட பின்பு ஒரு மணி நேரத்திற்கு வேறு எந்த உணவையும் எடுத்துக் கொள்ள கூடாது.

வேப்ப இலை செரிக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இதனை வாழ் நாள் முழுதும் பின்பற்றலாம்.

இதனால் மூக்கடைபை உண்டாகும் அலர்ஜி மட்டுமல்லாமல் எல்லா விதமான அலர்ஜியும் சரியாகி விடும். வயிற்றில் உள்ள கிருமிகளையும் நீக்கும்.

 

ielithil kunamadiya engkal.com

ஒற்றை தலைவலி குணமடைய

உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும்  ஒற்றைத் தலைவலி – மைக்ரோன் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும்.

குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது.

இந்த ஒற்றைத் தலைவலியை தூண்டி விடும் காரணிகளை கண்டறிந்து தடுப்பது என்பது ஓர் முடியாத காரியம். உங்களை அறியாமலே, ஒற்றை தலைவலியானது உங்களை ஆட்கொண்டு, நேரம் செல்லச் செல்ல அதிகரிப்பதை நீங்கள் சில சமயங்களில் உணரலாம்.

பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.

  1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.
  2. கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் காய்ந்துவிட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.
  3. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.
  4. அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.
  5. 200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு, 8. 100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு ஆகிய கலவைகளின் சாறுகளை சம அளவு எடுத்து தினமும் பருக வேண்டும்.
  6. வாசனை எண்ணெய்யால் தலைக்கு ஒத்தடம் தரலாம். தேய்த்து விடலாம்.

 

Close Menu