ட்ரூ காலர்  மூலம் காலர் அடையாளம் தெரிந்து கொள்ளலாம் என்பது  அனைவருக்கும்  தெரிந்ததே. இப்போது  இந்த செயலி இந்தியாவின் முதல் மல்டிபேங்க் பேமெண்ட் செயலி ஒன்றை துவங்கியுள்ளது. அதன் பெயர் ‘சில்ர்’.

2017ஆம் ஆண்டு ட்ரூ காலர் நிறுவனம் ட்ரூ காலர் பே என்ற வசதியை அறிமுகப்படுத்தி இந்தியர்களின் பணபரிமாற்றத்திற்கு உதவியது.

இந்த செயலி மூலம் மொபைலில் பேமெண்ட் செய்பவர்களுக்கு உதவியாக இருந்தது மற்றும் பயனாளிகள் விரைவாகவும் எளிதாகவும் பயன்படுத்தும் வகையில் இந்த பேய்மென்ட் வசதி உள்ளது என்று கூறியுள்ளார். எங்களுடைய வாடிக்கையாளர்கள் தினமும் தங்களுடைய தேவைக்கேற்ற பணப்பரிமாற்றங்களை செய்திட எங்களுடைய இந்த செயலி உதவிகரமாக இருக்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.

 ‘பெங்களூரில் உள்ள இந்த நிறுவனத்தில் இணைந்து பணிபுரிவதில் நாங்கள் உண்மையில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்களுடைய பணியால் எங்கள் வாடிக்கையாளர்கள் மொபைல் பேமெண்ட் வசதியை எளிதாக பயன்படுத்துவார்கள்  என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இன்னும் ஒருசில மாதங்களில் வாடிக்கையாளர்களே எதிர்பார்க்காத வகையில் புதுப்புது வசதிகள் மூலம் பேமெண்ட் பரிவர்த்தனை செய்யவிருப்பதாகவும், எங்களுடைய புதிய சேவைகள் பிரம்மாண்டமாக  இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமான ட்ரூ காலர் நிறுவனத்தின் இந்த மொபைல் பேமெண்ட் செயலி தற்போது 100 மில்லியன் பயனாளிகளுக்கும் மேல் பெற்றுள்ளது.

டெக்னாலஜி அளவில் இந்த நிறுவனம் நீண்ட கால பயணத்தை தொடரும் என்றும், ஆரம்பத்தில் வெறும்  காலர் ஐடியாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் படிப்படியாக வளர்ந்து ஸ்பேம் பிளாக்கிங், எஸ்.எம்.எஸ். பிளாஷ் மெசேஜ் மற்றும் தற்போது பேமெண்ட் சேவை என விரிவாக்கம் செய்து கொண்டே இருப்பதே இதன் வளர்ச்சி எனலாம்.

100 மில்லியன் ஸ்மார்ட்போன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்கள் இண்டர்நெட் உதவியுடன் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதோடு அவர்களுடைய அவசர தேவைக்கு பணப்பரிவர்த்தனையும் செய்யும் வகையில் தங்களுடைய சேவை இருப்பதாக நிறுவனத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர். தினமும் 100 மில்லியன் நபர்கள் ஸ்மார்ட்போன் மூலம் ட்ரூ காலர் சேவையால் பயனடைந்து வருகின்றனர்.