செப்டம்பர் மாத பலன்கள்(2018)

மேஷம்/engkal.com

மேஷம் ராசி நண்பர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். சிறு வியாபாரிகள் உழைப்புக் கேற்றாற்போல் ஆதாயத்தை எதிர்பார்க்க முடியும். சக பங்கு தாரர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை எதுவும் இருக்காது. புதுக் கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைக்க நேரிடும். தூரத்து உறவினர்களை சந்தித்து மகிழும் வாய்ப்பு கிட்டும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மனதில் இருந்து வந்த பயம், பதற்றம் நீங்கும். உடன்பிறப்புகளால் செலவுகளும், விரயங்களும் ஏற்படலாம். காதல் விவகாரங்களில் நன்மைகள் குறைவு. கணவன் மனைவி வழிகளில் நன்மைகள் உண்டு. விஐபிகளின் அறிமுகமும் ஆதரவும் கிட்டும். பால்ய நண்பர்களின் உதவி கிட்டும். கோர்ட் வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வெளியுலகில் உங்கள் மதிப்பு, கௌரவம் கூடும். திருப்தியான வாழ்க்கை சூழல் உண்டாகும். உத்யோகத்தில் பெரியளவில் மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.எதையும் சாதிக்கும் துணிவு உண்டாகும். புதிய முயற்சிகள் செய்ய முற்படுவீர்கள். பல லாபம் தரக்கூடிய திட்டங்களை யோசித்து செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் பெரியோர்களின் நல்லாசியும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். சொந்தங்கள் வீட்டிற்கு வாய்ப்புண்டு. அவர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக வாங்க இருந்த பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள். எல்லோரிடமும் விட்டுக் கொடுத்து பேசி அனைவரையும் தங்கள் பால் வைத்திருக்க முயற்சி செய்வீர்கள். சொத்து விவகாரங்களில் மற்றவர்களின் பேச்சை கேட்க வேண்டாம்.

சந்திராஷ்டமம் : 14,15,16,17 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

பாசமிகுந்த ரிஷப தோழர்களே, தொழில் துறையினருக்கு கடின உழைப்பு ஏற்படக் கூடும். அதனால் உடலும், சோர்வு அடைந்து விடும்.  அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்களுடைய திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். உடல் நலம் சீராகும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பழைய வீட்டை சீரமைக்கும் வேலை நடக்கும். குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று நேர்த்தி கடனை நிறைவேற்றவும். ஆன்மிகம் வழியில் பணம் நிறைய செலவாகும். நீண்ட விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இயலும். வெளியூர் பயணம் போன்ற அலைச்சல்களும் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சியும் வருமானமும் திருப்தி தரும்.எதிர்பார்த்த லாபம் கிடைக்க வில்லையே என மனம் நினைக்கும். புதிய முயற்சிகளை இப்போது ஆரம்பிக்கலாம். உத்தியோகஸ்தர்கள் வேலைபார்த்து வரும் இடத்தில் மேலதிகாரியிடமோ, அல்லது சக ஊழியரிடமோ கோபப் பட்டு பேசுவதை தவிர்க்கவும். குடும்பத்தில் அவ்வப்போது கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பூசல்கள் வந்து கொண்டிருக்கும். சிலருக்கு அடி வயிற்றுவலி ஏற்படும். எனவே உடல்நலனில் அக்கறை செலுத்தி மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. புதிய வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள். தொழிலில் ஏற்பட்ட தடங்கல்களை களைந்து விடுவீர்கள். உங்களுடைய பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. பெண்கள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும்.

சந்திராஷ்டமம் : 17,18,19 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

உதவி செய்யும் மனமுடைய மிதுன ராசி அவர்களுக்கு, புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அவர்களிடம் கருத்துக்களைக் கேட்டு உங்கள் வியாபாரத்தை சிறப்பாக மாற்ற முற்படுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். வேலைப்பளு குறையும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் ஒவ்வொன்றாக கிடைக்க ஆரம்பிக்கும். பணம் பலவகையில் வந்து சேரும். எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சிரமமின்றி சமாளிக்க முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும்.தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதில் இருந்த குழப்பங்களை தீர்த்துக் கொள்வீர்கள். அரசியல்துறையினர் வீண் அலைச்சலும், மன சோர்வும் உண்டாகும். மேலிடத்தின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக இருக்கும். வீண் செலவு, சிறு பிரச்சனைகள் உண்டாக நேரலாம்.வியாபரத்திற்காக புதிய இடம் வாங்குவீர்கள்.  உடன் பணிபுரிவோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு விரும்பிய பணியிடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் மாறும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தி ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள்.திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண பாக்கியமும், மணமானவர்களுக்கு பிள்ளைபேறு பாக்கியமும் உண்டாகும். ஒரு சிலருக்கு புது வீட்டிற்கு மாற்றலாகி செல்லக்கூடும்.சமுதாயத்தில் பெரிய அந்தஸ்து உள்ளவர்களின் சந்திப்பு ஏற்பட்டு அவர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.

சந்திராஷ்டமம் : 19,20,21,22 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்

கனவை நினைவாகும் கடக ராசி நேயர்களே, தெய்வ அனுகூலம் உங்களை அனைத்து காரியங்களிலும் உடன் இருந்து வழி நடத்தும். குடும்பத்தில் மிகவும் ஆர்வமாக செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் பிரச்சனைகளைக் கேட்டு நீங்களே முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். உடல்நலம் சரியில்லாதவர்களின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர் – சகோதரி யாரேனும் பிரிந்து சென்றிருந்தால் இப்போது ஒன்று சேர்வதற்கு வாய்ப்புள்ளது. உற்றார் – உறவினரின் வருகையால் இல்லம் சந்தோஷத்தில் மூழ்கும். தொழில் அமோகமாக நடக்கும். நிறைய வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. சேமிப்பில் கவனத்தை செலுத்துங்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்காததால் சில சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் வேலை பார்த்து வரும் இடத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் ஏற்படும். உடன் பணிபுரிபவர்கள் நன்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும்.புதிய முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு வெற்றி கிட்டும். குடும்பத்தினருடன் ஆன்மீக ஸ்தலங்கள் செல்லும் பாக்கியம் கிட்டும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் ஒன்றை வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு வசதி மிகுந்த வீட்டுக்கு மாறும் வாய்ப்பும் உண்டு. ஏற்கனவே பழைய கடனில் ஒரு பாதியை அடைக்க முடியும். வாழ்க்கைத்துணையிடம் விட்டு கொடுத்து போகவும். வெளியூரில் இருந்து வரும் செய்திகளும் தங்களுக்கு அனுகூலமாக இருக்கும்.வழக்கத்தை விட சற்று அதிகமாக உழைக்க வேண்டி வரும். பெண்கள் பேச்சில் நிதானம் தேவை. குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று வரும் போது பொறுமையைக் கையாளுங்கள். மாணவர்கள் வெளிநாடு சென்று மேற்கல்வி பயில விரும்புவோர் இப்போது அதற்கான நற்செய்தியை எதிர்பார்க்கலாம்.

சந்திராஷ்டமம் : 22,23,34 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

simam rasi/engkal.com

மற்றவர் மனதை புரிந்து நடக்கும் சிம்மம் ராசி தோழர்களே, உத்தியோகம் தொடர்பான வேலைகளுக்காக வெளியூர் செல்ல நேரலாம். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைப்பதால் உங்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கும். பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். வண்டி , வாகனங்களுக்காக புதிய முயற்சி செய்வோர் புதிதாக வாங்கலாம். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வதற்கு வாய்ப்புள்ளது. மொத்தத்தில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த லாபமும், விற்பனையும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடப்பதால் மனதிற்கு திருப்தி ஏற்படும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றத்தை காண்பீர்கள். பணிக்குச் செல்லும் பெண்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.பணத்தேவைக்காக நகைகளை அடகு வைக்க வேண்டிவரும். புதிய நகைகள் வாங்க இன்னும் சில காலம் ஆகலாம், அதுவரை பொறுமையாக இருக்கவும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபத்தை தூண்ட கூடிய வகையில் இருந்தாலும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத வகையில் சில உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு உண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய அலைச்சல் இருக்கும். மாணவமணிகளுக்கு நன்மைகள் நடக்கும். சிலர் எதிர்பார்த்த விசயங்கள் கை கூடி வரும். அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். எதையும் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. கடின உழைப்பும் நேர்மையான போக்கும் உங்களைக் காக்கும்.

சந்திராஷ்டமம் : 24,25,26 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே,குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். வீட்டில் புதிய பொருட்களின் சேர்க்கை உண்டு. குடும்ப சுமை அதிகமாகும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். நிதி நிறுவனங்களிடமிருந்து பண உதவிகள் கிடைப்பதில் தடங்கலும், தாமதமும் ஏற்படும். தொழிலாளர்களிடம் விட்டுக்கொடுத்து போவது தொழிலை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் குடும்ப விஷயங்களை சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் மட்டுமே வேலையில் நல்லதாக திறம்படச் செய்ய முடியும். யாரையும் நம்பி எந்த வேலையிலும் இறங்க வேண்டாம். மாணவர்கள் ஞாபக சக்தியும், கிரகிப்புத் திறனும் குறைந்து காணப்படும். அதனால் படிப்பில் கவனம் செல்லாது.உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். கையில் பண நடமாட்டம் தாராளமாக இருக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டு. புதிய முயற்சிகளில் இது வரை சந்தித்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். பெண்கள் நினைத்ததை கடைப்பிடித்து வருவது மிக முக்கியம். வேலை பார்த்து வரும் பெண்கள் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

சந்திராஷ்டமம் : 26,27,28,29 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

thulam/engkal.com

எந்த ஒரு பிரச்சனையும் சுலபமாக தீர்வு காணும் துலாம் ராசி தோழர்களே,  கடுமையான உழைப்பிற்குப் பிறகு அதற்கான பலனை அடைவீர்கள். அது உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறைவதற்குறிய சூழ்நிலைகள் தென்படும். உடன்பிறப்புகள் திருமண காரியம் தடையின்றி நடக்கும்.வீண் செலவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்ப ரீதியான முடிவுகள் எடுக்க வேண்டுமாயின் அவற்றை சற்று தள்ளிப் போடுவது நல்லது. இல்லத்தில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் கை கூடி வரும். சொத்து பிரச்சினைகள் சாதகமாக முடியும். தொழில் திருப்திகரமாக இருக்கும். உழைப்புக்கேற்ற வருமானமும், ஆதாயமும் கிடைக்கப் பெறுவதால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். நிதி நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலைக்குச் சென்று வரும் அன்பர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதற்கு வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய நற்பெயர் உங்களுக்கு கிடைக்கும். பெண்களுக்கு சுமாராகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவீர்கள்.  கணவன் மனைவிடையே இருந்த மனசங்கடங்கள் விலகி அன்பும், அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் விருந்தினர் வருகை அதிகம் உண்டு. நெருங்கிய உறவினர்களிடையே சண்டை, சச்சரவு ஏற்பட்டிருந்தால் இப்போது அது சரியாகி விடும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் அகலும்.

சந்திராஷ்டமம் : 1,2,3,4 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

viruchchikam

எளிமையான தோற்றத்தில் காணப்படும் விருச்சகம் ராசி தோழர்களே, தொழில் ஏற்றுமதி – இறக்குமதித் துறையினருக்கு அனுகூலமான செய்திகள் வரக் கூடும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பது கடினம். கணவன் மனைவிடையே இணக்கமான போக்கும் குடும்பத்தில் குதூகலமும் இருக்கும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு.  புதியவர்களை நம்பி முடிவு எடுக்கவேண்டாம். குடும்பத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதைத் தவிர்த்திடுங்கள். நீங்கள் யதார்த்தமாய் பேசும் வார்த்தைகள் கூட சிலருக்கு மனதை காயப்படுத்தும்படி அமையும். எத்தருணத்திலும் யாருக்காகவும் பரிந்து பேச வேண்டாம். வீடு, மனை, வாகனம் போன்றவை நல்லபடியாக அமையும். உற்றார் – உறவினர் வருகை மனதிற்கு சந்தோசத்தை அளிக்கும். புதிய விஸ்தரிப்புத் திட்டங்களில் ஈடுபடும் போது சிறந்த முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முக்கிய முடிவுகளை பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து செய்யுங்கள். உத்தியோகஸ்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். சக ஊழியர் ஒருவரின் தேவைற்ற தலையீடு தங்களுக்கு மன வருத்தத்தை தரும்.கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்கவும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். பெற்றோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும்.

சந்திராஷ்டமம் : 4,5,6 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

thanusu

மதிப்பும் மரியாதையும் மிகுந்த தனுசு ராசி நண்பர்களே,குடும்பத்தில் அவ்வப்போது சில சண்டைகள் வரலாம். நீங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதன் மூலம் அவற்றைத் தவிர்க்கலாம். ஒருவர் கூறும் அறிவுரையை தட்டாமல் கேட்டுக் கொள்ளுங்கள். எதிர்த்துப் பேசி வீண் சச்சரவுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்ப விஷயங்களில் சற்று ஆர்வமுடன் செயல்பட்டால் மனசங்கடங்களைத் தவிர்க்கலாம்.  வெளியூரிலிருந்து வர வேண்டிய பணம் வந்து சேரும். வெளியூர் சென்று நீங்கள் முயற்சிக்கும் காரியங்களும் வெற்றியடையும். உத்யோகஸ்தர்கள் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். மேலிடம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். புதிய வாகன வசதி பெற்று மகிழும் வாய்ப்புண்டு. புதிய வீடு பேறு அமையவும் வாய்ப்புண்டு. பூர்வீக சொத்து பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் வந்து சேமிப்பை உயர்த்தும். மனதில் நினைத்திருந்த ஆசைகள் இனிதே நிறைவேறும். பொறுமையுடன் செயல்பட்டால் தங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும்.கணவன் – மனைவியிடயே கலந்து ஆலோசித்து எந்த காரியத்தையும் செய்வது நல்லது. தொழில் – வியாபாரிகளுக்கு லாபமான காலமாக இருக்கும். நிறுத்தி வைத்திருந்த சில முயற்சிகளை இப்போது மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் : 6,7,8 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

அனைவரிடமும் அன்பாக பழகும் மகரம் ராசி தோழர்களே, புதிய முயற்சிகளை உங்கள் குடும்ப பெண்களைக் கொண்டு தொடங்குவது சிறப்பாக இருக்கு.புதிய வாகனம் வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளி வைக்கவும். குடும்பத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக செலவுகள் ஏற்படலாம். உடன்பிறப்புகளுக்குள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கொடுக்கல் வாங்கலில் நிறைய சிரமங்கள் ஏற்படும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும்.உறவினர்களுடன் கேளிக்கை விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் அடைவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் அடைவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். கோவில் சார்ந்த பணிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் மாறி நிம்மதி இருக்கும். தொழில் – வியாபாரம் நினைத்ததை விட சிறப்பாக இருக்கும். லாபமும் இரட்டிப்பாகவே கிடைக்கும். பெண்களால் உங்கள் தொழிலில் முன்னேற்றம் உண்டு.  உத்யோகஸ்தர்களுக்கு சில இடர்பாடுகள் இருந்தாலும் அவை உங்கள் சாமர்த்தியத்தால் அகலும். எனவே கவலை இல்லாமல் துணிவுடன் செயல்படலாம். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சலுகைகள் கிடைக்கும்.நண்பர்கள் உதவி கரம் நீட்டுவர். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் மிகவும் கவனத்துடன் செயல்படுவது அவசியம். தொழிலில், வியாபாரத்தில் கடுமையான போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.

சந்திராஷ்டமம் : 8,9,10 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

kumpam

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் பிரச்சனைகள் குறைந்து வாழ்க்கை வசதிகள் பெருகும்.  உங்களுக்கு வந்த பிரச்சனைகள் எல்லாம் பனி போல விலகி சகல வகையிலும் முன்னேற்றம் உண்டாகி மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கடன்கள் தீர துவங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். புதுமையான திட்டங்களை தீட்டி அதை வழிவகை செய்ய முடியும். பணம் வந்தாலும், செலவுகளும் காத்துகொண்டு இர க்கிறது, அதுவும் வளர்ச்சிக்கான செலவு தான்.பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுபவமிக்கவர்களின் ஆலோசனை படி நடந்து கொண்டால் சில சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் கணவன் – மனைவி உறவு பலப்படும். உங்களுக்குள் இருந்த மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். பிள்ளைகளுக்கு கல்விக்குத் தேவையானதை செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் அன்பைப் பெறுவீர்கள். மனதில் சிறு குழப்பங்கள் அவ்வப்போது ஏற்படலாம். அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.  புதிய ஆட்களின் பேச்சைக் கேட்கும் போதும் கவனம் தேவை. உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்கள் மேற்பார்வையிலேயே அனைத்து வேலைகளையும் செய்து வாருங்கள். சில ஏற்றத் தாழ்வுகள் வேலையில் வந்து கொண்டு தான் இருக்கும். அதைப்பற்றி கவலையில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். பெண்கள் யாரிடமும் நம்பி பணத்தை கொடுக்க வேண்டாம்.தொழில் – வியாபாரத்தில் சிறிது கவனமுடன் செயல்படுவது நல்லது. வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை. போதிய இருப்பு உள்ளதா என்பதை நீங்களே நேரடியாக பார்த்து விட்டு வாக்கு கொடுப்பது நல்லது.

சந்திராஷ்டமம் : 10,11,12 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

menam

கடவுள் பக்தி மிகுந்த மீனம் ராசி தோழர்களே,  இதுவரை இருந்து வந்த பிரச்சனைகளை நீங்களே உங்கள் சாமர்த்தியத்தால் சமாளித்து விடுவீர்கள். பெண்களுக்கு யோகமான காலகட்டம். விரும்பிய பொருட்கள் கிடைக்கும்.பயணத்தின் போது உங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். வண்டி வாகன வசதிகள், சொந்த வீடு போன்ற பல நன்மைகள் அமையக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். குடும்பத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சு பல தடங்கலுக்கு பின் மீண்டும் துவங்கும். வீண் அலைச்சல்கள் குறையும். தங்கள் பேச்சிற்கு மதிப்பு கூடும்.பூர்வீக சொத்துகள் தொடர்பான வழக்குகள் தள்ளிப் போகலாம்.உடல் உபாதைகள் வந்து அடிக்கடி தொல்லைகள் தரலாம். முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த விசயங்கள் இப்போது ஓரளவிற்கு நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது.அவ்வப்போது பிரச்சினைகள் தொழிலில் ஏற்பட்டாலும் அதை திறம்படச் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு. தொழிலாளர்கள் ஒத்துழைப்பு தருவதால் உங்களுக்கு தொழிலைப் பற்றிய கவலை வேண்டாம். உத்யோகஸ்தர்கள் தங்களது வேலைகளில் ஆர்வமுடன் செயல்படுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரும்பிய மணவாளன் கிடைப்பார். மாணவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தவும். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் தலை தூக்கலாம். வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருப்பதால் அனாவசிய செலவுகளை அறவே தவிர்க்கவும். முடிந்த வரை கடன் வாங்காமல் இருப்பது நல்லது.

சந்திராஷ்டமம் : 12,13,14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.