நவம்பர்மாதபலன்கள்

நவம்பர் மாத பலன்கள்(2018)

மேஷம்/engkal.com

மேஷம் ராசி நண்பர்களுக்கு வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலையே காணப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முயல்வீர்கள். முயற்சியில் வெற்றியும் உண்டு. வாகனங்களில் செல்லும்போது அதிக கவனம் தேவை.குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். ஆயுதம், நெருப்பு இவற்றைக் கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.  பொது பிரச்சனையில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களின் போது கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் நிறைய சிரமங்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க தாமதமாகும்.

சந்திராஷ்டமம் : 9,10,11 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

பாசமிகுந்த ரிஷப தோழர்களே,கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வராமல் பார்த்துக்கொள்ளவும். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் ஒன்றை வாங்க வேண்டிவரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்த எண்ணம் அதிகம் இருக்கும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குப் பின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். சகபணியாளர்களிடம் அனுசரித்துச் செல்வீர்கள். கொடுத்த வேலையை முடித்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளின் வாக்கு வன்மை அதிகரிக்கும். பேசி சில காரியங்களைச் சாதிக்க முற்படுவீர்கள்.கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். செய்து கொண்டிருக்கும் வேலைகள் மிகச் சிறப்பாக நடந்து முடியும்.சொத்து வகையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்க வேண்டியிருக்கும்.

சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

உதவி செய்யும் மனமுடைய மிதுன ராசி அவர்களுக்கு,பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காண்பிப்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளிப் போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். அலைச்சல் அதிகரித்தாலும் வேலை விஷயங்கள் நடந்து முடிவது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.நண்பர்களின் வருகையும் அவர்கள் மூலம் சந்தோஷமும் இருக்கும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும், ஆகையால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொள்ளவும். மன உளைச்சல் பிரச்சனையால் உடல் நலம் பாதிக்ககூடும். தெய்வ சம்பந்தமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். உத்யோகம் தொடர்பாக நிறைய பயணம் செய்ய வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும். வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும்.

சந்திராஷ்டமம் :12, 13,14,15 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

கனவை நினைவாகும் கடக ராசி நேயர்களே, எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஆர்டர்களில் கையெழுத்திடுவீர்கள்.உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு திடீர்ப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய அளவிலான ஒப்பந்தகளும் கையெழுத்தாகும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பணவரத்து கூடும். மனக் குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். நண்பர்களை நம்பி எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டாம். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். விட்டுப்போன உறவுகளின் ஆதரவு மீண்டும் வந்து சேரும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை வெகுவாக உயரும். உத்யோகத்தில் நல்ல பல சலுகைகள் கிட்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்டிகள் மறையும். நட்பு வட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். தொகுதி மக்களைச் சந்திப்பீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு லாபமான காலமாக இருக்கும்.

சந்திராஷ்டமம் :15, 16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

simam rasi/engkal.com

மற்றவர் மனதை புரிந்து நடக்கும் சிம்மம் ராசி தோழர்களே,கணவன் மனைவிடத்தில் ஒற்றுமை குறையும். உறவினர்களுடன் பேசும் போது வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாகும். மற்றவர்கள் பாராட்டுபடி உங்கள் செயல்கள் இருக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உடல் உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் அமையும். உத்யோகத்தில் பணி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகமாகும். எனினும் சரியான நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பீர்கள். உடல் நிலையில் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். அரசியல்துறையினருக்கு நிம்மதியான காலமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உல்லாசப் பயணமாகவும் அது அமையும்.  ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ற விஷயங்களைச் செய்து ரசிகர்களைக் கவர்வீர்கள். பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் :17, 18,19 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

கன்னி ராசி அன்பர்களே,உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.புதிய வீடு, புது வாகனம் வாங்க முடியும். உறவினர்களிடம் நட்பு பாராட்டுவது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகள் உதவியாக இருக்கும். உங்களது தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் உருவாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அவர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். தொழில், வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.  அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த பணவிஷயங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். மேலிடத்திலிருந்தும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களை வந்தடையும். கலைத்துறையினருக்கு புகழ் சேர்க்கும் விதமாக வேலைகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் பணத்தை எதிர்பார்த்ததை விட புகழ் சேர்க்கும் விதமாக அமையும்.

சந்திராஷ்டமம் : 19,20,21 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

thulam/engkal.com

எந்த ஒரு பிரச்சனையும் சுலபமாக தீர்வு காணும் துலாம் ராசி தோழர்களே, உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களைத் தேடி வரலாம். அரசியல்துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும்.வாழ்க்கைத்துணையின் ஆலோசனையும், உதவியும் கிடைக்கும். மனக்குழப்பம் ஏற்படாமல் இருக்க யோகா தியானம் போன்றவற்றில் ஈடுபாடு ஏற்படும். புதிய வீடு, புது வாகனம் வாங்க முடியும். பிறருக்கு வாக்கு கொடுப்பதையும், ஜாமீன் கையெழுத்து போடுவதையும் தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு பயணங்கள் மிகுந்த ஆதாயத்தை கொடுக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் வகையில் எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில்  இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.  வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமான பணிகளை உங்களுக்கு கொடுப்பார்கள். கலைத்துறையினருக்கு சற்று மந்தமான சூழ்நிலை காணப்படும், இந்த காலகட்டத்தை ஓய்வெடுக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சந்திராஷ்டமம் :21,22,23,24கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

viruchchikam

எளிமையான தோற்றத்தில் காணப்படும் விருச்சகம் ராசி தோழர்களே, எதிர்பார்த்த பணம் வர தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை.கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் சேமிப்பிற்கு சுப செலவுகள் வந்து சேரும். பகைவர்களை வெல்லும் ஆற்றல் உண்டாகும். கோர்ட்டு வழக்கு பிரச்சனைகளில் இழுபறி நிலை நீடிக்கும். ஓயாத அலைச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கலாம். கடன் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும். எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் நடக்காமல் போகலாம். உத்யோகத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும்.அரசியல்வாதிகளுக்கு நன்மை தரும் காலமிது. குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியங்கள் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு வேலைகள் கிடைப்பதுபோல் இருந்து பின் நழுவிச் செல்லும் சூழல் உருவாகும். கவலை வேண்டாம்.

சந்திராஷ்டமம் : 24,25,26 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

thanusu

மதிப்பும் மரியாதையும் மிகுந்த தனுசு ராசி நண்பர்களே, சில விஷயங்களை அமைதியாக இருப்பதன் மூலம் சாதித்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நன்மை தரும். அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.கணவன் மனைவி உறவில் சந்தோஷம் இருக்கும். உடன்பிறப்புகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் சீராகும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க யோசனை வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் வந்தாலும் பயப்பட தேவையில்லை. பெண்கள் வகையில் நிறைய நன்மைகள் கிடைக்கும். சொத்து பிரச்சனையில் கோர்ட் கேஸ் என பல் நாள் அலைய வேண்டியதிருக்கும். பழைய பிரச்னையை நல்ல முறையில் தீர்க்க முடியும். உத்யோகத்தில் இட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. புது தொழில், தொடங்க தகுந்த ஆலோசனை கிடைக்கும். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது.உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால் வீண் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

சந்திராஷ்டமம் : 26,27,28 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

அனைவரிடமும் அன்பாக பழகும் மகரம் ராசி தோழர்களே, தொழில், வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். சொந்த பந்தங்களால் ஒரு சில தொல்லைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு பிறகு சீராகும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். திட்டமிடாத பயணங்கள் நிறைய இருக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தேவையில்லாத செலவுகளை கணிசமாக குறைத்து கொள்ளவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்க போராட வேண்டி இருக்கும்.இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதைத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை.

சந்திராஷ்டமம் : 1,2,3,4 & 29,30 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

kumpam

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, புதிய தொடர்புகள் ஏற்படும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். பயணங்கள் ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும்.உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடன்பிறப்பு வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்கு பின் முடியும். கணவன் மனைவி இருவரும் வீண் வாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டாகும். வண்டி, வாகன சேர்க்கை உண்டு. வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். பொது பிரச்சனைகளை அதிகம் எதிர்கொள்ள வேண்டிவரும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். புதிய இடங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் செய்வது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலைச் சுமை குறையும்.

சந்திராஷ்டமம் : 4,5,6 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

menam

கடவுள் பக்தி மிகுந்த மீனம் ராசி தோழர்களே,  வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.  கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். பணவரவு அதிகரிப்பதால் சந்தோஷம் கூடும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். நண்பர்களிடம் எதிர்ப்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும். ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பு கிட்டும். உடல் ரீதியாக ஒரு சில பிரச்சனைகள் வந்து பின் சீராகும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எப்போதும் கவனம் தேவை. பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். சந்தோஷம் தரக்கூடிய செய்தி ஒன்று விரைவில் வரும். எதிர்பாராத பயணங்களால் உடல் அலைச்சலும், சோர்வும் வரக்கூடும். உத்யோகத்தில் இப்போது உள்ள வேலையிலிருந்து வேறு நல்ல வேலைக்கு மாற வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் ஏறு முகமாகவே இருக்கும். அரசியல்துறையினருக்கு மனம் மகிழும்படியான செய்திகள் வந்து சேரும். மேலிடத்திலிருந்து பணி நிமித்தமாக முக்கிய செய்திகள் வந்து சேரும்.

சந்திராஷ்டமம் : 6,7,8 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்