சமையல் பொருள்களின் சில மருத்துவ குணம்:

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் நாமக்கு தெரியாத எத்தனை மருத்துவ குணங்கள்..

அளவான பொருட்களின் அளவற்ற பயன்கள்

கடுகு

கடுகில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. கடுகில்  உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. மற்றும் கடுகில்  இரும்பு, புரதம், மற்றும் நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. மற்றும் சமையலுக்கு வாசனை பொருளாக உபயோகிக்கலாம்.

மல்லி

செரிமானத்திற்கு நன்கு  உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.

பட்டை

 செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் போன்றவற்றை தவிர்க்க உதவும்.

கருஞ்சீரகம்

இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாக பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வதால். பல நன்மைகள் உள்ளன. கண்பார்வை தெளிவாகும், மற்றும் இளம் வயதில் வரும் நரைமுடியை தவிர்க்கலாம்.

கிராம்பு

வாயில் உண்டாகும் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.மற்றும்  ஜீரணக்கோளாறுகள் நீக்கலாம்.

பல் வலி, தேள் கடிக்கு உதவும்.

இஞ்சி

இஞ்சி வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் அதிகரித்து பசியைத் தூண்டும்.

இஞ்சி கார சுவை உடையது.

ஓமம்

மூக்கடைப்பு, வயிற்று வலியை நீக்கவும். மற்றும் வலி நிவாரணியாகவும் பசியைத் தூண்டவும் பயன்படுத்தலாம்.

ஓமத்தில் இரும்பு சக்தி அதிகம் உள்ளது.

சீரகம்

சீரகம் கிருமி நாசினியாகவும் உள்ளது. இது புற்றுநோயிற்கு மருந்தாகவும் உள்ளன

திப்பிலி

திப்பிலி  இருமல், காசநோய், காய்ச்சல், கோழை, சளி போன்ற  நோய்களைக் குணமாக்கப் பயன்படும் ஒரு மருந்தாகும்.

வெந்தயம்

நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.

மஞ்சள்

காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை வராமல் தவிர்க்கலாம். குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும்.

Close Menu