இன்டர்நெட்உலகம்

இன்றைய கால கட்டங்களில் இன்டர்நெட் பயன்படுத்தாமல் ஒருவரும் இல்லை …
இன்டர்நெட் மூலமாக உலகில் நடக்கும் அனைத்து தகவல்களும் ஒரே இடத்திலிருந்து பெறலாம் அதை பற்றிய தகவல்கள் தினம் தினம் உங்கள் பார்வைக்கு இதோ …

internet tech engkal.com

இன்டர்நெட் பற்றிய புது புது தகவல்கள் இங்கு

internet tech engkal.com

எண்ணெய்   நிறுவனங்கள்  மற்றும்  வங்கிகள்  சேர்ந்து  கிரெடிட் கார்ட் வழங்குகிறது. இந்த  கிரெடிட் கார்ட் மூலம் பெட்ரோல்  போடும் போது  கேஷ்பேக்  மற்றும்  சலுகை  புள்ளிகள்  வழக்கப்படுகிறது  என  செய்தி  வெளியாகியுள்ளது.

 சிட்டி  பேங்க்  இந்தியன்  ஆயில் கார்டில் 150 ரூபாய்க்கு  எரிபொருள்   நிரப்பும்  போது  4  புள்ளிகள்  கிடைக்கும். இந்த ஒரு புள்ளியும்  ஒரு ரூபாய்க்கு சமம் என் கூறப்படுகின்றன .

 ஐசிஐசிஐ  வங்கி  2.5  சதவீதம்   இந்த   கேஷ்  பேக்  வழங்குகிறது குறைந்தபட்சம்  ரூ.500-க்கு  பெட்ரோல்  போட  வேண்டும்  என வெளியிடப்படுகிறது. அதே  நேரத்தில்  ஒரு  மாதத்துக்கு ரூ.100-க்கு மேல்  கேஷ் பேக் பெற  முடியாது  என்று  வெளியிட்டு  உள்ளது .

 ஹெச்பிசி எல்  கோரல்  அமெரிக்கன்  எக்ஸ்பிரஸ்  கார்டுக்கு  100  ரூபாய எரிபொருளுக்கு  6  புள்ளிகளும்,  எரிபொருள்  அல்லாத  மற்ற  செலவுகளுக்கு  2 புள்ளிகளும்  வழங்கப்படுகிறது .நான்கு  புள்ளிகளுக்கு  ஒரு  ரூபாய் வழங்கப்படும்.

பிபிசிஎல்  எஸ்பிஐ  கார்டு  பயன்படுத்துவதன்  மூலம்  ரூ.100-க்கு  13  புள்ளிகள் வழங்கப்படும்  4  புள்ளிகள்  என்பது  ஒரு  ரூபாய்கும் எஸ்பிஐ  மற்றும்  ஐசிஐசிஐ கார்டுகளில்  ரூ.4000-க்கு  மேல்  எரிபொருள்  வாங்கும்போது  இந்த  தள்ளுபடி செல்லாது. 

சூப்பர்  வேல்யூ  டைட்டானியம்  கார்டு  5%  கேஷ்  பேக்  வழங்குகிறது   இந்த கார்டு  குறைந்தபட்சம்  ரூ.750-க்கு  எரிபொருள்  நிரப்ப  வேண்டும்  என  புதிய செய்தி  வெளீடப்படுகிறது .

internet tech engkal.com

இணைய உலாவியின்  ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியினை  கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக Android Message எனும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு  முன்னல்  மொபைல் சாதனங்களைப்  பயன்படுத்தி குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடிய அப்பிளிக்கேஷன்கள் இருந்தன.

ஆனால்  இப்பொது  புதிய வசதிகளுடன்  ஊடாக  கணினிகளிலில் இருந்து  மொபைல்  சாதனங்களுக்கும்,  மொபைல் சாதனங்களில் இருந்து  கணினிகளுக்கும்  குறுஞ்செய்திகளை  அனுப்ப முடியும்.

இதன்  ஊடாக  எழுத்துக்கள்  மாத்திரமன்றி  புகைப்படங்கள், மற்றும்  ஸ்டிக்கர்கள் என்பவற்றினையும்  அனுப்ப  முடியும்.

இவ் வசதியினைப்  பெறுவதற்கு https://messages.android.com இணையத்தளத்திற்கு சென்று  மொபைலில்  QR  குறியீட்டினை  ஸ்கான்  செய்ய வேண்டும்.

internet tech engkal.com

ரயில்  டிக்கெட்  உறுதியாகும்  வாய்ப்புகள்  இருந்தால், ரயில்களில்  உணவுகள் ஆர்டர்  செய்வது, கால்டாக்சி  புக்கிங் உட்பட  பல்வேறு  புதிய  வசதிகளுடன் ஐஆர்சிடிசி  இணையதளம்  புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய  ரயில்வேயால்  இயக்கப்பட்டு  வரும்  14  ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பயணிகள்  ரயில்களில்  தினமும்  2  கோடியே  30  லட்சம்  பேர்  பயணம் செய்கின்றனர்.

ஐஆர்சிடிசி  இணைய தளத்தில்  டிக்கெட்  முன்பதிவின்போது,  இருக்கை அல்லது  படுக்கை  வசதி  இருப்பு நிலை, காத்திருப்பு  எண்ணிக்கை  உள்ளிட்ட விபரங்களை  வெளிப்படையாக  காண  முடிகிறது.

இந்நிலையில்,  பயணிகளின்  பல்வேறு  கோரிக்கைகளை  ஏற்று,  ஐஆர்சிடிசி இணையதளம்  புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது  தொடர்பாக  ஐஆர்சிடிசி அதிகாரிகள் தி இந்து  விடம்  கூறினர்கள் .

ஐஆர்சிடிசி  இணைய தளத்தை  தினமும்  13  லட்சம்  முதல்  14  லட்சம்  பேர் வரை  பயன்படுத்துகின்றனர். இந்நிலையில்,  தற்போது  பல்வேறு  புதிய வசதகளுடன்  ஐஆர்சிடிசி  இணைய தளம்  புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ரயில்  டிக்கெட்  இருப்பு  நிலையை  இந்த  இணைய தளத்தில்  எளிதாக  பார்க்க முடியும்.

டிக்கெட் முன்பதிவின்  போது, குறிப்பிட்ட ஒரு  ரயிலில்  டிக்கெட் கிடைக்காவிட்டால், அதே  நாளில்  அதே  தடத்தில்  மற்ற  நேரங்களில்  செல்லும் ரயில்களில்  டிக்கெட்  இருப்பு  நிலையையும்  பார்க்க  முடியும். இதன் மூலம் மற்ற  ரயில்களில்  பயணிகள்  எளிதாக  டிக்கெட்  பெற  முடியும்.

Close Menu