அன்றாடம் நாம் உன்னும் உணவில் நமக்கு தெரியாமல் பல மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன அதை பற்றி பார்ப்போம்.

இயற்கையின் பயன்களும் அதன் நன்மைகளும்

மனித உடலில் எந்த விதமான நோய்களும் தீண்டாமல் இருக்க சில டிப்ஸ்

பயனுள்ள சில மருத்துவ குணங்கள்:

 • உணவு உட்கொண்ட பிறகு தண்ணிரில் சிறிது அளவு கருப்பட்டியை கரைத்து குடித்தால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.
 • தினமும் காலை உணவு சாப்பிடுமுன் ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறிக்க உதவும்.
 • பல் வலி இருந்தால் துளசி இலை 3,மற்றும் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் மூன்றையும் எடுத்து வலி இருக்கும் இடத்தில் வைத்து வர வலி குறையும்.
 • குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் இருமல் மற்றும் காய்ச்சலை குணப்படுத்த தண்ணீருடன் தேனை கலந்து கொடுக்கலாம்.
 • தக்காளி சாறு மற்றும் கேரட்டையை சேர்த்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் பலம் பெரும்.
 • தொடர்ந்து இருமல் இருந்தால் 4 கப் தண்ணீருடன் சிறிதளவு மிளகு மற்றும் வெற்றிலையும்ச சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குடித்து வரலாம்.
 • துளசி இழைகளை நீரில் போட்டு அந்த தண்ணிரை தினமும் பருகி வந்தால் தொண்டை புண் வராது.
 • வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலை மற்றும் மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
 • சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் இவை அனைத்தும் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
 • அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்
 • உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.