தோஷம் மற்றும் பரிகாரங்கள்

 • கால சர்ப்ப தோஷம்
 • நவகிரக தோஷம் விலக
 • சனி திசை தரும் பலன்கள்!
 • ராகு-கேது பலன்கள் பெற
engkal.com

கால சர்ப்ப தோஷம்

முன்ஜென்மத்தில் இணைந்திருக்கும் இரண்டு பாம்புகளில் ஒன்றை மட்டும் கொன்றால் மறுஜென்மத்தில் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.

 

கால சர்ப்ப தோஷ இரண்டு பாம்புகள் இணைந்திருக்கும் போது அவற்றைக் கொல்ல முயலும்போது ஒன்றை மட்டும் கொன்றால்(மற்றது தப்பித்துவிட்டால்) அது மிகக்கொடூரமான பாவமாகும்.

 

இந்தப்பாவம் செய்தவர்கள்தான் மறுபிறவியில் லக்னத்தில் ராகு அல்லது கேது தனித்திருக்கப் பிறக்கின்றனர். அப்படி அடிக்கும்போது அது உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என்பதைப்போல தனது வாலால் மூன்றுமுறை தரையில் அடித்துச் சத்தியம் செய்யும்.

 

அப்போது அதை உயிரோடு விட்டுவிட்டால் நீங்கள் சர்ப்ப தோஷத்திலிருந்து தப்பித்தீர்கள். இல்லாவிட்டால், அது உங்களின் அடிதாங்காமல் உயிர்விட்டால், சாபம் ஈந்துவிட்டு இறக்கும்.

காலனான ராகுவுக்கும், சர்ப்பமான கேதுவுக்கும் இடையில் கிரகங்கள் இருப்பது கால சர்ப்ப தோஷம் எனப்படும். கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கிடையே மற்ற ஏழு கிரகங்களும் அடைபட்டு இருப்பதாகும்.

 

இது ஜாதகத்தில் உள்ள நல்ல யோகங்களை நசுக்கி கெடு பலன்களை தரும் என்று ஐதீகம். ராகு, கேது இருவரும் விஷம் உள்ள பாம்புகள். இவர்களுக்கு இடையே சிக்கி முன்னும் பின்னும் இவர்களின் விஷத்தால் தாக்கப்படுவதால் கிரகங்கள் செயல் இழக்கின்றன என்பது கருத்து.

 

ராகுவிற்கு பாம்பின் உடல் குணத்தால் வாலில் விஷம், கேதுவிற்கு பாம்பின் தலையானதால் தலையில் விஷம். இந்த அடிப்படையில் கால சர்ப்ப தோஷம் அமைகிறது.

 

சர்ப்ப தோஷம் என்பது திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கை ஆகியவற்றில் தடைகள் ஏற்படும்.

பரிகாரங்கள் :

 • ராகுகாலங்களில் அம்பாள் சன்னதியில் எல்லாநாளும் வரும் ராகுகாலத்தில் எலுமிச்சையில் தாமரைநுாலில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷம் விலகும்.
 • கால பைரவரை வழிபட்டால் இந்த கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும்.
 • கால சர்ப்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப்ப தோஷத்திற்கு பலன் கிடைக்கும்.
 • சூரியகிரகணமும், சந்திர கிரகணமும் வரும் நாட்களில் திருக்காளஹஸ்தி கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் நன்மை கிடைக்கும். அல்லது ஏழை எளியோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் தோஷத்தினால் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம்.

நவகிரக தோஷம் விலக

சரியான நவகிரக தோஷம் நிவர்த்தி வழிபாடு செய்து வாழ்வில் மேன்மை நிலையை அடையுங்கள்
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கஷ்டங்களே இல்லாமல் சுகமாக வாழ நவகிரக தோஷம் நிவர்த்தி பரிகாரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு ஜாதகத்தில் என்ன கிரக நிலைகள் இருந்தாலும் கூட, ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர்கள் கஷ்டங்களை சந்தித்து தான் ஆக வேண்டும்.
ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடியாக இல்லையெனில் அதுபற்றி கவலையே பட வேண்டியதில்லை. அப்படிப்பட்ட மனிதர்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ பலவழிகளைக் காட்டி இருக்கின்றனர்.

தோஷம் நிவர்த்தி பரிகாரம்

நடைபெற்று இருக்கும் கிரக பெயர்ச்சிகளால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதற்காக தினந்தோறும் அம்மன் மந்திரங்களை பாராயணம் செய்யலாம்.
அம்மன் மந்திரங்களை பாராயணம் செய்ய இயலாதவர்கள், சீர்காழி தலத்தில் அவதரித்து, அம்பிகையினால் ஞானப் பால் புகட்டப்பெற்ற திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் முழுவதையும் மட்டும் பாராயணம் செய்யலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் மனிதர்களின் மனமானது மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கும். தனக்கு வரக்கூடிய பிரச்சனைகளை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அதை சமாளிக்கக்கூடிய தைரியமும், தன்னம்பிக்கையும் வளரும்.

நவகிரகங்களால் நமக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்பதற்கான புராணக்கதை :

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் திருமறைக்காடு என்னும் தலத்தில் இருந்தபோது, பாண்டிய மகாராணி மங்கையர்கரசியாரிடம் இருந்து திருஞானசம்பந்தருக்கு அழைப்பு வருகிறது. சைவம் துறந்து சமணம் சார்ந்த பாண்டிய மண்ணை திரும்பவும் சைவத்துக்கு மாறச் செய்யவேண்டும் என்பதுதான் அழைப்புக்கான காரணம். உடன் இருந்த திருநாவுக்கரசருக்கு உள்ளுக்குள் கலக்கம். திருஞானசம்பந்தர் மதுரைக்குப் போனால், அங்கிருக்கும் சமணர்களால் எதுவும் ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சினார்.
மேலும் அப்போது கிரகநிலைகளும் சாதகமாக இல்லை. எனவே, அப்போதைய கிரகநிலைகள் சாதகமாக இல்லை என்று கூறி, திருஞானசம்பந்தரை மதுரைக்குப் போகவேண்டாம் என்று தடுத்தார்.
ஆனாலும் பாண்டிய நாட்டில் சைவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற காரணத்துக்காக மதுரைக்குச் செல்ல விரும்பிய திருஞானசம்பந்தர், எல்லாம் வல்ல இறைவன் நமக்கு பக்கத் துணை இருக்கும்போது, நவகிரகங்களால் நமக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்று கூறி, கோளறு பதிகம் பாடி திருநாவுக்கரசரை சமாதானம் செய்துவிட்டு மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். பாண்டிய நாட்டில் சைவம் தழைக்கவும் செய்தார்.

நவகிரகங்களை எத்தனை முறை சுற்றலாம்?

இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாய் அமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும். இந்திய ஜோதிட நு}லின்படி கோள்கள் ஒன்பது ஆகும். இவை சு+ரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும்.
நவகிரகங்களை வழிபடுதல் மிகத் தொன்மையான வழிபாடாக இருந்துள்ளது. வரலாற்று ஆய்வின்படி புத்தர் காலத்திலும் இந்த வழிபாடு இருந்துள்ளது. இருப்பினும் நவக்கிரகங்களை தனித்தே அக்காலத்தில் வழிபட்டு வந்திருக்கிறார்கள்.
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.

நவகிரகங்களை எத்தனை முறை சுற்றி வழிபடுவது?

 • சூரியன் – 10 சுற்றுகள்
 • சுக்கிரன் – 6 சுற்றுகள்
 • சந்திரன் – 11 சுற்றுகள்
 • சனி – 8 சுற்றுகள்
 • செவ்வாய் – 9 சுற்றுகள்
 • ராகு – 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
 • புதன் – 5, 12, 23 சுற்றுகள்
 • கேது – 9 சுற்றுகள்
 • வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்

சனி திசை தரும் பலன்கள்!

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, புர்வ புண்ணிய பலனிற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர; யாருமில்லை. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அந்த சனிபகவான் உங்களுக்கு தரும் பலன்களை காண்போம்!…

 

 • 1 மற்றும் 2 ஆகிய லக்கனத்தில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும்.
 • 2ஆம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சினைகள், வீண் வாக்குவாதம், சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.
 • 3ஆம் வீட்டில் இருந்தால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி, தைரியம், துணிவு, தாராளமான பண வரவுகள் உண்டாகும்.
 • 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7-ல் சஞ்சரிப்பதை கண்டக சனி என்றும் கூறுவார்கள். மேலும் இந்த காலகட்டத்தில் கல்வியில் இடையூறு, தாய்க்கு தோஷம், அசையா சொத்து அமைய இடையூறுகள், சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும்.
 • 5ஆம் வீட்டில் இருந்தால் புத்திர தோஷம், பூர்வீக தோஷம் மற்றும் தத்து புத்திர யோகம் மற்றும் உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
 • 6ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை பந்தாடும் பலம், வலிமையான வாழ்க்கை, வாழும் அமைப்பு மற்றும் எதிர்பாராத பண வரவுகள், தைரியம், துணிவுடன் வாழும் அமைப்புகளும் உண்டாகும்.
 • 7ஆம் வீட்டில் சனி இருந்தால் திருமணம் தாமதம், அமையும் வரன் வயதான தோற்றம், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு மற்றும் கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகும்.
 • 8ஆம் வீட்டில் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்றாலும் பொருளாதார கஷ்டம், ஏழை குடும்பத்தில் திருமணம், எதிரிகளால் கண்டம் மற்றும் கண்களில் பாதிப்பு உண்டாகும். அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும்.
 • 9ஆம் வீட்டில் இருந்தால் பொதுப்பணியில் ஈடுபடும் அமைப்பு, தந்தை மற்றும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற அமைப்பு, பூர்வீக சொத்து இழப்பு உண்டாகும்.
 • 10ஆம் வீட்டில் சனி இருந்தால் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் அமைப்பு, அடிமைத் தொழில், பொதுப் பணியில் ஈடுபடும் அமைப்பு, மற்றவர்களை வழி நடத்தும் வலிமை உண்டாகும். 10ல் சனி இருந்தால் பதவிகளில் திடீர் இழப்பு உண்டாகும்.
 • 11ஆம் வீட்டில் இருந்தால் நோயற்ற வாழ்வு, எதிர்பாராத லாபங்கள், அசையா சொத்து சேர்க்கை, தன சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதர தோஷம் உண்டு.
 • 12ஆம் வீட்டில் சனி அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, எதிரிகளால் தொல்லை, வீண் விரயங்கள் ஏற்படும்.

ராகு-கேது பலன்கள் பெற

ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப ராகு, கேது பலன்களை வழங்குகிறார்கள். சில பூஜைகள் செய்வதன் மூலம் ராகு-கேதுவின் பலன்களை பெற முடியும்.
அரசு வேம்பு மரம் உள்ள விநாயகரை சனிக்கிழமை ராகு காலத்தில் சுற்றி வந்து வழிபடலாம்.
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபாடு செய்யலாம்.
அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் புளி சாதம் அல்லது எலுமிச்சை சாதம் வழங்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடலாம்.
பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடலாம்.
பாம்பு புற்றுள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம்.
ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒரு பொழுது மட்டும் விரதம் இருந்து வழிபடலாம்.
வாரந்தோறும் துர்க்கை அல்லது காளிக்கு எலுமிச்சம் பழம் மாலை சாத்தி வழிபடலாம்.
கோவில் யானைக்கு வாழைப்பழம் கொடுக்கலாம்.
தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு மாலை சாத்தி வழிபாடு செய்யலாம்.