ஜிமெய்லின் புதிய வசதி அறிமுகம் இப்போது தவறாக மின்னஞ்சல் அனுப்பிவிட்டால் இனி கவலை இல்லை.

ஒருவழியாக, ஜிமெய்லில் தவறாக அனுப்பிய மின்னஞ்சலை டெலிட் செய்யும் ‘undo send’ வசதியை ஆண்டிராய்டு பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். பல ஆண்டுகளாகச் சோதனையில் இருந்து 2015ஆம் ஆண்டு இது கணினியில் மட்டும் அறிமுகமானது. 2016இல் ஆப்பிள் பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஆண்டிராய்டு பயனர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் இது மொபைல்களில் அறிமுகமாகிறது.

techviral/engkal.comஜிமெய்லின் 8.7 வெர்சன் செயலியில் இவ்வசதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் கணினியில் உள்ளது போல எவ்வளவு காலம் வரை அனுப்பிய மின்னஞ்சலை ரத்து செய்யலாம் என நேரத்தை செட் செய்யத் தேவையில்லை. ஆண்டிராய்டைப் பொருத்தவரை, மின்னஞ்சலை அனுப்பியதும் அது சென்று சேரும் வரை அதனை கேன்சல் செய்யும் ஆப்சன் தெரியும்.

பிறகு அதனை ரத்து செய்ய ‘undo’ என்னும் ஆப்சன் இருக்கும். இது ஜிமெய்லின் 8.7 ஆம் பதிப்பில் கிடைக்கிறது, உங்களது செயலியில் இதைக் காண முடியாவிட்டால், ப்ளே ஸ்டோரில் சென்று ஜிமெய்லின் புதிய பதிப்பு தங்கள் போனில் உள்ளதா என்று சோதித்துக்கொள்ளவும்

இதேபோல Confidential Mode என்னும் வேறொரு வசதியையும் ஜிமெய்ல் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, அனுப்பிய மின்னஞ்சலை குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் தானாகவே அழிந்துவிடும்படி செய்யலாம் .

Leave a Reply

Close Menu