beauty tips engkal.com
beauty tips engkal.com

பாரம்பரிய மருத்துவம்

 • ஆஸ்துமா
 • சக்கரை நோய்
 • புற்றுநோய்

ஆஸ்துமா

இன்றிய காலகட்டத்தில்  நாம் சுவாசிக்கும்  காற்று பெரும்பாலும்  விஷமாகத்தான்  இருக்கிறது , காற்றில்  வாகன  புகையும்  , தேவையில்லாத புகையும்  காற்றில்  நிரம்பி  இருக்கிறது ,இந்த நிலைமையில் சுத்தமான  காற்றை எப்படி சுவாசிப்பது ??  சாதாரண  மனிதருகளுக்க சுவாசிப்பதில் பல  கஷ்டங்கள்  இருக்கும்போது , ஆஸ்துமா  நோயல் கஷ்டப்படுபவரிகளுக்கு இந்த சூழ்நிலையை எதிர் கொள்வதற்க்கு சில மருத்துவ குறிப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்துமாவை அடியோடு விரட்டும் நஞ்சறுப்பான் மூலிகை!!

ashthuma kunamadaiya engkal.com

ஆஸ்துமாவை ஒடுக்கும் நஞ்சறுப்பான் மூலிகை

 • நஞ்சுமுறிச்சான் கொடி என்ற பெயர்களில் அழைக்கப்படும் நஞ்சறுப்பான் மூலிகைக்கு, காகித்தம் எனும் வினோத பெயரும், உண்டு.
 • ஆஸ்துமாட்டிகா எனும் இதன் தாவரபெயரே, இந்த மூலிகை, ஆஸ்துமாவுக்கு மருந்தாக செயல்படுவதைக் குறிக்கும்.
 • நஞ்சறுப்பான் கொடியின் இலைகள் விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.
 • நஞ்சறுப்பான் பச்சை வேரின் சாறு, ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சிறப்பு மருந்தாகிறது. இலைகளும் வேரும், உடலில் உள்ள நச்சுக்களை வியர்வையின் மூலம் வெளியேற்றும்.
 • நெஞ்சில் உள்ள சளியை குணப்படுத்தும் தமிழகத்தின் பெரும்பாலான மலைகள் பகுதிகளில்  மற்றும் புஞ்சை நிலங்களில்,மரங்களைச் சுற்றிப் படரும் கொடிவகையைச் சேர்ந்ததுதான், நஞ்சறுப்பான் மூலிகை.
 • தண்டின் எதிரெதிர் அடுக்குகளில், உருளை வடிவமுடையதாக இருக்கும் , இதன் வேர்களில் அதிக சதை பகுதி காணப்படும்.
 • நஞ்சறுப்பான் மூலிகையின் வேரை கொதிக்கவைத்து காய்ச்சிய சாறு, பயன்படுத்தினால் சுவாசப்பாதையின்  அழற்சியைக் கட்டுப்படுத்துகிறது.
 • நஞ்சறுப்பான் வேர் வாந்தியை ஏற்படுத்தும் தன்மையை உடையதால் , நெஞ்சிலுள்ள சளி, வாந்தியின்மூலம் வெளியேறி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் சரியாகிறது.
avvi pidithal asuthuma engkal.com

மூலிகை ஆவி பிடித்தல்

 • நஞ்சறுப்பான் இலை, நொச்சியிலை, கர்ப்பூரவல்லி இலை இவற்றை சிறிதளவு எடுத்து, ஆறு டம்ளர் நீரில் நன்கு காய்ச்சி, அந்த சூட்டில், துவைத்த பருத்தி விரிப்பை எடுத்து, தலை மற்றும் உடல் முழுதும் மூடிக்கொண்டு, நீரிலுள்ள மூலிகைகளின் வாசனையை ஆழமாக உள்ளிழுத்து சுவாசித்து, முகம், மார்பு பகுதிகளில் மூலிகை ஆவி படுமாறு செய்தல், சளியால் ஏற்பட்ட தலை பாரம், தலை வலி, உடல் வலி, இருமல் மற்றும் இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கி, உடல் புத்துணரிவு பெரும்.
 • விஷங்களை முறிக்கும் தன்மை கொண்ட . நஞ்சறுப்பான் இலைகளை அம்மியில் அரைத்து, ஒரு நெல்லிக்கனி அளவு விழுங்கவைக்க, விஷங்கள் வெளியேறும். விஷக்கடிபட்ட இடத்திலும் நஞ்சறுப்பான் இலைச்சாற்றை தடவலாம். நஞ்சறுப்பான் இலைகள், வேர்களைத்தூளாக்கி, சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தேனில் கலந்து சாப்பிட்டால் , விஷங்கள்வெளியேறிவிடும்.
verru asuthuma engkal.com

நஞ்சறுப்பான் வேர்

 • நஞ்சறுப்பான் வேர் தைலமாக கூட பயன்படுத்தலாம் ,நஞ்சறுப்பான் வேரை அரைத்து அதை நல்லெண்ணையில் கலந்து, நன்கு சூடாக்கி, ஆறியபின் வடித்து, தலையில் தேய்த்து நன்கு ஊறியபின் தலைகுளித்துவர, தலையில் ஏற்பட்ட குடைச்சல் மற்றும் வேதனை சரியாகும்  நஞ்சறுப்பான் மூலிகை.
 • நோயெதிர்ப்பு ஆற்றலை அளிக்கும், நோயெதிர்ப்பு சக்தி உடலில் குறைவாகஇருத்தல் , சிலருக்கு அடிக்கடி சளி, ஜலதோசம் போன்ற தொற்று வியாதிகள் தாக்குகின்றன.
 • உடலில் அதிக ஆற்றலைத் தரும் ஸ்டிராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்தும் கீடோ ஸ்டிராய்டு, நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு, அதிகமாக சுரப்பதாலே, நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்து, அடிக்கடி நோய்கள் தாக்குகிறது. உடலில் அதிகம் சுரக்கும் கீடோ ஸ்டிராய்டுகளை, உடலிலிருந்து வெளியேற்றி, உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் ஆற்றல்மிக்கவை, நஞ்சறுப்பான் மூலிகை.
asuthuma engkal.com

மூலிகை குடிநீர்

 • நஞ்சறுப்பான் இலைகளை நீரில் நன்கு கொதிக்கவைத்து, தினமும் இருவேளை, இந்த நீரை, வடிகட்டி குடித்து வந்தால், கீடோ ஸ்டிராய்டுகளை உடலிலிருந்து வெளியேற்றிவிடுகிறது.இதன்காரணமாக, உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து, உடலில் எற்படும் பாதிப்புகள் விலகி, உடல்நலமாகிறது.
 • நஞ்சறுப்பான் மூலிகை நீரை, தொடர்ந்து இரண்டு மாதங்கள், குடித்துவர, உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்பட்ட சளி, ஜலதோஷம், இரைப்பு, ஆஸ்துமா போன்ற சுவாச பாதிப்புகள் குணமாகி, உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, சுவாச வியாதிகளான அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பாதிப்புகள் முற்றிலும், நீங்கிவிடும்.

புற்றுநோய் குணமடைய

hcure putrunoi engkal.com

புற்றுநோயை தடுக்கும் சில ஆரோக்கிய உணவுகள்

hcure cancer engkal.com

காய்கறிகள்

காய்கறிகளில் காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றில் இன்டோல்-3-கார்பினோல் அதிகம் இருப்பதால், அவை மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்துவிடும்.

hcure putrunoi engkal.com

பூண்டு

 பூண்டு புற்றுநோய் உடலை தாக்காமல் தடுக்க உதவும் ஒரு சிறந்த உணவுப் பொருள். எப்படியெனில் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், டியூமஙர் செல்களை அழிப்பதோடு, புற்றுநோயை எதிர்த்துப் போராடி உடலை பாதுகாக்கவும் சிறந்தது.

hcure putrunoi engkal.com

சிவப்பு மற்றும் நீல நிற பழங்கள்

இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும் ஒரு பொருள். இத்தகைய பொருள் சிவப்பு மற்றும் நீல நிற பழங்களில் அதிகம் இருக்கும். எனவே அத்தகைய பழங்களான ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரி பழங்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.

க்ரீன் டீ

டீ-யில் க்ரீன் டீ மற்றும் மூலிகை டீ-க்களில் நிறைய நன்மைகள் உள்ளன. இவற்றில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் உள்ளது. குறிப்பாக க்ரீன் டீ சிறுநீர்ப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் சரும புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும் அளவில் சக்தி உள்ளது.

hcure putrunoi engkal.com

சிட்ரஸ் பழ ஜூஸ்

 ஜூஸ் என்றதும் பாக்கெட் அல்லது இதர குளிர்பானங்களை நினைக்க வேண்டாம். சிட்ரஸ் பழங்களால் செய்யப்பட்ட ஜூஸில் தான் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், இவை புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்.

hcure putrunoi engkal.com

தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், அவை புற்றுநோயால் செல்லுலார் பாதிப்படைவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி இதில் புற்றுநோயை தடுக்கும் முக்கிய பொருளானலை கோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. 

சக்கரை நோய்

cure sugar diseases patient engkal.com

சக்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் பாட்டிவைத்தியம்

சக்கரை நோயின் அறிகுறிகள்

அடிக்கடி தாகம் எடுத்தால் கூட சக்கரை நோய்க்கு ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.கண் பார்வை மங்களாவது, உடல் எடை குறைவது, அடிக்கடி உடல் சோர்வு எற்படுவது, உடலில் எற்படும் காயங்கள் குணமாகாமல் அதிக நாள் இருப்பது.இது போன்ற அறிகுறிகளை வைத்து  சர்க்கரை நோய் இருப்பதை உணரலாம்.

sarkarai viyathiyai gunamaka engkal.com

பாகற்காய்

 • சக்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளில் பாகற்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
 • தினசரி காலை வெறும் வயிற்றில் பாகற்காய் சாறை அருந்தி வந்தால் சக்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
 • தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள்.
 • இந்த ஜூஸ் தயாரிக்க, 2-3 பாகற்காயை எடுத்து விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி, வேண்டுமானால் நீர் சேர்த்து குடியுங்கள்.
 • குறைந்தது 2 மாதம் தினமும் காலையில் குடியுங்கள் இல்லாவிட்டால், அன்றாடம் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
sarkarai viyathiyai gunamaka engkal.com

பழங்கள்

 • பழங்கள் மூலமும் சக்கரை நோயை  கட்டுப்படுத்த முடியும்.எலுமிச்சை,ஆரஞ்சு,சாத்துக்குடி இந்த பழங்களில் சிட்ரஸ் அமிலம் உள்ளது.
 • வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனை அதிகம் உண்பதால் சக்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அதோடு உடல் அசதியும் போக்கும்.
sarkarai viyathiyai gunamaka engkal.com

வெந்தயம்

 • சக்கரை நோயை குணப்படுத்தும் சக்தி வெந்தியத்திடம் அதிகம் உள்ளது.வெந்தயம் பண்டைய காலம் முதலாக ரத்தத்தில் உள்ள சர்க்கையின் அளவைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 • வெந்தியத்தில்  உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உடல் உறிஞ்சுவதைத் தாமதப்படுத்தும்.
 • 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து வெந்தயத்தை அப்படியே அருந்துங்கள். இச்செயலை தொடர்ந்து சில மாதங்கள் தவறாமல் பின்பற்றினால், க்ளுக்கோஸ் அளவு குறையும்.இல்லாவிட்டால், 2 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடியை பாலில் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
sarkarai viyathiyai gunamaka engkal.com

நெல்லிக்காய்

 • நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கணையத்தின் முறையான செயல்பாட்டை ஊக்குவிக்கும்.2-3 நெல்லிக்காயின் விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் செய்து.
 • ஒரு துணியில் அந்த பேஸ்ட்டைப் போட்டு வடிகட்டி, வரும் சாற்றில் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து 1 டம்ளர் நீரில் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

 இல்லாவிட்டால், ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றினை ஒரு கப் பாகற்காய் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, சில மாதங்கள் தொடர்ந்து குடித்து வர வேண்டும். 

sarkarai viyathiyai gunamaka engkal.com

மா இலைகள்

 •  மாவிலைகளும் சர்க்கரை நோயை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாவிலை இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக்கும். இதோடு இது இரத்தத்தில் நல்ல கொழுப்புக்களை அளவை மேம்படுத்த உதவும். 

 • 10-15 மாவிலைகளை ஒரு டம்ளர் நீரில் இரவு படுக்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். * இல்லாவிட்டால் மாவிலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு, தினமும் 1 1/2 டீஸ்பூன் மாவிலை பொடியை நீரில் கலந்து அல்லது தேன் கலந்து உட்கொள்ளுங்கள். அதுவும் ஒரு நாளைக்கு 2 முறை உட்கொள்ள வேண்டும்.

   

sarkarai viyathiyai gunamaka engkal.com

வெண்டைக்காய்

 • வெண்டைக்காயில் உள்ள பாலிபீனோலிப் மூலக்கூறுகள், இரத்த க்ளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுவதோடு, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். சிறிது வெண்டைக்காயை எடுத்து, அதன் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, ஆங்காங்கு லேசாக கீறி விடுங்கள்.
 • பின் அதை ஒரு டம்ளர் நீரில் ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெண்டைக்காயை நீக்கிவிட்டு, நீரை மட்டும் வெறும் வயிற்றில் குடியுங்கள். இப்படி தினமும் என பல வாரங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். வேண்டுமானால் அன்றாட உணவில் வெண்டைக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.
sithamaruthuvam /engkal.com

நாவல் பழம்

 •  நாவல் பழத்தில் உள்ள அந்தோ சையனின்கள், எலாஜிக் அமிலம், ஹைட்ரோலிசேபிள் டானிடன்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பத்ததும். நாவல் பழத்தின் இலைகள், பழம், விதைகள் என அனைத்துமே உதவும்.எனவே இந்த பழம் கிடைத்தால், தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் நாவல் பழ விதையின் பொடி கிடைத்தால், அதை வாங்கி நீரில் கலந்து தினமும் இரண்டு வேளை குடியுங்கள்.
Close Menu