அக்டோபர்மாதபலன்கள்

அக்டோபர் மாத பலன்கள்(2018)

மேஷம்/engkal.com

மேஷம் ராசி நண்பர்களுக்கு , மூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். உடல் நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் காத்து கொண்டு இருக்கும். சுப காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கும் திருமண காரியங்கள் விரைவில் கைகூடும். பூர்வ புண்ணியச் சொத்துகள் பல தடங்கலுக்கு பின் கைக்கு வரும். பயணங்கள் போன்றவற்றில் எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் செய்ய வேண்டி வரும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் வரும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.நண்பர்கள் நல்ல அறிவுரைகள் குடும்பத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்கு உட்படுவீர்கள். கடுமையான பணிசுமைக்கு ஆளாக நேரிடும். யாரிடமும் யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். முடிந்து போனது என்று நினைத்த தண்டச் செலவுகள் புதிய கோணத்தில் உருவெடுக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளிப்பார்கள். மாணவர்கள் முழுக்கவனத்துடன் செயல்பட்டு நல்லதரத்தை எட்டி பிடிப்பார்கள். ஆசிரியர்களின் நல் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு சாதகமாக அமையும். பரிகாரம்: செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் தீபமேற்றி வழிபாடு செய்வதால் விரயச்செலவுகள் இல்லாமல் விரும்பிய செலவுகள் செய்யும் நல்வாய்ப்பை பெறலாம்.

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

பாசமிகுந்த ரிஷப தோழர்களே, முக்கிய முடிவுகள் வெற்றியைத் தரும்.மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தாலும் சில கேளிக்கை விஷயங்களை மனம் நாடுவதால் அவப்பெயர் உண்டாகலாம். ஒரு சிலர் பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறும் யோகம் வரும். தெய்வ அருளால் ஆரோக்கிய உடலும், ஆயுள் பலமும் இனிதே உருவாகும்.  காலம் தாழ்த்தாமல் உணவு அருந்துங்கள். உடல் நலம் சீராகும்.அரசியல்வாதிகள் அரசு சார்ந்த விசயங்களில் கையெழுத்து இடும்பொழுது கவனம் தேவை. வீடு, மனை வாகன விசயங்களில் ஒப்பந்தங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். மற்ற விசயங்களில் சாதகமான சூழ்நிலை நிலவும்.வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்க முடியும். வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். உடன் பிறப்புகளால் பல நன்மைகள் கிடைக்கும். நண்பர்கள் வட்டாரம் பெருகும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனப்பிரச்னை மற்றும் பொருளாதார பிரச்சனைகள் தானாக விலகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் ஒன்றின் பின் ஒன்றாக கிடைக்கும். தொழிலில், வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும். தந்தை வழி சொத்துகள் பல்கி பெருகிட புதிய வழிமுறைகள் உருவாக்கித் தரும். உணவு பழக்க வழக்கங்களில் தகுந்த கட்டுப்பாடு கடைப்பிடித்தல் நலம் தரும்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவிப்பார்கள். மேலதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உடன்பணிபுரிபவர்களிடம் அனுசரனையாக நடப்பது உத்தமம்.

சந்திராஷ்டமம் : 14,15,16,17 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

உதவி செய்யும் மனமுடைய மிதுன ராசி அவர்களுக்கு, உங்கள் மனதில் எதிரி என்ற நிலையில் இடம் பெற்றவர் செய்ய நினைத்த கெடுதல்கள் தூள் தூளாகும். வாழ்க்கைத் துணையின் பேச்சால் அவ்வப்போது படபடப்பு போன்ற விஷயங்கள் வந்து போகும். பிள்ளைகளால் இருந்து வந்த மனக்கசப்பு மாறி நிம்மதி நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மனைவி வழியில் சில ஆதாயங்களை பெற முடியும். நண்பர்கள் வகையில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. முயற்சிகள் எதுவானாலும் வெற்றியடைய வாய்ப்புண்டு. எதிர்பார்ப்புகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நிறைவேறும். கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் பிரச்சனை தீர விரைவில் வழி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்.எடுத்த காரியங்களை முடிப்பதில் சில தாமதங்கள் உண்டாகும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. உத்யோகத்தில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும். காசோலை சம்மந்தமான விசயங்களில் கவனம் தேவை. முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். உடன் பணிபுரிவோரை அனுசரித்து போவது சிறந்தது. யாரையும் நம்பி படித்து பார்க்காமல் கையெழுத்து போட வேண்டாம்.

சந்திராஷ்டமம் : 17,18,19 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

கனவை நினைவாகும் கடக ராசி நேயர்களே, வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். தகுந்த நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே வாங்கிய பழைய கடனை ஓரளவு குறைக்க முடியும். குடும்பத்தில் தாயின் அன்பும், வீடு, மனையில் பெண் தெய்வ சக்திகளின் அனுகூல பிரவேசமும் நிகழ்ந்து புதிய உற்சாகம் பெறுவீர்கள். விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் பங்காளிகள் மற்றும் பக்கத்து நிலக்காரர்களால் இடைஞ்சல் அனுபவிக்கும் மார்க்கம் உண்டு. அதனால் நன்மையே உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்து மனம் மகிழ்ச்சி தரும் வகையிலான செய்தி ஒன்றை பெறுவார்கள். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் ஆவண விசயங்களில் கவனத்துடன் இருப்பது அவசியம்.  பெற்றோர்களின் ஆலோசனை முக்கிய நேரத்தில் கிடைக்கும். தடைப்பட்ட திருமண காரியம் விரைவில் கைகூடும். பிரயாணத்தால் நிறைய ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடைபெறும். வெளியூர் பயணம் சென்று வர அதிகப்படியான வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் பெரிய ஆதரவு உண்டு. தொழில், வியாபாரத்தில் பெரியளவில் சாதிக்க முடியும்.பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் தேவையான பொருட்கள் சமயத்தில் கிடைக்காமல் பதட்டத்திற்கு ஆளாவார்கள்.  ஒரு சிலருக்கு பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறும் சூழ்நிலை உருவாகும். வண்டி, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் உங்களை தேடி வரும்.

சந்திராஷ்டமம் : 19,20,21,22 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

simam rasi/engkal.com

மற்றவர் மனதை புரிந்து நடக்கும் சிம்மம் ராசி தோழர்களே, தேவையில்லாத காரியங்களில் தலையிட்டு சிக்கலில் சிக்கி கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் ஆரம்பத்தில் ஒரு சில பிரச்சனைகளை சந்தித்தாலும் மாத இறுதியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். ,தொழிலில், வியாபாரத்தில் பெரிய முதலீட்டை தவிர்க்கவும். கடந்த காலத்தில் எதிரித்தனம் பாராட்டியவர்கள் வீட்டில் நடக்கும் சுபகாரியம் ஒன்றில் கலந்து கொள்ள உங்கள் வீட்டுக்கு விசேஷ அழைப்பிதழ் வரும். கவனமுடன் செயல்பட்டு தவிர்த்து விடுவது நன்மை பயக்கும். தந்தை வழி தொழில்களை பின்பற்றி பணிபுரிவோர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து ஆதாயங்களும், பணவரவுகளும் தட்டி பறிக்க திருடர்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் முயற்சி செய்வார்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை. அடிக்கடி வாகனம் பழுதாகும். குடுமத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டு. கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. பண வரவில் இழுபறி நிலை நீடிக்கும். இக்கட்டான நேரத்தில் நேரங்களில் மௌனம் சாதிப்பது நல்லது. திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை உண்டாக்கும். நேர்மையாக நடந்து கொண்டால் மட்டுமே பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

சந்திராஷ்டமம் : 22,23,24 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே, தொழிலதிபர்கள் புதிய முதலீடுகள் செய்வதை இப்பொழுது ஒத்திப் போடுவது சிறந்தது. ஆடம்பர எண்ண்ங்களை ஒதுக்கி விட்டு, கிடைத்த லாபத்தை பயன்பாடு உள்ள வகையில் பயன்படுத்துங்கள். புதிய முயற்சியில் இறங்கி அதில் பெரியளவில் வெற்றி பெற முடியும். குடும்பத்தில் ஆடம்பர செலவு அதிகமாகும். திருமணம் ஆகாத ஆண், பெண் இரு பாலருக்கும் விரைவில் திருமண நடைபெறும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உதவியாக இருக்கும்.  குடும்பத்துடன் தூரத்து பயணம் செல்ல வேண்டிவரும். குடும்பத்தில் உங்களின் பேச்சுக்கு நல்ல மதிப்பு, மரியாதை இருக்கும். புது வீடு, மணை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்யோகத்தில் நல்ல பல சலுகைகள் கிடைக்கும்.மேலதிகாரிகள் உங்களை மனதில் வைத்து தான் அடுத்த கட்ட நிலைக்கு உங்களை அழைத்துச் செல்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. தந்தையின் வழி தொழில் செய்பவர்கள் தந்தையின் நீண்ட கால திட்டம் ஒன்றை உங்கள் மூலமாக நிறை வேற்றும் சிந்தனை தந்தையின் மனதில் அதிகரிக்கும்.குடும்பத்தில் தாயின் உடல் நலத்தில் கவனமும், வீட்டு பாதுகாப்பில் தகுந்த கவனமும் செலுத்துவது நன்மை தரும். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு பத்திரங்களை நம்பிக்கையில்லாத நபர்களிடம் கொடுப்பது சிரமம் தரும். கவனம் தேவை. பெண்கள் சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின் தன்மையை உணர்ந்து செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆபரணச் சேர்க்கையிலும் அனுகூல பலன்கள் உண்டு. வேலைப்பளு காரணமாக உணவு உண்ண நேரமில்லாமல் வயிற்றுத் தொந்தரவு ஏற்படலாம். அலர்ஜி போன்ற உபாதைகளும் வரலாம்.ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். நண்பர்கள் உங்களுக்கு தேடி வந்து உதவி செய்வர். கடன் வாங்குவதை தவிர்க்க பார்ப்பீர்கள்.

சந்திராஷ்டமம் : 24,25,26 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

thulam/engkal.com

எந்த ஒரு பிரச்சனையும் சுலபமாக தீர்வு காணும் துலாம் ராசி தோழர்களே,  கணவன் மனைவிடையே அன்பும் அன்யோன்யமும் அதிகரிக்கும். மனதில் குழப்ப நிலை நீடிக்கும். உடன் பிறந்தவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து தர முடியும். வண்டி, வாகன சேர்க்கை ஏற்படும். தடைகள், சிக்கல்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிய முடியும். வெளிவிவகாரப் பேச்சுகளை தவிர்த்து குடும்ப ஒற்றுமையை பாதுகாக்கவும். ஆயுள், ஆரோக்கிய பலம் உண்டாகும். அவ்வப்போது படபடப்பு தன்மை ஏற்பட்டு பின்னர் விலகும். விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் அமைதி நிலவும்.வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். மன உலைச்சலால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைப் புகழ்ந்து பேசுபவரை நம்ப வேண்டாம். புத்திசாலித்தனமாக அவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொருளாதார ரீதியிலும் உடல் ஆரோக்கியத்திலும் வளமான நன்னிலைகள் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை எதிர்பார்ப்புகள் மங்கலமாய் நிறைவேறும். சேமிப்பு பெருகும். இதை உங்களின் குழந்தையின் பேரில் சேர்த்தால் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ வழிபிறக்கும். அரசியல்வாதிகள் கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். புதிய முயற்சிகளில் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாளாக நின்று செயல் படுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். மனக்கவலை மறந்து மன மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பயணங்கள் அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

சந்திராஷ்டமம் : 26,27,28 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

viruchchikam

எளிமையான தோற்றத்தில் காணப்படும் விருச்சகம் ராசி தோழர்களே, சகோதரர்கள் வகையில் கருத்து மாறுபாடுகளை உருவாக்க எதிரித்தனம் செய்வோர் தந்திரமாக செயல்படுவார்கள்.உத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டுப் பயணம் சென்று திரும்பும் வாய்ப்புகள் சிலருக்கு அமையலாம். நல்ல அனுபவங்களும் ஏற்பட்டு ஆதாய வரவினங்கள் தகுந்த முறையில் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கைக்கு பாத்திடமாவீர்கள். புதிய கடன்கள் வாங்கி பழைய கடன்களை அடைக்க நேரிடும். பெண்கள் குடும்பத்தில் சகல தேவைகளையும் மனநிறைவுடன் பூர்த்தி செய்வார்கள். ஆபரணச் சேர்க்கை அனுகூலமாக உள்ளது. உங்களின் ஆலோசனை மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும். மனைவி வழி சொந்தங்களினால் அனுகூலமான பலனை கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் பெற்றோர்களின் அன்பையும், ஆதரவும் கிடைக்கும். மனதில் புதிய தெம்பும் தைரியமும் உண்டாகும்.கணவன் மனைவிடையே சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். வாழ்க்கைதுணையின் மூலம் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் எல்லாரையும் அனுசரித்து செல்லவும். புதிய தொழில் துவங்கும் யோகங்களும் வந்து சேரும். கணவனின் அன்பும், ஆதரவும், ஆலோசனையும் உங்களுக்கு மன நிறைவைக் கொடுக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் முழுமன ஈடுபாட்டுடன் செயல்படும் சூழ்நிலைகள் உள்ளது. நண்பர்களால் சிறு இடையூறு தரும் கவனச்சிதறல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சந்திராஷ்டமம் : 1,2,3 & 28,29,30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

thanusu

மதிப்பும் மரியாதையும் மிகுந்த தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று நேர்த்தி கடனை நிறைவேற்ற முடியும். முக்கிய இடத்தில் இருந்து வரவேண்டிய செய்திகள் நல்ல செய்தியாக இருக்கும். உத்யோகத்தில் பொறுமை அவசியம். புதியதாக தொழில் துவங்க நிறைய வாய்ப்புள்ளது.குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த சிறு சிறு மனஸ்தாபங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும். மனைவி, கணவணுக்கு சிறிய காய்ச்சலுக்கு கூட தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக அவசியம். மனைவி மற்றும் அவர் குடும்பத்தவரின் உதவியான செயல்களால் உங்களுக்குடைய கடன் வகைகளை ஓரளவு சரி செய்யலாம். அன்றைய வேலையை அன்றே செய்து முடிப்பீர்கள். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரும். மேலதிகாரிகளை அவமரியாதை செய்து விடாதீர்கள்.உடல்நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ஆரோக்கியத்தை பெறமுடியும். குடும்ப நிர்வாகம் கவனிக்கும் பெண்கள், பணக் கஷ்டம் எதுவுமின்றி சிறந்த முறையில் குடும்பத்தை நிர்வகிப்பார்கள்.உத்தியோகஸ்தர்கள் கடந்த சில காலமாக அனுபவித்து வந்த பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபட வேண்டிய கால கட்டம். தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் திக்குமுக்காட வைக்கும்.உடன்பிறப்பு வகையில் சுப விரயங்கள் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் உரிய நேரத்தில் கிடைக்கும். புது வாகனம் வாங்குவது குறித்து யோசனை வரும். வீட்டில் ஏதேனும் சுப நிகழ்ச்சி நடைபெறும். அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ள வேண்டிய மாதம்.

சந்திராஷ்டமம் : 3,4,5 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

அனைவரிடமும் அன்பாக பழகும் மகரம் ராசி தோழர்களே, பூர்விக சொத்து வகையில் பணம் வரும். ஏற்கெனவே இருந்த பழைய பிரச்சனைகள் படிப்படியாக குறையும். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம். உடன் பணிபுரிபவர்கள், உங்களிடம் எதிரித் தனம் காட்டியவர்கள் சிலர் சமரச முயற்சிகளில் ஈடுபடுவார்கள். மறப்போம், மன்னிப்போம் பாணியில் நடந்து கொள்ளுங்கள். பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பிறரது குறுக்கீடு எதுவுமின்றி சுயமான சிந்தனையுடன் செயல்பட்டு அதிகாரிகளிடத்தில் நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி சிறந்த குடும்ப நிர்வாகியாக திகழ்வார்கள். மனதில் புதிய உற்சாகம் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட விஷயங்கள் இந்த மாத சாதகமாக முடியும். பயண அலைச்சல்கள் அதிகம் இருந்தாலும் அதற்கேற்ற அனுகூலமான பலன்களும் உண்டு. உத்யோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பான முறையில் நடக்கும். ஆபரணச்சேர்க்கை சாதகமான நிலையில் உண்டு.அரசியல்வாதிகள் பிறர் பேச்சுகளை நம்பி ஏமார வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எதிலும் கவனம் தேவை.அலைச்சல் அதிகம் ஏற்படக் கூடும் ஆகையால் நேரத்திற்கு உணவருந்தி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

சந்திராஷ்டமம் : 5,6,7 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

kumpam

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, அடுத்தவர்களின் கருத்துக்கு இடம் கொடாமல் நீங்களே முடிவெடுத்துக் கொண்டால் பிரச்சனைகளுக்கு இடமே இல்லை. மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். பதவி உயர்வை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான தகவல் கிடைக்கும்.பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், அதிக பட்ச வேலைகளை தானே விரும்பி ஏற்றுக் கொண்டு செயல்படுவர். அரசியல்வாதிகள் மூத்த தலைவர் ஒருவரால் நீங்கள் புகழப்படுவீர்கள். உடனிருப்போரின் தகுந்த ஒத்துழைப்பை பெற முயற்சிப்பீர்கள்.பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். தகுந்த கவனத்துடன் செயல் படுங்கள் ஆதாயம் கிட்டும். மாணவர்கள் தங்கள் படிப்பில் தேவையான கவனம் செலுத்துவதால் அனைவரிடமும் நற்பெயர் பெறமுடியும்.உங்களுக்கு எதிராக வரும் தடைகளை புத்தி கூர்மையால் தடுக்கவும். உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் வரும். எந்த காரியத்தை செய்ய நினைத்தாலும் கடவுளை வேண்டிக்கொண்டு செய்வது நல்லது.  குடும்பத்தவரின் தகுந்த ஒத்துழைப்பு ஊக்கம் பெறச் செய்யும். ஆபரணங்களை தகுந்த முறையில் பாதுகாப்புடன் அணிந்து செல்வது சிரமங்கள் வராது தவிர்க்கும். அதே நேரம், ஆடை, ஆபரணங்கள் ஏராளமாக சேரும்.

சந்திராஷ்டமம் : 7,8,9, ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

menam

கடவுள் பக்தி மிகுந்த மீனம் ராசி தோழர்களே, உங்கள் பிடிவாத போக்கை தளர்த்திக் கொள்வதால் நன்மை உண்டாகும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் பணிபுரிவோரின் நற்செயல்கள் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் பணிபுரியும் அலுவலகத்தின் ஒத்துழைப்பால் இனிதே நடக்கும்.குடும்பத்தில் நடக்கும் சுப காரியங்களை முன்னின்று நடத்தி வைக்க முடியும். வெளியூர் தொடர்புகள் அதிகரிக்கும்.  அரசியல்வாதிகள் ஆதாயம் கிடைக்க நல்லோர் உடன் இருத்தல் வேண்டும். நம்மவர் என்று எண்ணி எதிலும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். அரசு விவகாரங்களில் பொறுமையாக கையாள வேண்டிய விசயங்கள் அனைத்தையும் அப்படியே சற்று தள்ளிப்போடுவது உத்தமம். படிப்பில் புதிய உத்வேகத்துடன் செயல்பட திறமையான நண்பர் ஒருவர் கிடைப்பார்.குடும்பத்தில் சுப விரைய செலவுகள் அதிகம் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் ஒரு சில மருத்துவ செலவுகள் வந்து போகும். வெளிநாடு சென்று வரும் யோகங்களும் உண்டாகும்.   வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்கள். மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு தேவையான அத்தனை உதவிகளையும் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் : 9,10,11,12  ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.