விஷ கடிக்கு சித்த மருத்துவம்

விஷ பூச்சிகள் கடித்துவிட்டதா உடனே உங்கள் வீட்டிலே முதலுதவி செய்துக்கொள்ளலாம், அதற்காக சில டிப்ஸ்!!!
sidtha maruthuvam engkal.com

பூச்சிகள் கடித்துவிட்டால், எந்த பூச்சி கடித்தது என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது. இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.

இந்நிலையில், அதை கண்டறிய சில நாட்டு மருத்துவம், கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும், புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும், வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு என்றும்,  கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து கொள்ளலாம்.

 • தேள் கடிக்கு:

எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ சாற்றையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.

சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக்  கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.

குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

 • வெறிநாய்க்கடி

நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம்  அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

 • பூனை கடித்தால்

குப்பைமேனி இலையை பாலுடன் சேர்த்து அரைத்து, ஒரு கோலி அளவு பாலுடன் மூன்று நாட்கள் சாப்பிட விஷம் இறங்கும்.

 • செய்யான் கடிக்கு

பூரானை விட சற்று பெரிதாக சிவப்பு நிறத்தில் இருக்கும். சிறு தும்பை இலையை மென்று தின்று கடிவாயிலும் பூச விஷம் தீரும்.

 • நட்டுவகாலி கொட்டினால்

முற்றிய தேங்காயை எடுத்து மென்று தின்ன விஷம் இறங்கும். பெரும் செருப்படை என்னும் பச்சிலையை கொண்டு வயது மை போல் அரைத்து கோலி அளவு எடுத்து அத்துடன் 9 மிளகு 3 வெள்ளை பூண்டு அரிசி சேர்த்து அரைத்து விழுங்க விஷம் இறங்கும்.

 • பூரான் கடிக்கு

பூரான் கடித்த உடன் தடிப்பு ஏற்படும் ஊரல் எடுக்கும். மண்ணெண்ணெய் அல்லது ஸ்பிரிட் தேய்க்கவும். கருப்பு கட்டியை சாப்பிட்டால் விஷம் இறங்கும். குப்பைமேனி, மஞ்சள், உப்பு, வசம்பு இவைகளை அரைத்து மேலால் தேய்த்து குளிக்க குணம் ஆகும். ஊமத்தன் விதைகளை ஒருவாரம் நல்லெண்ணெய்யில் ஊரப்போட்டு ஆயுத எண்ணெய்யை தேய்த்து வர பூரான் கடி குணமாகும்.

 • எலி கடித்தால்

அவுரி அல்லது நீலி வேர் 25 கிராம் எடுத்து பாலில் அரைத்து 100 மில்லி பாலுடன் காலையில் மட்டும் எட்டு நாட்கள் சாப்பிட தீரும்.

 • புடையன் பாம்பு கடித்தால்

எருக்கன் வேர்தொலி, இலைதூள், வசம்புதூள் இவற்றை கடிவாயில் புகை போடவும். நேர் வானத்தை சிறுநீர் விட்டு அரைத்து கடிவாயில் போடவும்.

 • வீரியன் பாம்பு கடித்தால்

கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

 • வெறிநாய் கடித்தால்

வெறிநாய் கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

 • பாம்பு கடித்தால்

பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.

பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும்.

 

 

இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.

நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.