ஆகஸ்ட் மாத பலன்கள்(2018)

மேஷம்/engkal.com

நினைத்தது எல்லாம் வெற்றி பெரும் மேஷம் ராசி நண்பர்களே குருவின் பார்வை ராசி மீது விழுவதால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சுபச்செலவு உண்டாகலாம். அதனால் வெற்றியும் பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். உறவினர்கள், நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைத்து சுகமும், நிம்மதியும் கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த சந்தோஷம் நிச்சயம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு தீரும். மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவு பெறுவார்கள். தாய் வழி சொந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பிரிந்து சென்ற உறவினர்கள் ஒன்று சேருவார்கள். உத்யோகத்தில் இது வரை சந்தித்த பிரச்சனைகள் தானாக விலகும். தொழில், வியாபாரத்தில் சற்று கூடுதல் கவனம் தேவை.

சந்திராஷ்டமம் : 18,19,20 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

பாசமிகுந்த ரிஷப தோழர்களே  பணம் சார்ந்த பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வரும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும். வெளிநாடு சம்பந்தமான படிப்புகளுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. உடல்நலத்தைப் பொறுத்தவரை சோம்பேறித்தனம் அதிகமாகலாம். கவனம் தேவை. கார்த்திகை: இந்த மாதம் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள்.பொருளாதாரம் ஏறுமுகவாகவே இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் சகஜமாக பேசி பழகுவர். உடன் பிறந்தவர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீர்ந்து பணம் கைக்கு வரும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு கணிசமான வழியில் உயரும். உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ளவும். குடும்பத்தில் உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். உங்கள் சாமர்த்தியமான பேச்சால் கஷ்டமான காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகளை யோசித்து செய்யவும்.

சந்திராஷ்டமம் : 20,21,22,23 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

உதவி செய்யும் மனமுடைய மிதுன ராசி அவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில் இடம்பிடிப்பார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயர வழி பிறக்கும். விமர்சனக்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். சொந்த வேலை சம்பந்தமாக வெளியூர் சென்று வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் தானாக உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி சேமிப்பீர்கள். குடும்ப விஷயங்களை வாழ்க்கை துணையுடன் கலந்து ஆலோசிப்பது மன நிம்மதியை தரும். திருமணம் மற்றும் சுப காரியங்கள் கைகூடும். உத்யோகம் தொடர்பாக அடிக்கடி பயணங்கள் பயணம் மேற்கொள்வீர்கள். புது தொழில் தொடங்குவது குறித்து ஆலோசனை பெறுவீர்கள்.குடும்பத்தினருக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் : 23,24,25 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.

கனவை நினைவாகும் கடக ராசி நேயர்களே, உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். குடும்பாதிபதி சூரியன் ராசியில் இருப்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். கலைத்துறையினர் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். மாணவர்களுக்கு புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும். உடல்நலத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.  உத்தியோகம் பார்ப்பவர்கள் பிந்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காண்பர். பூசம்: இந்த மாதம் வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும் ஆதரவும் பெருகும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பல புதுமைகளை செய்ய நினைப்பீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு முன்னேறும். புனர்பூசம்: இந்த மாதம் விருந்து விழா என சென்று வருவீர்கள்.தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும்.

சந்திராஷ்டமம் : 25,26,27,28 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.

simam rasi/engkal.com

மற்றவர் மனதை புரிந்து நடக்கும் சிம்மம் ராசி தோழர்களே, எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரனே ராசியில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். மேலிடத்துடன் இருந்து வந்த உரசல்கள் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த கசப்புணர்வு அகலும். பெண்களுக்கு உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும்.நீங்கள் செய்ய நினைக்கும் எல்ல காரியங்களிலும் வெற்றி பெற வேண்டும் நினைப்பீர்கள். முக்கிய காரியங்கள் செய்யும் போது அவசரம் காட்ட வேண்டாம். குடும்பத்துடன் உல்லாச பயணம் செல்வதற்கான வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சி ஏற்படும். மறைமுக எதிரிகளின் பலம் குறையும்.   ஆன்மீக பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீர வழி கிடைக்கும். உத்யோகத்தில் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களிடம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவீர்கள்.உங்களது கலைத்திறன் வளரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை. நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். கண் சம்பந்தமான உபாதைகள் அகலும்.

சந்திராஷ்டமம் : 1,2,3 & 28,29,30 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.

கன்னி ராசி அன்பர்களே,எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். தொழில் ஸ்தானத்தை குரு சனி பார்க்கிறார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். குடும்பத்தின் மேன்மை உயரும்.வரும். குடியிருக்கும் வீட்டை புதிப்பிக்கவோ, அல்ல வீடு மாற்றி செல்லவோ வேண்டி வரும். உங்களிடம் கடன் பட்டவர்கள் தேடி வந்து பணத்தை திருப்பி தருவர். பண சேமிப்பு உயரும். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டு. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். நண்பர்கள் மூலமாக நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களுக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும்.ஒரு சில அவசர முடிவுகளால் முக்கிய நபர்களின் நட்பை இழக்க நேரிடலாம். பெற்றோர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். உடல் தொந்தரவு காரணமாக மருத்துவரிடம் செல்ல வேண்டிவரும். திட்டமிட்ட பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தூரத்து உறவினர் வருகை அதிகம் உண்டு. கணவன் மனைவி நெருக்கம் அதிகம் ஆகும். உத்யோகத்தில் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அரசியல்துறையினர் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

சந்திராஷ்டமம் : 3,4,5 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.

thulam/engkal.com

எந்த ஒரு பிரச்சனையும் சுலபமாக தீர்வு காணும் துலாம் ராசி தோழர்களே, நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பாதிபதி செவ்வாய் சுகஸ்தானத்தில் உச்சமாக இருக்கிறார். குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். அரசியல்துறையினருக்கு கட்சிப் பிரச்சனைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைக்கும். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு அதிக வாய்ப்புகள் வந்து குவியும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். விளையாட்டுகளில் பரிசுகள் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவால் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிறிது சிரமம் ஏற்படும். உங்கள் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பணத்தை கையாளும்போது கூடுதல் கவனத்துடன் இருக்கவும்.உடல் நலம் சீரான நிலையில் இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்தினால் பல நன்மைகள் கிடைக்கும். வண்டி வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்படும் வீண் செலவுகளால் மன நிம்மதி குறையும். குல தெய்வ வழிபாடு செய்வதில் தாமதங்கள் உண்டாகும்.  குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் அதிக மகிழ்ச்சியை கொடுக்கும். பெண்கள் வகையில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் நட்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரம் பெரியளவில் வெற்றி பெரும்.  பதவிகளைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். உங்களை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்களை கற்றுத் தெளிவீர்கள்.

சந்திராஷ்டமம் : 5,6,7 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.

viruchchikam

எளிமையான தோற்றத்தில் காணப்படும் விருச்சகம் ராசி தோழர்களே, வீடு – மனை – வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். எதிர்பார்த்தபடி எதுவும் நல்லதாகவே நடக்கும். குருவின் விரைய ஸ்தான சஞ்சாரத்தால் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் ஸ்தானத்தில் சப்தமாதிபதி சுக்கிரன் அமர தொழில் ஸ்தானாதிபதி சூரியன் பாக்கியஸ்தானத்தை புதன் மற்றும் ராகுவுடன் இணைந்து அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.எதிர்பாராத பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். தொடர் அலைச்சல் காரணமாக உடல் அசதி, சோர்வு ஏற்படலாம். பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்களிடம் உங்கள் பிடிவாத குணத்தை தளர்த்தி கொள்ளவும். பெற்றோர்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். வீட்டில் ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டு.  குடும்பஸ்தானத்தில் சனி சஞ்சரித்தாலும் குடும்பாதிபதி குருவின் சார பலத்தால் குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும்.உடன்பிறந்தவர்கள் வகையில் ஒற்றுமை பலப்படும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். முக்கிய காரியங்களை நீங்களே தனியாளாக நின்று செய்து முடிக்க வேண்டிவரும். மனைவியின் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் அதிகம் பெறுவீர்கள். குடும்ப சுமையை கையில் எடுத்துக்கொள்வீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் ஒன்றை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அனாவசிய செலவுகளை தவிர்க்க பார்ப்பீர்கள்.  பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம் : 7,8,9 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

thanusu

மதிப்பும் மரியாதையும் மிகுந்த தனுசு ராசி நண்பர்களே, தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.  புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.எந்த ஒரு காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது உத்தமம். அடுத்தவர்கள் செய்ய தயங்கும் காரியங்களை தனியாளாக நின்று செய்து முடிப்பீர்கள். உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனை கேட்டு பல முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்துறையினர் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுவது அவசியம்.உடன் பிறப்புகளுடன் ஏற்படும் கருத்து வேறுபாடு வந்தாலும் அதை பெரிதுபடுத்தவேண்டாம். நண்பர்களுக்கு உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். உடலில் உஷ்னம் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். மனதில் உள்ள மனக்குழப்பம் மறையும்.   பூர்வீக சொத்து கைக்கு வரும். வாழ்க்கை துணை வகையில் பல உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.   பழைய தொழிலை மாற்றி புது தொழில் ஒன்றை விரைவில் தொடங்குவீர்கள். அயராத உழைப்பால் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும். ஆசிரியர் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். 

சந்திராஷ்டமம் : 9,10,11 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.

அனைவரிடமும் அன்பாக பழகும் மகரம் ராசி தோழர்களே, தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்ப ஸ்தானத்தை குரு – சுக்கிரன் – சனி ஆகியோர் பார்க்கிறார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். அரசியல்துறையினர் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர்.வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும்.   உங்கல் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். உடல்நலத்தினை பொறுத்தவரை மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். உடல் நிலை சீராக இருந்து வரும். மனைவி வழி சொந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். உத்யோகத்தில் கொடுக்க பட்ட வேலைகளை விரைவாக செய்வீர்கள்.புதிய வீடு வாங்கும் முயற்சிகள் தாமதம் ஆகும். உடன்பிறப்பு வகையில் பண உதவி கிடைக்கும். ஆன்மிக பணகளில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி தோன்றும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். உறவினர்கள் – நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 11,12,13,14 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.

kumpam

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே,எதிலும் புத்திக்கூர்மையுடன் செயல்படுவீர்கள். இதுவரை சந்தித்த பொருளாதார சிக்கல்கள் விலகும். உங்கள் வசதி வாய்ப்புகள் பெருக கடினமாக உழைப்பீர்கள். ஒரு சில வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஒரு சிலருக்கு திடீர் பிரயாணம் ஏற்பட்டு வெளியூர் சென்று வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உங்கள் தலைமையில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வீடு வாங்கும் யோகம் அமையும். வண்டி, வாகனம் வாங்கும் வாய்ப்புகளும் உண்டு. வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்களும் பண விரயமும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு – மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். அரசியல்துறையினருக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும்.நீங்கள் விரும்பியபடியே ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்களின் வருகை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம். குடும்பத்தில் ஆடம்பர பொருள் சேர்க்கை ஏற்படும். உத்யோக வகையில் வீண் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. உடல்நிலையினை பொறுத்தவரை முன்னேற்றம் காண்பீர்கள். ஆனாலும் உடம்பில் உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். 

சந்திராஷ்டமம் : 14,15,16 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

menam

கடவுள் பக்தி மிகுந்த மீனம் ராசி தோழர்களே,உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். குடும்ப மருத்துவரிடம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பரிசோதித்து கொள்ளவும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை இருந்து வரும். வெளியில் இருந்து வர வேண்டிய பணம் சிறிய தாமதித்து பின் கைக்கு வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் குரு பார்ப்பது நன்மைக்கு வழி வகுக்கும். குடும்பத்தில்  உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்க்கட்சியினர் உதவுவார்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் குறையும். குடும்பத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு நீங்கள் முக்கிய காரணமாக இருப்பீர்கள். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். வெளியூர் சுற்றுலா பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டு.தொழில், வியாபாரத்தில் திருப்தியான நிலை உண்டாகும்.மறைமுக போட்டிகள் இருக்கும். தொண்டர்களின் உதவியுடன் செயலாற்றுவீர்கள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

சந்திராஷ்டமம் : 16,17,18 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.

Close Menu