மார்ச் மாத பலன்கள்(2019)

மேஷம்/engkal.com

சிறந்த ஆளுமை திறன்  உடைய மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் நீங்கள்  செய்யும் எல்லா செயல்களும்   நல்ல பலன்களை கிடைக்கும். . அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து சற்று தாமதமாக வந்து சேரும். நீண்ட நாள் இருந்த பூர்வீக சொத்துக்களில்  பிரச்சனைகள் தீரும். புது வாகனம் ஒன்றை வாங்குவீர்கள். நண்பர்கள் வகையில் ஆதாயம் அடைவீர்கள்.வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது சாற்றி நிதானம்  தேவை.குடும்பத்தில் கணவன் மனைவி அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.குடும்பத்தில் திருமணம் காரியம் கைகூடும்.வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். மனப்பிரச்னைகள் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் ஓரளவு குறையும். இந்த மாதம் குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். சிலருக்கு சொந்தம் பகையாகவும் கூடும்

 

சந்திராஷ்டமம் : 22,23,24 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

எதையும் வேகமாக துல்லியமாகவும் செய்து அதில் முன்னேற்றமும் காணும் ரிஷபம் ராசி அன்பர்களே,இந்த மாதம் உங்களக்கு  ஒரு சில வீண் அலைச்சல்களும், மனக்குழப்பங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. நினைத்த காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன குழப்பம்  ஏற்படலாம் குடும்பத்தில் சில நெருக்கடி ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளிப்பீர்கள்.தொழில் வியாபாரம் சற்று குறைவாக  காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி  கருத்து வேற்றுமை உண்டாகலாம்.கலைத்துறையினருக்கு சற்று கஷ்டம்  மிகுந்த காலமாக இருக்கும்.  அரசியல்துறையினருக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்கு சென்று வர நினைப்பீர்கள்.

 

சந்திராஷ்டமம் : 24,25,26,27 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

யார் என்ன சொன்னலும்  நீங்கள் நினைத்தது தான் சரி என்ற  நம்பிக்கையுடன் துணித்து  செய்யும் மிதுன ராசி அன்பர்களே,  இந்த மாதம் நீங்கள் இது வரை சந்தித்த எதிர்ப்புகள் யாவும் விலகும்சாதகமான நிலை காணப்படும்.பணவரத்து சற்று அதிகரித்து இருக்கும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்.உடன்பிறந்தவர்கள் சொல்லுக்கும் மதிப்பு  செய்து தருவீர்கள்.பெற்றோர்கள் வகையில் சில மருத்துவ செலவுகள் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் விலகி சந்தோஷம் அதிகரிக்கும்.கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும்.அரசியல்துறையினருக்கு மேலிடத்திலிருந்து இனிப்பான  செய்தி வரும். பயணத்தின்போது சற்று கவனம் தேவை

 

சந்திராஷ்டமம் : 27, 28, 29 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

பேச்சில் மூலம் அனைத்து காரியத்தையும் சாதிக்கும் கடக ராசி அன்பர்களே.இந்த மாதம் தங்களின் விட முயற்சியால் தடைபட்டு வந்த காரியங்கள் யாவும் இனிதே நிறைவேறும்.அறிமுகம் அற்ற நபரின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும். தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.வண்டி, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் குடியிருக்கும் வீட்டை சீர் படுத்துவீர்கள்.  கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும்.புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும்.கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். உத்யோகத்தில் மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியபாரத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம்.

 

 சந்திராஷ்டமம் : 2,3,4 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

simam rasi/engkal.com

அனுபவ ஞானத்தைக் கொண்டும்  செயலாற்றி முயற்சியில் அணைத்து  காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே,இந்த மாதம் நீங்கள் கையில் எடுக்கும் காரியங்களளை எளிதாக செய்து முடிப்பீர்கள்.உங்களது பேச்சு மற்றவரை ஈர்ப்பது போல் இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். நண்பர்களிடம் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு, ஆகையால் கவனமாக இருக்கவும். . தொழில் வளர்ச்சி சார்ந்த  சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். புதியதாக இடம் வாங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நன்று .கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.

 

 

சந்திராஷ்டமம் : 4,5,6,7 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

என் நிலை வந்தாலும் தன் நிலை மறவாது  விடாமுயற்சியுடன் செய்யும் காரியத்தில் வெற்றி காணும் கன்னி ராசி அன்பர்களே,வெகு  நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் கை  கூடி வரும்.பொருளாதார பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும். பணவரவை விட செலவுகள் அதிகமாகும்.தொழில் வியாபாரம் சற்று மெத்தனமாக  நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும்.உழைப்பு சுமை அதிகமாக இருக்கும் இருப்பினும் உங்கள் உழைப்பிற்கு  அங்கீகாரம் இல்லாமல் போகலாம்.  குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உறவினர்கள்யுடன்  மரியாதையுடன் நடந்து கொள்வீர்கள்.சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும் மாதம்.சினிமா துறையனார்க்கு  நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் குறையும்  சூழல் உருவாகும்.அரசியல்துறையினருக்கு மகிழும்படியான செய்தி வரும் சுழ்நிலை உருவாகும்.

 

சந்திராஷ்டமம் : 7,8,9 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

thulam/engkal.com

கடின உழைப்பின் சொந்தக்காரர்   மற்றவர்களின் இடையூறுகளையும் சாதகமாக்கிக் கொள்ளும் துலா ராசி அன்பர்களே,இந்த மாதம் நீங்கள் எடுத்த சவால்களில் வெற்றி பெறுவீர்கள். எதிலும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். இந்த மாதம்  சிறிய சிறிய செலவுகள் இருக்கும் .பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம். தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். மன சோர்வும், உடல் அசதியும் நீங்கும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் காத்து கொண்டு இருக்கும். ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல தடைகள்  வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் காலமிது.

 

சந்திராஷ்டமம் : 9,10,11 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

viruchchikam

தடைகளை தகர்த்ரெந்து என்றும் வீர நடை போடும் விருச்சிக ராசி அன்பர்களே, நீண்ட நாள் தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். இந்த மாதம் ஆன்மீக காரியங்களில் அதிக நாட்டம் உண்டாகும். . எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு இரு முறை  ஆலோசனையுடன் செய்வது நல்லது .தொழில் வியாபாரம் ரீதியான போட்டி  நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் என்னிக்கை கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதி பிரச்சனை நீங்கும்.பண விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம், உ த்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும். சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உறவினர்களால் சில சமயம் மன சங்கடம் வரும்.முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள். விசாகம்: இந்த மாதம் குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும்.

 

சந்திராஷ்டமம் : 11,12,13 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

thanusu

மற்றவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் தரக் கூடிய  நேரத்தில் தேவையான உதவிகளையும் செய்யும் மனசு உடைய தனுசு ராசி அன்பர்களே,இந்த மாதம் புது முயற்சிகளை மேற்கொள்ள நினைப்பீர்கள்.வீண் பிரச்சனையால் மனக்குழப்பம் ஏற்படலாம். பணம் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த கவனம்  அவசியம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்  இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும் .உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும் நிலை வரும். அலுவலகங்களில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும்.கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மன கசப்புகள்  மறைந்து ஒற்றுமை ஓங்கும். கலைத்துறையினருக்கு சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். திய சொத்துக்களை வாங்குவீர்கள்.

 

சந்திராஷ்டமம் : 13,14,15 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

திட்டம் தீட்டி சாதிப்பதில் வல்லமை  கொண்ட மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் செலுத்த வேண்டியிருக்கும். மருத்துவ செலவுகள்  இருக்கும் .முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் சில உதவி கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்றாக இருக்கும் .பணவரத்தும் நன்றாக இருக்கும். பழைய கடன் பாக்கிகளை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும்.உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டு.சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.

 

சந்திராஷ்டமம் : 15,16,17 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

kumpam

எப்போதும் கவனத்துடனும் விழிப்புடன் இருக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய பார்ப்பீர்கள்.. தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடி வரும் . ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் .உங்கள் சுய கௌரவத்தை யாருக்காகவும் விட்டு தர மாட்டீர்கள்.தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். அலுவலகங்கில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  நிலுவையில் உள்ள பணம் வந்து சேர வாய்ப்புகள் உண்டு .குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். . உங்கள் விரோதிகளும் நண்பரகளாக மாறி உதவி செய்வர்அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. புதிய தொழில் ஒன்றை தொடங்க திட்டமிடுவீர்கள்.

 

சந்திராஷ்டமம் : 17,18,19 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.

menam

அடுத்தவர் பேச்சிக்கு மதிப்பும் தானாக சிந்தித்து செயலாற்றும் திறனும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் வாக்கு சாதுரியத்தால் எதையும் சாதிப்பீர்கள்.வெளியூர் பயணவாய்ப்புகள் அதனால் உடல் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும்.வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம்.தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக காணப்படும். பணவரத்து தாமதமாகும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும். குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வரலாம். கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சில வாக்குவாதங்கள் இருக்கும். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களின் உதவியும், ஆதரவும் தடையின்றி கிடைக்கும்.

 

சந்திராஷ்டமம் : 19,20,21,22 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க வேண்டாம்.