நாம் உண்ணும் கீரைகளில் உள்ள இத்தனை மருத்துவ குணங்களா இங்கே பார்க்கலாம்!!!!

sidtha maruthuvam engkal.com

கீரை வகைகள் !!!!

sidtha maruthuvam engkal.com
மணலிக்கீரை

மணலிக்கீரை:

மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்தும் மருத்துவக்குணம் வாய்ந்தது.

மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் மணலிக்கீரை

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.

மூளை நரம்புகள் பலம்பெற:

மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும்.

ஈரல் பலம்பெற:

மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.இத்தகைய மருத்துவக்குணங்களை பெற்றுள்ள  மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக தின்தோறும் பயன்படுத்தலாம்.

sidtha maruthuvam engkal.com
கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி:

கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து நன்கு  பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு  ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேலை  சாப்பிட்டு வந்தால்  சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் நீங்கிவிடும்.

கூந்தல் வளர

கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

இளநரையை நீக்க

கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய்  எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி அந்த  தைலத்தை தினமும்  தலைக்குத் தடவி வந்தால் இளநரையை நீக்கிவிடும்

sidtha maruthuvam engkal.com
வல்லாரை

மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது. பிரம்பி, சரஸ்வதி, யோசனவல்லி போன்ற தமிழ்ப்பெயர்களாலும் வல்லாரை பொதுவாக அழைக்கப்படுகின்றது.

வல்லாரையில் இரும்புச்சத்து, சுன்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் நிறைந்து காணப்படுகின்றது. இது இரத்தத்திற்க்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

தோல் வியாதி உள்ளவர்கள் வல்லாரை மிக சிறந்த மருந்து. இக்கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வர தோல் சம்பந்தமான வியாதி குறையும்.

வல்லாரை கீரையை பச்சையாக சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்படையும். மாலைக்கண் நோய் குணமாக வல்லாரை கீரையோடு பசும்பால் சேர்த்து உண்டு வர
மாலைக்கண் நோய் மறையும்.

வல்லாரை ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது. வல்லாரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி பெருகும். புத்தி கூர்மையாகும். நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை சாப்பிடுவது நல்லது. இக்கீரை மலச் சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.

வீக்கம், கட்டிகள் மறைய வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, தொடர்ந்து வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் குணம் ஏற்படும். வல்லாரை இலைச்சாற்றைப் பிழிந்து, சம அளவு நெய் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர அடிபட்ட காயம், கொப்புளங்கள் குணமாகும்.

sidtha maruthuvam engkal.com
மணத்தக்காளி

மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளது . நார்ச்சத்து மிகுந்தது. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தும். மற்றும் வாய் புன்னை குணப்படுத்தலாம்.

வெறும் பச்சை இலைகளை, நாள் ஒன்றுக்கு ஐந்துமுறைகள் நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக குணம் ஆகும்.

மூட்டுப் பகுதியில் உள்ள வீக்கங்களால் அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, வீக்கம் இருக்கும் இடத்தில்  ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும். மணத்தக்காளி காயை வற்றல் செய்து, மற்றும் குழம்புக்குப் பயன்படுத்தலாம். இதன் இலை, வேர் ஆகியவற்றை குடிநீர் செய்து அருந்துவது நோயற்ற வாழ்வைப் பெற உதவும்.

 உடலில் உள்ள வெப்பத்தை தணிக்க மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் நல்ல பயன் தரும்.

காசநோய் இருப்பவர்கள் கீரையின் பழத்தை சாப்பிடுவது நல்லது.

மணத்தக்காளி கீரை மற்றும் அதனுடைய பழத்தினை பொடி செய்து தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி குணமடையும் மற்றும் இதயம் பலம் பெரும்.

இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் பயன்படுத்தலாம். இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் களைப்பு நீங்கும். இத்துடன் நன்கு தூங்க  உதவும்.

அகத்தி

அகத்தி கீரையை பெரும்பாலான பகுதிகளில் பயிரடப்படுகிறது. இந்த வகையான கீரை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வளர்க்கபடுக்குறது. அகத்தி கீரையில் நீர் சத்து மிகுதியாக உள்ளது.இதில் சுண்ணாம்பு சத்து உள்ளதால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவவும் கீரை.

இந்த கீரையில் அதிக விட்டமின்கள் உள்ளது.

அடி பட்டு ரத்த வரும் இடத்தில் அகத்தி கீரையின் சாற்றை பிழிந்து விடுவதன்  மூலம் ரத்தம் வருவது நிறுத்த மற்றும் காயம் விரைவில் ஆற உதவும்.

மன நிலை சரி இல்லாத நிலைமையில் உள்ளவர்கள்  இதன் சாற்றை தலையில் நன்கு தேய்த்து சிறிது நேரங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்து வர இயல்பு நிலைக்கு திரும்பும்.

அகத்தி கீரையின்  சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும். உடம்பில் உள்ள  தேமலுக்கு அகத்தி கீரையீன் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.

அகத்தி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும் . இந்த அகத்தி கீரையானது வயிற்றில் இருக்கும் புழு மற்றும் மலச்சிக்கலையும் நீக்கும்.

இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும்.

கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் போன்ற கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.

sidtha maruthuvam engkal.com
முருங்கை

முருங்கை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 300 நோய்களுக்கு மேல் வராமல் தடுக்கலாம் என்பது பழமொழி …..

இலையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் தீரும். கீரையில் சுவையான கீரையும் சத்தான கீரையும் இதுதான். இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டுவலி, இடுப்பு வலி  ஆகியவற்றை நீங்கும் முருங்கை இலை, தூதுவளை, பசலை அரைக்கீரை ஒன்று சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கி சாப்பிட்டு வர தாது பலப்படும்.

இதன் இலைச் சாற்றைப் பிழிந்து பத்து மி.லி. நாளும் இரு வேளை பாலில் கொடுக்க ஒரு வயது, இருவயது குழந்தை உடல் ஊட்டம் பெறும்.

பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நாகசப்பு, நீர் ஊறுதல் தீரும்.

முருங்கைப்பிஞ்சை சமைத்துச் சாப்பிட்டால் தாது நட்டத்தால் ஏற்படும் சுரம் தீரும்.சயம், சளி ஆகிய நோய்வாய்ப்பட்டவர்க்களுக்கு இது சிறந்த ஊட்டம் தரும்.

முருங்கைப்பட்டைத் தூள் 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றின் பொடி 2 கிராம் போட்டு வெந்நீரில் காயாச்சி மூன்று வேளையும் 30 மி.லி. அளவு கொடுக்க குடற்புண், காய்ச்சலாகிய டைபாய்டு குணமாகும். இருமல், கபம் தீரும்.

முருங்கைப் பட்டையும் வெண் கடுகையும் அரைத்துப் பற்றுப் போட வாதவலி தீரும். வீக்கம் குறையும்.

இதன் பிசினையுலர்த்திப் பொடி செய்து அரை தேக்கரண்டி பாலில் காலை, மாலை குடிக்க தாது பலம் உண்டாகும். மிகுதியாகச் சிறுநீர் கழித்தல் தீரும். உடல் வனப்பு உண்டாகும்.

சாதாரணமாக வீடுகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.

Close Menu