டெக்வைரல்

டெக்வைரல்  தினம் ஒரு  தகவல் தொழிநுட்பத்தைப்  பற்றி  வைரலாகி  தான் வருகிறது       அந்த  தகவல்களை  நீங்களும்  அறிந்துகொள்க

டெக்வைரல் பற்றிய புது புது தகவல்கள் இங்கு

techviral engkal.com

 ஸ்மார்ட்போன்  இப்போது  அனைவரின்  கையிலும்  வந்துவிட்டது. அதனால், சமூக  வலைத்தளங்களான  டிவிட்டர், முகநூல், வாட்ஸ்-ஆப் ஆகியவற்றை பெரும்பாலானோர்  பயன்படுத்தி  வருகின்றன..

குறிப்பாக  வாட்ஸ்-அப்  மூலம்  பல்வேறு  செய்திகள்   பகிரப்பட்டு  வருகிறது. அதில் உள்ள ஆடியோ  மற்றும்  வீடியோ  கால்  வசதிகளை  பலரும் பயன்படுத்தி  வருகின்றார்கள் .

கடந்த  2016ம்  ஆண்டு  இந்த  ராணுவ  முகாம்  மீது  பயங்கரவாதிகள்  தாக்குதல் நடதினர். அப்போது, தங்களின்  ஓவ்வொரு  அசைவையும்  தங்களின் நண்பனர்களுக்கு  வாட்ஸ்-அப் மூலமே அவர்கள்  பகிர்ந்துள்ளது  தெரிய வந்துள்ளது.

ஏனெனில் வாட்ஸ்-அப் கால்  மற்றும்  வீடியோக்களை  சேகரிக்கவும்  முடியாது, என  செய்திகளை  வெளியீட்டு  உள்ளனர் . அதை ஒட்டுக்  கேட்கவும் முடியாது. எனவே, தீவிரவாதிகள்  வாட்ஸ்-அப்பை  அதிகம் பயன்படுத்துவதாக  கூறப்படுகிறது.

எனவே, வாட்ஸ் அப்  கால்  மற்றும்  வீடியோ  கால்  வசதியை  தடை  செய்ய மத்திய  அமைச்சகம்  ஆலோசித்து  வருகின்றது. முதல்  கட்டமாக  இந்தியாவின் எல்லையோர  மாநிலங்களில்  தடை  கொண்டு  வரப்படுகிறது.  முதலில் காஷ்மீரில்  இந்த  தடை  அமுலுக்கு  வார  போகின்றது  எனத்  தெரிய வந்துள்ளது .

techviral engkal.com

இந்திய  விஞ்ஞானிகள்  ஒரு  புதிய  கிரகத்தை  கண்டுபிடித்து  சாதனை படைத்துள்ளனர். இது   பூமியில்   இருந்து  600  ஒளியாண்டுகள்  தொலைவுக்கு அப்பால்  உள்ளது.

இந்த  புதிய  கிரகத்தை  Physical Research Laboratory (PRL)  எனும்  வானியல்  ஆராய்ச்சி  ஆய்வக  விஞ்ஞானிகள்  கண்டுபிடித்துள்ளனர். புதிய  கிரகத்துக்கு  EPIC 211945201b or K2-236b  என்று  பெயரிடப்பட்டுள்ளது.

இது  குஜராத்  மாநிலம்  அகமதாபாத்தில்  செயல்பட்டு  வருகிறது.  EPIC 211945201 or K2-236  என்ற  நட்சத்திரத்தைச்  சுற்றி  வரும்  இந்த  புதிய  கிரகம்,  பூமியைப் போன்று  ஆறு  மடங்கு  ஆரத்தில்  பெரியதாகவும்  27 மடங்கு  எடை கொண்டுள்ளதாகவும்  விஞ்ஞானிகள்  கூறப்படுகின்றன.

ராஜஸ்தான்  மாநிலத்தில்  உள்ள  அபு  மலையில்  நிறுவப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரோகிராப்  தொலை நோக்கி  மூலம்  அதன்  நிறமாலையைப் பயன்படுத்தி  பொருட்களை  கண்டறியும்  கருவி  இந்த  புதிய  கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு  ஆங்கிலத்தில்  PRL Advance Radial-velocity Abu-Sky Search’ (PARAS) spectrograph  என்று  விஞ்ஞானிகள்  கூறப்படுகின்றன.

இந்த  புதிய  கிரகம்  தனது  நட்சத்திரத்தை 19.5 நாளில்  சுற்றி  வருகிறது  பின்பு   இதன்  வெளிப்புற  வெப்பநிலை 600 டிகிரி   செல்சியஸ்  என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த  புதிய  கிரதத்துக்கும் அதன்  நட்சத்திரத்துக்கும்  பூமிக்கும்  சூரியனுக்கும்  உள்ள  இடைவெளியைப்  போன்று  ஏழு  மடங்கு  குறைவாகவே உள்ளதாம். 

சூரியக்குடும்பத்தில  உள்ள  நெப்டியூன், மற்றும்  சனி  போன்ற  கிரகங்களின் தோற்றம்  குறித்த  ஆய்வுக்கு  இந்த  புதிய  கிரகம்  உதவியாக  இருக்கும்  என்றும்  விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர்.

techviral engkal.com

பிரபல  சொகுசு கார்  தயாரிப்பு  நிறுவனமாக  ஆடி  நிறுவனத்தின்  தலைமை நிர்வாகி  ருபர்ட்  ஸ்டாட்லர்  கைது  செய்யப்பட்டுள்ளார்.

டீசல்  உமிழ்வு  சோதனை  ஏமாற்றல்  விவகாரத்தில்  சாட்சிகளை கலைத்துவிடுவார்  என்பதன்  காரணமாக  இவர்  கைது  செய்யப்பட்டதாக ஜெர்மனி  சேர்ந்த  சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும்  இந்த  வழக்கு  தொடர்பான  ஆதாரங்களை  இவர்  அழித்து  விடுவார்  என்ற காரணத்தினால்  கைது  செய்யப்பட்டுள்ளதாக  தகவல்கள்  தெரிவிக்கின்றன.

ஆடம்பரக்  கார்  பிராண்ட்  வோல்க்ஸ்  வேகன்  ஆடி  கார்  டீசல் வெளியேற்றத்தில்  பொய்  கூறி ஏமாற்றியதாக  கடந்த  வாரம்  விசாரணைக்கு  வந்த  வழக்கில்  சட்டவல்லுநர்கள்  தங்கள்  விசாரணைப் பரப்பை  அதிகரித்தனர்.  இதனையடுத்து  பொய்விளம்பரம்,  மோசடி என்று ஸ்டாட்லர்  மீது  வழக்குத்  தொடரப்பட்டுள்ளது.

டீசல்  உமிழ்வு  சோதனை  ஏமாற்றல்  பிரச்சனை  தொடர்பாக  மூன்று ஆண்டுகளுக்கு  முன்னரே  சர்சைகள்  கிளம்பியது, எனினும்  இதனை மறைப்பதற்காக  தங்களது  கார்களில்  ப்ரத்தியேக  கருவிகளைப் பொருத்தியதாகக்  இந்நிறுவனத்தின்  மீது  கடும் குற்றச்சாட்டுகள்  எழுந்தன.

முதன்  முதலில்  இந்த  ஏமாற்றுக்கருவிகள்  வோல்க்ஸ் வேகன்  கார்களில் பொறுத்தப்பட்டது  என்பது  கண்டுபிடிக்கப்பட்டது. இதன்  பின்னரே  ஆடம்பர வாகனமான  ஆடிகாரிலும்  இந்த  டீசல்  புகை  வெளியேற்ற  தரவு  மறைப்புக் கருவி  பொருத்தப்பட்டது தெரியவந்தது.

அமெரிக்காவில்  விற்கப்பட்ட  சுமார்  6 லட்சம்  வோல்க்ஸ் வேகன்  கார்களில் டீசல்  புகை  வெளியேற்ற  மறைப்புக்  கருவிகள்  பொருத்தப்பட்டிருப்பதாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும்  இந்த தொழில்நுட்பம்  உலகம்  முழுதும் 11  மில்லியன்  கார்களில்  பொருத்தப் பட்டிருக்கலாம்  எனவும்  கருதப்படுகிறது.

techviral engkal.com

தற்போது தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்களுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது,  விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை இந்திய முழுவதும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது மிக முக்கியமானது.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளும் முயற்சியில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்  விரைவில் 5ஜி சேவையை துவங்க உள்ளது. மேலும் தற்சமயம் சிறந்த டெலிகாம் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

நோக்கியா நிறுவனத்தில் இருந்து வெளியான தகவலின் அடிப்படையில் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவையை இந்தியா முழுவதும் வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது,மேலும் இந்த 5ஜி சேவை இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 5ஜி சேவையை வழங்க கோரியண்ட், லார்சன் அண்ட் டூப் மற்றும் ஹெச்பி நிறுவனங்களின் ஆலோசனையையும் பிஎஸ்என்எல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் 5ஜி சேவை இந்திய முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மைப் பொது மேலாளர் அனில் ஜெயின் சாய் தெரிவித்துள்ளார்.

இனி இந்த திட்டங்களின் தினசரி நன்மைகளுடன் சேர்த்து:

பிஎஸ்என்எல் அதன் ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666/- மற்றும் ரூ 999/- ஆகிய ப்ரீபெய்ட் அளவற்ற  காம்போ திட்டங்களுக்கு அறிவித்துள்ளது.  இனி இந்த திட்டங்களின் தினசரி நன்மைகளுடன் சேர்த்து 2 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா கிடைக்கும்.

பிஎஸ்என்எல்-ன் 3ஜி டேட்டா வழங்கும் திட்டங்களான ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444- மற்றும் ரூ.448/- ஆகியவைகளும் கூட கூடுதல் 2 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். ஜியோவின் கூடுதல் டேட்டா வாய்ப்பானது மூன்று வாரங்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலைப்பாட்டில், பிஎஸ்என்எல்-ன் இந்த வாய்ப்பானது மொத்தம் 60 நாட்களுக்கு அணுக கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

5 ப்ரீபெய்டு வரம்பற்ற காம்போ திட்டங்களுமே இந்த வாய்ப்பானது ஜூன் 18, 2018 முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. கூடுதல் டேட்டாவை தவிர குறிப்பிட்டுள்ள திட்டங்களின் இதர நன்மைகளில் எந்த மாற்றமும் கிடையாது. ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666/- மற்றும் ரூ.999/- ஆகிய 5 ப்ரீபெய்டு வரம்பற்ற காம்போ திட்டங்களுமே தினசரி அல்லது வாராந்திர வரம்பில்லாத வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன.

 

techviral engkal.com

ட்ரூ காலர்  மூலம் காலர் அடையாளம் தெரிந்து கொள்ளலாம் என்பது  அனைவருக்கும்  தெரிந்ததே. இப்போது  இந்த செயலி இந்தியாவின் முதல் மல்டிபேங்க் பேமெண்ட் செயலி ஒன்றை துவங்கியுள்ளது. அதன் பெயர் ‘சில்ர்’.

 2017ஆம் ஆண்டு ட்ரூ காலர் நிறுவனம் ட்ரூ காலர் பே என்ற வசதியை அறிமுகப்படுத்தி இந்தியர்களின் பணபரிமாற்றத்திற்கு உதவியது.

இந்த செயலி மூலம் மொபைலில் பேமெண்ட் செய்பவர்களுக்கு உதவியாக இருந்தது மற்றும் பயனாளிகள் விரைவாகவும் எளிதாகவும் பயன்படுத்தும் வகையில் இந்த பேய்மென்ட் வசதி உள்ளது என்று கூறியுள்ளார். எங்களுடைய வாடிக்கையாளர்கள் தினமும் தங்களுடைய தேவைக்கேற்ற பணப்பரிமாற்றங்களை செய்திட எங்களுடைய இந்த செயலி உதவிகரமாக இருக்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.

 ‘பெங்களூரில் உள்ள இந்த நிறுவனத்தில் இணைந்து பணிபுரிவதில் நாங்கள் உண்மையில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்களுடைய பணியால் எங்கள் வாடிக்கையாளர்கள் மொபைல் பேமெண்ட் வசதியை எளிதாக பயன்படுத்துவார்கள்  என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இன்னும் ஒருசில மாதங்களில் வாடிக்கையாளர்களே எதிர்பார்க்காத வகையில் புதுப்புது வசதிகள் மூலம் பேமெண்ட் பரிவர்த்தனை செய்யவிருப்பதாகவும், எங்களுடைய புதிய சேவைகள் பிரம்மாண்டமாக  இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமான ட்ரூ காலர் நிறுவனத்தின் இந்த மொபைல் பேமெண்ட் செயலி தற்போது 100 மில்லியன் பயனாளிகளுக்கும் மேல் பெற்றுள்ளது.

 டெக்னாலஜி அளவில் இந்த நிறுவனம் நீண்ட கால பயணத்தை தொடரும் என்றும், ஆரம்பத்தில் வெறும்  காலர் ஐடியாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் படிப்படியாக வளர்ந்து ஸ்பேம் பிளாக்கிங், எஸ்.எம்.எஸ். பிளாஷ் மெசேஜ் மற்றும் தற்போது பேமெண்ட் சேவை என விரிவாக்கம் செய்து கொண்டே இருப்பதே இதன் வளர்ச்சி எனலாம்.

100 மில்லியன் ஸ்மார்ட்போன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்கள் இண்டர்நெட் உதவியுடன் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதோடு அவர்களுடைய அவசர தேவைக்கு பணப்பரிவர்த்தனையும் செய்யும் வகையில் தங்களுடைய சேவை இருப்பதாக நிறுவனத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர். தினமும் 100 மில்லியன் நபர்கள் ஸ்மார்ட்போன் மூலம் ட்ரூ காலர் சேவையால் பயனடைந்து வருகின்றனர்.

techviral engkal.com

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை சொல்லும் புதிய செயலி அறிமுகம்!!

நாம் தினசரி உண்ணும் உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று நமக்கு அதிகமாக இல்லை என்றாலும் எதோ கொஞ்சமாவது தெரியும். நாம் அனைவருக்கும் தெரியும் பாலில் கால்சியம் இருக்கிறது. பேரீட்சையில் இரும்பு  சத்து இருக்கிறது என்று நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இன்னும் சில உணவுகளில் என்ன சத்துக்கள் இருக்கிறது என்று நமக்கு தெரியாது.

ஆனால், இப்போது கண்டுபிடிக்கபட்ட புதிய கருவி உங்கள் கையில் இருந்தால் போதும். உங்கள் கையில் இருக்கும் உணவில் என்னென்னே சத்துக்கள் இருக்கிறது என்று ரோபோ போல் மடமடவென கூறிவிடுவீர்கள். அந்த கருவியின் பெயர் டெல்ஸ்பேக் ஃபுட் ஸ்கேனர் (TellSpec food scanner). இந்த கருவியின் மூலம் நாம் சாப்பிடக்கூடிய அனைத்து உணவிலும் உள்ள ஊட்ட சத்துக்களை உடனே இந்த கருவி ஸ்கேன் செய்து நமக்கு கூறிவிடுகிறது.

இந்த கருவியை உங்களுடைய மொபைலில் இணைத்துகொள்ள வேண்டும். பின்னர் அந்த ஸ்கேனரை நாம் உண்ணும் உணவிற்கு அருகில் சிறிது நேரம் வைக்க வேண்டும். இதையடுத்து, இந்த கருவியில் உள்ள சென்சாரின் மூலமாக  உணவு பொருட்களில் எவ்வளவு கார்போஹைட்ரேட் உள்ளது, எவ்வளவு கொழுப்புசத்து உள்ளது. எவ்வளவு புரதசத்து உள்ளது என்பதை அறிந்து பின் நமது மொபைலுக்கு அனுப்பிவிடும்.

அந்த தகவலை நாம் எளிமையாக காணும்படி மொபைல் திரையில் தெரியும். மொபைலில் உள்ள இந்த தகவல்கள் டெல்ஸ்பேக் நிறுவனத்தின் செர்வரில் சேமித்து வைக்கப்படும். பின்னர் இந்த தகவல்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். உணவில் உள்ள சத்துக்கள் மட்டும் இல்லை எவ்வளவு சத்துக்கள் இருக்கிறது என்றும் தெளிவாக கூறுகிறது.

 

techviral engkal.com

 மக்களிடையே ஏற்படும் பெரும்பாலான சந்தேகங்களுக்கு கூகுள் விடையளிக்கும். இதனால், மக்கள் அதிகம் பயன்படுத்தும் இணையதளமாக கூகுள் மாறி இருக்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திய முதல் நிறுவனம் என்ற பெருமையையும் கூகுள் பெற்றது. 2018ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து, செயற்கை நுண்ணறிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சுந்தர் பிச்சை, கூகுளின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த விஷயங்களை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், செயற்கை நுண்ணறிவை சார்ந்த பல விஷயங்கள் இருக்கின்ற பொழுதிலும், உடல் நலம் சார்ந்த விஷயங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவிக்கிறார்.

அதனால், இதய நோய்களை கணிக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவை கூகுள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதன்மூலம் ஒரு மனிதனுக்கு ஏதாவது உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டால், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் அவர்களது உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் தெரிந்துகொள்ள முடியும். இதை பயன்படுத்தி, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் இறப்பு தேதியை கூகுள் கணித்தது. அதனைப்போலவே, கூகுள் கணித்த தேதியில் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

இதனைப்பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்ததோடு, இது எப்படி சாத்தியம் என்று எண்ணத்தொடங்கியுள்ளனர். இந்த வகையான சில புதுவகையான coding ஐ கூகுள் பயன்படுத்தி மனிதர்களின் நோயை கண்டுபிடித்து அது எந்த அளவு அவர்களின் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.

Techviral engkal.com

 

விவோ நிறுவனம் இந்தியாவில் பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்சமயம் அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. விவோ வி9 யூத் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,990-ஆக இருந்தது தற்போது  விலைகுறைக்கப்பட்டு ரூ.17,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன்  6.3-இனச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி9 யூத்.

விவோ வி9 யூத் சாதனம் 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டோ-கோர் செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்.வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளும் நன்றாகவே உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. லைட் சென்சார், ஜியோர்ஸ்கோப் சென்சார் போன்ற பல்வேறு சென்சார் அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளதுஇ அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஏஆர் ஸ்டிக்கர் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மேலும் கருப்பு மற்றும் தங்க நிங்களில் இந்த விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. இந்த 3260எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி உள்ளது.

techviral engkal.com

இன்றைய சூழலில் டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வந்ததிற்கு பிறகு அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கு பயங்கர மோதல் என்றே சொல்லலாம் அனைத்து டெலிகாம் நிறுவங்களும் தங்களுடைய  வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள புது  புது  ஆபர்  அறிவித்த வண்ணம் இருக்கிறது. ரிலையன் ஜியோ  ஆபர், ஏர்டெல்,,ஐடியா BSNL  என பல  ஆபர்  வந்துள்ளது. அந்த வகையில் இப்பொழுது ஐடியா வோடபோன் ரெட்  என்று புது  ஆபர் அறிவித்துள்ளது

வோடபோன் ரெட் பேசிக் 399 சலுகை தற்போது  ரெட் என்டர்டெயின்மென்ட் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட சலுகையில் பயனர்களுக்கு 40 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, முன்னதாக இந்த திட்டத்தில் 20 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சலுகையில் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சந்தா, ஒரு வருட அமேசான் பிரைம் சபஸ்க்ரிப்ஷன் ஆகியவை வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் இன்டர்நெஷனல் கால்கள் , ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

புதிய திட்டத்தில் தற்போது 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 40 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேட்டாவுடன் அன்லிமிட்டெட் லோக்கல் , STD கால்கள் , அன்லிமிட்டெட் ரோமிங் மற்றும் 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சாப்ஸ்க்ரிபிஷன் , ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.300 மதிப்புள்ள டிவைஸ் ப்ரோடெக்ஷன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.199 போஸ்ட்பெயிட் சலுகையில் மாதம் 25 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் கால்கள் , அன்லிமிட்டெட் எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மாதம் நிர்ணயிக்கப்பட்ட 25 ஜிபி டேட்டா நிறைவுற்றதும், ஒரு ஜிபி டேட்டா ரூ.20 கட்டணத்தில் தொடர்ந்து அதிவேக டேட்டா பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 மற்றும் ரூ.499 போஸ்ட்பெயிட் சலுகைகளும் மாற்றியமைக்கப்பட்டன. இவற்றில் அன்லிமிட்டெட் அழைப்புகள், அன்லிமிட்டெட் ரோமிங் வழங்கப்படுகிறது. ரூ.399 சலுகையில் 20 ஜிபி டேட்டா, ரூ.499-க்கு 40 ஜிபி டேட்டா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Close Menu