ஏப்ரல் மாத பலன்கள்(2018)

மேஷம்/engkal.com

மேஷ ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, வீண் பேச்சுக்களை தவிர்த்து காரியத்தில் கவனமாக இருக்கவும்.குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும்.பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். கொள்கைப் பிடிப்பில் தளர்ச்சி ஏற்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி திரும்பும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும். உணவுகட்டுப்பாடு அவசியமாகிறது. தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். வாடகை வீட்டில் இருப்பவர்கள் வேறு வீட்டிற்கு மாற்றலாகி செல்ல கூடும். எதிர்பாராத அதிர்ஷ்டம் மாதத்தின் பின்பகுதியில் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்தவுடன் பழைய கடன்களை அடைக்க நினைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஆதாயம் ஏற்படும். புது வண்டி வாங்குவது யோசனை செய்வீர்கள். உத்யோகத்தில் கவனமாக பணிகளை மேற்கொள்ளுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிவரும். தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும்.

சந்திராஷ்டமம் : 4,5,6 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும்.

ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம்(ஏப்ரல் ) பலன்படி, பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நீங்கள் அநியாயத்தை எதிர்க்கத் தயங்க மாட்டீர்கள். தெய்வ நம்பிக்கை மற்றும் சுயமாக சிந்தித்து செயல்படும் திறன் அதிகரிக்கும்.உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோசமான சூழல் நிலவும். செவ்வாய் பகவான் சாதகமாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம்

கையில் தாராள பணப்புழக்கம் இருந்து வரும். பழைய வீட்டை மாற்ற வேண்டிவரும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உடன்பிறப்புகளிடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். வண்டி, வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். உங்கள் விருப்பங்களை எதுவானாலும் அதை நிறைவேற்றிக்கொள்ள இயலும். உத்யோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும், தொழில், வியாபாரத்தில் எப்போதும் கவனமாக இருக்கவும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : 6,7,8 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்குச் சென்று அன்னையை வணங்கி வாருங்கள்.

மிதுன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, இந்த மாதம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பாராத வகையில் சில அலைச்சல்கள் உண்டு.எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.  குறிப்பாக குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பாக அதிக அலைச்சல் இருக்கும்.எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். காரிய தடைகள் நீங்கும். மனதில் உள்ள குழப்ப நிலை தீரும். திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்காத வகையில் பல நற்பலன் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கும் உண்டாகும். பூர்வ புண்ணிய சொத்துக்களில் நிலவிய பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு தொழிலில் நற்பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 8,9,10,11 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள் நல்லது கிட்டும்.

 

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்து உள்ள நீங்கள் இந்த மாத பலன்படி, உங்களுக்கு நல்லது கெட்டதும் கலந்தே காணப்படும். முன் கோபத்தை குறைப்பதால் பல உண்டாகும்.வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். குறிப்பாக சில எதிர்பாராத செலவுகளால் பணம் நிறைய விரயமாகும்.தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.  குடும்ப செலவுகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெரும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. வேண்டியவர்களின் திருமண காரியங்களை தலைமை தாங்கி நடத்தி வைப்பீர்கள். கணவன் மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எதிலும் பதற்றமடையும் போக்கை கைவிட்டு நிதானமாக நடந்துகொள்ள பழகுவீர்கள். அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம்.பெற்றோர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும். தொழில், வியாபாரத்தில் பல புதுமைகளை புகுத்துவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.உழைத்தும் தமக்கு ஒன்றும் இல்லை என நினைப்பர்களுக்கு நன்மை கிட்டும் .அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

சந்திராஷ்டமம் : 11,12,13 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

பரிகாரம்: திங்கள் அன்று காலை சிவன் கோவிலுக்கு சென்று வர நம்மை கிட்டும் ..

simam rasi/engkal.com

சிம்ம ராசி அன்பர்களே, தன்நம்பிக்கையின் சிகரம் என வாழும் நீங்கள்   இந்த மாத பலன்படி, விலகி நின்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். குடும்பத்தில் பழைய அமைதி திரும்பும்.இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகும்.  உங்கள் பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மை இருக்கும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும்.உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும், மேலும் உறவினர் நண்பர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும்.பெண்களால் அனுகூலம் கிடைக்கும். மிகவும் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். ஆன்மீக பயணம் மேற்கொள்ளவீர்கள். கணவன் மனைவிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். குடும்ப நிர்வாகத்தை சிறப்பாக வழி நடத்துவீர்கள். வெளியில் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியும். ஒரு சிலருக்கு வாடகை வீடு பிரச்சனைகள் தீரும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் தடைகள் விலகி, கஷ்டங்கள் நீங்கி ஆதாயங்களை பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் ஏற்ற நிலை உருவாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும்.வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.

சந்திராஷ்டமம் : 13,14,15,16 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

கன்னி ராசி அன்பர்களே,  இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். இந்த மாத பலன்படி, மனதில் திட்டமிட்டு செய்ய நினைத்த காரியம் விரைவில் முடியும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். அலைச்சல்,டென்ஷன் ஓரளவு குறையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் எல்லாம் திட்டமிட்டபடி நடைபெறும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். தெய்விக காரியங்களில் ஆர்வம் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் தொடர்பு கிட்டும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். பூர்விக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களை பெறுவீர்கள். வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.  சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நனமை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். கையில் பண நடமாட்டம் தாராளமாக இருக்கும். குடும்பத்தினர் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்க பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும்.எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் சற்று வாக்குவாதம் ஏற்படலாம்.

சந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம். பொறுமை வேண்டும்.

பரிகாரம்: புதன்கிழமை பெருமாளை வழிபட்டால் நல்லது நடக்கும்.

thulam/engkal.com

துலாம் ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, உங்கள் காரியத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். இந்த மாதம் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்வீர்கள். புத்தி சாதுரியத்தால் பல காரியங்களை செய்வீர்கள். இதுவரை நீடித்த  வந்த பல பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.எந்த ஒரு கஷ்டத்தையும் தாங்கி கொள்ள கூடிய சகிப்பு தன்மை உங்களிடம் அதிகமாகவே இருக்கும். ஆனாலும் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சுபகாரியங்களுக்கான முயற்சியில் தாமத பலன் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். உடல் நலத்தில் அதிகம் கவனம் தேவை. சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம்.எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியும். பூர்விக சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பணத்தேவைகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை.உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பெரியளவில் சாதனை செய்வீர்கள். புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வரும் வாய்ப்பு உண்டு.

சந்திராஷ்டமம் : 18,19,20 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

பரிகாரம்: நவக்கிரஹங்களை சுற்றி புனித தலத்தில் குளித்து வழிபடுங்கள்

viruchchikam

யாரேனும் தீங்கு செய்து விட்டால் அதனை ஒருபோதும் மறக்காத குணமும், அதே வேளையில் மன்னிக்கும் குணமும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். பண வரவு திருப்தி தரும். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும்.உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் என்று சேருவார்கள்.குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆன்மீகத்தில் மனதை செலுத்துவதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். உடன்பிறப்புகளுக்கு வேண்டிய உதவிகளை செய்வீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் சில ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்பட வாய்ப்புண்டு, கவனம் தேவை. சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் சீராகும். கடன்கள் கட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்வீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். பாராட்டுகளும் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 20,21,22 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

thanusu

தனுசு ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும்.. உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர்.தேவையற்ற பயணங்களால் உடல் அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத உதவி கிடைக்க பெறுவதால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.  பூர்விக சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல் தீரும். புது முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகம் இருக்கும். உடன்பிறப்பு வகையில் பண விரையம் ஏற்படும். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு.  கணவன் மனைவி இடையே இணக்கமான போக்கு காணப்படும். வீடு, வாகனங்களுக்கான செலவு கூடும். மற்றவர்களுக்காக சில முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும். சிறிய முதலீட்டில் புது தொழில் ஒன்றை தொடங்குவீர்கள்.

 உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் தவறை உணர்ந்து உங்களிடம் வந்து சரணடைவார்கள்.திரை துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும்.

சந்திராஷ்டமம் : 22,23,24 ஆகிய நாட்களில்  கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

சுயகௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி,  இந்த மாதம் பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம். எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் அதிக சிரமம் ஏற்படும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் அவசியம். குடும்பத்தில் பொருள் சேர்க்கை உண்டு. கணவன் மனைவிடையே சிறு சிறு ஒற்றுமை குறைகள் தோன்றி மறையும். பெற்றோர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய வாகன வசதி பெற்று மகிழும் வாய்ப்புண்டு. புது மனை அல்லது வீடு வாங்கும் யோகம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். பணம் பலவழிகளிலும் வந்து சேமிப்பை உயர்த்தும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைபளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள்.சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள்.  உத்யோகம் தொடர்பாக வெளியூர் சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுகொள்ளவீர்கள். மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள்.திரைத்துறையினருக்கு மிகப் பொன்னான காலமிது. வாய்ப்புகள் வந்து குவியும் மாதம்மீது.அரசியல்வாதிகளுக்கு வழக்கில்  வெற்றி கிடைக்கும்.  

சந்திராஷ்டமம் : 24,25,26 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் நமது பித்ருகலக்கு சாதம்மிட்டு முன்னோர்கள் வழிபடுங்கள் .

kumpam

கும்ப ராசி அன்பர்களே,அடுத்தவரின் மனதை எளிதில் புரிந்து கொள்ளும் ஆளுமை கொண்ட நீங்கள்  இந்த மாத பலன்படி, குடும்பத்தில் சுப செலவுகள் அதிகம் உண்டு. ஓயாத அலைச்சல் காரணமாக உடல் அசதியும் சோர்வும் ஏற்படலாம். உங்களுக்கு வந்த பிரச்சனைகள் எல்லாம் பனி போல விலகி நிற்கும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பூர்விக சொத்துக்களால் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். சற்றும் எதிர்பாராத வகையில் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கலாம்.பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். பண விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பணம் வந்தாலும், செலவுகளும் காத்துகொண்டு இருக்கிறது. குடும்ப வளர்ச்சிக்கான செலவு அதிகம் இருக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். சிலர் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர்.  திரை துறை சார்ந்ததவர்களுக்கு புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும்.

சந்திராஷ்டமம் : 1,2,3 & 26,27,28 29 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

பரிகாரம்: பைரவரை வணங்கவும்.

menam

எந்த பிரச்சனையிலும் தன்னை காத்துக்கொள்ளும் திறமை கொண்ட மீன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, ஆன்மீக காரியங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் சேமிப்பை உயர்த்தும். கணவன் மனைவிக்குள் அடிக்கடி ஈகோ பிரச்சனை வந்து போகும். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். முடிந்தவரை வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வீட்டில் திருமணம் தொடர்பான பேச்சு துவங்கும். வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருப்பதால் அனாவசிய செலவுகளை அறவே தவிர்க்கவும். முடிந்த வரை கடன் வாங்குவதை குறைத்து கொள்ளவும். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்களை புரிந்துகொள்வீர்கள். உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது. அரசியல்வாதிகளுக்கு மாதமுற்பகுதி பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு.

சந்திராஷ்டமம் : 29,30 & 1.5.2018 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

Close Menu