தற்போது தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்களுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது,  விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை இந்திய முழுவதும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது மிக முக்கியமானது.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளும் முயற்சியில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்  விரைவில் 5ஜி சேவையை துவங்க உள்ளது. மேலும் தற்சமயம் சிறந்த டெலிகாம் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

techviral engkal.comநோக்கியா நிறுவனத்தில் இருந்து வெளியான தகவலின் அடிப்படையில் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவையை இந்தியா முழுவதும் வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது,மேலும் இந்த 5ஜி சேவை இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி சேவையை வழங்க கோரியண்ட், லார்சன் அண்ட் டூப் மற்றும் ஹெச்பி நிறுவனங்களின் ஆலோசனையையும் பிஎஸ்என்எல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் 5ஜி சேவை இந்திய முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மைப் பொது மேலாளர் அனில் ஜெயின் சாய் தெரிவித்துள்ளார்.

இனி இந்த திட்டங்களின் தினசரி நன்மைகளுடன் சேர்த்து:

பிஎஸ்என்எல் அதன் ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666/- மற்றும் ரூ 999/- ஆகிய ப்ரீபெய்ட் அளவற்ற  காம்போ திட்டங்களுக்கு அறிவித்துள்ளது.  இனி இந்த திட்டங்களின் தினசரி நன்மைகளுடன் சேர்த்து 2 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா கிடைக்கும்.

பிஎஸ்என்எல்-ன் 3ஜி டேட்டா வழங்கும் திட்டங்களான ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444- மற்றும் ரூ.448/- ஆகியவைகளும் கூட கூடுதல் 2 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். ஜியோவின் கூடுதல் டேட்டா வாய்ப்பானது மூன்று வாரங்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலைப்பாட்டில், பிஎஸ்என்எல்-ன் இந்த வாய்ப்பானது மொத்தம் 60 நாட்களுக்கு அணுக கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

5 ப்ரீபெய்டு வரம்பற்ற காம்போ திட்டங்களுமே இந்த வாய்ப்பானது ஜூன் 18, 2018 முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. கூடுதல் டேட்டாவை தவிர குறிப்பிட்டுள்ள திட்டங்களின் இதர நன்மைகளில் எந்த மாற்றமும் கிடையாது. ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666/- மற்றும் ரூ.999/- ஆகிய 5 ப்ரீபெய்டு வரம்பற்ற காம்போ திட்டங்களுமே தினசரி அல்லது வாராந்திர வரம்பில்லாத வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன.