இதன் மருத்துவ குணம் தெரிந்தால் உங்களலால் இதை வாங்கி சாப்பிடாமல் இருக்கவே முடியாது !!

இயற்கையின் பயன்களை பார்ப்போம்...

aloevera engkal.com
கற்றாழை

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது  இச்சாறு.

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும்.  எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. இந்த எண்ணெய் பெண்களின் . கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.

 மூட்டு வலி, கழுத்து வலியின்போது, வலி ஏற்பட்ட இடத்தில் கற்றாழையை நீளவாக்கில் வெட்டி, சூடு செய்து, பற்றுப் போடுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

ஜெல் சருமத்தின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது. சருமத்தின் ஈரப்பசையைப் பாதுகாக்கிறது. மருத்துவ உலகின் முடி சூடா ராணியாக கற்றாழை வலம் வருகிறது. கற்றாழையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டோமானால் வாழ்நாளில் பெருமளவு நோய்கள் நம்மை அண்டாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

முகப்பருவை குறைக்க கற்றாழையை தினமும் தடவி வந்தால், பருக்களை குறைக்க முடியும். இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா அழிவதோடு, பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

thulsi engkal.com
துளசி

துளசி செடியில் உள்ள அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்து உள்ளது. துளசி இலையை தினமும் சாப்பிட்டு வருவதால் குடல், வயிறு ,வாய் தொடர்புடைய நோய்கள் அவர்களுடய வாழ்நாளில் எப்போதும் வராது. துளசி வாய் துறுநாற்றத்தையும் போக்கும்.

துளசி இலையை நீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை குடித்து வந்தால் சர்க்கரை நோய் அவர்களை தீண்டாது.

சிறுநீர் கோளாறு உள்ளவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணிர்பருகி வந்தால் இந்த பிரச்சனை சரி ஆகும்.

துளசியிடம் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வீரியம் உள்ளது.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். 

sidha maruthuvam engkal.com
வேப்பிலை

வேப்ப மரத்தின் அடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும்,  ஒருவிதமான மன அமைதி கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு பெருக்கக் கூடியது. வயிற்று பிரச்சனைகளை தீர்க்கக்கூடியது.

மேலும்,புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தியும் வேப்ப மரத்திற்கு உண்டு.

தினமும் காலை நேரத்தில் 10 வேப்பங்கொழுந்து எடுத்து அதனுடன் 5 மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமடையும்.

 வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தால் பித்தவெடிப்பு மற்றும் கால் பாதம் எரிச்சல் போன்றவை குணமடையும்.

சிலருக்கு உடலில் பலவிதமான  அலர்ஜிகள் இருக்கும்.

அவை தோல் வியாதி,  இதற்க்கு எளிய நிவாரணம், வேப்ப இலையை நன்கு அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் ஊறி குளிக்க வேண்டும்.அதோடு காலையில் வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து விழுங்க வேண்டும்.

sidha maruthuvam engkal.com
கேரட்

காரட்டிற்கு மட்டுமே உள்ளது. உலகத்தில் இதுவரை மருந்தே கண்டு பிடிக்கப்படாத ஒரு நோய் உண்டென்றால் அது புற்று நோய் (கேன்சர்) தான்.

அந்த நோய் நமக்கு வராமல் பாதுகாக்கும்  சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது.

காரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து உள்ளது தான் இதற்கு காரணமாகும். இதனை உயர்வாக சொல்வது என்றால் காரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகின்ற சத்து உள்ளது என்று சிறப்பித்து விஞ்ஞானிகள் கூறுவார்கள்.

இந்த பீட்டா கரோட்டினின் உள்ள சிறப்பு அணுக் கூறுகள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது. காரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே நிறைந்து உள்ளது.

காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர்பான எல்லாவித நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகின்ற சக்தி பெற்றவை.

உதாரணமாக பல காலமாக அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் காரட்டினை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும் வயிறு மற்றும் குடல் சம்மந்தமான நோய்கள் எல்லாம் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் வரவிடாமலும் செய்துவிடும் காரட்.

அதற்கு காரணம் வாயோ, பற்களோ அல்ல. வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். எனவே வயிறு குறைபாட்டை ஒழித்தால்தான் அந்த வாய் துர்நாற்றம் போகும்.

வாய் துர் நாற்றம் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு இனிப்பான செய்தி இது. வாரம் ஐந்து நாட்கள் மட்டும் காரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வாருங்கள். அப்புறம் பாருங்கள் வாய் துர்நாற்றம் வரவே வராது.

காரட்டினை வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் காரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது. காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம்.

பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும்.

sidha maruthuvam engkal.com
அருகம் புல்

அருகம் புல் உடல் தாது வெப்பு அகற்றித் தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும்,

அருகம்புல்லில் நீர்விடாமல் சாறு எடுத்து, அதை 2 சொட்டு விடும்போது மூக்கில் வரும் ரத்தம் நிற்கும்.

அருகம்புல், ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல்நோய்கள் வராமல் தடுக்கிறது. கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும்.

அருகம்புல் சாறு 50 மில்லி எடுக்கவும். இதனுடன் புளிப்பில்லாத கெட்டி தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை குடித்துவர வயிற்றுபோக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.

அருகம்புல் உடல் சூட்டை தணிக்க கூடிய, குடலில் ஏற்படும் புண்களை ஆற்ற கூடிய மருந்தாகவும் பயன்படும்.

அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்குரு சரியாகிறது.

தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது.

அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வடிகட்டி ஊறல் நீரை மட்டும் எடுக்கவும்.

இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை, மாலை குடித்துவர கண் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும்.

அருகம்புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும். வேண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்துக் குளித்து வரச சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வேர்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு, வேனல் கட்டி தீரும்.

அருகம்புல் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. நரம்பு நாளங்களை தூண்டக் கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.

சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.

sidha maruthuvam engkal.com
நிலவேம்பு

நிலவேம்பு இலைத் தீநீர் குழந்தைகளின் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாதக் குடைச்சல், குளிர்காய்ச்சல், பித்த மயக்கம் ஆகிய துன்பங்களுக்குத் தீர்வளிப்பதாக அமையும். நாள்பட்ட சீதபேதி, காய்ச்சல், நீர்க்கோர்வை, மூட்டு வலிகள் ஆகியனவற்றை எளிதில் போக்கும் தன்மை கொண்டது.

நிலவேம்பு உடலுக்கும் உடல் உள்ளுறுப்புகளுக்கும் பலமளிக்கும் ஊட்டச்சத்து மிக்க டானிக், சிறப்பான பசிதூண்டி, கல்லீரலுக்கு பலம் தரவல்லது, நரம்பு மண்டலங்களுக்கும் குடல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான மென் திசுக்களுக்கும் பலம் தரவல்லது.

விட்டுவிட்டு வந்து தொல்லை தருகிற கடுமையான வயிற்று வலி மற்றும் சிறுநீரகம் தொடர்பான வலியைக் போக்கக்கூடியது.

நிலவேம்பு வியர்வையைத் தூண்டி உடலின் உஷ்ணத்தைத் தணிவித்துக் காய்ச்சலைப் போக்கக் கூடியது. கல்லீரலின் செயல்பாட்டைத் துண்டுவித்துப் பித்தத்தைச் சமன் செய்யவல்லது.

நிலவேம்பு மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகிறது.

கல்லீரல் கெடுவதாலும் பித்த நீர், மஞ்சள் நிறமுடன் வெளியேறுதல்கண்கள் மஞ்சள் நிறமுடன் காணப்படுதல், வயிற்று உப்புசம் அல்லது வயிற்று வீக்கம், தலைவலி, உடல் மந்தமாகவும், கனமாகவும் தோன்றுதல், உணவு உண்டதும் சோர்வு ஏற்படுதல், மன உளைச்சல், தலை கிறுகிறுப்பு, காதுகளில் இரைச்சல், இடை இடையினில் தூக்கம் கலைந்து தடைபடுதல் ஆகிய தொல்லைகள் தோன்றும். இவை அத்தனைக்கும் நிலவேம்பு சிறந்த  மருந்தாகிறது.

பொதுவாக நிலவேம்பைத் தனியாகப் பயன்படுத்துவதை விட நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சைவேர், பற்படாகம், சீந்தில் கொடி, கோரைக்கிழங்கு, கண்டங்கத்திரிவேர், கோஷ்டம், சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம், சந்தனத்தூள் ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து இடித்து தீநீராகக் காய்ச்சிக் கொடுப்பது மருத்துவத்தில் நடைமுறையில் உள்ளது.

இது சகல விதமான காய்ச்சலையும் கண்டிக்கத் தக்க மருந்தாகச் சொல்லப் பெற்று இருக்கிறது.

டெங்கு, சிக்குன் குனியா போன்ற விஷக்காய்ச்சல் கண்டு ரத்த வட்டணுக்கள் குறைபாடு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையில் கூட நிலவேம்புக் குடிநீர் அற்புத பலனைத் தருகிறது.

நிலவேம்பில் நிறைந்து இருக்கும் ஆன்ட்ரோ கிராப்போலைட் என்று சொல்லப் பெறும் மருத்துவ வேதிப்பொருள்.

மிகப்பெரும் வீக்கம் கரைச்சி என்னும் மருத்துவ குணத்தைப் பெற்றுள்ளது. மேலும் இது சுவாசப் பாதை அழற்சியைப் போக்கி ஆஸ்துமா என்னும் மூச்சுமுட்டல் நோயினின்று விடுதலை தரவல்லது.

நிலவேம்பிலுள்ள மருத்துவ சத்துவங்கள் நுண் நோய்க்கிருமிகளை நீக்கவல்லது. கட்டிகளைக் கரைக்கும் தன்மையது. ரத்தத்தில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் குணமுடையது.

நிலவேம்பு மனித சமூகத்துக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் எச்.ஐ.வி. என்ற மூன்றெழுத்தால் குறிப்பிடப் பெறும் மிக மோசமான உடலையும் உள்ளத்தையும் கெடுத்து உயிருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பால்வினை நோய்க்கு பலமான எதிரியாகச் செயல்பட்டு எதிர்த்து நின்று போராடி குணம் தரவல்லது.

தொற்று நோய்க் கிருமிகளைத் துரத்தவல்லது. நோய் எதிர்ப்பு சத்துக் குறைபாடு காரணமாக அடிக்கடி சளி பிடித்தல் எனும்போது அதற்கு ஒவ்வாமை ஒரு காரணமாக சொல்லப் படுகிறது.  ஒவ்வாமைக்கும் நிலவேம்பு மருந்தாகிறது.

sidha maruthuvam engkal.com
காளான்

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகமாகவே உள்ளது.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.

இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான்.

100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.

மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

 

sidha maruthuvam engkal.com
கருவேப்பிலை

கருவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் தேவையான அளவு சர்க்கரையும் கலந்து அருந்தி வர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும்.

கருவேப்பிலை இலைத்துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது.

பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும்மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும்.

நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையை இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலதோஷம், மலக்கட்டு போன்ற நோய்கள் குணமாகும்.