டிசம்பர் மாத பலன்கள்

டிசம்பர் மாத பலன்கள்(2018)

மேஷம்/engkal.com

மேஷம் ராசி நண்பர்களுக்கு மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். திருமண காரியம் விரைவில் கைகூடும். கணவன் மனைவிடைய ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியங்களுக்காக பணம் நிறைய செலவாகும். உங்கள் அவசர தேவைகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கும். உங்கள் நண்பர்களிடமிருந்தும் சமூக வட்டத்திலிருந்தும் ஆதரவு பெற்று  சில முன்னேற்றங்களை அடைவீர்கள். இந்த மாதத்தில் கூட்டு குடும்பத்தில் நுழைய வேண்டும் என்ற உங்களுடைய நீண்ட கால ஆசை நிறைவேறும். உங்கள் சமூக வாட்டர வாழ்க்கை  பரபரப்புடன் காணப்படும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். வாகன வசதி வாய்ப்புகள் பெருகும். மனபாரம் குறையும். பொருளாதார பிரச்சனைகள் விலகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். இதை நீங்கள் சரியான நேரத்தில் முறையாகக் கண்டுபிடிக்க வேண்டும். பொதுவான வேலையை எடுத்துச் செய்வதில் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.  தனிப்பட்ட பிரச்சினைகளைக் கையாளுவதில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்காதீர்கள்.

சந்திராஷ்டமம் : 5,6,7,8 ஆகிய நாட்கள் கவனமாக இருங்கள்

பாசமிகுந்த ரிஷப தோழர்களே, குடும்பத்தில் சுப காரியம் கைகூடி வரும். கணவன் மனைவிடைய அன்பு பாசம் அதிகமாகும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைத்து பொறுப்புகளை ஒப்படைக்கவும். எப்போதும் சந்தோஷமாக இருக்க விருப்பம் ஏற்படும். தாராள தனவரவுகளால் குடும்ப தேவைகள் அணைத்து பூர்த்தியாகும். உங்கள் துணிச்சலான இயல்பு உங்களைக் கடினமாக காலகட்டத்தில் இருந்து காப்பாற்றும். மற்றும் பணியை தன்னம்பிக்கையோடு செயல்படுத்துவதற்கு உதவும். நீங்கள் விரும்பிய நாட்டிற்குச் செல்வதற்கு வாய்ப்பைப் பெறுவீர்கள். அது தற்காலிகமானதாக இருந்தாலும் அதன் மூலம் உங்களுக்கு மிகுந்த திருப்தி கிடைக்கும். நல்ல நபர்களின் தொடர்பால் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவும் வரலாம். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. தூரத்து பிரயாணங்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடைபெறும்.சில விஷயங்கள் தள்ளி போடப்படலாம். தேவையான பலன்களைப் பெற கடினமான முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் யோசிக்காமல் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்கள் பணிகளில் சிலவற்றை முடிக்க நீங்கள் சமரசம் செய்ய வேண்டியிருக்கலாம்.

சந்திராஷ்டமம் : 8,9,10 ஆகிய நாட்கள் கவனமாக இருங்கள்

உதவி செய்யும் மனமுடைய மிதுன ராசி அவர்களுக்கு, உங்களின் தொழில் வளர்ச்சிக்கு உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு  உதவியாக இருக்கும். உங்கள் சுயநலப் போக்கு அதிகரிக்கும் காரணத்தால் உங்கள் பதட்டமும் அதிகமாகும். நண்பர்கள் வகையில் சந்தோஷம் ஏற்படும். வெளிடத்தில் கேட்ட உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பழைய கடன் பிரச்சனை ஒரு புறம் இருந்தாலும், புது கடன் வாங்குவதை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை குறைத்துகொண்டால் வரும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடல் நலத்தில் ஒரு சில தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். மனக்குழப்பம் வேண்டாம். மனம் பாதித்தால் உடல் நலமும் சேர்ந்து பாதிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களை நீங்கள் சிறிய  விஷயங்ளுக்காக அலட்சியப்படுத்தக்கூடாது. பணியில் உங்கள் நேர்மை சந்தேகிக்கப்படலாம். கலைகளைக் கற்றுக்கொள்வதில் நீங்கள் காட்டும் சிறப்பு ஆர்வம் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.  எனினும் உங்கள் இடைவிடாத முயற்சிகள் மட்டுமே உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் நீங்கள் விரும்பிய பலன்களையும் அளிக்கும்.

சந்திராஷ்டமம் : 10,11,12 ஆகிய நாட்கள் கவனமாக இருங்கள்

கனவை நினைவாகும் கடக ராசி நேயர்களே, இந்த மாதம் ஒரு சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்க்கையில் அதிகரித்துவரும் சிக்கல்களின் மீதான  உங்கள் நேர்மையான நடவடிக்கை உங்களுக்குச் சரியான முடிவுகளை பெற்றுத் தரும். குடும்ப சூழலில் இன்பகரமான மாற்றங்களை காண்பீர்கள். எப்போதும் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உடல் நலனில் அதிகம் கவனம் எடுத்துக்கொள்ளவும். வாகன பராமரிப்பு செலவு கூடும். எதிர்பார்க்காத சில அதிர்ஷ்டம் வரும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவர். உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி உங்களுக்கு முழு திருப்தியை அளிக்கும். தொழில் ரீதியாக நீங்கள் நல்ல அங்கீகாரம் பெறுவீர்கள்.  நீங்கள் உங்கள் சமூக வாழ்க்கையை நிறைவாக அனுபவிப்பீர்கள். உங்கள்  புதிய தொடர்புகள் உங்களை மகிழ்ச்சியோடு வைத்திருக்கும்.  உங்கள் வேலை தொடர்பான வெளிநாட்டுப் பயணங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள். வரும் எதிர்ப்புகள் தானாக விலகும். பாதியில் விட்டுப்போன வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பணபுழக்கம் நன்றாக உள்ளபடியால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

சந்திராஷ்டமம் : 12,13,14 ஆகிய நாட்கள் கவனமாக இருங்கள்

simam rasi/engkal.com

மற்றவர் மனதை புரிந்து நடக்கும் சிம்மம் ராசி தோழர்களே, இந்த மாதம் உங்களுடைய தோற்றம் எல்லோரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும்  நீதிமன்ற வழக்குகள் இந்த மாதம் முடிவுக்கு வரக்கூடும். நீங்கள் புதிய வெளிநாட்டு இணைப்புகளை உருவாக்கி அவர்களின் தொடர்புகளை மகிழ்ச்சியோடு அனுபவிப்பீர்கள். இந்த மாதம் பிற்பகுதியில் சிறப்பான பலன்களை பெற முடியும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். முக்கிய காரியங்களில் இருந்த தேக்க நிலை அடியோடு மாறும். புதிய முயச்சிகளில் உடனடியாக பலன் காண முடியும். உடன் பிறப்பால் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படலாம். பயணங்களின் போது கவனமாக இருக்கவும். பண வரவு தாராளமாக இருக்கும். கணவன் மனைவியிடையே எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். உங்கள் நன்மதிப்பின் மீது குற்றச்சாட்டை சுமத்துவதற்கு வாய்ப்பு அளிக்காதீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் தனிப்பட்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். கடன் பிரச்சனை ஒருபுறம் இருக்க அதை அடைப்பதற்கு உண்டான வழியும் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய நாட்கள் கவனமாக இருங்கள்

கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் பயணங்களால் நிறைய அலைச்சல் ஏற்படும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பணவரவு வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் வரும். உங்கள் நீண்ட கால ஆசைப்படி  ஒரு புதிய வீடு வாங்க நேரிடலாம். சுயநல நோக்கத்துடன் உங்களிடம் வருபவர்களிடம் நீங்கள் விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும். உங்கள் நிலுவையிலுள்ள வேலைகளைப் பற்றி எதிர்மறையாக யோசிக்காதீர்கள். பணிகளைத் தொடங்குவதற்கு ஆயத்தம் ஆகுங்கள்.  குடும்பத்தில் மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடக்கும். வீடு வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்லவும். உடன்பிறப்புகளுக்கு எப்போதும் உதவியாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறு உடல் உபாதைகள் வந்து போகும். உங்கள் தன்னம்பிக்கை உங்களை வெற்றியடையச் செய்யும். நேரத்தை நிர்வகிக்கும் உங்களுடைய திறமை பாராட்டுகளைப் பெறும். இந்த மாதத்திற்குள் பணிகள் அனைத்தையும் முடித்து விடுவீர்கள். கடுமையான நேரங்களில் உங்களுடைய பகுப்பாய்வு திறன் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

சந்திராஷ்டமம் : 17,18,19 ஆகிய நாட்கள் கவனமாக இருங்கள்

thulam/engkal.com

எந்த ஒரு பிரச்சனையும் சுலபமாக தீர்வு காணும் துலாம் ராசி தோழர்களே, உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் நீங்கள் பங்கு பெறலாம். வேலையில் நீங்கள் காட்டும் உற்சாகம் வலுவாகவும்  பாராட்டத்தக்கதாகவும் இருக்கும். உங்களுடைய நியாயமான முயற்சிகளில்  நீங்கள் விரும்பிய பலன்களைப்  பெறுவீர்கள். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிருங்கள். கணவன் மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தூரத்து சொந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அடிக்கடி வெளிநாடு பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் பெரியளவில் மாற்றமும், முன்னேற்றமும் வரும். சுப காரிய செலவுகள் அதிகமாகும். உத்யோகத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் வெகுவாக உயரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். இது உங்களை ஆபத்தில் சிக்க வைக்கலாம். நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட மனப்பான்மையை  வெளிக்காட்டுவதைத் தவிர்க்கவும். உங்களுடைய சமூக அலுவல்கள்  பரபரப்பாகவே காணப்படும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் : 20,21,22 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

viruchchikam

எளிமையான தோற்றத்தில் காணப்படும் விருச்சகம் ராசி தோழர்களே, உங்கள் வாழ்க்கை தரம் உயரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உங்கள் சமூக வாழ்க்கையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் ஒவ்வொரு செயலுக்கும் மிக மெதுவான பதில் பலன்கள்  கிடைக்கும். மேலும்  சில நேரங்களில் அதனால் எந்தப் பலனும் இருக்காது. உங்கள் பணத்தை நீங்கள் சேமிக்க வேண்டும். உறவினர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடன் வாங்கும் என்னத்தை கை விடுவது நல்லது. புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. உடல் நலம் தொடர்பாக மருத்துவ செலவு ஏற்படலாம். வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உறவினர் வருகை அதிகம் உண்டு. சில சமயம் உங்கள் வெளிப்படைத் தன்மை  தகவல் தொடர்பகளில் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கலாம். அனைத்துப் பணிகளிலும் நீங்கள் மெதுவாக நிதானமாகச் செயல்பட வேண்டும். கடந்த காலத்தில் ஏற்பட்ட உங்களுடைய பிரச்சனைக்குரிய பணிகள்  தற்போது கண்முன்னே தோன்றலாம். அதற்கான தீர்வுகளை பெறுவதற்குப் பதில் கிடைக்காமல் போகலாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டாகும். தொழில், வியபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

சந்திராஷ்டமம் : 24,25,26,27 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

thanusu

மதிப்பும் மரியாதையும் மிகுந்த தனுசு ராசி நண்பர்களே, இந்த மாதம் திருப்புமுனை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான சூழல் ஏற்படும். உறவினர்களின் பரிபூர்ண ஆதரவு கிடைக்கும். பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். உங்கள் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப விரயங்களும், வீண் விரயங்களும் உண்டு. உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் காத்து கொண்டு இருக்கும். பயணங்கள் போன்றவற்றில் எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் அதிகம் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதிக்க வேண்டாம். நண்பர்களால் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டு. அனைத்துச் செயல்களிலும் நீங்கள் காட்டும் நேர்த்தி நீங்கள் எதிர்பார்த்த துல்லியமான முடிவுகளைத்   தரும். பெரும்பாலான பணிகளை நீங்கள் ஒருவராகவே யாருடைய உதவியும் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நேர்மறை குணம் மற்றும் இலக்கு சார்ந்த அணுகுமுறை இந்த மாதம்  விரைவாக அதிகரிக்கும். உங்கள் நீண்ட கால ஆசையான அசையா  சொத்ததினை வாங்குவீர்கள்.  இந்த மாதத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு வாய்ப்பு உண்டு.

சந்திராஷ்டமம் : 28,29,30 ஆகிய நாட்கள் கவனமாக இருங்கள்

அனைவரிடமும் அன்பாக பழகும் மகரம் ராசி தோழர்களே, உங்கள் சிந்தனைகளையும் வார்த்தைகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உங்களுடைய அதீத  சுறுசுறுப்பு நடத்தை உங்கள் சமூக வட்டத்தில் நன்மதிப்பை ஏற்படுத்தும். குடும்பத்தில் சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான உறவு காணப்படும். உடன் பிறந்தோரின் ஆதரவை எதிர்பார்க்கலாம். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் புது உற்சாகம் ஏற்படும். மனைவி வழி சொந்தங்களினால் அனுகூலமான பலனை கிடைக்க பெறுவீர்கள். பழைய கடன் பிரச்சனை தீர புது வழி ஒன்று கிடைக்கும். வேலையில் உங்கள் உற்பத்தித் திறன் உங்களை வெற்றியடையச் செய்யும். பன்முக  பணியில் சிறந்து விளங்குவீர்கள். உங்கள் குடும்பத்தில் புதிய ஒரு குழந்தை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வாரிசினால் ஏற்படும் மகிழ்ச்சி உங்கள் குடும்ப உறுப்பினர்களை அதிகபட்ச திருப்தியில் வைத்திருக்கும். இந்த மாதத்தில் பயணம் மேற்கொள்வதற்கு ஆர்வமாக இருப்பீர்கள். குடும்பத்துடன் பல புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். உத்யோகத்தில் உங்கள் செயல் திறமை வெளிப்படும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 31.1,2 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

kumpam

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, இந்த மாதம் பண வரவு திருப்திகரமாக இருக்கும். அடுத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். வீண் கோபத்தையும், அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதையும் தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெற முடியும்.குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். உங்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகும். இந்த மாதத்தில் தொழில் ரீதியாக ஏராளமான பயணங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் பல்வேறு வகையான கலாச்சாரங்கள் கொண்ட பல்வேறு மக்களைச் சந்திப்பீர்கள். உங்கள் நேர்மறையான அணுகுமுறை உங்களைப்  பரந்த மனப்பான்மை கொண்டவராக மாற்றும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில்  சிறிய அளவில் உணர்வுப் பூர்வமாக செயல்பட நேரலாம். பயணத்தின்போது சில நபர்களை நண்பர்களாகக்  கருதுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

சந்திராஷ்டமம் : 2,3,4 ஆகிய நாட்கள் கவனமாக இருங்கள்

menam

கடவுள் பக்தி மிகுந்த மீனம் ராசி தோழர்களே, இந்த மாதம் குடும்பத்தினரின் மனமறிந்து செயல்பட்டு அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக அமையும். நெருங்கிய உறவினர்கள் உங்களுக்கு சாதமாக செயல்படுவதால் மகிழ்ச்சி பொங்கும். புது நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பெற்றோர்கள் வகையில் சில அனுகூலமான பலன் உண்டு. வெளியூர் இருந்து நல்ல செய்தி வரும். சந்தேகத்திற்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு இராணு முறை யோசித்து செயல்படவும். உங்களுடைய நேர்மறை குணம் மற்றும் இலக்கு சார்ந்த அணுகுமுறை இந்த மாதம்  விரைவாக அதிகரிக்கும். உங்கள் நீண்ட கால ஆசையான அசையா  சொத்ததினை வாங்குவீர்கள். உங்கள் நல்லொழுக்கம் காரணமாக உங்கள் அனைத்து செயல்களிலும்  உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அனைத்துச் செயல்களிலும் நீங்கள் காட்டும் நேர்த்தி நீங்கள் எதிர்பார்த்த துல்லியமான முடிவுகளைத்   தரும். பெரும்பாலான பணிகளை நீங்கள் ஒருவராகவே யாருடைய உதவியும் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். இந்த மாதத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வர். மனதில் வைராக்கியம் கூடும். புதிய சேமிம்பு திட்டங்களில் சேர ஆர்வம் ஏற்படும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். அரசாங்க வழியில் சில ஆதாயம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 4,5,6 ஆகிய நாட்கள் கவனமாக இருங்கள்