இன்றைய நாள்

  • 18-01-2019 (வெள்ளி) இன்றைய நாட்களுக்கான ராசிபலன்கள்...
Icon Image

புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், கிடைத்துவிடும்.அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. விரயங்கள் கூடும். வீண் குழப்பம் உண்டு.கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3,4

Icon Image

அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைகளைப் பொறுமையுடன் எதிர்கொண்டால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். எந்த வேலையும் இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகும்.குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். உறவினர்கள் உங்கள், அருமை, பெருமையை புரிந்துக் கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5,7

Icon Image

எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தை பெருக்கு வீர்கள்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வளர்ச்சி கூடும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படியே நடைபெறும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது. கணவன் - மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2,9

Icon Image

எதிர்பாராத செலவுக ளும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும்.நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2,9

Icon Image

அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.பொருளாதார நெருக்கடி அகலும். ஆசையாக பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.


அதிர்ஷ்ட நிறம்: கருப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2,9

Icon Image

வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. கடன்சுமை குறைய எடுத்த முடிவு வெற்றி தரும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2,9

Icon Image

மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் பிற்பகலுக்கு மேல் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும். சகோதரர்களால் நன்மை கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம் , மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2,9

Icon Image

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவர். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.புதிய நபர்களின் அறி முகத்தால் பொருளாதார நிலை உயரும். பெரியோர்கள் ஆலோசனை கை கொடுக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர்.வியாபா ரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு ,ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 2,9

Icon Image

வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வும். பொருளாதார நெருக்கடி அகலும். தொழில் முன்னேற்றம் ஆதாயம் உண்டு. கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும்.நீண்ட பயணம் தொடர்விர்.


அதிர்ஷ்ட நிறம்: பச்சை வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2,9

Icon Image

மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தனவரவில் இருந்த தடைகள் அகலும். காலை நேரம் கலகலப்பாக அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கடன் பிரச்சனை ஓரளவு குறையும்.


அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 2,9

Icon Image

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். லாபமும் அதிகம் கிடைக்கும். திடீர் பயணங் களால் சில திருப்பங்கள் ஏற்படும்.உறவினர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2,9

Icon Image

எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் மற்றவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் தருவீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம் , சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2,9

  • சுப முகூர்த்தம் நாட்கள்
muhurthan nal/engkal.com

நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளுக்கு சிறந்த நாட்களைத் தேர்ந்தெடுக்க நமது முன்னோர்கள் சில அறிவுரைகளை கொடுத்துள்ளனர்.அப்படி கூறப்பட்ட சில விதிமுறைகளை பின்பற்றி நாம் தேர்ந்தெடுப்பதற்குப் பெயர்தான் முகூர்த்தம்.

இந்த முகூர்த்த நாட்களில் கல்யாண நிகழ்ச்சிகள்,வீடு கிரகப்பிரவேசம்,காது குத்து ,மஞ்சள் நீராட்டு விழா, வாகனம் வாங்குதல்,கோவில் கும்பாபிஷேகம் இது போன்ற நல்ல காரியங்களை தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் சுப நிகழ்ச்சிகள் செய்தால் எந்தவொரு தடையும் இன்றி நல்லபடியாக முடியும்.

டிசம்பர் மாத சுபமுகூர்த்த நாட்கள் 23,27,30
  • இன்றைய நல்ல நேரம்
  • நல்ல நேரம்

காலை : 09.30-10.30

மாலை : 05.00-06.00

இந்த நேரத்தில் நீங்கள் தொழில் மற்றும் புதிய செயலை செய்வது சுப காரியங்களை தொடங்குவது மிகவும் நல்லது.

  • எமக்கண்டம்

பகல்    :  03.00-04.30

இரவு    :  09.00-10.30

இந்த நேரத்தில் எந்தவொரு புதிய செயலையும் செய்யாமல் கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். மேலும் இந்த நேரத்தில் புதிய முயற்சிகளை தொடக்காமல் இருப்பது நல்லது.

  • ராகு காலம்

பகல்    :   10.30-12.00 

இரவு    :  01.30-03.00

இந்த நேரத்தில் எதிர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.இதனால் பார்த்து கவனத்துடன் செயல்படவேண்டும்.

  • குளிகை

பகல்    : 07.30-09.00

இரவு    : 12.00-01.30

குளிகை நேரத்தில் எந்த ஒரு செயலை செய்தலும் வளர்ந்துகொண்டே போகும்.இதனால் நல்ல செயலை செய்வது மிகவும் நல்லது.

  • சந்திராஷ்டமம் நாட்கள்
santharastamam/engkal.com

சந்திராஷ்டமம் பற்றி ஒரு சில அறிகுறிகள்???

சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் எட்டாவது ராசியில் இருக்கிறார் என்பது அர்த்தம். ஒவ்வொருவரின் ராசிக்கும் எட்டாவது ராசியில் சந்திரன் இருந்தால் அந்த நாள் சந்திராஷ்டமம்.12 ராசிகளுக்கும் சந்திரன் இடம் பெயர்ந்து அவரவர்களுக்கான சந்திராஷ்டம நாளில் செயல்களை மாற்றி அமைக்கிறது.

சந்திரனின் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவரின் மனநிலை நிர்ணயிக்கப்படுகிறது.

சந்திராஷ்டம தினகளில் உங்களுக்கு அதிகம் கோவம் , குழப்பம் , கஷ்டகள் , சண்டைகள் போன்றவை வரும்.இதனால் நீங்கள் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க வேண்டாம்.எந்தவொரு சுப காரியங்களையும் தொடங்க வேண்டாம். மேலும் முக்கிய செயல், முக்கிய சந்திப்பு, பேச்சுவார்த்தை எல்லாவற்றையுமே  இந்த சந்திராஷ்டமம் நாளில் தள்ளி வைப்பது நல்லது. இந்த நாளில் மட்டும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

இதனால் துலாம் ராசி நேயர்கள் இன்று மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.