பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் சாப்பிட்டால், பிரட்டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது. பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது. அதனால் தயவு செய்து பழங்களை  வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக்  காரணமாகிறது.

 

பழங்களின் வகைகள்

apple uses engkal.com
ஆப்பிள்
apple uses engkal.com
 • ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.
 • ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.
 • ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.
 • ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.
 • இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.
pomagranate uses engkal.com
மாதுளை பழம்
pomagranate uses engkal.com
 • மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளை பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.
 • மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று வித ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது.பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது.
 • வயிறு, குடல் போன்ற உறுப்புகளில் புண் இருந்தாலும்,அதை ஆற்றும் குணம் இதற்கு உண்டு.
 • மாதுளம் பழத்தில் வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இது ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கும் உகந்தது. நினைவாற்றலை அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. கருவுற்றிருக்கும் பெண்கள் மசக்கை, வாந்தி போன்றவற்றால் வருந்தும் நிலையில் மாதுளம் ஒரு கை கண்ட மருந்து. அளவுக்கு மீறிய போதையில் மயங்கி இருப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாற்றைக் கொடுத்தால் போதை தெளியும்
guava uses engkal.com
கொய்யாப்பழம்
guava uses engkal.com
 • கொய்யாப்பழம் நார்ச்சத்துக்கு ஆதாரமாக விளங்கும் பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நார்ச்சத்தின் அளவில் 12 சதவீதத்தை ஒரு கொய்யாப்பழம் பூர்த்தி செய்கிறது.
 • கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்புரை ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.
 • கொய்யாப் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ‘பி 9’ மற்றும் போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது.
 • கொய்யாப் பழம் மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அறிவாற்றல் செயல்பாட்டினையும் தூண்டுகிறது. மேலும் கொய்யாப் பழம் நரம்புகளுக்கு ஓய்வினை அளிக்கிறது. குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் உதவும்.
 • கொய்யாவின் தோலில்தான் அதிகச்சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது முகத்திற்கு பொலிவையும் அழகையும் தருகிறது. மேலும் தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மது போதைக்கு அடிமையானவர்கள் கொய்யாப்பழத்தினை அதிகம் சாப்பிடலாம்.
 • கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
sapota uses engkal.com
சப்போட்டா பழம்
sapota uses engkal.com
 • சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது., எலும்புகள் வலுவடையும்.
 • இரவில் உறக்கம் வராமல் கஷ்டப்படுபவர்களுக்கு அருமருந்து இந்த சப்போட்டா. இதை சாறாக்கி அருந்தலாம். பழக்கூழ், ஜாம், சிரெப், மில்க் ஷேக், என்று விதவிதமாய் இதைத் தயாரித்துச் சாப்பிடலாம். சப்போட்டா பழக்கூழுடன், காய்ச்சின பால்சேர்த்து கீர் மாதிரி செய்து பருகலாம். அவரவர் கற்பனைக்கும் ரசனைக்கும் ஏற்றாற் போல் செய்து கொள்ளலாம். அல்லது வழக்கம் போல ‘அப்படியே சாப்பிடலாம்’.
 • இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு
 • உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும் ஆற்றல் இதற்கு உண்டு.சப்போட்டா வைட்டமின் ஏ என்னும் சத்தை அதிக அளவு கொண்டுள்ளது. அதிக அளவு வைட்டமின் ஏ-யினால் வயதான காலத்திலும் கூட, பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே நல்ல பார்வை கிடைப்பதற்கு சப்போட்டா பழங்களை சாப்பிட வேண்டும்.
 • கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து முதலியவைகள் எலும்பின் தாங்கும் ஆற்றலை அதிகரிக்க தேவைப்படுகின்றன. கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவைகள் சப்போட்டா பழத்தில் நிறைந்துக் காணப்படுவதால், எலும்புகளின் சக்தியை அதிகரித்து மற்றும் அவற்றை வலுப்படுத்த உதவுகிறது.
 • சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும். சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நன்கு தூக்கம் வரும்.
Fresh-Grapes engkal.com
திராட்சை
Fresh-Grapes engkal.com
 • ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ்,இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.
 • இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும். கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும். உஷ்ணத்தினால் உடலில் ஏற்படும் நமைச்சல், சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது.
 • திராட்சை சீரற்ற மாதவிடாய் சீராடைகிறது. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்குகிறது. இதயபலவீனமானவர்களுக்கு திராட்சை சிறந்த மருந்து. தலைவலி, காய்க்காய் வலிப்பு போன்றவற்றை குணப்படுத்தகிறது.
 • சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும் உள்ளது , இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.திராட்சைப்பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் resveratrol என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அதிகம் உள்ளதால் . நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள்.
 • அதிகம் சளிப்பிடித்திருக்கும் போதும், ஆஸ்துமா நோயுள்ளவர்களும், வாதஉடம்புக்குள்ளானவர்களும், அதிக அளவில் திராட்சைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.திராட்சையில் உள்ள ஃப்ளேவோனாய்டுகளுள் ஒன்றான க்யூயர்சிடின் இருப்பதால், அவை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் உடலில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.
narthamkai fruit uses engkal.com
நார்த்தம்பழம்
narthamkai fruit uses engkal.com

சத்துக்கள்

நார்த்தம்பழம் மிக அதிகமாகப் புளிப்பு சுவை கொண்டது என்பதால், நாம்பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. நார்த்தங்காய் சாதம் செய்யவும், ஊறுகாய் செய்யவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். அதைவிட, சிறிது லேசாக உப்பை தூவி பழத்தை அப்படியே சாப்பிடலாம்.  இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின்களும் கால்சியமும் மிக அதிக அளவில் உள்ளதால், உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
இதயநோய்கள்

 நார்த்தம்பழத்தில் ஒரு துளியளவும் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால், இயல்பாகவே இதய நோய்களுக்கான ஆபத்தைத் தவிர்க்கிறது. இதில் முழுக்க முழுக்க நன்மை தரும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமே அடங்கியுள்ளன. அதனால் இதய நோயாளிகளும் மற்றவர்களும் பயப்படாமல் இந்த பழத்தை தாராளமாக தினமும் கூடு எடுத்துக் கொள்ளலாம்.
கால்சியம்

உடலுக்குத் தேவையான ஒரு நாளினுடைய கால்சியம் அளவில் 60 சதவீதத்துக்கும் மேலான கால்சியத்தை ஒரு பெரிய சைஸ் நார்த்தம்பழத்தில் இருந்து நம்மால் பெற முடியும். அதனால் தினமும் ஒரு நார்த்தம்பழத்தை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்வது சிறந்துது. உக்குளிப்பழம் இரண்டு வீதமான தினமும் தேவைப்படும் மொத்த கால்சியம் கால்சியம் சேமிப்பு உள்ளது.இது எலும்பு மற்றும் பற்கள் உடம்பில் பெருமளவுக்கு உதவுகிறது.

புரதங்கள்

தசை உருவாக்கம் மற்றும் தசை இயக்கங்களை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டதாக நார்த்தம்பழம் இருக்கிறது. இதில் வெறுமனே வைட்டமின் சி மட்டுமல்லாது புரோட்டீன்களும் அதிக அளவில் சிறப்பாகக் கிடைக்கின்றன. 
சிறுநீரகக்கல்

நார்த்தம்பழம் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கிறது. பொதுவாக சிறுநீரகக் கல் வந்தபின், வாழைத்தண்டை அரைத்துக் குடித்துக் கொண்டிருப்போம். ஆனால், நார்த்தம்பழமோ எவ்வளவு வேகமாக சிறுநீரகக் கல்லை கரைக்க முடியுமோ அவ்வளவு வேகமாகக் கரைத்துவிடும். சிறுநீரகக் கல் உருவாகாமல் பார்த்துக் கொள்ளும்.
வாய் துர்நாற்றம்

வைட்டமின் பி அதிக அளவில் நார்த்தம்பழத்தில் உள்ளதால், இது வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. மேலும் பற்கள் மற்றும் ஈறுகள் குறித்த பிரச்னைகளில் இருந்து, பாதுகாப்பு அளிக்கிறது.

உடல் பருமன்

இந்த நார்த்தம்பழத்தில் பொதுவாகவே கலோரிகள் மிகமிகக் குறைவாக இருப்பதால் உடல் பருமனாவதை தடுக்க உதவுகிறது. இந்த பழங்களில் உள்ள நோய் எதிர்ப்பு திறன், உடலில் தேவையற்ற உயிர் அணுக்களை அழித்து, சிறந்த ஆக்சிஜனேற்ற செயல்பாட்டிற்கு துணை புரிகிறது. 

 

mango uses engkal.com
மாம்பழம்
mango uses engkal.com

மாம்பழம்… என்ன பேரைக் கேட்டாலே சும்மா நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே. பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. மிகவும் சுவையான மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல. அதனுள் உள்ள மருத்துவ குணங்களை சொன்னால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள்.

இரத்த அழுத்தம்

மாம்பழத்தில் உள்ள வைட்டமின்களின் உள்ளடக்கம் மிகவும் அதிகம். இது நமக்கு அனைத்து வழிகளிலும் நல்ல உடல் நலத்தை கொடுத்து உதவும். அதிக இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இயற்கை மருந்தாக அமைகிறது.

கொலஸ்ட்ரால்

மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.

எடை அதிகரிக்க

உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிட்டால் சுலபமாக எடையை அதிகரிக்கலாம். இதை உடல் சுலபமாக ஈர்த்துக் கொள்ளும். மேலும் மாம்பழத்தில் உள்ள மாச்சத்து அதனை சர்க்கரையாக மாற்றுவதால், எடையை அதிகரிக்க அது உதவும்.

இரத்த சோகை

மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்தும்.

 

 

bannana uses engkal.com
பச்சை வாழைப்பழம்
bannana uses engkal.com

பச்சை வாழைப்பழம், உண்பதால்  வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.

பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இதைச் சாப்பிடலாம்.

மஞ்சள் வாழைப்பழத்துடன் ஒப்பிடும்போது பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது. இதயநோயாளிகள் இதைச் சாப்பிடலாம். ஆனால் அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்குப் பயனளிக்காது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

இரவில் படுக்கும் போது வாழைப்பழம் சாப்பிடுவதால் கை, கால்களில் உள்ள தசைப் பிடிப்பு குணமாகும்.
வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது செரிமான மண்டலத்திற்கு நல்லது. இதனால் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.
பச்சை வாழைப்பழம் நல்லகுளிர்ச்சியை தரும் கோடைக்காலத்தில் தாரளமாக உண்ணலாம். வாதம் நோயாளிகள் குரைத்து கொள்வது நல்லது.

papaya uses engkal.com
பப்பாளி
papaya uses engkal.com

நாள்தோறும் 1 துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். செரிபாற்றல் பெருகும். குன்மம், ரணம், அழற்சி, வயிற்றுப் பூச்சி,  மலச்சிக்கல், சிறுநீர்பாதை அழற்சி ஆகியவை தீரும்.

பப்பாளி மிகச்சிறந்த மலமிளக்கி. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளி மிகச்சிறந்த மருந்தாகிறது. வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி நிவாரணம் தரும்.

நன்கு பழுத்த பழத்தைக் கூழாகப் பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். இளமைப்  பொலிவைக்கூட்டி வயோதிகத்தை கட்டுப்படுத்தும் பப்பாளி, உடம்பிலுள்ள நச்சுக்கள் முழுவதையும் சுத்திகரிக்கக் கூடியது.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வரக் கல்லீரல் வீக்கம்  குறையும். உடல் எடை குறைக்க விரும்புவோர், அதற்கான டயட்டுடன், தினமும் காலை உணவாக பப்பாளிப்பழத்தை எடுத்துக்கொண்டால் நல்ல பலன்  கிடைக்கும்.

உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், ஒரு மாதம் தொடர்ந்து பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து  விடுபடலாம்.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளி பாலை விளக்கெண்ணையில் கலந்து கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். 

பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன், செரிமானம் சிறப்பாக நடக்க உதவி புரியும். மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், பப்பாளியை உட்கொண்டால், அதில் உள்ள நார்ச்சத்து நல்ல நிவாரணத்தை வழங்கும்.

pineapple uses engkal.com
அன்னாசி பழம்
pineapple uses engkal.com

அன்னாசி பழத்தின் சுவை போலவே அதன் குணங்களும் அற்புதமானது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பழ வகைகளில் ஒன்றே அன்னாசி பழம்.

தாழை இலை போன்ற நீண்ட அடுக்கான மடல்களை உடைய செடி. கொல்லிமலை போன்ற இடங்களில் பேரளவில் பயிரிடப் பெற்றுப் பழமாக விலைக்குக் கிடைக்கும். இப்பழம் பூந்தாழம் பழம் எனவும் வழங்கப்பெறும். இலை பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

நுண்புழுக் கொல்லுதல், வியர்வை சிறுநீர் பெருக்குதல், மலமிளக்குதல், குருதிப்பெருக்கைத் தணித்தல், மாதவிலக்கைத் தூண்டுதல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

நோய் தொற்றுகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களை கொடுத்து வலிமை பெற செய்கிறது.

வைட்டமின் பி அதிகம் காண படுவதால் பெண்கள் அதிகம் எடுத்து கொள்ள உடல் ஆரோக்கியம் பெற்று, பல வியாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.

இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம்.

அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிடலாம். தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். பழரசமாக, நீர் சேர்த்துச் சாப்பிடலாம். மற்ற காய்கறி சாலட்களுடன் சேர்த்துச் சாப்பிடலாம். கர்ப்பிணிப் பெண்களும், மூல நோய் உள்ளவர்களும் இப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

Close Menu