ஜனவரிமாதபலன்கள்

ஜனவரி மாத பலன்கள்(2019)

மேஷம்/engkal.com

மேஷம் ராசி நண்பர்களுக்கு, இந்த மாதம் புது மனிதர்களின் சந்திப்பும் அவர்கள் மூலம் நன்மையும் கிடைக்கும். சூரியன் சஞ்சாரத்தால்  முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. அரசியல் துறையினருக்கு வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் யாவும் இனிதே நடைபெறும். வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும். மேலிடத்தின் மூலம் மனம் மகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.  அன்றாட செலவுகளை குறைக்க முயற்சி செய்தாலும் பலன் குறைவாகவே காணப்படும். பயணங்கள் போன்றவற்றில் எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் செய்ய வேண்டி வரும். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவு செய்யவும்.வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை.பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும்.உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. ஓயாத அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். குடும்பத்தில் சுப விரயங்கள் அநேகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப சுமைகள் கூடும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும்.

சந்திராஷ்டமம் :  2,3,4 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க  வேண்டாம்.

பாசமிகுந்த ரிஷப தோழர்களே,கடந்த காலங்களில் சந்தித்த சோதனைகள், வேதனைகள் யாவும் விலகும். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருள் சேர்க்கை அதிகம் உண்டு. பொருளாதார சிக்கல் உங்களை விட்டு விலகும்.புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள்  நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வீடு, மனை, வாங்கும் யோகங்களும் கூடி வரும். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும். குடும்பாதிபதி புதன் சஞ்சாரத்தால் சுபவிரய செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும்.ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல பலன்களே வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பிரச்சனைகள், மனக்கவலைகள் யாவும் விலகும். உடன் பிறந்தோரின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கலாம். வாழ்க்கைதுணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.  எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள்.  குடும்பத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை நீங்கள் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

சந்திராஷ்டமம் : 4,5,6 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க  வேண்டாம்.

உதவி செய்யும் மனமுடைய மிதுன ராசி அவர்களுக்கு,எதிலும் கவனமாக இருப்பதன் மூலம் கெடுபலன்களில் இருந்து விடலாம். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் உங்கள் செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது மிக மிக முக்கியம். வெளியூர் பயணங்கள் செல்ல விருப்பம் ஏற்படும். கணவன் மனைவிடையே அன்பும், அன்யோன்யமும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானாதிபதி குரு தொழில் ஸ்தானத்தில் பார்ப்பதால் தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். நண்பர்களிடம் பழகும் போது சற்று விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். உடல் நலம் சீராகும். வர வேண்டிய பணம் சிறிது தாமதத்திற்கு பின் கைக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. பேசும் போது வார்த்தைகளை கோர்த்துப் பேசுவது நல்லது. பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள்.

சந்திராஷ்டமம் :  6,7,8,9 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க  வேண்டாம்.

கனவை நினைவாகும் கடக ராசி நேயர்களே, இந்த மாதம் சொந்த பந்தங்கள் மத்தியில் மிகவும் கருதப்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி உண்டாகும். பொருளாதார நிலை வெகுவாக உயரும். எதிர்பாராத தன வரவுகளினால் மனதில் சந்தோஷம் கூடும்.  உடன்பிறப்புகளிடையே இருந்த பிரச்சனைகள், மனசங்கடங்கள் யாவும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒரு முறை முழு உடல் பரிசோதனை கொள்வது நல்லது. புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. வீட்டு பராமரிப்பு செலவு அதிகமாகும். பெண்கள் வகையில் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம்.வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். மூத்த சகோதரர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். பெண்களுக்கு எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை.வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெற முடியும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் :  9,10,11 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க  வேண்டாம்.

simam rasi/engkal.com

மற்றவர் மனதை புரிந்து நடக்கும் சிம்மம் ராசி தோழர்களே, இந்த மாதம் மனதில் நினைத்திருந்த காரியத்தை உடனடியாக செய்ய முடியும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.   மனதில் ஒரு புது நம்பிக்கை வரும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த முக்கிய காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய வீட்டை சீரமைத்து அழகு படுத்த முடியும். உடன்பிறப்புகளுக்கு வேண்டிய உதவியை செய்து தரவும்.வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள்.  குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். வண்டி, வாகன சேர்க்கை ஏற்படும். இது வரை இருந்த தடைகள் அகலும்.தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம்.  வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். மனக்கவலை மறந்து மகிழ்ச்சி உண்டாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

சந்திராஷ்டமம் 12,13,14 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க  வேண்டாம்.

கன்னி ராசி அன்பர்களே, வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பெற்றோர் வழியில் இருந்து வந்த கசப்புணர்வு மாறும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து முடிவு செய்வது நன்மை தரும். குடும்ப வாழ்க்கையில் சில தீடிர் திருப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். உடன்பிறப்பு வகையில் பண விரையம் ஏற்பபடும். வீட்டில் சுப நிகழ்ச்சிக்கான சந்தர்ப்ப சூழ்நிலை அமையும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகமாகவே இருக்கும்.குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும்.  தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு ராசிநாதன் புதனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள்.  பெற்றோர் வழியில் இருந்து வந்த கசப்புணர்வு மாறும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடன் பிரச்சனை ஓரளவு சீராகும்.

சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க  வேண்டாம்.

thulam/engkal.com

எந்த ஒரு பிரச்சனையும் சுலபமாக தீர்வு காணும் துலாம் ராசி தோழர்களே, புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம்.  வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்கும் மகிழ்ச்சியான  செய்தி சீக்கிரம் வரும். கொடுக்கல், வாங்கலில் அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். உடன்பிறப்புகளுக்கிடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். திருமணம் முயற்சிகள் கைகூடும்.ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.  முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். 

சந்திராஷ்டமம் 17,18,19 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க  வேண்டாம்.

viruchchikam

எளிமையான தோற்றத்தில் காணப்படும் விருச்சகம் ராசி தோழர்களே, இந்த மாதம் குடும்பத்தில் செலவுகள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி பெற முடியும்.  வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்  காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு பின் சீராகும். உடல் அலைச்சல் அதிக ஏற்படும். வருமானத்தை சேமிக்கவும் அதே சமயம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கவும் முடியும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. நண்பர்களிடம் சுமுக உறவு ஏற்படும்.விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் : 20,21,22 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க  வேண்டாம்.

thanusu

மதிப்பும் மரியாதையும் மிகுந்த தனுசு ராசி நண்பர்களே, உங்களுக்கு மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவு வரும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உடன்பிறப்புகளால் ஒரு சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். பழைய கடனை அடைக்க புது வழி ஒன்று கிடைக்கும். புதிய முயற்சிகளை சிறிது காலம் தள்ளி வைக்கவும்.வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது.

சந்திராஷ்டமம் 23,24,25 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க  வேண்டாம்.

அனைவரிடமும் அன்பாக பழகும் மகரம் ராசி தோழர்களே, புது மனை, வீடு வாங்கும் யோகம் உண்டு. பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத மருத்துவ செலவுகள் தவிர்க்க முடியதாகி விடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் விலகும்.பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை.  நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரவு கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.

சந்திராஷ்டமம் 25,26,27 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க  வேண்டாம்.

kumpam

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு சுகஸ்தானத்தில் ஆட்சியாக அமைந்துள்ளதால் எங்கு இருந்தாலும் ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள்.பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறும் சூழ்நிலை உருவாகும். வண்டி, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பெற்றோர்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்க்காத இடத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்தி வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடைபெறும். வசதி வாய்ப்புகள் ஒவொன்றாக வந்து சேரும். வெளியூர் பயணங்களினால் புதிய அனுபவங்களும் லாபங்களும் பெறுவீர்கள். செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும்.  மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.  குடும்பத்தில் தங்களின் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியிடங்களில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. உடன்பிறப்புகளிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம், எச்சரிக்கை தேவை.இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் 27,28,29 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க  வேண்டாம்.

menam

கடவுள் பக்தி மிகுந்த மீனம் ராசி தோழர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட கவலைகளும், கடன்களும், கஷ்டங்களும் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். குடும்ப நபர்களிடம் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்யுங்கள். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. உபதொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். அரசியல்துறையினருக்கு மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும்.நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள்.  கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். விஐபிகளின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். உடல் நலம் பொறுத்தவரை தொந்தரவுகள் எதுவும் இருக்காது. வீட்டு செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும். நீங்கள் கஷ்டப்பட்டு முயற்சி செய்யும் காரியங்கள் தாமதமின்றி வெற்றி பெரும்.

சந்திராஷ்டமம் 29,30,31,1 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க  வேண்டாம்.