மே மாத பலன்கள்(2018)

மேஷம்/engkal.com

அடுத்தவர் துணையின்றி சொந்த முயற்சியில் முனேற்ற நினைக்கும்  மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் சொல்லிலும், செயலிலும் வேகம் கூடும். இருந்தாலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது .வரவை விட செலவுகள் ஒரு படி அதிகமாக இருக்கும்.சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள்.சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள்.

குடும்பத்தில் சில முக்கிய மாறுதல்கள் ஏற்படும். தங்கள் பேச்சுக்கு மதிப்பும், மரியாதை உயரும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

மனதிற்குள் சிறு சிறு சங்கடங்கள் வந்தாலும் அதை பெரிது படுத்த மாட்டீர்கள்.அலுவலகம் செல்வோர் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. முக்கியமான விஷயங்களில் கவனத்தை அதிகம் வைக்கவும். பண வரவு திருப்தியாக இருக்கும்.

பெண்களுக்கு சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். கொடுத்த வாக்கை தவறாமல் காப்பாற்றுவீர்கள். வாகனம், வீடு போன்றவற்றால் அதிக செலவு ஏற்படும். நண்பர்களிடம் ஒரு அளவோடு இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்வருத்தங்கள் நீங்கும். 

ஆன்மிகம் பயணம் செல்வதில் ஆர்வம் ஏற்படும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது மிகுந்த கவனத்தோடு இருக்கவும். உத்யோகத்தில் கடுமையான பணிகளை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரம் அதிவேகமாக நடைபெறும்.கலைத்துறையினர் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு

சந்திராஷ்டமம் : 1,2,3 & 28,29,30 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் யாதும் எடுக்க  வேண்டாம்.

தன் இனிமையான பேச்சால் அனைவரையும் ஈர்க்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் தொட்ட காரியத்தில் அனைத்திலும்  நல்ல வெற்றி கிடைக்கும். இந்த மாதம் பொன்பொருள் வீடு வந்து சேரும் .

குடும்பத்தில் எதையும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிபெறுவீர்கள். அடுத்தவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மையை தரும்.அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது சற்று கவனமாக இருங்கள் அதனால் சில  வில்லங்கம் ஏற்படலாம். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

உங்கள் விருப்பத்திற்கு மாறாக ஒரு சில காரியங்கள் நடக்கலாம் என்பதால், எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது.  குடும்பத்தில் உள்ளவர்களால் சந்தோஷம் ஏற்படும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை தரும். குல தெய்வ வழிபாடுகளை தவறாமல் மேற்கொள்ளவும்.சில இக்கட்டான சூழ்நிலையில் உறவினர்கள், நண்பர்கள், உங்களுக்கு உதவி செய்வர். பண நெருக்கடி ஓரளவு குறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல் தீரும். பெண்கள்  எதைபற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் : 3,4,5,6 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்,

பரிகாரம்: பவுர்ணமி தோறும் அம்மனை வழிபட்டு வந்தால் நம்மை கிடைக்கும் .

எதையும் உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் அதிகப்படியான பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும்.திடீர் கோபம் ஏற்படலாம். அணைத்து விஷயங்களும் சில நெருக்கடி ஏற்படலாம் .

வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பணவரவு கூடும். உடன்பிறப்பு, மற்றும் பெற்றோர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெற்றோர்களின் ஆலோசனை முக்கியமான நேரத்தில் கிடைக்கும்.

உடன்பிறப்புகளின் ஆதரவை கிடைக்க பெறுவீர்கள். நண்பர்களால் உதவி கிடைக்கும். பெண்களால் சில தொந்தரவுகள் உண்டாக வாய்ப்புண்டு. எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். வெளியிடத்தில் கடன் வாங்கி அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம்.

கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் சற்று அனுசரித்து போவது நல்லது .பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் நிலை பொறுத்தவரை சின்ன சின்ன பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் ஏற்படும். பயணத்தில் மூலம் நல்ல லாபம் உண்டாகும்.

புது வண்டி, வாகனங்களை வாங்க முயற்சி செய்வீர்கள். புது சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.

திரைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பதிவுக்கு  முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள்.

சந்திராஷ்டமம் : 6,7,8 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்,

பரிகாரம்: பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும்.

அன்பு பாசத்தின் மறு உருவம் பெற்ற கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. இந்த மாதம் மனதில் ஏதோ ஒரு இனம் புரிய கவலை இருந்து கொண்டே இருக்கும்.

ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கும் .பக்கம் இருபர்களிடம் சிறு சிறு சண்டை சச்சரவுகள் இருக்க கூடும். குடும்பத்தில் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். நீங்கள் எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றி நன்மை  பெறுவீர்கள்.

நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்கள் உங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். இழுபறியில் இருந்த காரியம் முடிவில் சாதகமான பலனை தரும்.புது வீட்டிற்கு குடியேறும் வாய்ப்புண்டு.

வீட்டில் பல பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும்.  வெளியூர் பயணங்களால் சில நல்லதும்  உண்டு. பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம் சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : 8,9,10,11

பரிகாரம்: அன்னை பரமேஸ்வரியை வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும்.

simam rasi/engkal.com

தனக்கென ஒரு தனி பணியை ஏற்படுத்தும் திறன் கொண்ட   சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் உறவினர்களிடையே ஏற்பட்ட கசப்பான விஷயங்கள் மறையும்.செலவு கட்டுக்குள் இருக்கும்.தாய்யின் நலனில் கவனம் தேவை.  வியாபாரத்தில் பணவரத்து சுமாராக இருக்கும். 

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார சிக்கல் இருந்தாலும் அதை திறமையாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவை எடுக்க பிறரது ஆலோசனையை கேட்பீர்கள்.

 உடல் நலம் சீர்பெறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெண்களால் சில பிரச்சனைகளும் மேலும் பண விரையும் ஏற்படும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் தானாகவே வரும். மனதில் இருந்து வந்த சஞ்சலம் நீங்கி மன மகிழ்ச்சியும், நிம்மதியும் பெறுவீர்கள். உங்களுக்கு எதிராக வரும் எதிர்ப்புகள் முற்றிலும் நீங்கும்.  5ம் இடமான கேதுவின் சஞ்சாரம் ஆன்மீகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும். வெளியில் கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம்.  உத்யோகத்தில் திறமையான பேச்சால் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும்.

திரைத் துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு ஊதியமும் கிட்டும்.

அரசியல்வாதிகள்  மேலிடத்துடன் கவனமாக  இருக்க வேண்டும். 

சந்திராஷ்டமம் : 11,12,13 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்,

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

எதையாவது ஒருமுறை பார்த்தாலே அதை பற்றி புரிந்து கொள்ளும் திறன் கொண்ட கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

சில பயணங்கள் நன்மையை பெற்று தரும்.  குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு நீங்கும். உங்களது செயல்களால் மதிப்பும், மரியாதையும் உயரும். உங்கள் மனகவலைகள் குறையும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். உறவினர்களை சந்திக்க பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.

வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் வருகையும் அதிகமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது, கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவது அவசியம். வண்டி வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்கள் மேல் சுமத்தப்பட்ட வீண் பழி நீங்கும். பண சேமிப்பை அதிக அதிகப்படுத்துவீர்கள். உத்யோகம் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி வரும்.தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.  தொழில், வியாபாரத்தில் வெற்றி நடை போடுவீர்கள்.

அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும்.

சந்திராஷ்டமம் : 13,14,15 கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீசாஸ்தாவை வணங்கி வர சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

thulam/engkal.com

வேளையில் திட்டமிட்டு சாதித்தே காட்டும் பிடிவாத குணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் சொந்தங்கள் வழியில் அனுகூலமான பலன்களை கிடைக்க பெறுவீர்கள்.

பணவரவை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது.இந்த மாதம் தடைபட்ட காரியங்கள் தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரிய ஒன்று நடக்கும். கையில் எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.தெய்வ சிந்தனை அதிகரிக்கும். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

கடவுள்  நம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையில் பாசம் அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் கை கூடி வரும். 

உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து வந்த கருத்துகள் மறையும். அக்கம் பக்கம் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் ஏற்படும். உடல் நலத்தை பொறுத்தவரை சில  தொந்தரவு ஏற்படலாம். உங்கள் பிடிவாத குணத்தை விட்டு விடுவது எல்லா வகையிலும் நல்லது.

குடும்பத்தில் எல்லாரிடமும் மற்றவர்களிடம் முக்கிய விஷயத்தில் அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சில முக்கிய நபர்களின்  ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும்.இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும்.

சந்திராஷ்டமம் : 15,16,17

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.

viruchchikam

என்றும் அநியனியத்துக்கு துணை போகாத  விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் ஒரு சில முக்கிய விஷயங்களை நேரடியாக சென்று முடிக்க வேண்டிவரும். பணவரவு அதிகமாகும். கொடுத்த வேலையை திறம்பட செய்வதில் வல்லவர்.

புதிய முயற்சியில் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.பணவரத்து சற்று தாமதப்படும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். நட்பு வட்டம் அதிகமாகும். மிக முக்கிய நபர்களுக்கு தேவையான உதவிகளை வலியச் சென்று செய்து தருவீர்கள்.

வாகனங்களை மற்றும் எண்ணம் வரும் . சில சமயம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செய்வது நல்லது. தம்பதிகளிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். உங்கள் சாதுரியமான பேச்சால் நினைத்த காரியத்தை சாதிப்பீர்கள். நீங்கள் அடுத்தவர் பிரச்னையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதை மனஉறுதியடன் போராடி வெற்றி பெறுவீர்கள்.

உத்யோகத்தில் கவனமாக பணிகளை மேற்கொள்ளவும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான முக்கிய ஆலோசனை கிடைக்க பெறுவீர்கள். அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : 17,18,19 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

 பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகனை வணங்க குடும்ப பிரச்சனை கள் அகலும்.

thanusu

அடுத்தவரின் அதிகாரத்துக்கும் மிரட்டலுக்கும் என்றும் அடிபணியாத   தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் மனம் மகிழ்ச்சி அடையக்கூடிய சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் எதிர்பாராத பல நல்ல திருப்பம் வரும்.

தடைபட்ட பணம் வந்து சேரும்.  பயணங்கள் வகையில் சில வீண் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் நாளடைவில் சீராகும்.

மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். கடவுள்  ஈடுபாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பற்றி சற்று . கடன் தொந்தரவு ஒரு புறம் இருந்து கொண்டே இருக்கும், இருப்பினும் அதை அடைப்பதற்கான புது வழியும் கிடைக்கும்.

அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். பெற்றோர்களிடம் வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.பணம் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

உத்யோகத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபார தொடர்பான அலைச்சல் அதிகம் இருக்கும்.

சந்திராஷ்டமம் : 19,20,21 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்,

பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

தோற்றத்தில் கடுமையானவர் குணத்தில் குழந்தை மனம் கொண்ட மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப பொறுப்புகள் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்வீர்கள்.

வரவுக்கு மீறிய செலவுகள் இருந்து கொண்டே இருக்கும்.வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம்.  குடும்பத்தில் எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும்.  வாழ்க்கையில் பல சாதனைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதம் வந்து போகும். வீடு, வாகனங்களுக்கான செலவு அதிகரிக்கும். வெளியில் இருந்து வரும் எதிர்ப்புகளை சமாளிக்கும் மனவலிமை உருவாகும்.

உங்கள் சேமிப்பை நாளடைவில் உயர்த்த நினைப்பீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்கற இடங்களிலிருந்து நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்பிருக்கிறது.

உத்யோகத்தில் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டிவரும். தொழில், வியாபாரம் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் தீரும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட வேண்டியிருக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

சந்திராஷ்டமம் : 21,22,23,24

பரிகாரம்: ஸ்ரீநரசிம்ஹ ஸ்வாமியை வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும்.

kumpam

அடுத்தவர் மீது அதீத அன்பும் அக்கறையும் கொண்ட   கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் ஆன்மீக காரியங்களில் அதிகப்படியான ஈடுபாடு கொள்வீர்கள்.

தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.  உங்களின் அறிவுதிறன் அதிகரிக்கும்.இந்த மாதம் எல்லாவகையி லும் லாபம் கிடைக்கும்.சற்றும் எதிர்பாராத பணவரவும், அதிர்ஷ்டங்களும் வந்து சேரும். 

உங்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க விரும்புவீர்கள். மனதில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். 

ஒரு சில வீண் அலைச்சல்களை சந்திக்க வேண்டிவரும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த ஈகோ பிரச்சனை தீரும். மனைவியின் ஆலோசனை வேண்டிய போது கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். . மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். உத்யோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டிவரும்.

அதிகாரிகள் கூறிய படி காரியங்களை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.  தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்ய அதிக முயற்சியை மேற்கொள்வீர்கள்.

சினிமாத்துறையினருக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் நன் மதிப்பை பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பண பரிமாற்றம் வெற்றியை தரும்.

அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும்.

சந்திராஷ்டமம் : 24,25,26

பரிகாரம்: சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றிபெறும்.

menam

வருங்காலத்தை மனதில் கொண்டு திட்டமிட்டு செயல்படும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் சற்றும் எதிர்பார்க்காத சில விஷயங்கள் நடக்கும். இந்த மாதம் பணதேவை உண்டாகும்.

பயண அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படும். அடுத்தவர்களுக்கு உதவினால் உபத்திரம் உண்டாகலாம்.  பணவரவு சிறிது தாமதத்திற்கு பின் கைக்கு வரும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.

உங்களிடம் புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுப செலவு அதிகமாகும். கணவன் மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம்.

பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் சில தொந்தரவுகள் உண்டாக வாய்ப்புள்ளது. ஒரு காரியம் செய்யும் முன் தீர யோசித்து செய்வது நல்லது. யாருக்காகவும், எப்போதும் ஜாமீன் கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

எதிர்பாராத சில செலவுகளால் வெளியில் கடன் வாங்கி செலவு வேண்டிய சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்களை புரிந்துகொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும்.

சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞ்சர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். ண்களுக்கு பண தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் : 26,27,28 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் நவக்கிரகங்களை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும்.

Close Menu