மொபைல்டெக்னாலஜி

மொபைல் இன்று அனைவரின் உள்ளங்கையில் உலகை ஆள்கிறது
நீங்களும் அதுபோல் உலகை ஆள பெறுங்கள் தினம் தினம் ஒரு தகவல் உங்கள் மொபைலில்

மொபைல்டெக்னாலஜி பற்றிய புது புது தகவல்கள் இங்கு

mobile tech engkal.com

டெல்லி: சியோமி  நிறுவனம்  இப்போது  ரெட்மி  ஒய்2  என்ற  ஸ்மார்ட்போனை  புதிதாக  அறிமுகம்  செய்துள்ளது.

சீனாவின்  சியோமி  நிறுவனம்  இப்போது  இந்திய  ஸ்மார்ட்போன்  சந்தையில் மிக  முக்கிய  இடத்தை பெற்றுள்ளது . இந்த  ‘ரெட்மி ஒய்2’ ,  அதன்  பட்ஜெட் விலையில்  இதன்  வெளியீடுகளுக்கு,  வாடிக்கையாளர்கள்  மத்தியில்  மிக  பெரும்  வரவேற்பு  கிடைத்துள்ளது.

இந்நிலையில்  ’ரெட்மி ஒய்2’  என்ற  செல்பி  ஸ்பெஷல்  ஸ்மார்ட்போனை, சியோமி  நிறுவனம்  இந்தியாவில்  அறிமுகம்  செய்துள்ளது .

> 3 ஜிபி  மற்றும்  32  ஜிபி விலை  ரூ.9,999க்கு

> 4 ஜிபி  மற்றும்   64 ஜிபி விலை  ரூ.12,999க்கு

இந்த  விலை,  ஏசஸ் ஸென்போன்  மேக்ஸ்  ப்ரோ  எம்1,  ரியல் மி 1, ஹானர் 7எக்ஸ்  மாடல்களுக்கு  போட்டியாக  அமைந்துள்ளது. வரும்  12ஆம்  தேதி, நண்பகல்  12  மணிக்கு  mi, மற்றும் amazon இணையதளங்களில்  விற்பனைக்கு வருகிறது.

ஏர்டெல்  நிறுவனம்  ரூ.1800 கேஷ்-பேக்  மற்றும்  240  ஜிபி  இலவச  4ஜி வசதியுடன்  சலுகை   ஒன்றை  அறிவித்துள்ளது. அதற்கு  போட்டியாக  ஐசிஐசிஐ வங்கியும்  ரூ.500 கேஷ்-பேக்  இச்சலுகையை  அறிமுகம்  செய்துள்ளது.

இந்த  ஸ்மார்ட்போன்  டார்க் கிரே,  ரோஸ் கோல்ட்,  மற்றும்   கோல்ட் வண்ணங்களில்  கிடைக்கிறது.

ரெட்மி  ஒய்2 வின்   சிறப்பம்சங்கள்:

> 16 எம்பி  முன்பக்க  கேமரா, ஆட்டோ HDR, AI பியூட்டிஃபை 4.0

> 12 எம்பி  மற்றும்  5 எம்பி  பின்பக்க  கேமரா

> எம்.ஐ.யு.ஐ 9.5  மற்றும் ஆண்ட்ராய்டு  ஓரியோ ஓரியோ  உடன்  வெளியாகும்       முதல்  சியோமி  ஸ்மார்ட்போன்.

> 5.99 இஞ்ச் ஹெச்.டி+ ஸ்கிரீன், 1440×720 பிக்சல்கள், 269ppi

> குவால்கம்  ஸ்நாப்டிராகன் 625 பிராசசர், அட்ரினோ 506 ஜிபியு

> பேட்டரி 3,080 mAh, 4ஜி, வோல்ட், 3ஜி, வை-ஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்  வசதிகள்          கொண்டது.

mobile tech engkal.com

ஓப்போ  F7  கிரிக்கெட்  லிமிட்டெட்  புதிய   பதிப்பை   அறிமுகம்  செய்துள்ளது. மொபைல்  போனில்  பிரபல  கிரிக்கெட்  வீரர்கள்   கையெழுத்துடன்  விற்பனை செய்ய  முடிவு  செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட்   வீரர்கள்  கையெழுத்து  பெற  அனைத்து  ரசிகர்கள்  மிகவும் ஆர்வமுடன்   இருப்பார்கள்.  அதை  பூர்த்தி  செய்ய  இப்பொழுது  ஓப்போ நிறுவனம்  களமிறங்கியுள்ளது.  இதற்கு  முன்பு  பூஸ்ட் என்ற  விளம்பரத்தில்  சச்சின்  கையெழுத்திட்ட பொருட்களை  விற்பனை  செய்துள்ளது.  அதுபோலவே  சச்சின்  மற்றும்  கங்குலி  ஆகியோர்  கையெழுத்திட்ட கிரிக்கெட்  பேட்  விற்பனை  செய்யப்பட்டது.  அந்த  வரிசையில்  தற்போது   ஓப்போ   நிறுவனம் களமிறங்கியுள்ளது.

இதில் ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ரோகித் சர்மா  உள்ளிட்ட  பல  பிரபல கிரிக்கெட்  வீரர்களின்  கையெழுத்துடன்  ஓப்போ  F7  விற்பனைக்கு  வந்துள்ளது. இதுறித்து   இந்திய  பிரைவேட்  லிமிடெட்  நிறுவனத்தின்  வர்த்தக  இயக்குநரான  வில்யாங்  கூறியது.

இந்நாட்டின் குழந்தைகள்தான்  சமுதாயத்தின்  முதுகெலும்பு. எனவே, அவர்களின்  கனவையும்  இலக்குகளையும்  அடைய  ஒரு  சிறந்த  வாய்ப்பாகும் . குழந்தைகள்  எந்த  துறையில்  ஆர்வமாக  இருக்கிறார்கள்  என்பதை  உணர்ந்து அதற்கான  வளங்களையும்   நாங்கள்  வழங்கி  வருகிறோம்  என்று  கூறியுள்ளார்.

mobile tech engkal.com

ரிலையன்ஸ்  நிறுவனம்  தொலைக்காட்சி  சேவையை  செட்டாப்  பாக்ஸ்  உடன்  5 வருடத்துக்கு  500 ரூபாய்  மட்டுமே  என்ற  புதிய  அதிரடி  ஆஃபர் அறிவித்துள்ளது.

 தற்போது, அனைவரும்  செட்டாப்  பாக்ஸ்  வைக்க  கூடிய  நிலை  ஏற்பட்டுள்ளது .இதனால்  கேபிள்  டிவின்  வாடிக்கையாளர்கள்  குறைந்து கொண்டே  வருகின்றன. செல்போன்  சேவையைப்  போன்று  தொலைக்காட்சி சேவைகளை  ரிலையன்ஸ  நிறுவனம்  வழங்கி  வருவதால்  கடும்  போட்டியாக நிலவி   வருகிறது.

ரிலையன்ஸ்  நிறுவனம்  மொபைல்  சேவையில்  மட்டும்  அல்லாமல் இப்பொழுது  தொலைக்காட்சி  சேவையிலும்  அதிரடி ஆஃபர்களை  அறிவித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனால்  ரிலையன்ஸ்  நிறுவனம்  முதலில்  மொபைல்  சேவையில்  அதிரடி ஆஃபர்களை  அறிவித்து  மற்ற  மொபைல்  சேவை  நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது  போல், தற்போது  தொலைக்காட்சி  சேவையிலும் அதிரடி  ஆஃபர்களை  அறிவித்து  மற்ற  தொலைக்காட்சி  சேவை நிறுவனங்களையும்   அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ரிலையன்ஸ்  நிறுவனம்  ஒரு  ஆண்டுக்கு    இலவசமாக  தொலைக்காட்சி சேவையை  தொடங்கியுள்ளது .

இதனால், ஒரு  வருடத்துக்கு  ஹெச் டி  சேனல்கள்  உட்பட  மொத்தம்  500 சேனல்களை  அடுத்த  1  ஆண்டுக்கு  ஃப்ரீ  டு  ஏர்  (எஃப்டிஏ)  மூலம்  இலவசமாக வழங்க  ரிலையன்ஸ்  நிறுவனம்  முடிவு  செய்துள்ளது.

மேலும்  ரிலையன்ஸ்  நிறுவனம்  வரும்  அடுத்த  5  ஆண்டுகளுக்கும்   வெறும் 500 ரூபாயில்  வழங்கவும் முடிவு  செய்யப்பட்டுள்ளது.

mobile tech engkal.com

ஆப்பிள்  நிறுவனம்   புதியதாக அடுத்தகட்ட  நடவடிக்கையை   தொடங்கியுள்ளது   கதவைத் தானாகத் திறக்க  தொழில் நுட்பத்தை பயன்படுத்தி  ஐபோனில்   அடுத்த  அப்டேட்டில்  அறிமுகம் செய்யப்போவதாக  தகவல்  வெளியாகியுள்ளது.

ஆப்பிள்  நிறுவனத்தின்  புதிய  அறிவிப்பை  பற்றிய  கெஜெட் பிரியர்கள் எதிர் நோக்கியுள்ளனர். இந்நிலையில்  ஐபோனுக்கான  அடுத்த  அப்பேட்டில்  என்.எஃப்.சி  என்ற  தொழில் நுட்பம்  பயன்படுத்தப்படும்  என்று  தகவல் வெளியாகியுள்ளது.

இது  குறிப்பிட்ட  தொலைவில்  மட்டுமே  பயன்படுத்த  முடியும்  என தெரிவிக்கபடுகிறது. இந்த   ஐபோன்  மூலம்  கதவை  தானாக  திறக்க முடியும் என  கூறப்படுகிறது. அதற்கு  ஐபோனில்  புதியதாக  பிரத்யேக  சிப்  ஒன்றை புகுத்த  திட்டமிடப்பட்டுள்ளது  என  தெரிவிக்கபடுகிறது .

இதனால்  கதவுகளை  ஐபோன்  மூலம்  திறக்கலாம்  அதற்கு  அதே போல  சிப் வடிவமைக்க வேண்டும். இது  பற்றிய  அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  அடுத்த  மாதம் ஐ ஓஎஸ் 12 (iOS 12)  பற்றிய  அறிவிப்புடன்   வெளியாகலாம்  என தெரிவிக்கப்படுகின்றன.

 

mobile technology engkal.com

சாம்சங் நிறுவனம் பெற்றிருக்கும் புதிய காப்புரிமையில் முழுமையான பெசல்-லெஸ் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்க அனுமதி பெற்றிருக்கிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் 2018-ம் ஆண்டில் பல்வேறு ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்கள் கொண்டிருக்கின்றன. பெசல்-லெஸ் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை இதுவரை விவோ மற்றும் ஒப்போ போன்ற பிரான்டுகள் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் நிலையில், சாம்சங் நிறுவனமும்  இந்த பட்டியலில் இணைந்திருக்கிறது.

சமீபத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருந்த காப்புரிமையில் முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போனினை உருவாக்க சாம்சங் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆகஸ்டு 24, 2017-இல் சாம்சங் பதிவு செய்த காப்புரிமையானது ஜூன் 21, 2018-ம் தேதி சர்வதேச காப்புரிமை அலுவலகத்தால் உறுதி செய்யப்பட்டது.

சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் நான்கு ஸ்ட்ரிப்கள் டிஸ்ப்ளேவின் நான்கு ஓரங்களிலும் இணைக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த ஸ்ட்ரிப்கள் மெட்டல், அலுமினியம் மூலம் உருவாக்கவோ அல்லது பேட்டன் செய்யப்பட்ட மரத்தை பயனர் மாற்றக்கூடிய சாதனங்களாகவோ மாற்ற முடியும்.

இதே போன்ற வடிவமைப்பு தொலைகாட்சிகள், மானிட்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் மற்ற சாதனங்களிலும் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இத்துடன் இதே போன்ற வடிவமைப்பு ஹூவாய் ஏற்கனவே பயன்படுத்துகிறது. மேலும் இதில் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதியும் உள்ளது.

எனினும் சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் இந்த அம்சங்கள் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

mobile technology engkal.com

பி.எஸ்.என்.எல். நிறுவனம் இரண்டு மாதத்திற்கு பிராட்பேன்ட் சேவையை இலவசமாக வழங்குகிறது.

புதிதாக  லேப்டாப் அல்லது கணினி வாங்குவோருக்கு 20Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பை இலவசமாக வழங்குவதாக பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

பிரீபெயிட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு சலுகைகள அறிவித்து வரும் பி.எஸ்.என்.எல். தற்சமயம், பிராட்பேன்ட் சேவையில் புதிய பயனர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் புதிய சலுகையில் அந்நிறுவனம் 20Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதன்படி இலவச இணைப்பு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது.

இந்த சலுகையில் தேர்வாகும் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். சமீபத்தில் அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 45 ஜிபி திட்டம் வழங்கப்படுகிறது.

இந்த சலுகை 20Mbps வேகத்தில்

Close Menu