பாஸ்ட் புட் உணவுகள்

பத்தே நிமிடத்தில் சமையல் உங்களுக்காக 

fast food recipe engkal.com
fastfood recipe engkal.com

தேவையானவை:

 தினை மாவு, சாமை அரிசி மாவு (சேர்த்து) – ஒரு கப், கறுப்பு உளுந்து, பச்சைப் பயறு – தலா அரை கப், பச்சைப் பட்டாணி – அரை கப் (விழுதாக அரைக்கவும்), ஸ்லைஸாக சீவிய கேரட், வெங் காயம் – தலா அரை கப், தக்காளி – 2 (ஸ்லைஸாக சீவவும்), ஸ்லைஸாக சீவிய குடமிளகாய் – சிறிதளவு, இஞ்சி – பூண்டு – தக்காளி விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகத்தூள், கரம்மசாலாதூள் – தலா அரை டீஸ்பூன், மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், சீவிய  பனீர் – அரை கப், நறுக்கிய கேரட், வெங்காயம் – சிறிதளவு, வெண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கறுப்பு உளுந்து, பச்சைப் பயறு இரண்டையும் ஊறவிட்டு அரைத்து… தினை மாவு, சாமை அரிசி மாவு சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும்.

இதனுடன் பச்சைப் பட்டாணி விழுது, பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், நறுக்கிய கேரட், வெங்காயம் சேர்க்கவும். பிறகு, இஞ்சி – பூண்டு – தக்காளி விழுது சேர்க்கவும். மேலே மைதா தூவி, கெட்டியாக மாவு செய்து வைக்கவும்.

நான்-ஸ்டிக் பானில் வெண்ணெய் தடவி, செய்து வைத்த கலவையைப் பரப்பவும்.  

மேலே சிறிது எண்ணெய் தடவி, ஸ்லைஸாக சீவிய தக்காளி, வெங்காயம், கேரட், குடமிளகாய் ஆகியவற்றை வைத்து அழுத்தவும். சீவிய பனீரைத் தூவி லேசாக அழுத்தி… ‘பானை’ மூடியால் மூடி ‘சிம்’மில் வைத்து வேகவிடவும். வெந்த பின் தட்டில் கொட்டி ‘கட்’ செய்து பரிமாறலாம். விரும்பினால், சிறிதளவு துருவிய சீஸ் தூவிக்கொள்ளலாம்.

fastfood recipe engkal.com

தேவையானவை

 பிரெட் – 10

 மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

 பெரிய வெங்காயம் – 2

 மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

 பச்சைமிளகாய் – 3

 உப்பு – தேவையான அளவு

 துண்டுகளாக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை – சிறிதளவு

 எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்

 எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

 கடுகு – அரை டீஸ்பூன்

 உளுந்து – அரை டீஸ்பூன்

 கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்

 சீரகம் – கால் டீஸ்பூன்

 கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

முதலில் பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.

இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும்.

இறுதியாக எலுமிச்சைச்சாறு ஊற்றிக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

fastfood recipe engkal.com

தேவையானவை

 ப்ரெட் – 4 ஸ்லைஸ்

 கேரட் – ஒன்று

 பீட்ஸா சாஸ் (அ) டொமேட்டோ கெட்சப் – தேவையான அளவு

 குடைமிளகாய் – ஒன்று

 வெண்ணெய் – தேவையான அளவு

 வெங்காயம் – ஒன்று

 சீஸ் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பேனில் வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் ப்ரெட் ஸ்லைஸை போட்டு பிரட்டி எடுக்கவேண்டும் .பின்பு ப்ரெட் ஸ்லைஸில் சாஸை தடவவும்.

பிறகு துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவேண்டும் . அதன் மேல் சிகப்பு மற்றும் பச்சை குடைமிளகாயை பொடியாக நறுக்கி தூவவேண்டும் .

பின்பு நாண்ஸ்டிக் பேனில் ப்ரெட்டை வைத்து அதன் மேல் சீஸ் தூவவேண்டும் .பிறகு அடுப்பின் தணலை மிதமாக வைத்து மூடி சீஸ் உருகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.

fastfood recipe engkal.com

தேவையானவை

பிட்ஸா பேஸ் 6″ – 3

சிக்கன் – 100 கிராம்

பல்லாரி வெங்காயம் – 2

தக்காளி – 2 (சிறியது)

குடைமிளகாய் – ஒன்று

தக்காளி சாஸ் – சிறிது

கார்லிக் சில்லி சாஸ் – சிறிது (விருப்பப்பட்டால்)

பார்பிக்யூ சாஸ் – சிறிது

சீஸ் – 7 ஸ்லைஸ்

ஆலிவ் ஆயில் அல்லது வெண்ணெய்

மிளகாய் தூள் – சிறிது

உப்பு – சிறிது

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.முதலில் சிக்கனை பார்பிக்யூ சாஸ், மிளகாய் தூள், உப்பு போட்டு கலந்து 10 நிமிடம் வைக்கவும்.பின் அதை ஒரு வாணலியில் சிறிது நீர் விட்டு வேக விடவும். உடனே வெந்து விடும்.

பிட்ஸா பேசில் சுற்றிலும் சிறிது ஆலிவ் ஆயில் தேய்க்கவும்.

ட்ஸா பேசில் மேல் பகுதியில் தக்காளி சாஸ் மற்றும் கார்லிக் சில்லி சாஸ் இரண்டையும் பரவலாக தேய்க்கவும்.

பின்னர் அதில் நடுத்தரமாக நறுக்கிய வெங்காயத்தை பரவலாக தூவவும். இவ்வாறே தக்காளி, குடைமிளகாய், சிக்கன் ஆகியவற்றையும் பரவலாக தூவவும்.

அதன் மேல் சீஸ் ஸ்லைஸ் துண்டுகளை பரப்பி வைக்கவும்.பின்னர் 220 டிகிரிக்கு, 15 நிமிடம் அவனை ப்ரீஹீட் செய்யவும். அதில் பீட்ஸாவை 10 நிமிஷம் அல்லது சிறிது பிரவுன் நிறம் வரும் வரை வைக்கவும். பின் அதை எடுத்து பார்பிக்யூ சாஸை குறுக்கும் நெடுக்குமாக ஊற்றி மேலும் 2 நிமிஷம் வைக்கவும்.

fastfood recipe engkal.com

தேவையானவை:

சிக்கன் – 100 கிராம்

லூஸ் நூடுல்ஸ் – 1 பாக்கெட்

வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 2

மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி

சர்க்கரை – 1/4 தேக்கரண்டி

சோயா சாஸ் – 1 தேக்கரண்டி

தக்காளி சாஸ் – 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் – போதுமான அளவு

வெங்காய தாள் – தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அகலமான கடாயில் நீர் ஊற்றி நூடுல்ஸை வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும்.

சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் போதுமான அளவு உப்பு சேர்த்து கடைசியில் சிறிது சர்க்கரை, வெங்காய தாள் பொடியாக நறுக்கி சேர்த்து கிளறி இறக்கவும்.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் – 1 பாக்கெட்

முட்டை – 4

பூண்டு – 2 பெரிய பற்கள்

நட்சத்திர சோம்பு – 1

பச்சை மிளகாய் – 4

மிளகு தூள் – தேவையான அளவு

வினிகர் – 1 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

குடமிளகாய் – 1

வெங்காயம் – 2

கேரட் – 1

சோயா சாஸ் – 1 ஸ்பூன்

செய்முறை:

பச்சை மிளகாய், பூண்டு, குடமிளகாய், கேரட், வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் நீர் விட்டு அதில் நூடுல்ஸைப் போட்டு கொதிக்க வைக்கவும். முக்கால் பாகம் வெந்தவுடன் அதனை வடிகட்டிக் கொள்ளவும். பின்பு அதனுடன் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தனியே வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் தீயை அதிகரித்து விட்டு அதனுடன் பச்சை மிளகாய், பூண்டு நட்சத்திர சோம்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின்பு குடமிளகாய் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்னர் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.

காய்கறிகள் வதங்கியவுடன் காய்கறிகளை கடாயின் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு தீயைக் குறைத்து அதில் முட்டையை அடித்து ஊற்றவும். முட்டையை லேசாக கிளறி விடவும். முட்டை வெந்தவுடன் வினிகர், சோயா சாஸ், மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸ், மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.

பின்பு தீயை அதிகரித்து லேசாக கிளறி 2 நிமிடம் வேக வைக்கவும். சுவையான சைனீஸ் ஸ்டைல் எக் நூடுல்ஸ் தயார்.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:

அரிசி நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (500 கிராம்)

இறால் – கால் கிலோ

வெங்காயம் – ஒன்று

செலரி (நறுக்கியது) – ஒரு கப்

கேரட் – ஒன்று

வெங்காய தாள் – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் – 2 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

அஜினோ மோட்டோ – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்துக்கொள்ளவும், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவிக்கொள்ளவும். செலரி, வெங்காய இலைகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்த பின்பு அதில் நூடுல்ஸை போடவும். 5 நிமிடங்கள் வெந்தபின்பு எடுத்து நீரை வடிகட்டவும். பிறகு அதில் குளிர்ந்த நீரை ஊற்றி நன்கு அலசிவிடவும். நீர் வடிந்தபின்பு, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் அனைத்திலும் படுமாறு தடவி வைக்கவும்.

அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கிய பின்பு இறாலை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். துருவின கேரட், நறுக்கின செலரி ஆகியவற்றைப் போட்டு நன்றாக கிளறவும்.

பின்பு அதில் சோயா சாஸ் விட்டு நன்றாக கிளறவும். லேசான தீயில் அடி பிடிக்காமல் வேகவிடவும். சற்று வெந்ததும் அஜினோ மோட்டோ சேர்க்கவும். காய்கள் போட்டு அனைத்தும் வெந்தபிறகு நூடுல்ஸை உதிர்த்துப் போட்டு நன்றாக கிளறவும்.

கடைசியாக நறுக்கின வெங்காய இலை, தூவி கிளறி இறக்கவும். சுவையான சைனீஸ் இறால் நூடுல்ஸ் தயார். இவற்றை டொமாட்டோ சாஸ் உடன் சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

வெங்காயம் பொடியாக நற்க்கியது – 3 /4 கப்

 எண்ணெய் – 2  1 /2 மேசைக்கரண்டி

 முட்டை – 1  – 2 (முட்டையை லேசாக அடித்துக் கொள்ளவும்)

 சோயா சாஸ் – 1 /4 தேக்கரண்டிக்கும் குறைவாக

  நல்லெண்ணெய் -1 /4 தேக்கரண்டிக்கும் குறைவாக

  சிக்கன் எலும்பில்லாதது வேக வைத்தது  – 1  கப் (விருப்பமெனில்)

  கேரட் – 1 /2 கப்

  பட்டாணி – 1 /2 கப்

  வெங்காயத்தாழ்– 4

  முளை கட்டிய பயறு – 1 கப்

  சோயா சாஸ் – 2  மேசைக்கரண்டி

  சாதம் – 4  கப் (வேக வைத்து ஆற வைத்தது )

செய்முறை:

பாஸ்மதி அரிசியை பயன்படுத்திக் கொள்ளவும். அரிசியைக் கழுவி கடாயில் லேசாக, அரிசியின் ஈரப் பதம் வற்றும் வரை வறுத்துக் கொள்ளவும்.1  கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, ஆற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 4 – 6  மணி நேரம் வரை ஆற வைத்துக் கொள்ளவும். சாதத்தை பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். பழைய சாதம் ப்ரைடு ரைஸ்செய்வதற்கு நன்றாக இருக்கும்.

சாதம் நன்றாக ஆரினால்தான் ப்ரைடு ரைஸ் செய்வதற்கு நன்றாக இருக்கும்.கடாயில் 1  மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய  வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்.அதே கடாயில் 1 /2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடாயைச் சுற்றிலும் எண்ணெய் படருமாறு செய்யவும் , கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி கடாயைச் சுற்றிலும் படருமாறு செய்யவும். முட்டை மேலே எழும்பி வரும்போது அதை திருப்பிப் போட்டு வேக விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இல்லையெனில் கலந்து வைத்துள்ள முட்டையைக் கடாயில் ஊற்றி லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும் .

இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது, முளை கட்டிய பயறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3  நிமிடங்கள் வதக்கவும்.இதனுடன் 2  மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் நற்க்கி வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:

அரிசி – 300 கிராம்

பூண்டு – 10 பல்

வெங்காயத்தாள் – 2

கேரட் – 2

குடை மிளகாய் – 1

எண்ணெய் – தேவையான அளவு

சோயா சாஸ் – 1 தேக்கரண்டி

வினிகர் – 1 தேக்கரண்டி

மிளகு தூள் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசியை கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அரிசியை முக்கால் பாகம் தண்ணீரில் வேகவிடவும்.

கேரட், குடை மிளகாய், வெங்காய தாள், பூண்டு ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.  

பின்னர் நறுக்கிய வெங்காயம், கேரட் மற்றும் குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

பதி வதங்கியதும் வேகவைத்த அரிசி, வெங்காய தாள், சோயா சாஸ், வினிகர், மிளகு தூள் இவற்றை எல்லாம் சேர்த்து நன்கு கலரவும். இவ்வாறு செய்தால் சுவையான கார்லிக் ப்ரைட் ரைஸ் ரெடி.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:

தோசை மாவு – ஒரு கப்

முட்டை – ஒன்று

பெரிய வெங்காயம் – ஒன்று

தக்காளி – ஒன்று

மிளகு, சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லி தழை – 2 கொத்து

பச்சை மிளகாய் – ஒன்று

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – 2 சிட்டிகை

எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை ஊற்றி சற்று தடிமனாக ஊத்தாப்பம் போல் ஊற்றவும். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி மேலே மிளகு, சீரகத் தூள், உப்பு, தூவவும்.

அதன் மேல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி வேக விடவும்.

மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

சுவையான பிட்ஸா தோசை தயார்.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:

நறுக்கிய வெங்காயம்,

நறுக்கிய மஷ்ரூம்,

நறுக்கிய தக்காளி,

நறுக்கிய பீன்ஸ்,

நறுக்கிய கேரட் – தலா 25 கிராம்,

நறுக்கிய கொத்தமல்லி,

மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், மஷ்ரூம், தக்காளி, பீன்ஸ், கேரட், கொத்தமல்லி ஆகியவற்றை வதக்குங்கள். கூடவே மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலாவாக மாறும் வரை கிளறுங்கள்

இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு, ஒரு இட்லியைப் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுங்கள்.

பிறகு, அதை நான்காக வெட்டி, தயாராக உள்ள மசாலாவை இட்லி துண்டுகளின் மீது தடவுங்கள். மேலும் சுவை சேர்க்க சீஸை துருவி அந்தத் துண்டுகளின் மீது தூவி, அது உருகி இட்லி மீது படரும்வரை ‘ஓவன்’-ல் வைத்தெடுங்கள்.

 இதோடு தக்காளி, வெள்ளரிக்காய் சேர்த்துச் சாப்பிட்டால், அசல் பீட்ஸாதான்!

fastfood recipe engkal.com

தேவையானவை

பீட்ஸா பேஸ் செய்ய:

மைதா மாவு – 4 கப்

சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – 1 1/2 டீஸ்பூன்

ட்ரை ஈஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

தண்ணீர் – 1 1/2 கப்

டாப்பிங்க்கு:

பீட்ஸா சாஸ்

மாஸரெல்லா சீஸ் – 1 பாக்கெட்

குடமிளகாய்

ஆலிவ்

ஹாலப்பினோ பெப்பர்

மஷ்ரூம்

வேற ஏதாவது காய் வேணும்னாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை:

வெது வெதுப்பான தண்ணீரில் சர்க்கரை, உப்பு , ஈஸ்ட் கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.

அதில் மைதா மாவு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும். மாவு தளர்வாக இருக்க வேண்டும். 4 கப் மாவுக்கு 1 1/2 கப் தண்ணீர் சரியாக இருக்கும்.

மாவு இருக்கும் பாத்திரத்தை clear wrap கொண்டு மூடி வைக்கவும்.

2 மணி நேரத்தில் மாவு இரண்டு மடங்காக உப்பியிருக்கும்.

அதை மறுபடியும் நன்றாக பிசைந்து, இரண்டாகப்பிரிக்கவும்

ஒரு பகுதியை பிசைந்து சப்பாத்தி கட்டையில் பெரிய சப்பாத்தி போல் தேய்க்கவும்.

இது thin crust pizza. க்ரஸ்ட் திக்காக வேண்டுமென்றால் மாவும் திக்காக தேய்க்க வேண்டும்.

பீட்ஸா பானில்(pan) தேய்த்த மாவை வைத்து ஒரங்களை கையால் அழுத்தி விடவும்..

பீட்ஸா சாஸை தடவி அதன் மேல் வேண்டிய டாப்பிங்கை அடுக்கி, அதன்மேல் சீஸ் தூவி விடவும்.

400 டிகிரி ஃபாரஹீட்டில் முற்சூடு செய்த அவனில் 15 லிருந்து 20 நிமிடம் பேக் செய்யவும்.

இந்த அளவுக்கு 2 பீட்ஸா செய்யலாம். ஒரு வெஜ்ஜி பீட்ஸாவும் 1 ஆலிவ் பீட்ஸாவும் செய்தோம்.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி : 1 கப்
முட்டை கோஸ் : 1/4 கிலோ (பொடியதாக நீளவாக்கில் நறுக்கவும்)
கேரட் : 1 (பொடியதாக நறுக்கவும்)
வெங்காயத் தாள்: 5 (பொடியதாக நறுக்கவும்)
கொடைமிளகாய் : 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம்: 1 சிறியது ( நீளவாக்கில் நறுக்கியது)
பீன்ஸ் : 10 (பொடியதாக நறுக்கியது)
மிளகு தூள்: சிறிதளவு
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
அஜினமோட்டோ: 1 1/2 தே. கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணை 1/4 கப்
முட்டை : 2

செய்முறை:

பாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு தே. கரண்டி எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.
வெந்த பின் வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற விடவும்.உதிரி உதிரியாக இருக்க வேண்டும். முக்கால் பாகம் வெந்தால் போதும்.(முதல் நாளே செய்து ப்ரிட்ஜிலும் வைத்து விடலாம்)

முட்டையில் 2 தே.கரண்டி எண்ணை, உப்பு, மிளகு தூள் சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்.

கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம்,முட்டைகோஸ், கேரட், வெங்காயத்தாள்,குடைமிளகாய்,பீன்ஸ் ஆகியவற்றை போட்டு வதக்கி மூடி வைக்கவும். (தண்ணீர் விடக்கூடாது).

சிறிது நேரத்திற்கு பின் சோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு இவற்றை சேர்த்து கிளறி உடன் சாதத்தையும் போட்டு கிளற மூடி வைக்கவும்.

சிறிது நேரத்திற்கு பின் பொரித்த முட்டையை போட்டு கிளரி விடவும்.

சுவையான வெஜிடபில்/முட்டை ப்ரைட் ரைஸ் ரெடி.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள் :

 பாசுமதி அரிசி – அரை கிலோ

 முட்டை – ஆறு

வெங்காயம் – இரண்டு

 பச்சைமிளகாய் – நான்கு துருவிய

காரட் – ½ கப்

 குடைமிளகாய் – ½ கப் இஞ்சி,

பூண்டு நசுக்கியது – 2 டீ ஸ்பூன்

மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்

முந்திரிப் பருப்பு – 10

 உப்புத்தூள் – 2 டீ ஸ்பூன்

 கொத்தமல்லி – அரை கட்டு

 எண்ணெய் – நான்கு டேபிள் ஸ்பூன் முட்டை ப்ரைடு ரைஸ்

செய்முறை :

 முதல் பாசுமதி அரிசியை உப்பை சேர்த்து வேகவைத்து உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் அகலாமான வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி நன்கு சூடுப்படுத்தவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பிறகு மிளகாய், இஞ்சி பூண்டு அகியவற்றை போட்டு சிறிது வதக்கவும். அதை தொடர்ந்து குடைமிளகாய் போட்டு சிறிது வதக்கவும். இந்த கலவையுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி சிறு சிறு துண்டுகளாகும் வரை நன்கு கிளறவும்.

இதில் உப்புத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறவும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். அப்போது அடுப்பை வேகமாக எறிய விடவும்.நன்றாக மிக்ஸ் ஆகி வாசனை வந்த உடன் அடுப்பை நிறுத்தி விடலாம்.

இதன்மேல் முந்திரிப்பருப்பு, துருவிய காரட், கொத்தமல்லி தூவி பரிமாறவும். சத்தான சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் தயார். சாதம் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இதுபோல செய்து கொடுத்தால் ஆர்வத்துடன் சாப்பிடுவர்.

fastfood recipe engkal.com

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ
மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)
சோளமாவு: 1 தே. கரண்டி
முட்டை : 1
பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)
இஞ்சி : ஒரு சிறு துண்டு
டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
சில்லி சாஸ்: 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி
அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி

செய்முறை:
கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி சோயா சாஸ் ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.

ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து கிளறவும்.

 சிறிது நேரம் சென்றபின் ஒரு தே.கரண்டி சோயா சாஸ்,சில்லி சாஸ், 4 தே. கரண்டி டொமாடோ சாஸ் போட்டு கிளறிவிடவும்.

சில்லி சிக்கன் தயார். பரோட்ட, சப்பாத்திக்கு சூப்பரா இருக்குங்க.

Close Menu