டெக்வைரல்_Xiaomi நிறுவனம் மன அழுத்தத்தை குறைப்பதற்கு Mi Focus Cube, வந்துள்ளது இதன் விலை ₹199!

Xiaomi நிறுவனம் மன அழுத்தத்தை குறைப்பதற்கு Mi Focus Cube, வந்துள்ளது இதன் விலை ₹199!

பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான Xiaomi இந்தியாவில் தனது Mi Focus Cube-னை அறிமுகம் செய்துள்ளது!

மளிவு விலை வெடிகுண்டு என விமர்சிக்கப்பட்ட போதிலும் இந்தியாவில் Xiaomi போன்களுக்கு மவுசு குறைந்தபாடில்லை. இதன் காரணாமாக Xiaomi தனது தயாரிப்புகளை அடுத்தடுத்து இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் Lifestyle என்னும் தனி பிரிவில் Mi Focus Cube, Roll Ball Pen, Air Pollution Mask என பல தயாரிப்புகளை Xiaomi வெளியிட்டது.

tech viral engkal.comஇந்த தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக மன அழுத்தத்தை குறைக்கும் Mi Focus Cube தனி கவனத்தை பெற்றுள்ளது எனலாம். ரூ.199-க்கு mi.com வலைதளத்தில் விற்பனைக்கு வந்துள்ள இந்த சிறு விளையாட்டு பொருள் விற்பனையில் கலைக்கட்டி  வருகிறது.

வெண்மை மற்றும் ஆரஞ்ச் இணைப்பு வண்ணத்தில் வரும் இந்த பொம்மையினை ஆன்லைன் மூலம் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.50 கூடுதல் கட்டமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அல்லது Xiaomi அங்காடிகளில் நேரடியாக சென்று வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 25 கிராம் எடையுள்ள இந்த Mi Focus Cube ஆனது 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாட ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Mi Focus Cube உடன் வெளியாகியுள்ள Mi Rollerball Pen Refill ஆனது பெரியவர்களுக்கான தயாரிப்பு எனவும், இதன் விலை ரூ.119 மட்டும் எனவும் Xiaomi தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் Xiaomi நிறுவனத்தின் துணை சார்பு நிறுவனமான Redmi, இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள் Redmi Note 7, Redmi Note 7 Pro மற்றும் Redmi GO ஆகியவற்றை இந்தியாவில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

admin

admin

2,652 thoughts on “டெக்வைரல்_Xiaomi நிறுவனம் மன அழுத்தத்தை குறைப்பதற்கு Mi Focus Cube, வந்துள்ளது இதன் விலை ₹199!