சிறு தனியா பயன்களும் அதன் நன்மைகளும்!!

ஒவ்வொரு சிறுதானியமும் ஒரு  தனித்தனி மணத்தினையும், சுவையையும்  கொண்டுள்ளது. நம் முன்னோர்கள் “உணவே மருந்து” என்று உண்ணும் உணவிலேயே சத்துக்களையும் ,நோய்க்கான மருத்துத்தையும் பெற்றனர். ஆனால் இன்று அதிவேகத்தில் வளர்ந்து வரும் நவீன காலத்தில் நாம் மட்டுமல்லாது நம்முடைய குழந்தைகளும், இளைஞர்களும் மருந்தே உணவு என்ற நிலைக்கு ஆளாகிவிட்டனர். இதற்குக் காரணம் நாகரீகம் என்ற பெயரில் நாம் பின்பற்றி வரும் வெளிநாட்டுக் கலாச்சாரமும் உணவு முறைகளுமே ஆகும்.

thaniya vagaigal engkal.com
thaniya vagaigal engkal.com
சிறுதானிய வகைகள் மற்றும் பயன்கள்

குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவை சிறு தானிய உணவுகளாகும். இவை  அதிகமான ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. இந்த சிறுதானிய உணவுகள் உங்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

சிறுதானியங்களில் அதிக அளவு இருப்புச்சத்து உள்ளது.  இது இரத்தசோகையைக் குணப்படுத்த உதவும் சிறந்த உணவாகும். சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை தினமும்  உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகளை வலுவடையச் செய்யும்.

சிறுதானியங்களை நாம் உணவில் சேர்த்து கொள்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் மற்றும் பயனை பற்றி  பார்க்கலாம்.

 

utta sathu engkal.com

ஊட்டச்சத்து

உடல் செயல்பாடுகளுக்கு தேவையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் இந்த சிறுதானியங்களில் அதிகளவு நிறைந்துள்ளன.

இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைப்படும் இரும்புச்சத்து அதிக  அளவில் உள்ளன. சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது.

இந்தத் தாதுக்கள் அனைத்து தாவர ஊட்டச்சத்துடன் சேரும் போது அனைத்து வகையான நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும் எதிராக ஒரு பாதுகாப்பை உடலில் தரும்.

narsathu engkal.com

நார்ச்சத்து

சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது . எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது.

நார்ச்சத்து அதிகமுள்ள உணவினை உட்கொள்ளுவதன் மூலம் பித்தப்பையில் கற்கள் வருவது

தடுக்கலாம்.  குடல்களில் உணவு செல்லும் காலத்தை எளிதில் கரையாத நார்ச்சத்து அதிகப்படுத்துகிறது. மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாகுவதற்குக் காரணமான பித்த அமிலங்களின் சுரப்பைக் குறைக்கிறது.

நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவினை உண்ணாதவர்களுடன், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை உண்பவர்களுடன் ஒப்பிடும் போது, நார்ச்சத்து உண்பவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத அளவு  பித்தப்பை கற்கள் உருவாவது குறைக்கப்படுவதாகப் பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வைட்டமின் ‘பி’

சிறுதானியகளில் உள்ள விட்டமின் பி, கார்போஹைட்ரைடுகள் மற்றும் கொழுப்புகளை ஆற்றலாக மாற்றம் செய்ய உதவியாக உள்ளது. இது இரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டீன் அளவையும் குறைக்க உதவுகிறது. 

இவ்வாறு குறைப்பதன் மூலம் கொழுப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொழுப்புக் கட்டியாக மாறுவதும், கொழுப்புகள் உடலிலேயே தங்குவதும் தடுக்கப்படுகிறது.

நியாசின் இரத்த ஓட்டத்தின் போது கொழுப்பு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கிறது.

thaniya vagaikal engkal.com

உடல் எடையை குறைக்க

சிறுதானியங்களில் இருக்கும் டிரிப்டோபான் எனும்  அமினோ அமிலமானது, பசியின்மையை குறைத்து, உங்களது எடையை பராமரிக்க  பயன்படுகிறது. 

இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் இது அடிக்கடி பசியாவதை தடுப்பதன் மூலமாக அதிகமாக சாப்பிடுவதையும் கட்டுப்பாட்டில் வைத்து நீங்கள் எடையை குறைக்க உதவும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த சிறுதானிய உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க  விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தங்களின் முக்கிய உணவில் ஒன்றாகச் சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

thaniya vagaikal engkal.com

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க

சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்த சிறுதானியங்கள் கோலன் புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்க உதவி செய்கிறது.

 லிக்னைன் (Lignan) எனப்படுவது சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாற்றுகிறது.

இவ்வாறு மாற்றப்படும் லிக்னைன் மார்பகப் புற்று நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உண்மையில் சிறுதானியங்களை உட்கொள்வது மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்திலுருந்தும் 50% சதவீதம் குறைக்கலாம்.

தூக்கமின்மை

சிறுதானியங்களில் உள்ள டிரிப்டோபேன் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் செரோபோனின் அளவை அதிகப்படுத்துகிறது. சிறுதானியங்கள் தூக்கமின்மை குறைபாட்டினால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது.

தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் இரவில் ஒரு டம்ளர் அளவு சிறுதானியங்களை கொண்டு செய்யப்பட்ட கஞ்சிகளை குடிக்கலாம். அல்லது இரவில் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக நிம்மதியான ஆழந்த தூக்கத்தை பெறலாம்.

அதிக அளவு பாஸ்பரஸ்

சிறுதானியங்களில் பாஸ்பரஸின் அளவு அதிகமாக உள்ளது. பாஸ்பரஸ் உடலில் உள்ள  செல்களின் வடிவத்தைக் கட்டமைக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள பாஸ்பரஸ் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும்.

பாஸ்பரஸ் உடலின் அத்தியாவசியமான லிப்பிடு (Lipid) கூட்டமிப்பினைக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக உயிரணு சவ்வுகள் மற்றும் நரம்பு மண்டல அமைப்பு போன்றவைக்கு  பாஸ்பரஸ் என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது.சிறுதானியங்களில் ஏதேனும் ஒன்றை உட்கொண்டால் ஒரு நாளைக்கு தேவைப்படும் பாஸ்பரஸின் அளவில் 17 சதவீதத்தினை பூர்த்தி செய்கிறது.

சிறுதானியங்களை பயன்படுத்துவதால்  சருமத்திற்கு கிடைக்கும் நன்மை முதுமையை தவிர்க்க

 சிறுதானியத்தை  உணவில் எடுத்துக் கொள்ளும் போது மன அழுத்தத்தை எதிர்த்துப் போரடுகின்றன. மேலும் உடலில்  உள்ள தேவையற்ற தீவிரமானவற்றை நடுநிலையாக உதவுகின்றன.

இவை சரும செல்களுக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுக்காக்க  உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள யூபிகயிணோன் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைப்பதற்காக அழுகுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

சரும நிறத்தை அதிகரிக்க

சிறுதானியங்களில் உள்ள விட்டமின் ஈ  சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. இந்த சிறுதானியங்களை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உங்களது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தலாம். அதுமட்டுமின்றி வெளியில் செல்வதால், சூரியக்கதிர்கள் உங்கள் மீது பட்டு உண்டாகும் பாதிப்புகளில் இருந்து உங்களது சருமத்தை பாதுகாக்கிறது.

சிறுதானியங்களில் உள்ள அதிகப்படியான வைட்டமின்-ஈ யினால் தோலின் நிறத்தை அதிகரிக்க உதவும்.

முகப்பருவினைக் குறைக்கிறது

சிறுதானியங்கள் உடலில் ஓடும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் இதனால் உங்கள் சருமத்தில் முகப்பருக்களை வருவதை தடுக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் வரும் சுருக்கங்களை சரி செய்யவும், தடுக்கவும் உதவியாக உள்ளது.

இளநரையைத் தடுக்கிறது

இளம் வயதிலேயே முடி நரைப்பது அல்லது செம்பட்டையாக மாறுவது சிசுக்களில் ஏற்படும் ஆக்ஸினனேற்றம் மூலம் நடைபெறுகிறது. சிறுதானியங்களில் உள்ள சக்தி வாய்ந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் (Antioxidants) திசுக்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கின்றன. இதன்மூலம் விரைவில் முதிர்ச்சி அடைந்து முடிகள் நரைப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன. இதனால் சிறுதானியங்களை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவது நல்லது.

முடி உதிர்வதைக் கட்டுப்படுத்துகிறது

மன அழுத்தம் உடலில் கார்டிசோல்  அளவினை அதிகரிக்கிறது. இவ்வாறு கார்டிசோல் அதிகரிப்பதால் முடி அதிக அளவில் உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உடலில் உள்ள கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலம் முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படுகிறது.

உச்சந்தலையில் ஏற்படும் வீக்கம், அரிப்பு மற்றும் வழுக்கை ஏற்படுவதைத் தடுக்க

சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உச்சந்தலையின் வீக்கத்தினைக் குறைப்பதன் மூலம் உச்சந்தலையின் நிலைகளான அக்ஸிமா, தடிப்பு தோல் அழற்சி  மற்றும் பொடுகு (Dandruff) போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது.

முன்கூட்டியே வழுக்கை ஏற்படுவதிலிருந்தும் விடுபடச் சிறுதானியங்கள் நன்மை அளிக்கின்றன. சிறுதானியங்களை தொடர்ந்து உண்பது வளர்சிதை மாற்ற நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடவும், உடல்நலக் குறைவின் காரணமாக இளம் வயதிலேயே வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.

Close Menu