சாதிக்க தூண்டும் கதைகள்

உங்கள் வாழ்வில் வெற்றி பாதையை அடைய தூண்டும் சில கதைகள்....
motivational story engkal.com
motivational story engkal.com

“ஒரு செல்வமிக்க, விசித்திரமான மன்னர் இருந்தார். இந்த மன்னர் ஒரு பெரிய பாறாங்கல் ஒரு சாலையின் நடுவில் வைத்திருந்தார் . பின்னர் அவர் அருகே மறைத்து கொண்டார். சாலையில் சென்ற முதல் மக்கள் ராஜாவின் செல்வந்த வணிகர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள். அதை நகர்த்தாமல் மாறாக, அவர்கள் வெறுமனே அதை சுற்றி நடந்தனர். ஒரு சிலர் சத்தமாக மன்னரை குற்றம் சாட்டினார் . அவர்கள் யாரும் பாறையை நகர்த்த முயற்சி செய்யவில்லை. இறுதியாக, ஒரு விவசாயி வந்தார். அவரது கைகள் காய்கறிகளால் நிறைந்திருந்தன. அவர் சுற்றி வளைத்து விட, பாறாங்கல் அருகே வந்த போது மற்றவர்களை போல இல்லாமல், விவசாயி தனது சுமையைக் கீழே போட்டு, கல்லைத் திசைதிருப்ப முயன்றார் .அது நிறைய முயற்சி எடுத்தது, ஆனால் இறுதியாக அவர் வெற்றி பெற்றார். விவசாயி தனது சுமைகளைச் சேகரித்தார், அவர் செல்லத் தயாராக இருந்தார். அப்போது பணப்பை ஒன்று கிடப்பதை பார்த்தார். பணப்பையில் தங்க நாணயங்கள் மற்றும் அரசரிடமிருந்து ஒரு குறிப்பு. பணப்பை பாறையை நகர்த்தயிதற்கான வெகுமதி என்று அரசனின் குறிப்பு தெரிவித்தது.”

இக்கதை நமக்கு உணர்த்துவது:

மன்னர் விவசாயிக்கு எதைப் புரிய வைத்தார் தெரியுமா?நமது நிலைமையை மேம்படுத்த ஒவ்வொரு தடையும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

motivational story engkal.com

“ஒரு மனிதனிக்கு பிடித்த கழுதையானது ஆழமான செங்குத்தான பள்ளத்தாக்கிற்குள் விழுகிறது. அவன் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதை இழுக்க முடியவில்லை.. எனவே அவன் அதை உயிருடன் புதைக்க முடிவு செய்கிறான். அவர் மேலே இருந்து மணலை போடுகிறான். கழுதை மணலின் சுமையை உணர்கிறது, அதை உலுக்கியது, மேலும் மண் விழுகிறது, அதை உலுக்கியது மணல் விழ விழ அது கொஞ்ச கொஞ்சமாக கழுதை ஏறி மேலே வந்தது. கழுதை கொஞ்ச நேரத்தில் மேலே வந்து பசுமையான மேய்ச்சல் நிலங்களில் புல்லை மேயத் தொடங்கியது .

இந்த கதையிலிருந்து தெரிந்து கொள்வது:

பிரச்சனைகளை உதறிவிட்டு ,அவற்றிலிருந்து கற்றுக்கொண்டதைக் கொண்டு மேலே வந்தால், நீங்களும் பசுமையான நிலத்தை அடையலாம்.

motivational story engkal.com

“ஒரு வான்கோழி ஒரு காளையுடன் உரையாடுவது,” நான் அந்த மரத்தின் ஏற விரும்புகிறேன், ” ,ஆனால் அதற்கான ஆற்றல் என்னிடம் இல்லை என வான்கோழி கூறியது. “” சரி, நீ என் சாணத்தை எடுத்துகொள் ? “அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன என காளை பதிலளித்தது. “.” வான்கோழி அதை உண்டு ஒரு குழாயின் உச்சிக்குச் சென்றது.அடுத்த நாள் மரத்தின் மிகக் குறைந்த கிளையை அடைவதற்கு போதுமான பலத்தை அதற்கு கொடுத்தது. அடுத்த நாள், இன்னும் சில சாணங்களை சாப்பிட்ட பிறகு, அது இரண்டாவது கிளையை அடைந்தது. இறுதியாக நான்காவது இரவுக்கு பிறகு, அங்கே மரத்தின் உச்சியில் அது பெருமை அடைந்தது. விரைவில் அது ஒரு விவசாயினால் சுடப்பட்டது,

 

இந்த  கதையிலிருந்து தெரிந்து கொள்வது:

எளிதாக கிடைப்பதை கொண்டு நீ மேலே சென்று விடலாம் ஆனால் அங்கே நிலைத்திருக்க முடியாது.

motivational story engkal.com

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

motivational story engkal.com

ரயில் நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

அந்த வழியாக சென்ற ஒருவர் 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார், பின் அவருக்கு மனதில் ஒரு கருத்து தோன்றியது உடனே அவர் அந்த பிச்சைக்காரனிடம் சென்று அவருடைய பையில் இருந்த பென்சிலை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்கு சமமான பென்சிலை எடுத்துக்கொள்கிறேன் என்ன இருந்தாலும் நீயும் செய்பவன் அல்லவா? என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

சில மாதங்களுக்கு பிறகு அந்த ஒருவர் ஒரு விருந்தில் கலந்துக்கொள்கிறார்.அந்த விருந்திற்கு இதற்கு முன் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்தவர் கோட் மற்றும் டை அணிந்து கனகச்சிதமாக விருந்தில் அமர்ந்து இருந்தார்.

பிச்சைக்காரர் அந்த ஒருவரிடம் சென்று நான் யார் என்று தெரிகிறதா என்று கேட்டு பின் நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு நீங்கள் தான் கரணம். என்று சொல்லிவிட்டு பழைய நிகழ்வுகளை நினைவுப்படுத்தினான்.

பின் அந்த ஒருவர் நினைவுக்கு வந்து விட்டது இப்போது என்ன செய்கிறாய் உடையில் நல்ல மாற்றம் தெரிகிறதே என்னப்பா என்று கேட்டார்.அந்த கோட் சூட் மனிதர் சொன்னார் நீங்கள் தான் இந்த மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணம் என்றார்.

என் வாழ்நாளில் மறக்க முடியாத மனிதர் நீங்கள் தான் என்னையும் ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதன் நீங்கள் தான்.என் திருவோட்டில் 5 ரூபாய் போட்டு பின் அதற்கு இணையாக பென்சிலை எடுத்து எனக்குள் இருந்த வியாபார தன்மையை எனக்கு அறிய வைத்தவர்கள். அந்த நிமிடம் முதல் உழைக்க ஆரம்பித்துவிட்டேன்.

அந்த நிமிடத்துக்கு முன்னர் வரை அழுக்காக சோம்பேறியாக ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து இருந்த நான்.பின்  சாக்ரடிஸ்ன் கொள்கையை எனக்குள் தூண்டி விட்டவர் நீங்கள் தான்.பிறகு தான் சிந்திங்க ஆரம்பித்தேன். நான் யார்? எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஆனால் சாகும்போதாவது எதையாவது சாதித்து விட்டு சாகலாமே. என முடிவு எடுத்தேன். பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன்.நான் உங்களுக்கு நன்றி சொல்ல என்றேன்றும் கடமைப்பட்டுளேன். நன்றி பலகோடி ஐயா…

 அனைவருக்குள்ளும் எதாவது ஒரு திறமை ஒளிந்து இருக்கும்..அதை சரியான நேரத்தில் பயன்படுத்தினால்  வாழ்க்கையில் முன்னேறலாம்…    

motivational story engkal.com

கண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாக தெரியாது.

 மூக்கிலே அடைப்பு இருந்தால் நறுமணத்தை நுகர முடியாது.

வாயிலே புண் இருந்தால் உணவினை சுவைக்க முடியாது.

அதுபோல் சிந்தனை இல்லாவிட்டால், வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. சிலர் தேவையற்ற அச்சத்திற்கு ஆளாகி, மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தை போக்கி துணிச்சலுடன் செயல்பட்டால், வாழ்வில் வெற்றி நிச்சயம்.

ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி.

ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது.

உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்கள் எண்ணத்தை உயர்வாக வையுங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்..

motivational story engkal.com

தன்னம்பிக்கை கதைகள்

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் ஏற்பட்ட சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் சோர்ந்து பொய் அருகில் இருக்கும் பூங்காவில் உள்ள மேசை மீது அமர்ந்து இருந்தார். அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடையவர் அருகில் வந்து அமர்ந்தார். பக்கம் சோகமாக அமர்ந்திருப்பவரை கண்டு ஏன் சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர் எனது தொழில் நஷ்டம் அடைந்துவிட்டது, அதனால் மனது உடைந்து போய்விட்டேன் என்றார்.

எவ்வளவு ரூபாய் நஷ்டம் என்று கேட்டார். அதற்க்கு 50 கோடி ரூபாய் என்றார். அவர் நான் யார் என்று தெரியுமா என கேட்டு இந்த ஊரில் பெரிய செல்வந்தரின் பெயரை கூறினார். இதை கேட்டதும் அசந்து போனார்.

இப்போது உங்களுக்கு50 கோடி பணம் இருந்தால் நீங்கள் சரியாகி விடுவீர்களா என்று கேட்டார்.

பின் அந்த செல்வந்தர் ஒரு செக் புக் எடுத்து 500 கோடி ரூபாய்க்கு கையெழுத்திட்டு கொடுத்தார். நீ கேட்டதை விட 10 மடங்கு அதிகமாகவே உள்ளது. இதை கொண்டு எல்லாவற்றையும் சமாளி. ஒரு வருடம் கழித்து திரும்ப எனக்கு கொடுக்க வேண்டும். நான் அடுத்த வருடம் இதே நாளில் இங்கு காத்து இருப்பேன் என்று சொல்லிவிட்டு அவரிடம் செக் கொடுத்து விட்டு சென்றார்.

பிறகு அந்த நிறுவனத்தின் தலைவர் விரைவாக அலுவலகத்திற்கு சென்று அவருடைய அறையில் உள்ள பீரோவில் வைத்து பூட்டிவிட்டார்.அனைத்து ஊழியர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினார்.இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். நண்பர்களே நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது, ஆனால் என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அதை எடுக்கமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி எற்பட்டது? எதனால் எதற்காக ஏற்பட்டது என ஆராய்ந்து அதில் இருந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டார்.

பிறகு வேளைகள் வேகமாக நடந்தன, தவறுகளை திருத்தி, சரியாக அனைத்து ஊழியர்களையும் ஒத்துழைக்க வைத்தார்.

அவருடைய பேச்சு,மூச்சு, செயல், சிந்தனை மற்றும் துக்கம் அனைத்தும் அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

ஒரு வருடம் கழித்து கணக்குகள் அலசப்பட்டன.550 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்தார்கள் அவருடைய நிறுவனம்.

அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வந்தர் கொடுத்த செக்கை எடுத்துக்கொண்டு சென்றார். சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும் அவருக்கு அருகில் அவருடைய கையை பிடித்து கொண்டு ஒரு பெண்மணியும் வந்தார். சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வந்தரை காணவில்லை.

அவர் அந்த பெண்மணியிடம் எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் என கேட்டார்.

 அதற்கு அந்த பெண்மனி  பதட்டத்துடன் உங்களுக்கு எதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா என்றார்.அப்படி எதும் இல்லை அம்மாஏன் இப்படி  சொல்கிறாய். அந்த பெண்மனி இல்லை ஐயா அவர் ஒரு பைத்தியம் மனநிலை சரியில்லாதவர் தன்னிடம் இருக்கும் பழைய செக்கை எடுத்து கையெழுத்து போட்டு தருவார்.

அந்த நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அது தான் நம்மை காப்பாற்றி இருக்கு என்று நினைத்தார்.  

நியூசிலாந்திலிருக்கும் சின்ன ஊர் அது. ஜானும் ஜேம்ஸும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். ஜேம்ஸ், அங்கே குடிவந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. இருவருக்குமே ஓய்வாக இருக்கும் நேரத்தில் அருகிலிருக்கும் ஏரிக்குப் போய் மீன் பிடிப்பது பிடிக்கும். ஆனால், இருவரும் ஒன்றாகப் போய் மீன் பிடிக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்க்காமலேயே இருந்தது. அந்த நாளும் வந்தது.

இருவரும் அவரவர் தூண்டிலில் பிடிபடும் மீன்களைப் பத்திரப்படுத்த ஐஸ் பெட்டிகள், மற்ற துணைக்கருவிகள், அவர்களுக்கான சிறு ஸ்நாக்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். அவரவர் வேலை, குடும்பம், பொது விஷயங்கள் எல்லாவற்றையும் பேசியபடி ஏரிக்கரைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். சற்று இடைவெளிவிட்டு, தனித்தனியே அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்க ஆரம்பித்தார்கள்.

ஜான் தூண்டிலைப் போட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பெரிய மீன் பிடிபட்டது. அவன் சத்தமாகச் சொன்னான்… “ஜேம்ஸ்… நான் அதிர்ஷ்டக்காரன். எனக்குப் பெரிய மீன் கிடைச்சிடுச்சு…’’ பிறகு அந்த மீனைப் பிடித்து தான் கொண்டு வந்திருந்த ஐஸ் பெட்டியில் போட்டு பத்திரப்படுத்தினான். சற்று நேரத்தில் மேலும் சில சின்ன மீன்களும் அவனுக்குக் கிடைத்தன. அத்தனையையும் ஐஸ் பெட்டிக்குள் போட்டான். `அவ்வளவுதான்… இனி கிளம்பிவிட வேண்டியதுதான்’ என்ற முடிவுக்கும் வந்திருந்தான். ஆனால், நண்பனோடு வந்திருக்கிறானே… விட்டுவிட்டுப் போக முடியுமா? எனவே, ஜேம்ஸின் அருகிலமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். மேலும், ஒரு மணி நேரம் கழிந்தது. ஜேம்ஸின் தூண்டிலில் ஒரு மீன்கூட சிக்கவில்லை.

“ஏன்… ஜேம்ஸ் தூண்டில்ல இரை இருக்கானு பாரு?’’

ஜேம்ஸ் தூண்டிலை இழுத்துப் பார்த்தான். இரை இருந்தது. மறுபடியும் தூண்டிலைத் தண்ணீருக்குள் விட்டான்.

மேலும் ஐந்து நிமிடங்கள் கழிந்தன. “ஜேம்ஸ்… நான் வேணா உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா? என் தூண்டிலைப் போடுறேன். மீன் கிடைச்சா நீயே எடுத்துக்கோ!’’

“வேணாம் ஜான். இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் மீன் சிக்கிரும். நீ வேணும்னா கிளம்பேன். நான் பின்னாலேயே வந்துடுறேன்…’’ ஜான், அதற்கு பதிலேதும் சொல்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.

சரியாகப் பத்தே நிமிடங்கள்… ஜேம்ஸின் தூண்டிலில் ஒரு பெரிய மீன் மாட்டியது. அதைப் பிடித்த ஜேம்ஸ், மறுபடியும் அந்தப் பெரிய மீனைத் தண்ணீருக்குள்ளேயே விட்டுவிட்டான். இதைப் பார்த்து குழம்பிப் போனான் ஜான். சற்று நேரத்தில் இன்னொரு பெரிய மீனும் கிடைத்தது. அதையும் திரும்ப ஏரித் தண்ணீருக்குள்ளேயே விட்டுவிட்டான். அதற்குப் பிறகும் பெரிய மீன்கள் வரிசையாக தூண்டிலில் மாட்டிக்கொண்டிருந்தன. எல்லாவற்றையும் நீருக்குத் திருப்பியனுப்பிக்கொண்டிருந்தான் ஜேம்ஸ்.

ஒரு கட்டத்தில் கத்திவிட்டான் ஜான். “ஏன் பெரிய மீன் கிடைச்சா திரும்பத் தண்ணிக்குள்ளேயே விடுறே?’’

`அதுவா? என் வீட்டுல இருக்குற வாணலி கொஞ்சம் சின்னது. இவ்வளவு பெரிய மீனை அதுல போட்டு வறுக்கவோ, சமைக்கவோ முடியாது.’’

இதைக் கேட்டு ஒரு கணம் திகைத்துப் போனான் ஜான். பிறகு சொன்னான்… “சின்ன வாணலியாவோ, பாத்திரமாவோ இருந்துட்டுப் போகட்டும். மீனை முழுசாத்தான் சமைக்கணுமா என்ன… நறுக்கி சமைக்கலாம்ல?’’  இது போல் தான் வாய்ப்புகளும் வாய்ப்பு சிறியதோ பெரியதோ  வரும் போதே பயன்படுத்திக்க வேண்டும்.

ஒருவர் கொடுக்கும் நம்பிக்கை மற்றும் ஊக்கத்தையும் கொண்டு சாதிக்கலாம்…

ஒருவருக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும், எதையும் சாதிக்கும் நம்பிக்கையையும் வார்த்தைகளால் கொடுக்க முடியும் என்பதை உணர்த்துகிறது இக்கதை

 இங்கிலாந்திலிருக்கிற ஒரு கிராமம். அங்கிருந்த விவசாயி ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது. `பட்டீ’ (Buddy) என்று அதற்குப் பெயர்வைத்திருந்தார். அவருடைய சின்னஞ்சிறு நிலத்து வேலைகளுக்கு உதவுவது பட்டீதான். அறுத்த கதிர்களை நிலத்திலிருந்து எடுத்துவருவது, விவசாயத்துக்கான பொருள்களை ஏற்றிச் செல்வது, அவ்வப்போது பக்கத்து ஊர்களுக்கு வண்டிகட்டிக் கொண்டு போக… எனப் பல வேலைகளுக்கு உறுதுணையாக இருந்தது பட்டீ.

ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார்  விவசாயி. அவரைத் தேடிக்கொண்டு ஒருவர் வந்தார். அவரை விவசாயி, அந்தச் சுற்றுவட்டாரத்தில் பார்த்ததில்லை. வெகுதூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும் கசங்கிய ஆடைகளும் உணர்த்தின. வந்தவர், வணக்கம் என்று சொன்னார்.

விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார். அவர் உட்கார்ந்ததும், `சூடாக டீ குடிக்கிறீங்களா?’ என்று கேட்டார்.

வந்தவர், அவசரமாக `வேண்டாம்’ என்று சொன்னார். அவர் கொஞ்சம் பரபரப்பாக இருப்பதை விவசாயியால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

`சொல்லுங்க… என்ன விஷயம்?’ என்று விவசாயி கேட்டார்.

`ஒண்ணுமில்லை. நான் லண்டன்லருந்து வருகிறேன். பக்கத்துல இருக்குற  ஊருக்குப் போகணும். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை. வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு. அதை வெளியே எடுக்கணும். அக்கம்பக்கத்துல விசாரிச்சேன். உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம்னும் சொன்னாங்க. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம்னு…’

`ரொம்பப் பெரிய காரா?’ என்றார் விவசாயி.

`இல்லை, இல்லை. சின்ன கார்தான்’ என்றார் வந்தவர்.

`வாங்க முதலில்  காரைப் பார்க்கலாம்’ என்ற விவசாயி, கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக்கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி அவருடன் சென்றார். இருவரும் கார் பள்ளத்துக்குள் விழுந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார்.அவர்  சொன்னதைப்போல கார் சிறியதாகத்தான் இருந்தது. ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில் ஒருவேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்பட்டாலாம் என்றும் அவருக்குத் தோன்றியது.

என்னங்கய்யா… காரை வெளியே எடுத்துடலாம்ல?’ என்ற வெளியூர்க்காரரின் கேள்விக்கு விவசாயி பதில் சொல்லவில்லை. வேலையில் இறங்கினார். ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகப் பிணைத்தார். கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தார்.

பிறகு, `எங்கடா கேஸி (Casey)… இழு பார்ப்போம்!’ என்று சத்தமாகக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது.

`ம்… பெய்லி (Bailey) இழுடா ராஜா!’ இன்னும் சத்தமாகச் சொன்னார் விவசாயி. குதிரை நகரவேயில்லை.

`டேய் மேண்டி (Mandy) வேகமா இழு!’ மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். குதிரை ஒரு இஞ்ச்கூட நகரவேயில்லை.

`என் செல்லம்… பட்டீ… நீயும் சேர்ந்து இழுடா!’ என்றார். அவ்வளவுதான். குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடம் கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது.

வெளியூர்க்காரர் விவசாயிக்கு நன்றி சொன்னார். விவசாயி குதிரையை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது கேட்டார்… `சரிங்கய்யா… நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேர்ல கூப்பிட்டீங்க? அதுதான் எனக்குப் புரியலை.’

‘அது ஒண்ணுமில்லை. என் பட்டீக்கு கண்ணு தெரியாது. தான் மட்டும் கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்னு அது நினைக்க  கூடாது இல்ல? அதான்… அதுகூட இன்னும் மூணு குதிரைகள் இருக்குற மாதிரி நம்பவெச்சேன். அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. காரை வெளியே இழுத்துடுச்சு!’

Close Menu